search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student killed"

    • விபத்தில் நேதாஜியின் இடுப்புக்கு கீழ் உள்ள உடல்பாகங்கள் முழுவதும் நசுங்கி துண்டானது.
    • ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம், வன்னியர் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கேசவமூர்த்தி. இவரது மகன் நேதாஜி (வயது 19).இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த 22-ந்தேதி காலை நேதாஜி வழக்கம் போல் மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு செல்ல வந்தார். அப்போது விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற பயணிகள் ரெயிலில் அவர் ஓடிச்சென்று ஏற முயன்றார். இதில் நிலை தடுமாறிய நேதாஜி ரெயிலுக்கும் தண்டவாளத்திற்கும் இடையில் சிக்கி விழுந்தார்.

    அவர் மீது ரெயில் பெட்டிகள் ஏறி இறங்கின. இந்த விபத்தில் நேதாஜியின் இடுப்புக்கு கீழ் உள்ள உடல்பாகங்கள் முழுவதும் நசுங்கி துண்டானது.

    பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நேதாஜியை மீட்டு சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு கடந்த 2 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேதாஜி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
    • போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை போலீஸ் சரகம் மேலந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் தினேஷ் (வயது 18). இவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் சம்பவத்தன்று அவருடைய மோட்டார் சைக்கிளில் மாலை 6.30 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் சந்தேகமடைந்த அவர்கள் குடும்பத்தினர் தினேஷை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே ஊரில் அய்யனார் கோவில் அருகில் சாலை ஓரத்தில் மோட்டார் சைக்கிள் உடன் அடிபட்டு கீழே மயங்கி நிலையில் கிடந்தது கண்டு உடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவர் தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து மணலூர்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமங்கலம் அருகே வாலிபருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற மாணவி விபத்தில் பலியானார்.
    • அவர்கள் ராஜபாளையம் ரோட்டில் ஆலம்பட்டி பாலம் அருகே வந்தபோது சாலையின் குறுக்கே நாய் வந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் சாத்தங்குடியை சேர்ந்தவர் பூமிராஜா. இவரது மகள் மகாலட்சுமி (வயது 16). இவர் திருமங்கலத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    இவரும் மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் தென்னரசு (20) என்பவரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் டி.கல்லுப்பட்டி சென்று விட்டு மீண்டும் திருமங்கலம் நோக்கி வந்தனர்.

    அவர்கள் ராஜபாளையம் ரோட்டில் ஆலம்பட்டி பாலம் அருகே வந்தபோது சாலையின் குறுக்கே நாய் வந்தது. அதன்மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர். இதில் மாணவி மகாலட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு மாணவி பரிதாபமாக இறந்தார். காயமடைந்த தென்னரசு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவீடு திரும்பினார்.

    இந்த விபத்து குறித்து மாணவியின் தந்தை பூமிராஜா திருமங்கலம் தாலுகா போலீசில் புகார்செய்தார். அதில், தனது மகளை தென்னரசு கடத்தி சென்றபோது அவர் விபத்தில் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    அதன்பேரில் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து தென்னரசை கைது செய்தனர்.

    • மதுரையில் சரக்கு வாகனத்தில் சிக்கி பிளஸ்-1 மாணவர் பலியானார்.
    • தந்தை கண் முன்பு நடந்த இந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    மதுரை

    மதுரை லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மகன் சஞ்சய் பாண்டி (வயது 15). இவர் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்தநிலையில் சஞ்சய் பாண்டி சம்பவத்தன்று மாலை தந்தை பாண்டியராஜனுடன், மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டு சென்றார். அவர்களின் வாகனம், மதுரை அழகர்கோவில் ரோட்டில் சென்றது.

    அப்போது திருவிளான்பட்டி பெட்ரோல் பங்க் அருகே, பின்னால் வேகமாக வந்த சரக்குலாரி மோதியது. இதில் தந்தை-மகன் ஆகிய 2 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

    அப்போது சரக்குலா ரியின் பின்புற கொக்கியில், எதிர்பாராத விதமாக மாணவனின் சட்டை சிக்கிக்கொண்டது. இதனால் அந்த லாரி, சஞ்சய் பாண்டியை தரதரவென இழுத்துச்சென்றது.

    இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பாண்டியராஜன், 'என் பிள்ளையை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்" என்று கூக்குரலிட்டு கதறினார்.

