search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "surrogacy regulation bill 2016 passed"

    மக்களவையில் இன்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா தாக்கல் செய்த வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்ட மசோதா நிறைவேறியது. #SurrogacyRegulationBill
    புதுடெல்லி:

    பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தம்பதிகள் இந்தியாவிற்கு வந்து வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது அதிகரித்தது. இதன்மூலம் பண்புநெறியற்ற நடைமுறைகள், வாடகைத் தாய்கள் ஏமாற்றப்படுதல், வாடகைத் தாய்கள் மூலம் குழந்தைகளை கைவிடுதல் மற்றும் மனித கருவின் ஆரம்ப நிலை மற்றும் கருப்பைகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் இடைத்தரகர்களின் மோசடிகள் போன்று பல சம்பவங்கள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன. 

    இதையடுத்து, வாடகைத்தாய் மூலம் குழந்தையை பெற்றெடுக்கும் முறைக்கு, சில கட்டுப்பாடுகளை விதிக்க வகை செய்யும் வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) சட்ட மசோதாவை மத்திய அரசு உருவாக்கியது. 

    இந்தியாவில் வாடகைத் தாய் பயன்படுத்துவதை ஒழுங்குப்படுத்தி, வாடகைத்தாயின் மூலம் வணிக ரீதியாக குழந்தை பெறுவதை தடுத்து, அப்பாவி ஏழைப் பெண்களை மோசடியில் இருந்து காப்பாற்றுவதே இந்த மசோதாவின் நோக்கம் என மத்திய அரசு அறிவித்தது. எனினும், இதில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

    இந்நிலையில் வாடகைத்தாய் (ஒழுங்குமுறை) சட்ட மசோதாவை சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர் மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்களை விளக்கினார். பின்னர் மசோதா மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து நாளை காலை 11 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. #SurrogacyRegulationBill
    ×