என் மலர்
நீங்கள் தேடியது "struggle"
- சுங்கச்சாவடி ஊழியர்கள் கையில் தீச்சட்டி ஏந்தி போராட்டம் நடைபெற்றது
- 46-வது நாளான தொடர்ந்து நடைபெற்றது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்த திருமாந்துறையில் உள்ள சுங்கச்சாவடியில் பணியாற்றிய ஊழியர்கள் 28 பேரை பணியிடை நீக்கம் செய்த தனியார் ஒப்பந்த நிர்வாகத்தை கண்டித்து கடந்த மாதம் 1-ந் தேதி முதல் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களது போராட்டத்திற்கு அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 46-வது நாளான நேற்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கையில் தீச்சட்டி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்."
- கடந்த சில நாட்க ளுக்கு முன் மாணவர்கள் இடமாற்றம் செய்து வகுப்பு கள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.
- பெற்றோர்களுக்கு எந்த தகவலும் அளிக்காமல் மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அருகே திரு.பட்டினம், கருட பாளையம் பகுதியில், அரசு தொடக்கப்பள்ளி 1-ம் வகுப்புமுதல் 5-ம் வகுப்பு வரை இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் போதிய இடவசதி இல்லாத கார ணத்தால், அருகில் உள்ள பல ஆண்டுகள் பரா மரிப்பு இல்லாத அரசு நடுநிலைப்பள்ளியில், மூடிகிடந்த சில வகுப்பறை களில், கடந்த சில நாட்க ளுக்கு முன் மாணவர்கள் இடமாற்றம் செய்து வகுப்பு கள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, அந்த வகுப்புகளில் மாணவர்கள் கல்வி பயின்றுவந்த நேரத்தில், வகுப்பறை கட்டிடத்தின் மேற்கூரை காரை சில இடங்களில் திடீரென இடிந்து விழுந்த தால், அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், பதறியவாறு வகுப்பறையை விட்டு வெளியே ஓடினர். மாண வர்கள் சுதாரிப்பால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இது குறித்து, பள்ளி நிர்வாகம், முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு எந்த தகவலும் அளிக்காமல் மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து மாணவர்கள் பெற்றோர்களிடம் புகார் கூறியதை அடுத்து, நூற்றுக்கு மேற்பட்ட பெற்றோர்கள், மாணவர்களுடன் சம்பந்த ப்பட்ட பள்ளியை மூடி, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த பள்ளி நிர்வாகத்திடம், பராமரிப்பு இல்லாத பள்ளிக்கு, யாருடைய அனு மதியும் பெறாமல் வகுப்பு கள் நடத்தியதையும், கட்டிட மேற்கூரை காரை இடிந்து விழுந்ததை பெற்றோ–ர்களுக்கு தெரிவிக்காமல் மூடி மறைத்ததற்கும் கடும் கண்டனம் தெரிவித்தனர். விபரம் அறிந்த காரைக்கால் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜ சேகரன், திரு.பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பெற்றோர்களுடன் பேசு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையின் முடிவில், தற்போதுள்ள பள்ளியில் போதிய இடவசதிகள் ஏற்படுத்தி தரும்வரை மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என கூறி, மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டு அழைத்துசென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- மதுரை மாநகராட்சியை கண்டித்து நடந்த மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டத்தை திருமாறன் கண்டனம்.
- சாலையில் கழிவுநீர் ஓடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடந்த 15-ந் தேதி மறியல் போராட்டம் நடத்தியது.
மதுரை
தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவன தலைவர் திருமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே கீழ சித்திரை வீதியில் மழை நீர் போக வழி இல்லை. பாதாள சாக்கடை கழிவுநீர் போக வழி இல்லை. பக்தர்கள் செல்லும் சாலையில் கழிவுநீர் ஓடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடந்த 15-ந் தேதி மறியல் போராட்டம் நடத்தியது. யாரை ஏமாற்ற இந்த கபட நடமாடுகிறார்கள் என்று தெரியவில்லை.
மதுரை மக்களவை உறுப்பினராகவும் மாநகராட்சி துணை மேயராகவும் தங்களது கட்சியை சேர்ந்தவர்களே இருக்கும்போது இது போன்ற செயல் மக்களை ஏமாற்றும் செயலாகத்தான் அனைவரும் பார்க்கின்றனர். தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி அதிகாரிகளை வேலை வாங்க முடியாமல் மாநகராட்சி அலட்சியமாக இருப்பது போல அலட்டிக்கொண்டு போராட்டம் என்று மக்களை ஏமாற்றும் வேளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்திருக்கிறது.
