search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sub jail"

    இஸ்லாமாபாத் நகரில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் சிகிச்சை பெற்றுவரும் அரசு ஆஸ்பத்திரி அறை கிளைச்சிறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. #NawazSharif #Sharifhospitalward #NawazSharifsubjail
    இஸ்லாமாபாத்:

    லண்டன் அவன்பீல்ட் குடியிருப்பு தொடர்பான ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் கடந்த 13-ம் தேதியில் இருந்து ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் அடைத்து வைக்கப்பட்டார்.

    சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் நவாஸ் ஷரிப்புக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சிறுநீரக பாதிப்புக்காக அடிடாலா சிறைக்குள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

    இதற்கிடையே, நோய் தீவிரமடைந்து சிறுநீரகம் செயலிழந்துவிடும் அபாயநிலையில் இருக்கும் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்திருந்தனர். அடிடாலா சிறைச்சாலை அமைந்துள்ள பஞ்சாப் மாகாண நிர்வாகம் இந்த பரிந்துரையை பரிசீலித்து வந்தது.

    இதற்கிடையில், தனக்கு நெஞ்சு வலிப்பதாக நவாஸ் ஷரிப் தெரிவித்ததையடுத்து, கடந்த 2016-ம் ஆண்டு இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட நவாஸ் ஷரிப்-ஐ சிறப்பு மருத்துவர்கள் குழு பரிசோதித்தது. அவருடைய இ.சி.ஜி. முடிவு திருப்திகரமாக இல்லாததை கண்ட டாக்டர்கள் உடனடியாக நவாஸ் ஷரிப்புக்கு அவசர சிகிச்சை அளிக்க வேண்டும் என குறிப்பிட்டனர்.


    இதைதொடர்ந்து, இஸ்லாமாபாத் நகரில் உள்ள பாகிஸ்தான் அரசு தலைமை மருத்துவமனையில் நவாஸ் ஷரிப்பை அனுமதித்து சிகிச்சை அளிக்க பஞ்சாப் மாகாண அரசு நேற்று அனுமதி அளித்தது.

    நேற்றிரவு அடிடாலா சிறைச்சாலையில் இருந்து விமானம் மூலம் இஸ்லாமாபாத் கொண்டு செல்லப்பட்ட நவாஸ் ஷரிப், பாகிஸ்தான் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறப்பு மருத்துவர்கள் குழு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் கண்காணித்து வருகின்றது.

    இந்நிலையில், பாகிஸ்தான் அரசு தலைமை மருத்துவமனையின் இதயநோய் சிகிச்சை பிரிவில் நவாஸ் ஷரிப் அனுமதிக்கப்பட்டுள்ள தனி வார்டை அவர் அங்கிருந்து வெளியேறும்வரை கிளைச்சிறையாக அறிவித்து இஸ்லாமாபாத் நகர கமிஷனர் அலுவலகம் நேற்று பின்னிரவில் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. #NawazSharif #Sharifhospitalward  #NawazSharifsubjail
    ×