search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SSLC Committee"

    • அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
    • 116 பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

     கொரோனா காலகட்டத்தில் 2 ஆண்டாக மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தோம். பள்ளிகளும் இயங்காததால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்திருக்கலாம். தனியார் பள்ளிகளை பொறுத்தவரை நன்றாக படிக்கும் மாணவர்களை மட்டுமே பள்ளிகளில் சேர்க்கின்றனர்.

    ஆனாலும் புதுவை அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து ஆராய குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தற்போது கிராமப்புறங்களை சேர்ந்த அரசு பள்ளிகள்தான் 100 சதவீத தேர்ச்சி அளிக்கிறது. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். புதுவையில் ஒட்டுமொத்தமாக 127 பள்ளிகளில் தற்போது வரை 116 பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது.

     சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு ஏற்ப பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு தற்போது பயிற்சி அளித்து வருகிறோம். ஆங்கிலம், தமிழ் பாடத்துக்கும் பயிற்சி அளிக்கிறோம். இந்த பயிற்சி ஆசிரியர்களுக்கும் அளிக்கப்படும்.

    அகில இந்திய தேர்வுகளில் புதுவை மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக சி.பி.எஸ்.இ. பள்ளிகளாக அரசு பள்ளிகளாக மாற்றியுள்ளோம். சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். வரும்காலங்களில் நீட், ஜே.இ.இ. ஆகிய தேர்வுகளில் புதுவை மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×