என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suffering"

    • அன்பழகன் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.
    • வீட்டில் தனியே இருந்த போது மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் அருகே மணக்காடு பிடாரிக்கட்ட ளை பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் (வயது 53). இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.

    சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியே இருந்த போது மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு )ராதாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சிதம்பரத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திர ராஜா. ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். நேற்று சென்று கொண்டிருந்தார்.
    • , மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து, பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் தலையில் படுகாயமடைந்த மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கடலூர்:

    சிதம்பரத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திர ராஜா. இவர் சிதம்பரம் கூட்டுறவு விற்பனை நிலையத்தில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். மேலும் தமிழ்நாடு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவராகவும் உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். சிதம்பரம் மானாசந்து பள்ளி அருகே சென்ற போது, மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து, பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதற்கிடையே மாநில தலைவர் தாக்கப்பட்டதை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட விற்பனையாளர்கள் முடிவு செய்தனர் 

    அதன்படி ஏராளமான விற்பனையாளர்கள் விடுப்பு எடுத்து போரா ட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளையும் அடைத்தனர். தொடர்ந்து விற்பனையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக சிதம்பரம் சென்றனர். அங்கு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மாநிலத் தலைவர் ஜெயச்சந்திர ராஜாவை தாக்கிய மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.  மேலும் விற்பனையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • கடலூர் திருப்பாதி ரிப்புலியூர் கம்மியம்பேட்டை பகுதியில் ெரயில்வே கேட் உள்ளது.
    • திடீரென்று ெரயில்வே கேட்டில் பழுது ஏற்பட்டதால் சரியான முறையில் ெரயில்வே கேட் மூடவில்லை.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதி ரிப்புலியூர் கம்மியம்பேட்டை பகுதியில் ெரயில்வே கேட் உள்ளது. இதன் அருகில் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையம் உள்ளன. ெரயில்கள் வந்து செல்லும் நேரத்தில் கம்பியம் பேட்டை ெரயில்வே கேட் மூடப்படும். ெரயில்வே கேட் மூடும் சமயத்தில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பது வழக்கம். மேலும் கம்மியம்பேட்டை ெரயில்வே கேட் அடிக்கடி பழுது ஏற்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை மன்னார்குடி - திருப்பதி எக்ஸ்பிரஸ் கடலூர் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது கடலூர் கம்மியம் பேட்டையில் ெரயில்வே கேட்டை மூடும் பணியில் ஊழியர் ஈடுபட்டு வந்தார். திடீரென்று ெரயில்வே கேட்டில் பழுது ஏற்பட்டதால் சரியான முறையில் ெரயில்வே கேட் மூடவில்லை. இதன் காரணமாக தண்ட வாளத்தில் சிக்னல் கிடைக்க வில்லை. சிக்னல் கிடைக்காத தால்ரெயில் டிரைவர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் ெரயிலை நிறுத்தினார். இதனை தொடர்ந்து ெரயில்வே கேட் கீப்பர் ெரயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன் பேரில் ஊழி யர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ெரயில்வே கேட்டில் ஏற்பட்ட பழுதை நீண்ட போராட்டத்திற்கு பிறகு சரி செய்தனர். அதன் பின்னர் மன்னார்குடி- திருப்பதி எக்ஸ்பிரஸ் ெரயில் சுமார் அரை மண நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது  ரெயில்வே கேட் பழுதானதால் கடலூர் கம்மியம்பேட்டை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மேலும் சென்னை மற்றும் சிதம்பரத்தி லிருந்து வரக்கூடிய அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் வெளியூருக்கு செல்லக்கூடிய வாகனங்கள் ஜவான் பவன் சாலை, கம்மியம்பேட்டை பாலம், செம்மண்டலம் வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • மதிய வேளையில் சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் சென்றால் அனல்காற்று வீசுகிறது.
    • வெயிலின் உக்கிரத்தில் இருந்து தப்பிக்க, கம்பங்கூழ், சர்பத், நுங்கு, தர்பூசணி, இளநீர் சாப்பிட்டு வருகிறார்கள்.

     திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் கடந்த ஒரு வாரமாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மதிய வேளையில் சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் சென்றால் அனல்காற்று வீசுகிறது. வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க குடை பிடித்தபடி நடமாடி வருகிறார்கள். வயதானவர்கள், பெண்கள் மதிய நேரத்தில் வெயிலில் நடமாடுவதை தவிர்த்து வருகிறார்கள். வெயிலின் உக்கிரத்தில் இருந்து தப்பிக்க, கம்பங்கூழ், சர்பத், நுங்கு, தர்பூசணி, இளநீர் சாப்பிட்டு வருகிறார்கள். இதனால் அவற்றின் வியாபாரம் களைகட்டியுள்ளது. நேற்று மாநகரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. திருப்பூரில் 102 டிகிரி வெயில் நேற்று பதிவானது.

    இரவு நேரத்தில் வீட்டில் மின்விசிறி ஓடினாலும் வெப்பக்காற்று வீசுவதால் மக்கள் அவதியடைந்து வருகிறார்–கள். மேலும் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்லாமல் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.   

    • நாமக்கல் கடை வீதி அருகே குளக்கரைத் திடல் உள்ளது. கடைவீதி மற்றும் மெயின்ரோடு பகுதியில் ஏராளமான நகைக்கடைகள், துணிக்கடைகள், பாத்திரக்கடைகள் உள்ளிட்ட கடைகள் உள்ளன.
    • இந்த கடைகளுக்கு பொருட்கள் வாங்க மோட்டார்சைக்கிள் மற்றும் கார்களில் வரும் பொதுமக்கள், குளக்கரைத்திடலில் வாகனங்களை நிறுத்தி விட்டு பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பி வாகனங்களை எடுத்துச் செல்வது வழக்கம்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய கோவில்களில் தேர்த்திருவிழா நடைபெறும். பங்குனி உத்திரத்திற்கு அடுத்த நாள் முப்பெரும் தேரோட்டம் நடைபெறும்.

    நாமக்கல் கடை வீதி அருகே குளக்கரைத் திடல் உள்ளது. கடைவீதி மற்றும் மெயின்ரோடு பகுதியில் ஏராளமான நகைக்கடைகள், துணிக்கடைகள், பாத்திரக்கடைகள் உள்ளிட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு பொருட்கள் வாங்க மோட்டார்சைக்கிள் மற்றும் கார்களில் வரும் பொதுமக்கள், குளக்கரைத்திடலில் வாகனங்களை நிறுத்தி விட்டு பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பி வாகனங்களை எடுத்துச் செல்வது வழக்கம்.

    மேலும் மாலை நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் குளக்கரைத்திடலுக்கு வந்து நாமக்கல் மலை ஓரமாக அமர்ந்து ஓய்வெடுத்துச் செல்வது வழக்கம். நாமக்கல் நகருக்கு முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வருகை தரும்போது இந்த குளக்கரைத்திடலில் தான் பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.

    ஏற்கனவே குளக்கரைத்திடல் குண்டும் குழியுமாக சேதமடைந்து கிடந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய அ.தி.மு.க எம்.எல்.ஏ பாஸ்கரின் முயற்சியால் குளக்கரைத்திடல் முழுவதும் சீரமைக்கப்பட்டு பேவர் பிளாக் தளம் அமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டு உள்ளது. நாமக்கல்லில் இந்த ஆண்டு, முப்பெரும் தேர்த்திருவிழா கடந்த வாரம் நிறைவு பெற்றுவிட்டது. இந்த நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மெயின் ரோட்டில் உள்ள குளக்கரைத்திடலில், தற்காலிக தேர் கடைகள் அமைப்பதற்காக மற்றும் பந்தல் அமைப்பதற்காக பேவர் பிளாக் தளத்தில் குழிகள் தோண்டி பந்தல் கால் நடப்படுவதால் தரைத்தளம் சேதமடைகிறது. இதனால் பிற்காலத்தில் குளக்கரைத்திடல் மீண்டும் குண்டும் குழியுமாக மாறி, முழுமையாக சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தற்போது கடை அமைக்க ஒப்பந்தம் எடுத்துள்ளவர்கள் குளக்கரைத்திடலுக்குள் வாகனங்கள் வரக் கூடாது என்று தடை செய்துள்ளனர். இதனால் கடைவீதி மற்றும் மெயின் ரோடு பகுதிகளில் உள்ள கடைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் தங்களின் டூ வீலர்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த முடியால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலை ஒரு மாதம் வரை நீடித்தால் பொதுமக்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள், பொதுமக்களின் நலன் கருதி தேர் கடையை, குளக்கரை திடலில் அமைக்காமல், பார்க் ரோட்டில் உள்ள பூங்கா பகுதியில் மாற்றியமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • நிரம்பி வெளியேறும் சாக்கடை கழிவுநீரால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
    • கவுன்சிலர், மாநகராட்சி அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    மதுரை

