search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Strap"

    • சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த குடும்பத்தினர் அனைவரும் முறையாக தீர்வை செலுத்தி குடியிருந்து வருகின்றனர்.
    • போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவுக்கான ஏற்பாடுகள் அப்பகுதியில் செய்யப்பட்டு சமையல் செய்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மானூர் யூனியனுக்குட்பட்ட பேட்டை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள புனை வெங்கப்பன் குளத்தின் நீர் புறம்போக்கு பகுதியில் அருந்ததியினர் மற்றும் பிற சமுதாயத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசித்து வருகின்றனர்.

    இதனை ஒட்டிய பகுதியான மாநகராட்சி 18-வது வார்டுக்கு உட்பட்ட பேட்டை தங்கம்மன் கோவில் தெருவிலும் அருந்ததியினர் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கும் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.

    சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த குடும்பத்தினர் அனைவரும் முறையாக தீர்வை செலுத்தி குடியிருந்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்கக்கோரியும், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டியும் பலமுறை அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்திருந்தனர். ஆனால் அந்த மனுக்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் நெல்லையின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் புறக்கணிப்பு சுவரொட்டி கள் ஒட்டினர்.

    ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று அவர்கள் குடியிருக்கும் பகுதி தெருக்களில் முழுவதும் கருப்புக்கொடி கட்டினர். அனைத்து வீடுகளின் வாசல் முன்பு கருப்புக்கொடி கட்டப்பட்டது.

    அப்பகுதி குடியிருப்புவாசிகள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் இளமாறன் தலைமையில் அங்குள்ள தங்கம்மன் கோவில் அருகே பந்தல் அமைத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டத்தில் அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளும் அரசு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி போராட் டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபடுப வர்களுக்கு காலை மற்றும் மதிய உணவுக்கான ஏற்பாடுகள் அப்பகுதியில் செய்யப்பட்டு சமையல் செய்து வருகின்றனர்.

    தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் போராட்டக்காரர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

    • புதுக்கோட்டை மாவட்டம் பெருங்குடி கிராமத்தில்அமைச்சர் ரகுபதி வீட்டுமனை பட்டா வழங்கினார்
    • 59 நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் வட்டம், கடையக்குடி ஊராட்சி, பெருங்குடி கிராமத்தில் வருவாய் துறையின் சார்பில் 59 விளிம்பு நிலை மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா விற்கான ஆணைகளை சட்டம ், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர்ரகுபதி வழங்கி னார்.

    பின்னர் அவர் பேசு ம்போது, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், கடையக்குடி ஊராட்சி, பெருங்குடி கிராமத்தில் விளிம்பு நிலையில் உள்ள 59 நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட வீட்டுமனைப் பட்டா பெற்ற பயனாளிகளுக்கு விலையில்லா வீடுகள் கட்டி தருவதற்கு உரிய நடவடி க்கையும் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது என்று அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு(எ)சிதம்பரம், வட்டாட்சியர் புவியரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிங்காரவேலன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். 

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் தகுதியான மீனவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் உறுதியளித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணுசந்திரன் கலந்து கொண்டு மீனவர்களிடம் இருந்து 132 கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதன்பின் கலெக்டர் விஷ்ணுசந்திரன் பேசியதாவது:-

    மீன்பிடி தடைகாலம் முடிந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் பாதுகாப்புடன் சென்று வருவதுடன், உரிய எல்லை பகுதிக்குள் சென்று வர வேண்டும். அதேபோல் மீன்கள் கொள்முதல் செய்யும் தனியார் நிறுவனங்களை அழைத்துப்பேசி மீனவர்களுக்கு தங்கள் பொருளுக்குரிய விலை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும் மீனவர்கள் கோரிக்கையான வீட்டுமனை பட்டா தகுதியுடைய நபர்களுக்கு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மீனவர்கள் குடும்பத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான இழப்பீடு தொகை உரிய காலத்தில் வழங்கிட மீன்வளத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    அதேபோல் பாதிக்கப்பட்ட படகுகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட படகுகள் விடுவிக்கப்பட் டுள்ளதை மீனவர்கள் கொண்டு வருவதற்கு ஏதுவாக தேவையான உதவிகளை மீன்வளத்துறை மூலம் மேற்கொள்ளப்படும்.

