என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » sunanda death
நீங்கள் தேடியது "Sunanda death"
டெல்லி பெருநகர கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடைபெற்று வந்த சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கு அமர்வு நீதிமன்றத்துக்கு இன்று மாற்றம் செய்யப்பட்டது. #Sunandadeathcase #ShashiTharoorcasesent #DelhiSessionscourt
புதுடெல்லி:
மத்திய முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசி தரூர் (61), 2 முறை திருமணமாகி விவாகரத்தான நிலையில், காஷ்மீர் தொழில் அதிபர் சுனந்தா புஷ்கரை (52) கடந்த 2010-ம் ஆண்டு, ஆகஸ்டு 22-ம் தேதி காதல் திருமணம் புரிந்தார்.
இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள லீலா பேலஸ் என்ற 5 நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தபோது மர்மமான முறையில் சுனந்தா புஷ்கர் இறந்து கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக பெரும் சர்ச்சைகள் எழுந்தன.
இதையடுத்து, அவரது வயிற்றுப்பகுதியின் உள்ளுறுப்புகள் தடயவியல் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டன. அமெரிக்க புலனாய்வு நிறுவனத்துக்கு சொந்தமான நவீன ஆய்வகத்தில் அவை பரிசோதிக்கப்பட்டன. அந்த பரிசோதனையின் அறிக்கை டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அமெரிக்க புலனாய்வு நிறுவனம் ஒப்படைத்த அறிக்கையின் அடிப்படையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் ஆய்வு செய்து வந்தனர். அந்த அறிக்கையின் மீதான கருத்துகளை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வல்லுனர்கள் கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்டனர்.
சுனந்தா புஷ்கரின் மரணத்துக்கு விஷம்தான் காரணம் என உறுதிபட தெரியவந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
இதற்கிடையில், சுனந்தா புஷ்கர் இறப்பதற்கு 9 நாட்களுக்கு முன் சசிதரூருக்கு மின்னஞ்சல் மற்றும் சமூக வலைதளம் மூலம் சுனந்தா புஷ்கர் தகவல் அனுப்பி இருப்பதாகவும் அதில், வாழ்வதற்கு விருப்பம் இல்லை என்றும், இறப்பதற்காக பிரார்த்தனை செய்வதாகவும் எழுதப்பட்டுள்ளது என்று டெல்லி பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீசார் முன்னர் தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையில், இவ்வழக்கு விசாரணையில் அரசு தரப்புக்கு உதவி செய்ய தன்னை அனுமதிக்க வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கோர்ட்டிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘சுனந்தா புஷ்கரை அவரது கணவர் சசி தரூர் தற்கொலைக்கு தூண்டிய கோணத்தில் விசாரணை சென்று கொண்டிருப்பதால் இதுதொடர்பான அடுத்தகட்ட விசாரணையை டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அருண் பரத்வாஜ் அமர்வுக்கு விசாரணையை மாற்றுவதாக கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் சமர் விஷால் அறிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக டெல்லி போலீசார் வசமுள்ள விசாரணை ஆதாரங்களை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு அறிவுறுத்திய டெல்லி கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் சமர் விஷால், சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தார்.
இவ்வழக்கு டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வரும் 21-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. #Sunandadeathcase #ShashiTharoorcasesent #DelhiSessionscourt

ஆனால், திடீரென சசிதரூருடன் பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹர் தரார் இணைத்து பேசப்பட்டார். சசி தரூர்-சுனந்தா மண வாழ்வில் அவர் புயலாக நுழைந்ததாகவும், இதனால் கணவன்-மனைவி இருவரிடையே சண்டைகள் தொடர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள லீலா பேலஸ் என்ற 5 நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தபோது மர்மமான முறையில் சுனந்தா புஷ்கர் இறந்து கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக பெரும் சர்ச்சைகள் எழுந்தன.
இதையடுத்து, அவரது வயிற்றுப்பகுதியின் உள்ளுறுப்புகள் தடயவியல் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டன. அமெரிக்க புலனாய்வு நிறுவனத்துக்கு சொந்தமான நவீன ஆய்வகத்தில் அவை பரிசோதிக்கப்பட்டன. அந்த பரிசோதனையின் அறிக்கை டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அமெரிக்க புலனாய்வு நிறுவனம் ஒப்படைத்த அறிக்கையின் அடிப்படையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் ஆய்வு செய்து வந்தனர். அந்த அறிக்கையின் மீதான கருத்துகளை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வல்லுனர்கள் கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்டனர்.
சுனந்தா புஷ்கரின் மரணத்துக்கு விஷம்தான் காரணம் என உறுதிபட தெரியவந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
இதற்கிடையில், சுனந்தா புஷ்கர் இறப்பதற்கு 9 நாட்களுக்கு முன் சசிதரூருக்கு மின்னஞ்சல் மற்றும் சமூக வலைதளம் மூலம் சுனந்தா புஷ்கர் தகவல் அனுப்பி இருப்பதாகவும் அதில், வாழ்வதற்கு விருப்பம் இல்லை என்றும், இறப்பதற்காக பிரார்த்தனை செய்வதாகவும் எழுதப்பட்டுள்ளது என்று டெல்லி பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீசார் முன்னர் தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையில், இவ்வழக்கு விசாரணையில் அரசு தரப்புக்கு உதவி செய்ய தன்னை அனுமதிக்க வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கோர்ட்டிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘சுனந்தா புஷ்கரை அவரது கணவர் சசி தரூர் தற்கொலைக்கு தூண்டிய கோணத்தில் விசாரணை சென்று கொண்டிருப்பதால் இதுதொடர்பான அடுத்தகட்ட விசாரணையை டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அருண் பரத்வாஜ் அமர்வுக்கு விசாரணையை மாற்றுவதாக கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் சமர் விஷால் அறிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக டெல்லி போலீசார் வசமுள்ள விசாரணை ஆதாரங்களை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு அறிவுறுத்திய டெல்லி கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் சமர் விஷால், சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தார்.
இவ்வழக்கு டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வரும் 21-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. #Sunandadeathcase #ShashiTharoorcasesent #DelhiSessionscourt
×

X