    மதுரை தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ள தென்னோ லைகாரத் தெருவில் ஆயிரத் துக்கும் மேற்பட்ட குடும்பங் கள் வசித்து வருகின்றன.

    குறுகிய சந்துகளை கொண்ட இப்பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடைகள் நிரம்பி வெளியேறி வரு கின்றன. பழைய பாதாள சாக்கடை குழாய்கள் இருப்பதால் இந்த பிரச்சனை நீடித்து வருகிறது.

    பாதாள சாக்கடைகள் நிரம்பி கழிவு நீர் வெளி யேறுவதால் காம்பவுண்டு களிலும், வீடுகளுக்குள்ளும் சாக்கடை நீர் புகுந்து விடுகிறது. இதன் காரணமாக தென்னோலைக்கார தெருவில் சுகாதார சீர்கேடு அடைந்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து அந்த தெருவில் வசிக்கும் பொது மக்கள் கூறுகையில், தினந்தோறும் சாக்கடை நிரம்பி வழிவது நடந்து வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரியிடம் பலமுறை புகார் தெரி வித்தும் கண்டு கொள்ள வில்லை.

    ஊழியர்களை அழைத்தால் அதிக அளவில் பணம் கேட்கிறார்கள். சாக்கடை பிரச்சினை காரணமாக தெருவில் நடந்து செல்ல கூட முடியாத நிலையில் உள்ளது. எனவே இதுதொடர்பாக கவுன்சிலர், மாநகராட்சி அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • கடந்த 7-ந் தேதி முதல் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • வேலைக்கு அமர்த்தியவர்கள் எனது தாயாரை அங்கிருந்து இந்தியாவுக்கு அனுப்ப மறுக்கிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த பாஸ்கரனின் மகள் பர்வீன். இவர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அந்த மனுவில், 'எனது தாயார் ஜெயபிரியா கடந்த ஜனவரி மாதம் குவைத் நாட்டுக்கு, வீட்டு வேலை செய்வதற்காக முகவர்கள் மூலமாக சென்றார். அவருக்கு கடந்த 7-ந் தேதி முதல் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சொந்த ஊருக்கு வர விரும்புகிறார். ஆனால் வேலைக்கு அமர்த்திவர்கள் எனது தாயாரை அங்கிருந்து இந்தியாவுக்கு அனுப்ப மறுக்கிறார்கள். எனவே எனது தாயாரை இந்தியாவுக்கு அழைத்து வர உதவ வேண்டும். ஏற்கனவே இதுகுறித்து மனு கொடுத்துள்ளேன்' என்று கூறியுள்ளார்.

    • நேற்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை கபிலர்மலை துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகிக்கப்படும் பகுதிகளுக்கு மின்தடை ஏற்பட்டது.
    • வீடுகளில் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கொசு கடியால் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை துணை மின் நிலையத்திலிருந்து கபிலர்மலை சுற்றுவட்டார பகுதிகளான கபிலர்மலை, கபிலக்குறிச்சி, பள்ளக்காடு, பெரிய சோளிபாளையம், சின்ன சோளி பாளையம், பாகம் பாளையம், ஆனங்கூர், அய்யம்பாளை யம், அண்ணா நகர், பொன்மலர் பாளையம், சேளூர், செல்லப்பம்பாளை யம், குன்னத்தூர், பாண்ட மங்கலம், பொத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை கபிலர்மலை துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகிக்கப்படும் பகுதிகளுக்கு மின்தடை ஏற்பட்டது. வீடுகளில் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கொசு கடியால் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.