மதுரையில் மட்டுமல்ல தமிழகத்திலேயும் தங்களது கூட்டணி கட்சிகள் தானே ஆட்சி செய்கிறது. எனவே கூட்டணி கட்சியில் வலியுறுத்தி இந்த அவல நிலையை போக்கி இருக்கலாமே. அதை விடுத்து போராட்டம் செய்வதை எந்த வகையில் மக்கள் நம்புவார்கள்.
வேண்டுமானால் இந்த மறியல் போராட்டத்திற்கு பதிலாக மக்கள் பிரதிநிதியாக இருக்கும் எம்.பி. மற்றும் துணை மேயர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியது தானே.
இவ்வாறு அதில் கூறிப்பிட்டுள்ளார்.
- திருமங்கலம் அரசு ஓமியோபதி கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- மழைநீர் சூழ்ந்தால் இந்த கல்லூரி மாணவ- மாணவிகளை தற்காலிகமாக விருதுநகர் மருத்துவக்கல்லூரிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஓமியோபதி கல்லூரி 40 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. இதில் 250 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தக் கல்லூரி நீர் பிடிப்பு பகுதியில் அமைந்துள்ளதால் மழைக்காலங்களில் கட்டிடங்களை வெள்ளம் சூழ்ந்து கல்லூரிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
மழைநீர் சூழ்ந்தால் இந்த கல்லூரி மாணவ- மாணவிகளை தற்காலிகமாக விருதுநகர் மருத்துவக்கல்லூரிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ-மாணவிகள் ஓமியோபதி கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதல்வர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-
விருதுநகர் அரசு மருத்துவமனையில் 3-வது மாடியில் ஒரு தளத்தை மட்டும் ஒதுக்கீடு செய்தது சரியல்ல. அங்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத காரணத்தினால் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தி.மு.க. அரசு வாக்குறுதிகளை கொடுத்து விட்டு நிறை வேற்றாமல் உள்ளது. வடகிழக்கு பருவ மழை தொடங்கியதால் கட்டிடங்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. தண்ணீர் எந்த நேரத்தில் வருமோ? என்ற அச்சம் ஏற்படுகிறது.
மாணவர்களின் நலன் கருதி அரசு உடனடியாக தலையிட்டு மாவட்ட நிர்வாகம், பொதுப்ப ணித்துறை, வருவாய்த்துறை ஒன்றிணைந்து தமிழ்நாட்டின் ஒரே ஓமியோபதி கல்லூரியாக உள்ளதால் இதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்டத் துணைச் செயலாளர் தமிழ்செல்வம், பொருளாளர் திருப்பதி, திருமங்கலம் நகர் செயலாளர் விஜயன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட பேரவை செயலாளர் தமிழழகன், யூனியன் சேர்மன் லதா ஜெகன், நிர்வாகிகள் சரவண பாண்டி, சிங்கராஜ்பாண்டி, வழக்கறிஞர்கள் முத்துராஜா, வெங்கடேஷ், பேரவை பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் சுமதிசாமிநாதன், வாகைகுளம் சிவசக்தி, சிவபாண்டி, பொன்னமங்கலம் ஜெயமணி ஆகியோர் உடனிருந்தனர்.
- பள்ளி மாணவர்களுக்கு இது வரை சாதி சான்றிதழ் வழங்காததால் பள்ளி மாணவர்களின் படிப்பு பாதியிலேயே தடைபடுகிறது.
- எங்கள் பள்ளி மாணவர்களுக்கும் சாதி சான்றிதழ்வழங்கிட கும்பகோணம் கோட்டாட்சியருக்கு உத்தரவிட வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான பள்ளி மாணவர்கள் சாதி சான்றிதழ் வேண்டி தமிழக ஆதியன் பழங்கு–டியின மக்கள் நலச்சங்க மாநில தலைவர் வீரைய்யன் தலைமையில் போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் போராட்டம் நடத்தியவர்களை கலெக்டரிடம் அழைத்து சென்றனர். இதைத் தொடர்ந்து அவர்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரிடம் அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது :
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் எம்.ஜி.ஆர். நகரில் சுமார் 35 ஆதியன் பழங்குடி இனத்தை சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த இனத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு இது வரை சாதி சான்றிதழ் வழங்காததால் பள்ளி மாணவர்களின் படிப்பு பாதியிலேயே தடை படுகிறது.
