search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sulvadi village"

    கர்நாடக மாநிலத்தின் கோவிலில் பிரசாதம் சாப்பிட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக உள்ளூர் மடத்தின் ஜீயர் கைது செய்யப்பட்டு உள்ளார். #Karnataka #MarammaTemple #FoodPoisoning #SeerArrested
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டத்தின் ஹனுர் தாலுகாவில் சுல்வாடி கிராமத்தில் அமைந்துள்ளது மாரம்மன் கோவில்.

    கடந்த வெள்ளிக்கிழமை அன்று கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகள் முடிந்ததும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பிரசாதம் சாப்பிட்ட சிறிது நேரத்தில் பக்தர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதில் 2 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர் என்றும் பலரது நிலைமை மோசமடைந்துள்ளது என்றும் முதல் கட்ட தகவல் வெளியானது. மேலும், பிரசாதம் சாப்பிட்ட 60க்கு மேற்பட்ட காகங்களும் இறந்து கிடந்தன.



    இந்நிலையில், கடந்த 4 நாட்களில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் 9 பேர் இறந்தனர். இதையடுத்து, கர்நாடக கோவிலில் பிரசாதம் சாப்பிட்டு பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. 

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 27 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக, மாதேஸ்வரா மலை சலுரு மடத்தின் ஜீயர் பட்டடா இம்மடி மகாதேவசாமி மற்றும் ஒரு பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Karnataka #MarammaTemple #FoodPoisoning #SeerArrested
    கர்நாடகாவில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட பெண்கள் உள்பட 6 பேர் பலியாகினர். மேலும் 40க்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். #Karnataka #MarammaTemple #SuspectedFoodPoisoning
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சாமராஜநகர் ஹனுர் தாலுகாவில் சுல்வாடி கிராமத்தில் அமைந்துள்ளது மாரம்மன் கோவில்.

    இன்று வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். பூஜைகள் முடிந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    சிறிதுநேரத்தில் பிரசாதம் சாப்பிட்ட பக்தர்களுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. அதில் 2 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். சிலரது நிலைமை மோசமானது. இதையடுத்து, சுமார் 40க்கு மேற்பட்ட பக்தர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். மேலும், பிரசாதம் சாப்பிட்ட 60க்கு மேற்பட்ட காகங்களும் இறந்து கிடந்தன.

    கோவில் பிரசாதம் சாப்பிட்ட பக்தர்களும், காகங்களும் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. #Karnataka #MarammaTemple #SuspectedFoodPoisoning
    ×