    இதனை கண்ட பொதுமக்கள் அவனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் சட்டை முழுவதுமாக கிழிந்து, சஞ்சய் பாண்டி ரத்த வெள்ளத்துடன் நடுரோட்டில் கிடந்தார். இதனைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் தந்தை-மகனை மீட்டு, கள்ளந்திரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதில் பாண்டியரா ஜனுக்கு சிறிய அளவில் காயம் இருந்ததால், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் சஞ்சய் பாண்டிக்கு உடல் முழுவதும் படுகாயங்கள் இருந்தன. அவரை உறவினர்கள் மேல் சிகிச்சைக்காக, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இருந்தபோதிலும் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே, சஞ்சய் பாண்டி பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக அப்பன்திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனின் உடலை மீட்டு பிேரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • லாரி மோதி கல்லூரி மாணவர் பலியானார்.
    • 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அடுத்துள்ள வெத்தியார்வெட்டு காலனி தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் வீரராகவன் (வயது 18). இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 4-ந்தேதி வீரராகவன் ஜெயங்கொண்டத்தில் இருந்து வீட்டிற்கு தனது நண்பர்கள் 2 பேருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நெல்லிதோப்பு கிராமத்தின் மேம்பாலம் வழியாக சென்றபோது மணல் ஏற்றி சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் வீரராகவன் உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அந்த வழியாக சென்றவர்கள் அவர்கள் 3 பேரையும் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக 3 பேரும் தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வீரராகவன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனது கண் முன்பே மகன் இறந்ததைக் கண்டு தாய் அலறி துடித்தார்.
    • ஒரே மகனை இழந்த தம்பதிக்கு அரசு உதவ வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    வேலூர்:

    வேலூர் சாய்நாதபுரம் அடுத்த பாலமதிரோடு முருகன் நகரைச் சேர்ந்தவர் மணி விவசாயி. இவருடைய மனைவி ரேவதி தம்பதியின் ஒரே மகன் தினேஷ் குமார் (வயது 14) சாய்நாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தை ஒட்டியே வீடு உள்ளது. நிலத்தில் கீரை உள்ளிட்ட காய்கறிகள் பயிரிட்டுள்ளனர்.

    இதில் விளையும் கீரை காய்கறிகளை ரேவதி விற்பனை செய்துவந்தார். இன்று காலை நிலத்தில் அகத்திக்கீரை அறுத்து கட்டினர். அதனை ஒரு சைக்கிளில் வைத்துக்கொண்டு தினேஷ்குமார் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்தார். அவரது தாய் ரேவதி பின்னால் கீரை கட்டை பிடித்தபடி நடந்து வந்து கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில் விவசாய நிலத்தில் நேற்றிரவு மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதனை அவர்கள் கவனிக்கவில்லை.

    சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வந்த தினேஷ்குமார் மின் கம்பியை தெரியாமல் மிதித்து விட்டார். மின்சாரம் அவர் மீது பாய்ந்தது. மேலும் சைக்கிளை பிடித்துக் கொண்டு வந்த ரேவதியையும் மின்சாரம் தாக்கியது.

    இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.இதில் தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தனது கண் முன்பே மகன் இறந்ததைக் கண்டு அலறி துடித்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த பாகாயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பலியான மாணவன் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று இரவு வேலூர் மாநகர பகுதியில் பரவலாக மழை பெய்தது. பலத்த காற்று வீசியது.இதில் மின்கம்பி அறுந்துள்ளது. மின்கம்பிகள் அறுந்து விழாமல் இருக்கும் வகையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    இது தொடர்பாக மின் அதிகாரிகள் அலட்சியமாக பதில் கூறுகின்றனர். ஒரே மகனை இழந்த தம்பதிக்கு அரசு உதவ வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    மேலும் மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் அதன் அருகில் செல்ல வேண்டாம்.தொடக்கூடாது என மின் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    பொள்ளாச்சி மாணவி கொலையில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என்று போலீஸ் சூப்பிரண்டு கூறியுள்ளார். #PollachiIssue #StudentMudercase #SpecialForces

    கோவை

    கோவையில் மாயமான கல்லூரி மாணவி பிரகதி பொள்ளாச்சி பகுதியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடக்கும் தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா, டி.ஐ.ஜி. கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் ஆகியோர் சென்றனர். கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. 

    இதில் ஒரு தனிப்படையினர் காந்திபுரம், பொள்ளாச்சி, பல்லடம் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மற்றொரு தனிப்படையினர் மாணவியின் செல்போன் அழைப்புகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் கூறுகையில், மாணவி கொலை வழக்கில் முக்கிய தடயங்கள் சிக்கி உள்ளது. அதை வைத்து விசாரணை நடத்தியதில் துப்பு கிடைத்துள்ளது. விரைவில் கொலையாளிகளை கைது செய்வோம் என்றார்.  #PollachiIssue #StudentMudercase #SpecialForces

    கல்லூரி மாணவியை கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று மாணவியின் அண்ணன் கூறியுள்ளார். #PollachiIssue #StudentMudercase #SpecialForces

    கோவை:

    கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி பிரகதியின் சொந்த அண்ணன் அரவிந்த்குமார் கூறியதாவது:-

    எனது தந்தை விவசாயி. நானும் விவசாயி. எனது தங்கை நன்றாக படிப்பார். அதனால் கஷ்டப்பட்டு படிக்க வைத்தோம்.

