என் மலர்
நீங்கள் தேடியது "surveillance"
- வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் எம்.பி. தலைமையில் நடந்தது.
- 2023-24-ம் நிதி யாண்டிற்கான முதலாம் காலாண்டிற்கான கூட்டம் நடந்தது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. குழுவின் தலைவரும், விருதுநகர் எம்.பி.யுமான மாணிக்கம்தாகூர் தலைமை தாங்கினார்.
குழுவின் செயலரும், கலெக்டருமான ஜெயசீலன், தென்காசி எம்.பி. தனுஷ் எம்.குமார், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், அசோகன், ரகுராமன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த குழுவின் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி 2023-24-ம் நிதி யாண்டிற்கான முதலாம் காலாண்டிற்கான கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட அளவிலான அனைத்து அலுவலர்களிடம் திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த கூட்டத்தில், விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டம், உஜ்வாலா திட்டம், தேசிய உணவு பாதுகாப்புச் சட்ட பொது விநியோகத்திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்தும் துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணி களை தரமாக விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அரசு அலுவலர்களிடம் எம்.பி. அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி, குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கேமரா பொருத்தப்பட்டு இருந்தது.
- விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ரங்கப்பனூர் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும் மற்றும் கண்காணிக்கவும் ஊராட்சி நிர்வாகம் மற்றும் வடபொன்பரப்பி போலீஸ் நிலையம் சார்பில் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது.
இந்த கண்காணிப்பு கேமராவை யாரோ மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவை உடைத்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- போலீஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கிடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்தும் விதமாக கூட்டம் நடத்தப்பட்டது.
- 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
கடலூர் மாவட்டம் மற்றும் புதுவையில் உள்ள போலீஸ் அதிகாரிகளுடன் இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லை ஒருங்கிணைப்பு கூட்டம் கிருமாம்பாக்கம் பகுதியில் நடந்தது.
கூட்டத்திற்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன், புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாராசைதன்யா தலைமை தாங்கி பேசினர்.
புதுவை மாநில போலீஸ் சூப்பிரண்டுகள் ரவிக்குமார், மோகன்குமார், ஜிந்தா கோதண்டராமன், செல்வம் வீரவல்லவன் கடலூர் மாவட்ட டி.எஸ்.பி.க்கள் பிரபு, சபியுல்லா, விஜயகுமார், நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கடலூர் மாவட்டம் மற்றும் புதுவை யூனியன் பிரதேச போலீசாருக்கு இடையேயான செயல்பாடு, ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் குறித்து விவாதித்தனர்.
விவாதத்தில் மாநிலங்களுக்கு இடையேயான குற்றவாளிகளின் செயல்பாடுகள் குறித்த தகவல்களைப் பகிர்தல்-சேகரித்தல், எல்லைச் சோதனைச் சாவடிகளில் விழிப்புடன் இருக்கும் போலீசார் மூலம் போலி மதுபானங்கள், கஞ்சா, புகையிலை பொருட்கள் போன்றவற்றை சட்ட விரோதமாக கொண்டு செல்வதைக் கட்டுப்படுத்துதல்.
சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை பகிர்தல், குற்றத் தடுப்பு அம்சத்தில் கூட்டு ரோந்து, மாநிலங்களுக்கு இடையேயான போலீசார் குற்றப் பிரிவுகளின் ஒருங்கிணைப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு ஒருங்கிணைப்பு, எல்லை பகுதியில் ரவுடிகள் நடமாட்டத்தை கண்காணிப்பது என்பது குறித்து விவாதித்தனர்.
இதுதொடர்பாக போலீசார் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த கூட்டம் எல்லை பகுதியில் போலீஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கிடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்தும் விதமாக நடத்தப்பட்டது. இரு புறத்தில் இருந்து வரக்கூடிய குற்ற நிகழ்வுகளை பரிமாறிக் கொள்வது. இதன் மூலம் பொதுமக்களை பாதுகாக்க முடியும். இரு மாநில எல்லை போலீசாரிடையே தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள வாட்ஸ் அப் செயலி ஏற்படுத்தப்படும்.
இரு மாநில போலீசார் இடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். எல்லைப்புற போலீஸ் நிலையத்தில் உள்ள போலீசாரிடையே மாதம் தோறும் கூட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்து உள்ளதாக தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் எல்லைபுற போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு, குற்றப்பிரிவு, அமலாக்க பிரிவு போலீசார் என 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.
- எல்லை கிராமங்களுக்கு 10-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் சென்று டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
- தொட்டிகளில் நீண்டநாட்களாக தேங்கி இருக்கும் தண்ணீரை அகற்ற வலியுறுத்தி வருகின்றனர்.
