என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » struggle in tamil nadu
நீங்கள் தேடியது "struggle in Tamil Nadu"
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அண்டை மாநிலமான தமிழகத்திலும் போராட்டம் நடந்து வருகிறது. #Sabarimala
சென்னை:
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் வெடித்த போராட்டம் அண்டை மாநிலமான தமிழகத்திலும் பரவியது.
குமரி மாவட்டம் களியக்காவிளை முதல் சென்னைவரை பல்வேறு நகரங்களிலும் போராட்டம் நடைபெற்றது. சென்னை கோடம்பாக்கத்தில் அய்யப்ப பக்தர்கள், பெண்கள் பேரணியாகச் சென்றனர்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியறுத்தினர்.
நெல்லை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டம் நடந்தது.
கோவை மேட்டுப்பாளையத்தில் அனைத்து அய்யப்ப பக்தர்கள் குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்பகுதியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் இருந்து அய்யப்ப பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது சரண கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் குத்து விளக்கு ஏற்றி அய்யப்பனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் அய்யப்ப பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
துடியலூர் பஸ் நிறுத்தம் அருகே இந்து மத பக்தர்கள் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. என்.ஜி.ஓ காலனியில் உள்ள அய்யப்பன் கோவிலில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் அய்யப்பன் படத்தை ஏந்திய படி 2 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக வந்தனர். இதில் அய்யப்பா சேவா சங்கம், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினரும் கலந்து கொண்டனர்.
கோவையில் அடுத்த கட்டமாக ஒரு லட்சம் பேரை திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் வட்டார அய்யப்ப பக்தர்கள் சங்கம் அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் ஆகியவை சார்பில் இணைந்து கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் சபரி மலையில் ஆச்சார வழிபாட்டு முறையே சிறந்தது. அதை பின்பற்ற வேண்டும். 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு மாலை இடுவதில்லை. இருமுடி கட்டுவதில்லை. சபரிமலை விவகாரத்தில் நீதிபதிகள் யாரும் தலையிடக்கூடாது என்று வலிறுத்தப்பட்டது. முன்னோர்கள் பெண்களை சபரிமலைக்கு அனுமதிக்காத தற்கு காரணங்கள் உள்ளன. இந்த விதிகளை மீறி பெண்களை சபரிமலைக்கு செல்ல அனுமதிக்ககூடாது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்களும் நிறை வேற்றப்பட்டன.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அய்யப்பன் கோவிலில் அகில இந்திய அய்யப்ப சேவா சங்கம் சார்பில் கூட்டு பிரார்த்தனை நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் 10 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கும், 50 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு இருமுடி கட்ட மாட்டோம். பெண்களை சபரிமலைக்கு அழைத்து செல்லமாட்டோம் என்று உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
திருச்சி மேலசிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அய்யப்ப பக்தர்கள் கூட்டு பஜனை செய்தனர். இதில் திருச்சி மாநகர் பகுதியில் உள்ள அய்யப்ப குருசாமிகள், அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அய்யப்ப பாடல்களை பாடி மனமுருக பிரார்த்தனை செய்தனர்.
ராஜபாளையம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள அய்யப்பன் சன்னிதானத்தில் நடை பெற்ற கூட்டு பிரார்த்தனை யில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நீதி மன்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கேரளா மற்றும் தமிழகத்தில் போராட்டம் நடைபெறுவது போல டெல்லியில் அய்யப்ப பக்தர் போராட்டத்தில் ஈடுபட்டனர். #Sabarimala

×

X