    கபிலர்மலை துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் மின்தடை ஏற்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவில் 8 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. மின்வாரிய அதிகாரிகள் இதுகுறித்து எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. தினமும், மின்தடை ஏற்படுவதால் இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    இதுகுறித்து மின்வாரிய அதிகாரியிடம் கேட்டால், மின் கம்பி செல்லும் வழியில் தென்னை மரங்கள் இருப்பதால், அடிக்கடி தென்னை மட்டை கம்பி களில் விழுந்து மின்தடை ஏற்படுகிறது. உயர் அழுத்த மின்சாரம் திடீரென வரும்போது பல பகுதிகளில் கம்பி அறுந்து விழுந்து விடுகிறது என்றார்.

    கடந்த சில ஆண்டுகளாக தினசரி மின்தடை என்பது வாடிக்கையாகி விட்டது. தென்னை மரம் வழியாக செல்லும் மின் கம்பிகளை மாற்றி, அதற்கு பதிலாக தரமான கம்பிகள் அமைத்து மின் தடை ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.

    தடையில்லாமல் மின்சாரம் கிடைக்க மின் வாரிய அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என மின்தடையால் தொடர்ந்து அவதிப்பட்டு வரும் விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • மதுரை 20-வது வார்டு பகுதியில் சேதமடைந்த சாலையால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
    • வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை 20-வது வார்டு பகுதியில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை, குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளுக்காக சாலைகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் தோண்டுகின்றனர்.

    அப்போது ஊழியர்களின் கவனக்குறைவால் குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டு சேதமடைகிறது. இதனால் கடந்த 45 நாட்களுக்கு மேலாக பொது மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர் மழையின் காரணமாக தோண்டிய சாலைகளை சரி செய்யாமல் இருப்பதால் சேறும், சகதியுமாக காட்சிய ளிக்கிறது. இதனால் இந்த பகுதி மக்கள் இரு சக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாமல் சாகசங்கள் செய்து மெயின் ரோட்டுக்கு வர வேண்டியுள்ளது.

    இதுகுறித்து கவுன்சிலர் நாகஜோதி சித்தன் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் சரி செய்யப்படவில்லை. போராட்டங்கள் நடத்தியும் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. இதனால் பொது மக்கள் சாலையில் வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    • சுமார் 100-க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி மணல்மேடு கிராமம் உள்ளது.

    இங்கு சுமார் 100-க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு காய்கறி சாகுபடியே பிரதான தொழிலாக உள்ளது.

    இக் கிராமத்திலிருந்து அடுத்து உள்ள மீனவர் காலனி செல்லும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கப்பி மற்றும் மணல் சாலையாகவே உள்ளது.

    இதனால் இவ்வழியே செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என விவசாயிகள் மிகவும் சிரமப்படு கின்றனர்.

    மேலும் மழைக்காலங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக மழைநீர் தேங்கி நிற்கிறது.

    இதனால் வாகன ஒட்டிகள் பெரிதும் அவதி அடைகிறார்கள்.

    இதனால் இந்த சாலையை தார் சாலையாக மாற்றி அமைத்துதர வேண்டும் என கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நேற்று இரவு 8 மணி அளவில் லேசான மழை பெய்தது.
    • இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் வீடுகளில் இருக்கும் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி ராமநத்தம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு 8 மணி அளவில் லேசான மழை பெய்தது. இதனால் ராமநத்தம் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கபட்டது. மேலும் வாகையூரில் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் வீடுகளில் இருக்கும் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். லேசான மழை பெய்தால் இந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்து விடுகின்றனர். இதனையடுத்து அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் நாள் கணக்கில் மின்சாரம் வழங்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதுகுறித்து மின்சார துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

    • லேசான காற்று மழை பெய்தாலும் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது.
    • திருவோணம் அரசு மருத்துவமனை பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

    திருவோணம்:

    தஞ்சை மாவட்டம் திருவோணம் பகுதியில் கடந்த சில நாட்களாக லேசான காற்று மழை பெய்தாலும் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது.

    பிறகு இரவு முழுவதும் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. பிறகு மறுநாள் காலையில் மின்சாரம் இயக்கப்படுகின்றது.

    இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குழந்தைகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

    குறிப்பாக காரியாவிடுதி, எஸ்.எஸ்.ஊரணிபுரம் பிடரில் இருந்து விநியோகிக்கப்படும் மின்சாரம் அடிக்கடி தடைபடுவதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் திருவோணம் அரசு மருத்துவமனை பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு உடனடியாக சரி செய்யும் படி இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    ×