    கடந்த வெள்ளிக்கிழமை மதியம் எனது தங்கை 1.45 மணிக்கு கல்லூரியை விட்டு வெளியே வந்துள்ளார். 2.30 மணிக்கு பிரகதி எங்கள் அம்மாவை போனில் தொடர்பு கொண்டு ஊருக்கு வர பஸ் ஏற நிற்கிறேன் என்று கூறியுள்ளார்.

    3.30 மணிக்கு பிரகதிக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை நாட்டுதுரை தங்கைக்கு போன் செய்துள்ளார். அப்போது பல்லடம் வந்து கொண்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

    அதன்பின்னர் பிரகதியை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதிர்ச்சியடைந்த நாங்கள் பல்லடம் போலீசில் புகார் செய்ய சென்றோம். பல்லடம் போலீசார் நீங்கள் கோவை போலீசில் தான் புகார் செய்ய வேண்டும் என்று திருப்பி அனுப்பி விட்டனர்.

    உடனே கோவைக்கு புறப்பட்டோம். கோவை காட்டூர் போலீசில் புகார் செய்தோம். இந்நிலையில் எனது தங்கை மிக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம். கோவை, பொள்ளாச்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக மாறி வருவது அதிக கவலை அளிக்கிறது.

    கொலையில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார். #PollachiIssue #StudentMudercase #SpecialForces

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே பாலியல் வன்கொடுமை செய்து 5-ம் வகுப்பு மாணவியை கொலை செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே உள்ள தென் முடியனூரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி அன்புகுமாரி, இவர்களுக்கு கீதா (10) என்ற மகளும் பிரபு (8) என்ற மகனும் இருந்தனர்.

    கணவன், மனைவி இருவரும் விவசாய கூலித்தொழிலாளி என்பதால், சிறுமி கீதா, அதே கிராமத்தில் வசிக்கும் தாய்வழி பாட்டி வீட்டில் தங்கி, அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில், அதே பகுதியில் உள்ள கரும்புத்தோட்டத்தில் சிறுமி கீதா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் தண்டராம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் சிறுமி பிணத்தை பார்வையிட்டனர். சிறுமியின் கழுத்து மற்றும் பிறப்புறுப்பில் ரத்தகாயங்கள் இருந்தது.

    அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும் சிறுமி அணிந்திருந்த மூக்குத்தியும் திருடப்பட்டிருந்தது.

    திருவண்ணாமலை எஸ்.பி. சக்கரவர்த்தி, கூடுதல் எஸ்.பி. வனிதா, டி.எஸ்.பி. ஹேமசித்ரா, தண்டராம்பட்டு இன்ஸ்பெக்டர் பாண்டி ஆகியோரும் அங்கு வந்து கீதா உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    சிறுமி உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் ஜெசி அழைத்து வரப்பட்டது. அது கொலை நடந்த இடத்தை மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தொலைவு ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    இதற்கிடையே போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் சிறுமி கீதாவை அதே கிராமத்தை சேர்ந்த விவசாய கூலிதொழிலாளி கணேசன் (60) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு தப்பியது தெரியவந்தது. செங்கம் டி.எஸ்.பி. குத்தாலிங்கம் தலைமையிலான தனிப்படை போலீசாரும், தண்டாரம்பட்டு இன்ஸ்பொக்டர் பாண்டி தலைமையிலான மற்றொரு தனிப்படை போலீசாரும் கணேசனை பல இடங்களிலும் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில், செங்கம் பஸ் நிலையத்தில் நின்றிருந்த ஒரு பஸ்சில் அமர்ந்திருந்த கணேசனை, டி.எஸ்.பி. குத்தாலிங்கம் தலைமையிலான போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.


    கணேசனை திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் எஸ்.பி. சக்கரவர்த்தி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த கொடூர சம்பவம் தென்முடியனூர் கிராமத்தில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தா.பேட்டை:

    தா.பேட்டை அடுத்த ஜெம்புநாதபுரம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். கூலிதொழிலாளி. இவரது மகன் கிஷோர் (13) அங்குள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் விளையாடசென்றதாக கூறப்படுகிறது. 