பட்டுகோட்டை மேல ஓட்டங்காடுமற்றும் துறைவிக்காடு, சுக்கிர ன்பட்டி, சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் உள்ளவ–ர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க–ப்பட்டுள்ளது. இது போல் எங்கள் பள்ளி மாணவர்களுக்கும் சாதி சான்றிதழ்வழங்கிட கும்பகோணம் கோட்டாட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
- அரசு கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சேலம் மாவட்டத்தில் 3 லட்சம் அரசு செட் டாப் பாக்ஸ்கள் உள்ள நிலையில், இதில் 50 ஆயிரம் பாக்ஸ் மட்டுமே இயங்கி வருகிறது.
சேலம்:
தனியார் நிறுவன மென்பொருள் சேவைகள் தடை பட்டதால் அரசு கேபிள் டி.வி. நிறுவன சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அரசு கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் நடத்தினர்.
அப்போது கேபிள் டி.வி ஆப்ரேட்டர்கள் அதிகாரி களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கேபிள் டி.வி ஆப்ரேட்டர்கள் கூறுகையில்,
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு மென்பொருள் சேவை கள் வழங்கி வந்த தனி யார் நிறுவனத்தின் மென்பொ ருள் சேவைகள் திடீரென தடைபட்டதால் கடந்த 3 நாட்களாக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சேவை கள் பல பகுதிகளில் பாதிக்கப்பட்டு உள்ளது. சேலம் மாவட்டத்தில் 3 லட்சம் அரசு செட் டாப் பாக்ஸ்கள் உள்ள நிலையில், இதில் 50 ஆயிரம் பாக்ஸ் மட்டுமே இயங்கி வருகிறது. மற்ற செட் டாப் பாக்ஸ்கள் இயங்காததால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றனர்.
இந்த போராட்டத்திற்கு சேலம் அருள் எம்.எல்.ஏ ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் பேசுகையில், சேவை பாதிப்பால் அரசு கேபிள் டி.வி. நிறுவ னத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படும். அதே போல் வாடிக்கை யாளர்கள் தனியார் கேபிள் மற்றும் டி.டி.எச்.க்கு மாறி விடுவார்கள் என்றார்.
- மதுரையில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.
- நூதன போராட்டம் காரணமாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்கள் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியுள்ளது.
மதுரை
மதுரை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தங்கள் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் 2 நாட்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள யூனியன் அலுவலகங்கள், பேரூராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள் இந்த தற்காலிக விடுமுறை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு ள்ளனர்.
அனைத்து ஊழியர்களும் விடுமுறை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தால் அலுவலகங்களில் ஊழியர்கள் வருகையின்றி இன்று வெறிச்சோடி காணப்பட்டது. பணிகள் எதுவும் நடைபெறவில்லை. மேலும் நகர் மற்றும் கிராம பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நிர்வகிக்கப்படும் குடிநீர் வழங்கும் பணிக்கும் ஊழியர்கள் வராததால் அந்த பணியிலும் பாதிப்பு ஏற்பட்டது.
நாளையும் போராட்டம் நீடிப்பதால் மதுரை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை பணிகள் பெருமளவில் பாதிக்கப்படும். அரசு ஊழியர்களின் இந்த நூதன போராட்டம் காரணமாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்கள் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியுள்ளது.
- 2 லட்சம் ஊழியர்கள் வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
- ஊழியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினா்.
பீஜிங் :
சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. இதன் காரணமாக தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் மத்திய சீனாவில் உள்ள செங்சாவு மாகாணத்தில் கொரோனா பரவல் காரணமாக தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அங்கு அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலையில் பணிபுரியும் 2 லட்சம் ஊழியர்கள் வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஐபோன் தொழிற்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இடத்தில் இருந்து வெளியே வந்த ஊழியர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசார் அவர்களை விரட்டியடிக்க முயன்றபோது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஊழியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினா். இதில் பலர் காயம் அடைந்தனர். மேலும் தொழிலாளர்கள் பலரை போலீசார் கைது செய்தனர்.
- அரசு ஊழியர்கள் கருப்புச்சட்டை அணிந்து நூதன போராட்டம் நடத்தினர்.