    கடற்கரை ஓரமுள்ள மீன் இறங்குதளம் அருகில் பயன்பாடற்ற தூண்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியார் இறால் பண்ணைகளிலிருந்து வெளியேறும் கழிவு பொருட்களை கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன் அனுமதியின்றி இறால் பண்ணை நடத்துபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நீலப்புரட்சி திட்டத்தில் வீடு கட்ட ஆணை பெற்று வீடு கட்டாதவர்கள் உடனடியாக கட்டுமான பணியினை தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன், உதவி இயக்குநர்கள் கோபிநாத், ஜெயக்குமார், அப்துல்காதர், ஜெய்லானி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் மூலம் 8 மாதங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டார்.
    • 1,280 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் ஒரே நாளில் 1,280 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கும் விழா, பணியிட மாறுதலில் விடைபெற்று செல்லும் மாவட்ட கலெக்டரை வாழ்த்தி வழியனுப்பும் விழா நடைபெற்றது.

    இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். 1,280 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணத்தி ற்கு செயல்வடிவம் கொடுக்க அனுபவம், ஆற்றல் வாய்ந்தவர் கலெக்டராக இருக்க வேண்டும். அப்படிப்ப ட்டவர் தான் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

    இந்த ஆட்சி சிறப்பாக நடைபெறுவதற்கு இந்த நிகழ்ச்சியே சாட்சி. இந்த முழு பொறுப்புக்குக் காரணமானவர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.அவர் மாவட்ட கலெக்டராக இருந்தாலும், அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் காது கொடுத்து கேட்டு நிறைவேற்றியவர்.

    விளம்பு நிலை மக்களுக்கு செந்தமிழ் நகர் என்ற பெயரில் குடியிருப்புகளை உருவாக்கி கொடுத்தார். இதேபோல, வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் மூலம் 8 மாதங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டார். இதேபோல, பல்வேறு திட்டங்களை கலெக்டர் செயல்படுத்தினார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசும்போது, பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் 1,280 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இவை அனைத்தும் கிராம கணக்குகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

    விழாவில் கல்யாண சுந்தரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், ஜவாஹிருல்லா, கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தாசில்தார் சக்திவேல், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி, வருவாய் கோட்டா ட்சியர்கள் பிரபாகர், பூர்ணிமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் கலெக்டரை பாராட்டி பேசியதுடன் அவருக்கு பொன்னாடை அணிவித்து புத்தகங்களை நினைவு பரிசாக ஏராளமானோர் வழங்கினார்.

    • சேஷமூலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு வகுப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டும்.
    • இலவச பட்டா வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் சேஷமூலை ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    அதில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் கலந்து கொண்டார்.

    அப்போது, சேஷமூலை ஊ.ஒ.தொடக்கப் பள்ளிக்கு வகுப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டும். இலவச பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பொது மக்கள் முன்வைத்தனர்.

    அவற்றை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென எம்.எல்.ஏ கூறினார்.

    இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், சரக வருவாய் ஆய்வாளர், உதவி பொறியாளர் மற்றும் தென்பிடாகை, சேஷமூலை கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • புதுக்கோட்டையில் 8662 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது
    • விராலிமலை வட்டத்தில் 680 பயனாளிகள் பயனடைந்துள்ளன

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் குடியிருப்பு மனைக்கு வீட்டுமனைப் பட்டா பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆலங்குடி வட்டத்தில் 1,282 பயனாளிகளுக்கும், திருமயம் வட்டத்தில் 993 பயனாளிகளுக்கும், கந்தர்வக்கோட்டை வட்டத்தில் 768 பயனாளி களுக்கும், கறம்பக்குடி வட்டத்தில் 387 பயனாளிகளுக்கும், புதுக்கோட்டை வட்டத்தில் 426 பயனா ளிகளுக்கும், இலுப்பூர் வட்டத்தில் 539 பயனாளி களுக்கும், குளத்தூர் வட்டத்தில் 864 பயனாளிகளுக்கும், பொன்னமராவதியில் 840 பயனாளிகளுக்கும், விராலிமலை வட்டத்தில் 680 பயனாளிகளுக்கும், அறந்தாங்கி வட்டத்தில் 874 பயனாளிகளுக்கும், ஆவுடை யார்கோயில் வட்டத்தில் 354 பயனாளிகளுக்கும், மணமேல்குடி வட்டத்தில் 655 பயனாளிகளுக்கும் என ஆக மொத்தம் விலையில்லா வீட்டுமனைப் பட்டா நத்தம் பிரிவில் 8,662 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.





