search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sub-inspector investigation"

    • 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
    • பவித்ரா கவுடாவுக்கு வருத்தம் இல்லாதது குறித்து மீண்டும் பரபரப்பு குற்றச்சாட்டு

    பெங்களூரு:

    கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய ரேணுகா சாமி கொலை வழக்கு தொடர்பாக நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த வழக்கில் இருந்து தப்பிக்க தர்ஷன், பவித்ரா கவுடா ஆகியோருக்கு அரசியல் கட்சியினர் ஆதரவாக செயல்பட்டு வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் போலீசார் அதை மறுத்து விட்டனர்.

    இந்த நிலையில் போலீஸ் காவலில் இருந்த போது பெண் சப்-இன்ஸ்பெக்டர் பாதுகாப்புடன் விசாரணைக்காக பவித்ரா கவுடாவை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

    அப்போது போலீஸ் காவலில் இருந்த போது பவித்ரா கவுடா தனது வீட்டில் இருந்து மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு திரும்பினார். அப்போது அவர் லிப்டிஸ் டிக் மற்றும் மேக்அப் போட்டு கொண்டு சிரித்தப்படி வந்ததாக தகவல் வெளியானது.

    மேலும் ரேணுகா சாமி கொலையில் பவித்ரா கவுடாவுக்கு வருத்தம் இல்லாதது குறித்து மீண்டும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

    இதையடுத்து பவித்ரா கவுடாவுடன் பாதுகாப்புக்கு சென்ற பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

    ×