search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Star City Plus"

    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் டூயல்-டோன் நிறம் கொண்ட ஸ்டார் சிட்டி பிளஸ் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #motorcycles



    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் ஸ்டார் சிட்டி பிளஸ் மோட்டார்சைக்கிளின் டூயல்-டோன் வேரியன்ட்டை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்டார் சிட்டி பிளஸ் வேரியன்ட் கிரே-பிளாக் டூயல்டோன் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.52,907 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இத்துடன் சின்க்ரோனைஸ்டு பிரேக்கிங் தொழில்நுட்பம் (எஸ்.பி.டி.) வழங்கப்பட்டுள்ளது. இது டி.வி.எஸ். நிறுவனத்தின் காம்பினேஷன் பிரேக்கிங் சிஸ்டம் ஆகும். இதே பிரேக்கிங் சிஸ்டம் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டி.வி.எஸ். ரேடியான் மோட்டார்சைக்கிளிலும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    எஸ்.பி.டி. தொழில்நுட்பம் ஒரு லீவரை அழுத்தினால் கூட பிரேக்களை இரண்டு சக்கரங்களுக்கும் சீராக வழங்கும். இதனால் மோட்டார்சைக்கிளை சிறப்பாக கட்டுப்படுத்த முடியும். மேலும் 110சிசி மோட்டார்சைக்கிள் பிரிவில் இதுபோன்ற பிரேக்கிங் அம்சத்தை வழங்கும் ஒரே நிறுவனமாக டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி இருக்கிறது.



    புதிய ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலில் 109சிசி இகோதிரஸ்ட் ஏர்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8.3 பி.ஹெச்.பி. பவர், 8.7 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளில் அதிக விருதுகளை வென்ற மோட்டார்சைக்கிளாக டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி பிளஸ் மாடல் இருக்கிறது.

    முன்னதாக டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி மாடல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அப்டேட் செய்யப்பட்டது. இதில் புதிய வடிவமைப்பு, மெட்டல் டி.வி.எஸ். பேட்ஜ் மற்றும் முழுமையான பிளாக் தீம் செய்யப்பட்டது. ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலில் அலாய் வீல்கள், மற்றும் இதர அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    புதிய டூயல்-டோன் வெர்ஷன் பிளாக்-ரெட், பிளாக்-புளு மற்றும் ரெட்-பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் கிரே-பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. புதிய டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி பிளஸ் மாடல் யமஹா சலுட்டோ ஆர்.எக்ஸ்., ஹோன்டா டிரீம் யுகா மற்றும் பஜாஜ் டிஸ்கவர் 110 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    ×