    • அங்காடியில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும்.
    • மாந்தோப்பு பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

    பேராவூரணி:

    பேராவூரணி அருகே அம்மையாண்டி ஊராட்சி பஞ்சநதிபுரம் கிராமத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் பகுதிநேர அங்காடியை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது :-

    தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தை கருணாநிதி தொடங்கி வைத்தார்.

    அங்காடியில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவி ட்டுள்ளார்.

    பட்டா இல்லாதவர்களுக்கு பேராவூரணி அருகே கொளக்குடி மாந்தோப்பு பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

    பேராவூரணி பகுதி தென்னைக்கு புவிசார் குறியீடு பெறப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் காக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து பகுதிநேர அங்காடியில் முதல் விற்பனையை அசோக்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தாசில்தார் சுகுமார், ஒன்றிய பெருந்தலைவர் சசிகலா ரவிசங்கர், ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமலிங்கம், ஒன்றிய கவுன்சிலர்கள் துரைமாணிக்கம், அருள்நம்பி, தி.மு.க பேராவூரணி தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், பொது விநியோக திட்ட ஆய்வாளர் பாலச்சந்தர், வட்ட வழங்கல் முதுநிலை ஆய்வாளர் தில்லைராஜன், கூட்டுறவு சங்க தலைவர் சேகர், கூட்டுறவு சங்க இயக்குநர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • திருப்பரங்குன்றத்தில் பட்டா கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • முதல்-அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் கோடாங்கி தோப்பு தெரு பகுதி மக்கள் தங்கள் வசிக்கும் பகுதிக்கு பட்டா வழங்க வேண்டும் என்றுகோரி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

    குடியிருப்போர் நல சங்க தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். 97-வது வார்டு கவுன்சிலர் சிவசக்தி ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில் தி.மு.க., அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்று இந்த பகுதி பொதுமக்களுக்கு பட்டா வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக முதல்-அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • குடிமனை பட்டா வேண்டி மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
    • 300 பேர் வீட்டு மனை பட்டா வேண்டி ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து ஏற்காடு டவுன் வழியாக வட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குடிமனை பட்டா வேண்டி மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.

    ஒன்றிய செயலாளர் நேரு தலைமையில் கட்சியினர் மற்றும் ஏற்காடு முருகன் நகர், ஜெரினக்காடு, பட்டிபாடி, கீரைக்காடு, கொட்டச்சேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 300 பேர் வீட்டு மனை பட்டா வேண்டி ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து ஏற்காடு டவுன் வழியாக வட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர்.

    மேலும் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் கிராம மக்கள் குடிமனை பட்டா வேண்டி வட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.

    இந்த போராட்டத்தில் அக்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் உதயகுமார், பழனிசாமி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • மக்கள் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
    • மலைவாழ் கிராமங்களில் பட்டா வழங்க பணிகள் துவங்கியுள்ளது.

    உடுமலை:

    ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை, அமராவதி வனச்சரகத்தில் 13க்கும் அதிகமான மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன. இங்கு பாரம்பரியமாக வசிக்கும் மக்கள் வன உரிமை சட்டத்தின் கீழ் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதன் வாயிலாக தங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். விவசாய பணிகளையும் மேற்கொள்ள முடியும் என அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதையடுத்து வன உரிமை குழுக்கள் அமைக்கப்பட்டு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டது. முதற்கட்டமாக உடுமலை வனச்சரகத்துக்குட்பட்ட மலைவாழ் கிராமங்களில், பட்டா வழங்க வன உரிமைக்குழு தீர்மானங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது அமராவதி வனச்சரகத்துக்குட்பட்ட மலைவாழ் கிராமங்களில் பட்டா வழங்க பணிகள் துவங்கியுள்ளது. தளிஞ்சிவயல் கிராமத்தில் வன உரிமை சட்டத்தின் கீழ் பட்டா வழங்க வனத்துறையால் அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    ×