search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "spring onion poriyal"

    வெங்காயத்தாளை பிரைடு ரைஸ், மஞ்சூரியனில் மட்டுமே அதிகளவு பயன்படுத்துவார்கள். இன்று வெங்காயத்தாள் வைத்து பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெங்காயத்தாள் - ஒரு கட்டு
    வெங்காயம் - 1
    கடலைப்பருப்பு - கால் கப்
    பச்சை மிளகாய் - 2
    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
    உப்பு - தேவையான அளவு
    கடுகு
    கறிவேப்பிலை
    எண்ணெய்



    செய்முறை :

    வெங்காயம், வெங்காயத்தாளை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் கடலைப்பருப்பை மஞ்சள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து உதிரியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் வெங்காயத்தாள் சேர்த்து உப்பு போட்டு 3 நிமிடங்கள் வதக்கவும்.

    அடுத்து அதனுடன் வேக வைத்த பருப்பு சேர்த்து 2 நிமிடங்கள் கிளறவும். இரண்டும் ஒன்றோடொன்று கலந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

    சுலபமாக விரைவில் செய்யக் கூடிய வெங்காயத்தாள் பருப்பு பொரியல் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×