- தமிழக அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை, நவ.24-
தமிழக அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். "ஒப்படைப்பு விடுப்பை ரத்து செய்ய கூடாது, கடந்த ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் உயர்த்தப்பட்ட 4 சதவீத அகவிலைபடி உயர்வை உடனே வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று (வியாழக்கிழமை) கருப்பு சட்டை அணிந்து அலுவலகத்துக்கு வந்திருந்தனர். இதனால் அரசு அலுவலகங்கள் கருப்புச் சட்டை மயமாக காட்சி அளித்தது.
இதுகுறித்து மதுரை மாவட்ட அரசு ஊழியர்கள் சங்க தலைவர் நடராஜன் கூறுகையில், "ஒப்படைப்பு விடுப்பு ரத்து, அகவிலைப்படியை காலம் தாழ்த்தி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் இன்று ஒரு நாள் மட்டும் கருப்பு சட்டை அணிந்து வேலை பார்த்தனர். மாலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.
- சாலை சீரமைக்க கோரி மறியல் போராட்டம் நடைபெற்றது
- அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சமரசம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம் பிரிவு சாலை முதல் இரும்பாளி வரையிலான சுமார் 6 கி.மீ. பழுதடைந்த கிராம சாலையை செப்பனிடாததை கண்டித்து, திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் பேருந்து நிறுதம் அருகே கிராம மக்ள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளூர் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சிதிலமடைந்த சாலையை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து ெ சன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- துப்புரவு ஊழியர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் நீண்ட நாட்களாக சம்பள உயர்வு கேட்டு கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
- நேற்று முன்தினம் துப்புரவு ஊழியர்கள் அரசு ஆஸ்பத்தி ரியில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். 2-வது நாளான நேற்று விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்ட னர். இன்று 3-வது நாளாக அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
நாமக்கல்:
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். மேலும் பலர் உள் நோயாளிகளாக தங்கி இருந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இங்கு ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு ஊழியர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் நீண்ட நாட்களாக சம்பள உயர்வு கேட்டு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் துப்புரவு ஊழியர்கள் அரசு ஆஸ்பத்தி
ரியில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். 2-வது நாளான நேற்று விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்ட னர். இன்று 3-வது நாளாக அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படாததால் போராட்டம் நீடித்து வருகிறது.
இது குறித்து துப்புரவு ஊழியர்கள் கூறுகையில், எங்களுக்கு முறையான சம்பள உயர்வு வழங்க வேண்டும். அதுவரை போராட்டத்தை வாபஸ் பெற மாட்டோம் என்றனர்.
- அரசு மருத்துவமனை களில் காலியாக உள்ள 1300-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியி டங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் அரசு ஆஸ்பத்திரி மருத்தகத்தில் பணியாற்றும் மருந்தாளுநர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர் .
- இந்த போராட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட மருந்தாளு நர்கள் கலந்து கொண்டு பணியில் ஈடுபட்டனர்.
சேலம்:
அரசு மருத்துவமனை களில் காலியாக உள்ள 1300-க்கும் மேற்பட்ட
மருந்தாளுநர் பணியி டங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் அரசு ஆஸ்பத்திரி மருத்தகத்தில் பணியாற்றும் மருந்தாளுநர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர் .
அப்போது அவர்கள் கூறுகையில், கொரோனா ஊக்கத்தொகை, எம். எஸ். ஓ. சி. பி. மருந்தாளுனர்கள் அனைவருக்கும் உடனடி யாக வழங்கிட வேண்டும். காலியாக உள்ள எம்.எஸ்.ஓ.சி.பி பதிவு எண் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் மற்றும் மருந்தாளுனருக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அரசு நடத்திட வேண்டும் . இது தொடர்பாக தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோரிக்கை அட்டையை அணிந்து சேலம் அதிநவீன சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நாங்கள் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.
இந்த போராட்டத்தில் இணை செயலாளர் மணி கண்டன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட மருந்தாளு நர்கள் கலந்து கொண்டு
பணியில் ஈடுபட்டனர். சேலம் சூப்பர் ஸ்பெஷா லிட்டி மருத்துவ மனை 8 மாவட்டங்களுக்கு உள்ள டக்கியது தற்போது நோயாளி களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் மருந்து வழங்குவதற்கு மருந்தாளுனர்கள் இல்லாமல் சரிவர மருந்து நோயாளி களுக்கு வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது . எனவே தமிழக அரசு உடனடியாக எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.