என் மலர்
நீங்கள் தேடியது "student molestation"
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ந் தேதி கைது செய்யப்பட்டார்.
ஓராண்டுக்குப்பின்னர் கடந்த 12-ந்தேதி மதுரை ஐகோர்ட்டு அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நிர்மலாதேவி ஆஜரானார். இதற்காக அவர் தனியாக காரில் வந்தார். செய்தியாளர்களை பார்த்தவுடன் “பேசக் கூடாது” என்று வாயில் கையை வைத்து சைகை செய்தபடி கோர்ட்டுக்குள் சென்றார்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓராண்டாக கோர்ட்டுக்கு அவர் அழைத்து வரப்பட்ட நிலையில் இன்று அவர் தனியாக காரில் வந்தது வித்தியாசமாக இருந்தது. நிர்மலாதேவி விடுதலையானபோதும் இதுவரை அவரை குடும்பத்தினர் யாரும் சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. #nirmaladevi
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த பள்ளிதெரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது கல்லூரி மாணவி. இவருக்கும் ஆந்திர மாநிலம் வி.கோட்டா பகுதியை சேர்ந்தவர் சண்முகம் மகன் தனசேகரன் (வயது 26). என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியை பல இடங்களில் தேடியும் காணவில்லை .
இது குறித்து மாணவியின் பெற்றோர் உமராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரில் தனசேகர் என்பவர் ஆசை வார்த்தை கூறி எனது மகளை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாக கூறியிருந்தனர். இதையடுத்து போலீசார் தனசேகரனை பிடித்து மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் 17 வயது மாணவியை கடத்தி திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்ததிற்காக தனசேகரனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள தெப்பம்பட்டியைச் சேர்ந்த ராஜூ மகன் அழகுபாண்டி (வயது 22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பிரேமா (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் நட்பாக பழகி வந்தார். இவர் பிளஸ்-1 படித்து வந்தார். நாளடைவில் இவர்கள் பழக்கம் அதிகரிக்கவே பிரேமாவை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
பின்னர் சம்பவத்தன்று அவரை பல்லடத்தில் உள்ள தனது நண்பர் வினோத் என்பவரின் அறைக்கு அழைத்துச் சென்றார். திருமணம் செய்து கொள்வதாக கூறி பல முறை உல்லாசமாக இருந்துள்ளார்.
தனது மகளை காணாமல் திடுக்கிட்ட பிரேமாவின் பெற்றோர்கள் அழகுபாண்டி கடத்திச் சென்றது தெரிய வரவே அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அழகுபாண்டியை கைது செய்தனர். பிரேமாவை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவர் ஒருவர் கோட்டார் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர் நாகராஜன் (வயது 30) அந்த மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவன், தனது பெற்றோரிடம் கூறினார்.
இதைக்கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து கோட்டார் போலீசில் புகார் செய்தனர். போலீசார் ஆசிரியர் நாகராஜன் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து ஆசிரியர் நாகராஜன் தலைமறைவாகி உள்ளார்.
கோட்டார் போலீஸ் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கை மகளிர் போலீசார் விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து மகளிர் போலீசார் இது தொடர்பான விசாரணையில் இறங்கி உள்ளனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் தேவராசன் விடுத்து உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சிட்லிங் பகுதியில் 16 வயதான சிறுமியை அந்த பகுதியை சேர்நத சதீஷ், ரமேஷ் ஆகியோரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்து உள்ளார். கடந்த 5-ந் தேதி காலை 11 மணிக்கு நடைபெற்ற சம்பவத்துக்கு பிறகு மறுநாள் (6-ந் தேதி) வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அன்றைய தினமே பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரால் கொடுக்கப்பட்ட மனுவை போலீசார் வாங்க மறுத்தது ஏன்? அன்றைக்கே நடவடிக்கை தொடங்கி இருந்தால் மாணவி உயிரிழப்பை தவிர்த்து இருக்க முடியும். இது தொடர்பாகவும் நீதி விசாரணை நடத்த வேண்டும்.
7-ந் தேதி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு 3 நாட்கள் சிகிச்சை வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்பிறகுதான் 10-ந் தேதி காலை உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. மருத்துவமனையில் என்ன சிகிச்சை வழங்கப்பட்டது என்பது தொடர்பாகவும் நீதி விசாரணை நடத்த வேண்டும்.
உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #dharmapurigirlstudent #girlmolested
பொள்ளாச்சி:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பொட்டயம் பாளையத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் சூரியகிருஷ்ணன் (23). இவர் கோவை இருகூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார்.
சூரிய கிருஷ்ணன் பொள்ளாச்சியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்த போது கல்லூரி மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. சூரிய கிருஷ்ணன் கல்லூரி படிப்பு முடிந்ததும் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று விட்டார்.
தற்போது அந்த மாணவி கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். மாணவி தனது காதலன் சூரிய கிருஷ்ணனை பார்ப்பதற்காக அடிக்கடி கோவைக்கு வந்து சென்று உள்ளார்.
அப்போது திருமண ஆசை வார்த்தை கூறி மாணவியுடன் சூரிய கிருஷ்ணன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாணவி கூறி இருக்கிறார்.
