search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sunandha Pushkar"

    சுனந்தா புஷ்கரை தற்கொலைக்கு தூண்டியதாக சசிதரூர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு அரசியல் நோக்கமுடையது என கேரளா எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார். #ShashiTharoor #SunandaPushkarDeath #SunandaPushkar

    திருவனந்தபுரம்: 

    கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி டெல்லியில் ஒரு நட்சத்திர ஓட்டலில் முன்னாள் மத்திய மந்திரி சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மர்மான முறையில் இறந்து கிடந்தார். சுனந்தாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த எய்ம்ஸ் மருத்துவர்க்குழு அவருடைய உடலில் விஷம் கலந்து இருந்தது என்று அறிக்கை அளித்திருந்தனர். 

    ஆனால், கொலைக்கான எந்த ஆதாரமும் சுனந்தா புஷ்கர் வழக்கில் போலீசாராருக்கு கிடைக்கவில்லை. இது தொடர்பான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், போலீசார் இன்று 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 

    அதில், சுனந்தாவை தற்கொலைக்கு தூண்டிய சூழ்நிலைகள் இருந்ததாகவும், உணவு உட்கொள்ளாமல் ஓட்டல் அறையில் விட்டு வெளியேறாமலும் சுனந்தா இருந்துள்ளார் என 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட அந்த குற்றப்பத்திரிகையில் போலீசார் தெரிவித்துள்ளனர். 

    மேலும், சுனந்தா மற்றும் சசி தரூருக்கு இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதன் காரணமாக மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் அவர் அடிக்கடி மன அழுத்த மாத்திரிகளை உட்கொண்டுள்ளார் என குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
    இந்நிலையில், சசிதரூர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு அரசியல் நோக்கமுடையது என கேரளா எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார். 


    எம்.எம்.ஹசன்


    இதுகுறித்து ரமேஷ் சென்னிதலா கூறுகையில், அரசியல் பலத்தின் மூலம் காங்கிரஸ் தலைவர்களை அவமானப்படுத்தவும், ஒடுக்கவும் பா.ஜ.க. முயற்சி செய்கிறது. சசிதரூரை அவமானப்படுத்துவதற்காக அவருக்கு எதிரான பல தவறான தகவல்கள் ஊடகங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இப்போது அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது, என அவர் கூறியுள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சங் பரிவார் அமைப்புக்கு எதிராக சசிதரூர் கருத்துகள் தெரிவித்து வந்ததால் அவர் மீது இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என கேரளா காங்கிரஸ் தலைவர் எம்.எம்.ஹசன் கூறியுள்ளார். #ShashiTharoor #SunandaPushkar #SunandaPushkarDeath #RameshChennithala #MMHassan
    ×