என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "summer rain"

    • சென்னையில் நேற்று வெப்பநிலை 100 டிகிரியை எட்டியது.
    • சென்னையில் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் நுங்கு விற்பனை அதிகரித்துள்ளது.

    திருவொற்றியூர்:

    சென்னையில் இந்த ஆண்டு கோடை வெயில் முன்கூட்டியே கொளுத்த தொடங்கி விட்டது. கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்தே வெயில் அதிகரிக்க தொடங்கியது.

    தற்போது வெயிலின் உக்கிரம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்று வெப்பநிலை 100 டிகிரியை எட்டியது.

    வெயிலை சமாளிப்பதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் குறிப்பாக விற்பனையும் அதிகரித்து வருகிறது. தர்பூசணி பழங்களும் குவிந்துள்ளன. இந்த நிலையில் சென்னையில் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் நுங்கு விற்பனையும் அதிகரித்துள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் உள்ள பனை மரங்களில் இருந்து நுங்கு வெட்டப்பட்டு சென்னையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. சென்னையின் பல பகுதிகளிலும் மதிய வேளையில் நுங்கு விற்பனை அமோகமாக நடக்கிறது.

    மணலி, விச்சூர், ஆரம்பாக்கம் ஆகிய இடங்களில் விளையும் நுங்குகளை சென்னைக்கு கொண்டு வந்து அன்னக்கடைகளில் வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். தற்போது நுங்கு வரத்தொடங்கியுள்ள நிலையில் நுங்கின் விலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிகவும் அதிகமாக உள்ளது.

    8 நுங்கின் விலை ரூ.50 முதல் விற்பனை செய்யப்படுகிறது.

    ஆனாலும் வெயிலின் தாக்கத்தை குறைக்க பொதுமக்கள் நுங்கை வாங்கி செல்கிறார்கள்.

    • கொடைக்கானலில் பெய்த மழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்தனர்.
    • முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து இல்லாமல் காணப்பட்டது.

    கூடலூர்:

    தமிழகத்தில் தேனி, திண்டுக்கல் உள்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி கடந்த 2 நாட்களாக தேனி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெரியகுளம், ஆண்டிபட்டி, மஞ்சளாறு உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    கனமழையால் பெரியகுளம் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு முழுவதும் மின் வினியோகம் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். கோடை வெயிலால் கும்பக்கரை, சுருளி அருவி, சின்னச்சுருளி அருவி உள்பட பல்வேறு அருவிகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது பெய்த தொடர் மழையால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    கொடைக்கானலில் பெய்த மழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்தனர். குளிர்ச்சியான சூழல் நிலவியதால் அவர்கள் உற்சாகமடைந்தனர். இதே போல் ஹைவேவிஸ், மேகமலை பகுதியில் பெய்த கனமழையால் சின்னச்சுருளியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து இல்லாமல் காணப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை 204 கன அடி நீர் வரத்தொடங்கியது. அணையில் இருந்து 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 115.85 அடியாக உள்ளது. வைகை அணையின் நீர் மட்டம் 53.94 அடியாக உள்ளது. 14 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 37.70 அடியாக உள்ளது. 14 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 58.64 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. தேக்கடி 29, கூடலூர் 1.2, உத்தமபாளையம் 1.4, சண்முகாநதி அணை 17.6, வைகை அணை 8.4, சோத்துப்பாறை 2, மஞ்சளாறு 60, பெரியகுளம் 28, அரண்மனைப்புதூர் 1 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • குமரி மாவட்டத்தில் கோடை வெயில் மக்களை சுட்டெரித்து வந்தது.
    • குமரி மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கோடை வெயில் மக்களை சுட்டெரித்து வந்தது. இதனால் பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வரவே மக்கள் அச்சப்பட்டனர். இந்த நிலையில் வளி மண்டலம் மாற்றம் காரணமாக குமரி, நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்தது.

    அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. மேலும் மாவட்டம் முழுவதும் மேகமூட்டமாகவே காணப்பட்டது. நகர் பகுதியை விட புறநகர் பகுதியில் தான் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    சிற்றாறு-2 பகுதியில் 41.4 மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது. பூதப்பாண்டி, அடையாமடையில் 19.2, சுருளகோடு பகுதியில் 15.4, திற்பரப்பில் 10.5, பேச்சிப்பாறையில் 9.2, குழித்துறையில் 8, தக்கலையில் 7.4. மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது.

