search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sriharikotta"

    ராக்கெட் ஏவப்படுவதை சாதாரண பொதுமக்களும் பார்க்க இஸ்ரோ ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. #ISRO #PSLVC45
    புதுடெல்லி:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ, ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி வருகிறது.

    ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை இஸ்ரோவின் அதிகாரிகள், விஞ்ஞானிகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட முக்கிய பிரமுகர்கள் மட்டுமே ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பார்க்க முடியும்.

    இந்த நிலையில் ராக்கெட் ஏவப்படுவதை சாதாரண பொதுமக்களும் பார்க்க இஸ்ரோ ஏற்பாடு செய்துள்ளது.

    இதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமர்ந்து ராக்கெட் விண்ணில் பாய்வதை பொதுமக்கள் நேரடியாக பார்க்கலாம்.

    வருகிற 1-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இதை பொதுமக்கள் தனி அரங்கில் அமர்ந்து நேரடியாக பார்த்து ரசிக்கலாம்.

    இதுகுறித்து இஸ்ரோ செய்தி தொடர்பாளர் விவேக் சிங் கூறியதாவது:-



    ராக்கெட் ஏவப்படுவதை பொதுமக்கள் அமர்ந்து பார்க்கும் தனி அரங்கு பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டு உள்ளது. 5 ஆயிரம் பேர் அமரும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது.

    ராக்கெட் ஏவப்படுவதை நேரடியாக பார்க்க இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கேமரா, போன்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவர். புகைப்படத்துடன் கூடிய அரசின் அடையாள அட்டை சமர்ப்பிக்க வேண்டும். குறைந்த பட்சம் 10 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும்.

    இதில் இந்தியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வரும் காலத்தில் 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் அரங்கு விரிவுப்படுத்தப்படும். மேலும் அங்கு விண்வெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது.

    இனி ‘விண்வெளி தொழில்நுட்பம் ஒவ்வொரு இந்தியரை சென்றடைய வேண்டும் என்ற இஸ்ரோ தலைவர் சிவனின் எண்ணத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது.

    ராக்கெட் ஏவுகணை பொதுமக்கள் நேரில் பார்ப்பதால் குறைந்தபட்சம் சிலர் இந்திய விண்வெளி திட்டத்தில் சேர ஆர்வம் காட்டுவார்கள் என்று நம்புகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #ISRO #PSLVC45
    ×