search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sudan land dispute"

    • சூடானில் இரு குழுக்களுக்கு இடையே நிலத்தகராறு ஏற்பட்டது.
    • நிலத்தகராறு தொடர்புடைய மோதலில் 54 பேர் கொல்லப்பட்டனர்

    ஜுபா:

    வட ஆப்பிரிக்க நாடுகளான சூடான் மற்றும் தெற்கு சூடான் எல்லையில் அமைந்துள்ள எண்ணெய் வளம் கொண்ட அபேயில் ஆதிக்கம் செலுத்த இரு நாடுகளும் விரும்புகின்றன. கடந்த 2011-ல் சூடானில் இருந்து தெற்கு சூடான் சுதந்திரம் பெற்ற பின்பும், இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை.

    அபேய் உரிமை தொடர்பாக பொது வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என ஆப்பிரிக்க யூனியன் பரிந்துரைத்தது. ஆனால் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. அபேய் தற்போது தெற்கு சூடானின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் தெற்கு சூடான் தன் படைகளை அபேய்க்கு அனுப்பியதில் இருந்து இரு நாடுகளின் எல்லை மோதல்கள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, இங்கு ஐ.நா. பாதுகாப்புப் படை இயங்கி வருகிறது. எனினும், இங்கு இனக்கலவரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆயுதங்களுடன் நுழைந்த நபர்கள் சிலர் கிராம மக்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

    இந்த துப்பாக்கிச்சூட்டில் ஐ.நா.வின் பாதுகாப்புப் படை வீரர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 54 பேர் பலியாகினர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவத்திற்கு ஐ.நா.சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    • சூடானில் இரு குழுக்களுக்கு இடையே நிலத்தகராறு ஏற்பட்டது.
    • நிலத்தகராறு தொடர்புடைய மோதலில் 200 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

    புளூ நைல்:

    சூடான் நாட்டின் தெற்கே புளூ நைல் மாகாணத்தில் பழங்குடியின மக்கள் பல பிரிவுகளாக வசித்து வருகின்றனர். இதில், ஹவுசா பிரிவு மக்களுக்கும் வேறு சில குழுக்களுக்கும் இடையே நிலம் பகிர்வில் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கடந்த வாரம் மோதிக் கொண்டனர். இந்த சம்பவம் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்தது.

    இதற்கிடையே, கடந்த சில நாட்களாக இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட நிலத்தகராறு தொடர்புடைய மோதலில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என மொத்தம் 170 பேர் வரை கொல்லப்பட்டனர் என தகவல் வெளியானது.

    இந்நிலையில், சூடான் நிலத்தகராறில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 220 ஆக உயர்ந்துள்ளது. பலர் வன்முறையில் காயமடைந்துள்ளனர் என அல்-மஹி பகுதியில் உள்ள மருத்துவமனையின் தலைவரான அப்பாஸ் மவுசா உறுதிப்படுத்தி உள்ளார்.

    இதையடுத்து, கவர்னர் அஹ்மத் அல்-ஓம்டா பாடி, புளூ நைல் மாகாணத்தில் 30 நாட்களுக்கு அவசரகால நிலையை பிறப்பித்து உத்தரவிட்டார்.

    • சூடானில் இரு குழுக்களுக்கு இடையே நிலத்தகராறு ஏற்பட்டது.
    • நிலத்தகராறு தொடர்புடைய மோதலில் 170 பேர் வரை கொல்லப்பட்டனர்.

    புளூ நைல்:

    சூடான் நாட்டின் தெற்கே புளூ நைல் மாகாணத்தில் பழங்குடியின மக்கள் பல பிரிவுகளாக வசித்து வருகின்றனர். இதில், ஹவுசா பிரிவு மக்களுக்கும் வேறு சில குழுக்களுக்கும் இடையே நிலம் பகிர்வில் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கடந்த வாரம் மோதிக் கொண்டனர். இந்த சம்பவம் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்தது.

    இந்நிலையில், கடந்த 2 நாட்களாக இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட நிலத்தகராறு தொடர்புடைய மோதலில் 170 பேர் வரை கொல்லப்பட்டு உள்ளனர்.

    தலைநகர் கார்ட்டூம் நகரில் இருந்து தெற்கே 500 கி.மீ. தொலைவில் உள்ள ரோசிரெஸ் பகுதியருகே, வத் அல்-மஹி என்ற இடத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என மொத்தம் 170 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 86 பேர் வன்முறையில் காயமடைந்துள்ளனர். இதனை அல்-மஹி பகுதியில் உள்ள மருத்துவமனையின் தலைவரான அப்பாஸ் மவுசா உறுதிப்படுத்தி உள்ளார்.

    ×