    • நெல்லை மாவட்டத்தில் நேற்று புறநகர் பகுதிகளில் ஒருசில இடங்களில் சாரல் மழை பெய்தது.
    • மாவட்டத்தில் அதிகபட்சமாக சேர்வலாறு அணை பகுதியில் 4 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மதிய நேரத்திற்கு பின்னர் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று புறநகர் பகுதிகளில் ஒருசில இடங்களில் சாரல் மழை பெய்தது. பேட்டை, அபிஷேகப்பட்டி, சீதபற்பநல்லூர் பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் பயங்கர இடி-மின்னலும் இடித்தது. இதனால் சாலையோரங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி கிடந்தது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக சேர்வலாறு அணை பகுதியில் 4 மில்லிமீட்டர் மழை பெய்தது. நெல்லை, பாளை பகுதியில் தலா 1 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள சிவகிரியில் தொடர்ந்து ஒரு வாரமாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. சங்கரன்கோவிலில் சுமார் 1 மணிநேரம் மழை பெய்தது. அங்கு 15 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை கருப்பாநதி அணை பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. அங்கு நேற்று ஒரே நாளில் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர்ந்து மாலை நேரங்களில் பெய்யும் மழையால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

    • சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பல பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.
    • பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணை பகுதிகளிலும் மழை பெய்தது. பெருஞ்சாணியில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் மாவட்டத்தில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் காலையில் வழக்கமாக வெயில் அடித்து வந்த நிலையில் மதியத்திற்கு பிறகு மழை பெய்தது. புத்தன் அணை, குழித்துறை, தக்கலை பகுதியில் மாலையில் வானத்தி சாரல் மழை பெய்ய தொடங்கியது.

    நேரம் செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. அதன்பின்னர் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பல பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணை பகுதிகளிலும் மழை பெய்தது. பெருஞ்சாணியில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 59 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்தது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்த மழை காரணமாக கோடை வெப்பம் தணிந்து இதமான சீதோஷ்ணம் நிலவியது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 36.25 அடியாக உள்ளது. அணைக்கு 320 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 37.45 அடியாக உள்ளது. அணைக்கு 242 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நாகர்கோவில் நகர குடிநீருக்காக 51 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

    சிற்றார்-1 நீர்மட்டம் 8.20 அடியாகவும், சிற்றார்-2 நீர்மட்டம் 8.30 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 13.70 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 2.30 அடியாகவும் உள்ளது. முக்கடல் நீர்மட்டம் தொடர்ந்து மைனஸ் அடியாகவே இருக்கிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் மைனஸ் 19.10 அடியாக உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்து மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 28.6, பெருஞ்சாணி 59, சிற்றார்-1-30, சிற்றார்-2-6.4, பூதப்பாண்டி 30.4, களியல் 12, கன்னிமார் 18.2, குழித்துறை 20, நாகர்கோவில் 4, புத்தன் அணை 57.8, சுருளோடு 55.4, தக்கலை 30.3, இரணியல் 22, பாலமோர் 24.2, மாம்பழத்துறை ஆறு 25, திற்பரப்பு 7.4, ஆரல்வாய்மொழி 3, கோழிபோர்விளை 4.7, குருந்தன்கோடு 36, ஆணைக் கிடங்கு 23, முக்கடல் 21.2.

    நேற்று மாவட்டத்தில் மழை பெய்து வந்த நிலையில் இன்று காலையில் மீண்டும் வெயில் அடித்தது.

    • நெல்லையில் 5.8 மில்லிமீட்டர் மழை பெய்தது.
    • ஒருசில இடங்களில் இரவு வரை விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. காலை நேரங்களில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், மாலையில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மாநகர் மட்டுமல்லாது புறநகர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகு தியை ஒட்டி அமைந்துள்ள அணைப்பகுதி கள் என அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடரும் இந்த கோடை மழையால் பொதுமக்க ளும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடுமையான கோடை வெயிலால் அணைகள் வறண்டு போன நிலையில் தற்போது தொடரும் கோடை மழையால் நிலத்தடி நீர்மட்டம் சற்று உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது என்பதால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

    இடி-மின்னல்

    நேற்று மாலையில் இடி-மின்னலுடன் பெய்த கனமழையால் மாநகர பகுதியில் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பாளையில் 7 மில்லி மீட்டரும், நெல்லையில் 5.8 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மாவட்டத்தை பொறுத்த வரை அம்பை, கன்னடியன் பகுதியில் தலா 14 மில்லிமீட்டரும், மணிமுத்தாறு அணை பகுதியில் அதிகபட்சமாக 18 மில்லிமீட்டரும், பாபநாசம், சேர்வலாறில் 7 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. நேற்று இரவு வரை ஒருசில இடங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. களக்காடு, சேரன்மகாதேவி, ராதாபுரம், நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட இடங்களில் கோடை மழை பெய்தது.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் அணை பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக சில நாட்களாக கருப்பாநதி அணை பகுதியில் கனமழை நீடிக்கிறது. நேற்று ராமநதி, கடனாநதி, கருப்பாநதி மற்றும் அடவிநயினார் அணை பகுதியில் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை மற்றும் ஆய்க்குடி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி அமைந்துள்ள பகுதிகளில் கனமழை பெய்தது.