அதற்கு சூரிய கிருஷ்ணன தனது சகோதரி திருமணத்திற்கு பின் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என தெரிவித்து உள்ளார். இந்த நிலையில் மாணவியை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி காதலன் சூரிய கிருஷ்ணன் தன்னை ஏமாற்றி விட்டதாக கோட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுதல், கற்பழித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து சூரிய கிருஷ்ணனை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கைதான சூரிய கிருஷ்ணனை போலீசார் பொள்ளாச்சி ஜே.எம். எண்-2 மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
குடியாத்தம்:
கே.வி.குப்பம் அடுத்த பசுமாத்துர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி குடியாத்தம் அரசு மகளிர் மேல் நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் 15 நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்று வீடு திரும்பவில்லை. தன் மகளை கண்டுபிடித்து தருமாறு மாணவியின் தந்தை கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் 17 நாட்களுக்கு பிறகு மாணவியை சென்னையில் மீட்டு கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மாணவியை கடத்தியது அதே பகுதியைச் சேர்ந்த ஹிட்லர் என்பவரின் மகன் ராஜசேகர் என்பது தெரியவந்தது. இவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து ராஜசேகரை கைது செய்தனர்.
மாணவி புகார் குறித்து கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கல்லூரியின் மீது புகார் கூறியுள்ள மாணவி, கல்லூரியில் படிக்கும் சக மாணவிகளின் செல்போனை உடைப்பதும் அவர்களை இழிவாக பேசுவதுடன் தொடர்ந்து பிரச்சினையில் ஈடுபட்டு வந்துள்ளார். திருடிய பொருட்களை டாய்லெட்டில் வீசியுள்ளார்.
அவரை கல்லூரி விடுதியில் இருந்து நீக்கியதற்கான உத்தரவு கடிதத்தை கடிதம் மூலம் அனுப்பினோம். ஆனால், அந்த கடிதத்தை அவர்கள் வாங்கவில்லை.
பாலியல் குற்றச்சாட்டு புகார் தொடர்பாக பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்த உள்ளது.
தவறு செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். புகார் கூறிய மாணவி தன் மீதுள்ள தவறை மறைக்கவே கல்லூரி மீதும் பேராசிரியர்கள் மீது பழி சுமத்தியுள்ளார் என்றார்.
பண்ருட்டி:
பண்ருட்டி அடுத்த அங்கு செட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகள் ராமதிலகம் (வயது 15). இவர்அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் பள்ளிக்கு செல்லும் போதுஅதேபகுதியை சேர்ந்த கொத்தனார் ஜனார்த்தன்(20)என்ற வாலிபர் இவரை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் மாணவி ராமதிலகம் கர்ப்பமானார். தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ள மாணவி ராமதிலகம் நேற்று காதலன் ஜனார்த்தனன் வீட்டுக்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
அதற்கு அவர் உன்னை திருமணம்செய்து கொள்ள முடியாது என மறுத்துள்ளார். பின்னர் அவரை திட்டி வீட்டை விட்டு விரட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவி ராமதிலகம் பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதனைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் எழிலரசி இதுகுறித்து ஜனார்த்தனன் அவரது பெற்றோர்கள் உறவினர்கள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகிறார்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள பூசாரிகவுண்டன்வலசு பகுதியை சேர்ந்த முருகன் மகள் ராணி (16) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
உடுமலைப்பேட்டை திருமூர்த்திநகர் முள்ளுப் பட்டியை சேர்ந்த கன்னியப்பன் மகன் மாயவன் என்ற கருப்பசாமி (18). கூலி வேலை பார்த்து வருகிறார். இவரும் ராணியும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.
சம்பவத்தன்று கருப்புசாமி மாணவியை தனியாக அழைத்து சென்று வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு கருப்பசாமியின் நண்பர்களான முருகேசன் மகன் வினோத் (16), விக்னேஷ் (18) ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
மாணவியின் உடலில் மாற்றங்கள் ஏற்படவே இது குறித்து பெற்றோர்கள் விசாரித்துள்ளனர். அப்போது நடந்த விபரங்களை ராணி கூறினார். அதிர்ச்சி அடைந்த முருகன் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் மாணவியை பலாத்காரம் செய்த கருப்பசாமியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த 2 பேரை தேடி வருகின்றனர்.
செய்யாறு:
செய்யாறு அருகே தவசி கிராமத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமை சேர்ந்த 17 வயது மாணவி, இந்தாண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினார். தேர்வில் தேர்ச்சி பெறாத அந்த மாணவி, மறு தேர்வுக்கு விண்ணப்பித்து தயாரானார்.
செய்யாறு சத்திய மூர்த்தி தெருவில் கணவருடன் வசிக்கும் அக்காள் வீட்டில் தங்கி டியூசன் சென்று படித்தார். அக்காள் வீட்டில் மாணவி நேற்று தனியாக இருந்தார்.
இதை அறிந்த அகதிகள் முகாமை சேர்ந்த பெயிண்டர் தொழிலாளி பீட்டர் மகன் உதயன் (36). வீட்டுக்குள் புகுந்தார். மாணவி மட்டும் தனியாக இருந்ததால் வீட்டின் கதவை அடைத்து வலுகட்டாயமாக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுப்பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது. என்னை மாட்டி விட்டால் கொலை செய்து விடுவேன் என்று மாணவியை மிரட்டி விட்டு உதயன் தப்பிச் சென்றார்.
வீடு திரும்பிய தனது அக்காளிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி மாணவி கதறி அழுதார். இதுகுறித்து செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
போக்சோ சட்டம் உள்பட 5 பிரிவுகளில் வழக்குபதிந்து இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் உதயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.