    அப்போது ஆதனூர்சின்ன ஏரியில் உள்ள மரக்கன்றுகளுக்கு மினி ஆட்டோவில் தண்ணீர்தொட்டி வைத்து அதன்மூலம் தண்ணீர் ஊற்றி கொண்டு சென்றுள்ளதாக தெரிகிறது. அப்போது ஆட்டோவின் பின் புறத்தில் சிறுவன் கிஷோர் ஏறியபோது, எதிர்பாராதவிதமாக ஆட்டோவில் இருந்து தவறி கீழே விழுந்தார். 

    இதில் சிறுவன் கிஷோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று சிறுவனை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் கிஷோர் பரிதாபமாக இறந்தான். 

    இது குறித்து தகவல் அறிந்த ஜெம்புநாதபுரம் போலீசார் சிறுவன் கிஷோர் உடலை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குபதிந்து ஆட்டோ டிரைவர் தினேஷ்சிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டிவனத்தில் பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்த 9-ம் வகுப்பு மாணவன் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள நெய்குப்பி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அபினேஷ் (வயது 14). இவன் திண்டிவனத்தில் உள்ள அரசு நிதிஉதவி பெறும் ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். தினமும் பள்ளிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம்.

    அதேப்போல் இன்று காலை பள்ளிக்கு செல்வதற்காக நெய்குப்பியில் இருந்து திண்டிவனம் செல்லும் அரசு பஸ்சில் ஏறினான். அந்த பஸ்சில் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது. அபினேசுக்கு பஸ்சின் சீட்டில் உட்காருவதற்கும், உள்ளே நிற்பதற்கும் இடம் கிடைக்கவில்லை. இதனால் பஸ்சின் பின்பக்க படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்தான். திண்டிவனம் காந்தி சிலை அருகே பஸ் சென்று கொண்டிருந்தது.

    அப்போது நிலைதடுமாறிய அபினேஷ் திடீரென பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தான். இதில் அவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவனை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அபினேஷ் பரிதாபமாக இறந்தான்.

    இது குறித்து ரோசனை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. #tamilnews
    ஊட்டியில் நேற்று இரவு விடிய, விடிய மழை பெய்தது. பலத்த சூறாவளி காற்று வீசியதில் மரம் விழுந்து மாணவர் ஒருவர் பலியானார்.
    வால்பாறை:

    ஊட்டியில் நேற்று இரவு விடிய, விடிய மழை பெய்தது. பலத்த சூறாவளி காற்றும் வீசியது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து மின் கம்பங்கள் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்

    ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள அரசு பணிமனையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மகன் இமான் அகஸ்டின் (18). கோத்தகிரியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி பி.காம். (சி.ஏ.)முதலாம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறை என்பதால் நேற்று வீட்டுக்கு வந்து இருந்தார்.

    மாணவர் இமான் அகஸ்டின் ஊட்டி பிங்கர் போஸ்ட் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது பலத்த சூறாவளி காற்று வீசியது. அந்த சமயத்தில் ரோடு ஓரம் இருந்த ராட்சத கற்பூரம் மரம் திடீரென மாணவர் இமான் அகஸ்டின் மீது விழுந்தது.

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலே அவர் பரிதாபமாக இறந்தார்.

    நேற்று விடுமுறை நாள் என்பதால் பஸ் நிறுத்தத்தில் கூட்டம் குறைவாக இருந்தது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக மஞ்சூர் சாலையில் ஜார்க்கண்ட் மாநில வாலிபர், பந்தலூரில் தாய்-மகள், நேற்று ஊட்டியில் கல்லூரி மாணவர் என 4 பேர் பலியான சம்பவம் நடைபெற்று உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் சூறாவளி காற்று காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கான உத்தரவை கலெக்டர் இன்சென்ட் திவ்யா பிறப்பித்துள்ளார். பலத்த மழை காரணமாக கூடலூர் ஏழுமுறம் ஆற்றின் கரையோரம் தடுப்பு சுவர் இடிந்து மண் அரிப்பு ஏற்பட்டது. குன்னூர் அருகே உள்ள வெலிங்டன்- அருவங்காடு ரெயில் நிலையங்களுக்கு இடையே ராட்சத மரம் தண்டவாளத்தில் விழுந்தது.

    இதனால் மலை ரெயில் நடுவழியில் நின்றது. தண்டவாளத்தில் விழுந்த மரத்தை ரெயில்வே ஊழியர்கள் அகற்றினார்கள். இதனால் மலை ரெயில் 20 நிமிடம் தாமதமாக சென்றது.

    ஊட்டியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்து உள்ளது.

    ×