    இன்று காலை நிலவரப்படி செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 20 மில்லிமீட்டரும், ஆய்குடியில் 18 மில்லிமீட்டரும், தென்காசியில் 11 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. அணைப்ப குதிகளில் அதிகபட்சமாக ராமநதியில் 26 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 21 மில்லிமீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 17.4 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு, கடம்பூர், மணியாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று மாலை பலத்தமழை கொட்டியது. பெரும்பாலான இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கிகிடந்தது. இதனால் அப்பகுதியில் வெப்பம் சற்று தணிந்தது.

    அதிகபட்சமாக கயத்தாறில் 27 மில்லிமீட்டரும், கடம்பூரில் 25 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    சாத்தான்குளம், குலசேக ரப்பட்டினம், ஸ்ரீவைகுண்டம், காடல்குடி, வைப்பார் உள்ளிட்ட இடங்களிலும் கோடை மழை பெய்தது. மாநகர பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    • கோடையில் மின் தேவை அதிகரித்த போதும் தட்டுப்பாடு இல்லாமல் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • கோடையில் மின் தேவை அதிகரித்த போதும் தட்டுப்பாடு இல்லாமல் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மழையும் ஆங்காங்கே பெய்து வருகிறது. இந்த மாதத்தில் மின் நுகர்வு படிப்படியாக அதிகரித்து வந்தது. பல மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்ததால் மின் தேவையும் உயர்ந்தது.

    வெப்பத்தை தாங்க முடியாமல் பலர் ஏ.சி.யை பயன்படுத்த தொடங்கி விட்டனர். பல வீடுகளில் கோடை வெயிலை சமாளிக்க இரவில் ஏ.சி.யை தற்போது உபயோகிக்கிறார்கள்.

    இதனால் மின் நுகர்வு இதுவரை இல்லாத அளவிற்கு உச்சமாக 19 ஆயிரம் மெகாவாட்டை தாண்டி உள்ளது.

    கோடையில் மின் தேவை அதிகரித்த போதும் தட்டுப்பாடு இல்லாமல் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் மின் நுகர்வு குறைந்து வருகிறது. இது தவிர கோவை, ஈரோடு மாவட்டங்களிலும் மழை பெய்ததால் மின் நுகர்வு குறைந்துள்ளது. 1000 மெகாவாட் அளவிற்கு மின் நுகர்வு குறைந்து இருப்பதாக மின் வாரியம் தெரிவித்து உள்ளது.

    இது குறித்து மின் பகிர்மான உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் தற்போது பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்ட பகுதிகளில் மழை பெய்வதால் மின் நுகர்வு உச்சத்தில் இருந்து படிப்படியாக குறைந்து வருகிறது. தரவு மையங்கள் அதிகரிக்கிறது. ஏப்ரலை விட மே மாதத்தில் மின் நுகர்வு குறைய வாய்ப்பு உள்ளது.

    மே மாதத்தில் கோடை மழை பெய்யும் என்பதால் மின் நுகர்வு அதிகரிக்க வாய்ப்பு இல்லை. தற்போது 18 ஆயிரம் மெகாவாட் மின் தேவை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிகபட்சமாக சிறுவாணி அடிவாரத்தில் 37 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
    • நீலகிரி மாவட்டம் ஊட்டி, கூடலூர், கோத்தகிரி பகுதியிலும் நேற்று பரவலாக மழை பெய்தது.

    கோவை:

    தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது பல மாவட்டங்களில் 100 டிகிரியையும் தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. கோவை மாவட்டத்திலும் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது.

    இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் கோவை, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. வீடுகள், கடைகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து அங்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

    நேற்று மாலையும் கருமேகங்கள் திரண்டு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டியது. காந்திபுரம், ராமநாதபுரம், உக்கடம், ரேஸ்கோர்ஸ், இடையர்பாளையம், வெள்ளக்கிணறு, துடியலூர், சாய்பாபா காலனி, வடவள்ளி, கணுவாய் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது. இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களிலும், ரெயில்வே சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கி நின்றது.

    அதிகபட்சமாக சிறுவாணி அடிவாரத்தில் 37 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. ஆழியாறு 34, சின்கோனா 30, ஆனை மலையில் 28, சோலையாறில் 27 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதேபோல நீலகிரி மாவட்டம் ஊட்டி, கூடலூர், கோத்தகிரி பகுதியிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. கூடலூர், தேவர்சோலை பகுதியில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் திடீரென இடி-மின்னலுடன் கனமழை கொட்டியது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது.

    இதனால் முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட குனில் வயல் பகுதியில் உள்ள கால்வாயில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து அந்த ஊருக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். சாலைகளில் மூங்கில் மரங்கள் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • இன்று காலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென பலத்த மழை கொட்டியது.
    • தாம்பரத்தில் காலை 10 மணியளவில் தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.

