search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Supreme Court upholds"

    சிரியா, ஈரான் உள்ளிட்ட 5 நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய டிரம்ப் தடை விதித்த உத்தரவுக்கு ஆதரவாக அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. #TrumpTravelBan
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் சிரியா, ஈரான், சோமாலியா, ஏமன், லிபியா, சூடான், ஈராக் ஆகிய நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை என அதிரடியாக அறிவித்தார். நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

    இந்த பயணத்தடை உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி விமர்சிக்கப்பட்ட நிலையில், வணிகம், கல்வி போன்ற பணிகளுக்காக அமெரிக்காவுக்கு வருபவர்களை அனுமதிக்கலாம் என்றும் அமெரிக்காவில் இருக்கும் மேற்கண்ட நாடுகளைச் சேர்ந்தவர்களின் மிக நெருக்கமான உறவினர்களை அனுமதிக்கலாம் என்றும் பின்னர் பயணத்தடையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டது.

    வடகொரியா, வெனிசுலா மற்றும் ஆப்ரிக்காவில் உள்ள சாத் ஆகிய நாடுகள் இப்பட்டியலில் பின்னர் இணைக்கப்பட்டன. டிரம்ப்பின் இந்த உத்தரவுக்கு எதிராக பல மாகாண கோர்டுகளில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, இந்த பயணத்தடை அறிவிப்புக்கு இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டது.

    பின்னர், இப்பட்டியலில் இருந்து சூடான், ஈராக் நாடுகள் விலக்கப்பட்டன. இந்நாடுகளில் இருந்து வருபவர்கள் மீது கூடுதல் கண்காணிப்பு மட்டும் போதும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதனை எதிர்த்து அந்நாட்டு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த நிலையில், இந்த தடையை விலக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 2 நீதிபதிகள் மட்டுமே அதிபரின் உத்தரவை தடை செய்ய அனுமதிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினர்.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக பல அமைப்புகள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், டிரம்ப்பின் பயணத்தடை சரியே என இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி கொண்ட 5 நீதிபதிகள் அமர்வில், நான்கு நீதிபதிகள் டிரம்ப் அறிவிப்புக்கு சாதகமாக தீர்ப்பு அளித்துள்ளனர்.
    ×