    சென்னை:

    தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

    இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என்றும், சென்னையில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறி இருந்தது.

    இந்த நிலையில் இன்று காலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென பலத்த மழை கொட்டியது. தொடர்ந்து கனமழையாக நீடிக்காமல் விட்டு விட்டு சாரல் மழையாக பெய்தது.

    வியாசர்பாடி, பெரம்பூர், அயனாவரம், மாதவரம், எழும்பூர், ராயப்பேட்டை, மணலி, எண்ணூர், திருவொற்றியூர், ராயபுரம், அடையாறு, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. வானமும் மேகமூட்டத்துடன் இருந்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    தாம்பரத்தில் காலை 10 மணியளவில் தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பருவமழை போல வெளுத்து வாங்கியதால் பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

    இதேபோல் குரோம்பேட்டை, படப்பை, பல்லாவரம், பெருங்களத்தூர், மேடவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து சாரல் மழையாக நீடித்தது. இந்த திடீர் மழையால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் நடந்து சென்றோர் நனைந்தபடி சென்றனர்.

    கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

    • தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தில் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
    • சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:

    தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தில் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

    இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோடை வெயிலால் தலையணையில் தண்ணீர்வரத்து வெகுவாக குறைந்தது.
    • மேற்கு தொடர்ச்சி மலையிலும் கனமழை பெய்தது.

    களக்காடு:

    களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை உள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் கொளுத்தி வந்ததால் தலையணையில் தண்ணீர்வரத்து வெகுவாக குறைந்தது. சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இதற்கிடையே களக்காடு பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.

    நேற்று இரவில் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. மேற்கு தொடர்ச்சி மலையிலும் கனமழை பெய்தது. இதனால் தலையணை நீர்வீழ்ச்சியில் இன்று அதிகாலை முதலே தண்ணீர் வரத்து அதிகரித்தது. தடுப்பணையை தாண்டி தண்ணீர் கொட்டுகிறது. இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் கவனமுடன் குளிக்கும்படி வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
    • கனமழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவட்டம் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. பல்வேறு பகுதிகளில் குடியிருப்புக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். நேற்று முன்தினம் முழுவதும் மழை பெய்ய வில்லை.

    இந்நிலையில் நேற்று அக்னி நட்சத்திர வெயில் தொடங்கியது. மாலை 5 மணிக்கு பிறகு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது.

    நேரம் செல்ல செல்ல இடியுடன் கூடிய கனமழை பெய்தது. விடிய விடிய பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

    ஈரோடு மாநகர் பகுதியில் 3-வது அகில் மேடு வீதியில் உள்ள டிரான்ஸ்பாரம் தீப்பிடித்தது. இதனால் மின்தடை ஏற்பட்டது.

    இதேபோல் ஸ்டார் தியேட்டர் அருகே உள்ள சாலை ஓரத்தில் உள்ள மின் கம்பங்களில் மின்சார கசிவு ஏற்பட்டு மாட்டு வண்டியில் இருந்த மாடு மீது மின்சாரம் பாய்ந்து இறந்தது.

    தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரகாலமாக கோடை மழை பெய்து வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருகின்றது. இதனால் நிலங்களில் உழவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

    இந்நிலையில் நேற்று மாலை மாவட்டம் முழுவதும் கோடை மழையானது கொட்டித்தீர்த்தது.

    அக்னி நட்சத்திரம் தாக்கத்தில் இருந்து விடுபடும் வகையில் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தனிந்து குளிர்ச்சி காணப்பட்டது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக மொடக்குறிச்சியில் 109 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து காணப்பட்டதால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். ஒரு சிலர் வீட்டை விட்டு வெளியே வர தயக்கம் காட்டினர்.

    இந்த நிலையில் காலை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து காற்று வீசியது. அதனைத் தொடர்ந்து மாலை 5.30 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது.

    இந்த மழையானது தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்து வந்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    சோலார், வெண்டி பாளையம், கஸ்பாபேட்டை, 46 புதூர், லக்காபுரம், மொடக்குறிச்சி, நஞ்சை ஊத்துக்குளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை அளவு விபரம் வருமாறு:

    ஈரோடு-68, கோபி-12.2, பவானி-20, பெருந்துறை-24, சத்தி-2, தாளவாடி-6, நம்பியூர்-24, கொடுமுடி-22.2, கவுந்தப்பாடி-13.2, சென்னிமலை-5, எலந்தைகுட்டை மேடு-41,

    பவானிசாகர்-15.6, கொடிவேரிஅணை-4, குண்டேரிப்பள்ளம்-2.6 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்து மாவட்டத்தின் சராசரி மழையளவு 21.69 ஆகும்.

    ×