கூடலூர்:
கேரளா மாநிலத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பொதுமக்கள் உள்ளாகினர். டெங்குவால் இறப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால், டெங்கு காய்ச்சலை தடுக்கவும், நோய் பரப்பும் கொசுக்களை ஒழிக்கும் பணியிலும் கேரளா மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், கர்நாடகா மாநிலத்திலிருந்து கூடலூர் வந்த ஒருவருக்கும், கேரளாவிலிருந்து வந்த ஒருவருக்கும் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் தமிழக எல்லையில் சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
எல்லை கிராமங்களுக்கு 10-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் சென்று டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் டெங்கு நோய்களை பரப்பும் கொசுக்கள் மற்றும் புழுக்களை அழிக்க, திறந்த வெளி தண்ணீர் தொட்டிகளில் மருந்து தெளிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தொட்டிகளில் நீண்டநாட்களாக தேங்கி இருக்கும் தண்ணீரை அகற்ற வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து நீலகிரி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் பாலுசாமி கூறும்போது:-நீலகிரி மாவட்டத்தில் யாருக்கும் இதுவரை டெங்கு பாதிப்பு ஏற்படவில்லை. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில எல்லைகளில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன. டெங்கு நோய் குறித்தும், அதனை தடுப்பது குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. யாரேனும் டெங்கு அறிகுறிகளுடன் உள்ளனரா? என சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டெங்கு நோய்களை பரப்பும் ஏ.டி.எஸ். கொசுக்கள் மற்றும் லார்வாக்களை அழிக்க மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- குற்ற சம்பவ தொகுப்புகளை அடிப்படையாக கொண்டு ‘ஜி.ஐ.எஸ்’ எனப்படும் புவியியல் தகவல் அமைப்பு வரைபட திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.
- ரூ.6.5 கோடி மதிப்பு கொண்ட இந்த புவியியல் தகவல் அமைப்பு வரைப்பட திட்டத்தை போலீஸ் கமிஷன் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.
சென்னையில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக குற்றம் நடைபெறும் இடங்களை உடனே தெரிந்து கொண்டு அங்கு விரைந்து செல்லும் வகையிலும், குற்றங்கள் நடக்காதவாறு தடுக்கும் வகையிலும் குற்ற சம்பவ தொகுப்புகளை அடிப்படையாக கொண்டு 'ஜி.ஐ.எஸ்' எனப்படும் புவியியல் தகவல் அமைப்பு வரைபட திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இத்திட்டத்துக்காக கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 7 ஆண்டுகளில் சென்னையில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, ஆள்கடத்தல் ஆகிய குற்ற சம்பவங்கள் நிகழ்ந்த 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் துல்லியமாக சேகரித்து தொகுக்கப்பட்டு உள்ளன.
இவை எந்த வகை குற்றங்கள், எந்த இடத்தில், எந்த தினத்தில், எந்த நேரத்தில் நடைபெற்றது என்பது உள்பட அனைத்து தகவல்களும் திரட்டப்பட்டு வரைபடமாக்கப்பட்டு உள்ளது.
102 போலீஸ் நிலையங்களில் இருந்தும் 385 போலீசார் குற்ற சம்பவங்கள் அதிகம் நடக்கும் இடங்களை கண்டறிந்து தகவல்களை சேகரிக்க கிட்டத்தட்ட 6 மாதங்கள் செலவிட்டனர். இந்த வரை படம் ஒவ்வொரு நாளும் நிகழ்நேர அடிப்படையில் புதுப்பிக்கப்படுகிறது.
சென்னை நகரம் முழுவதும் உள்ள 67 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்களின் அமைவிடம் பள்ளிகள், கல்லூரிகள், பெண்கள் விடுதிகள், மருத்துவமனைகள், அரசு கட்டிடங்கள், வழிபாட்டுத் தலங்கள், வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள், விபத்து பகுதிகள் போன்றவையும் புவியியல் தகவல் அமைப்பு வரைபடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த வரைபடத்தில் ஒரு வழக்கு மட்டும் பதிவாகியுள்ள பகுதிகளை குறிக்க மஞ்சள் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 3-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகும் இடங்களில் ஆரஞ்சு புள்ளி உள்ளது. அதிக குற்றங்கள் நடைபெறும் பகுதி சிவப்பு நிறமாக உள்ளது.
பாலியல் தொல்லை, கற்பழிப்பு, போக்சோ போன்ற குற்றங்களுக்கு வெவ்வேறு குறியீடுகள் ஒதுக்கப்படுகிறது.
இந்த வரைப்படத்தின் படி கடந்த 7 ஆண்டுகளில் வடசென்னை பகுதிகளில் கொலை, பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை, கற்பழிப்பு குற்றங்கள் அதிகம் நிகழ்ந்து உள்ளன. குடிசைப்பகுதிகள் மற்றும் ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகம் நடந்துள்ளன.
தென்சென்னை, மேற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திருட்டு சம்ப வங்கள் அதிகம் நடந்து உள்ளன. சென்னை நகரம் முழுவதும் பரவலாக வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன.
இந்த வரைப்பட திட்டத்தின் மூலம் குற்றங்கள் ஒரு இடத்தில் நடைபெற்றால் அருகில் உள்ள ரோந்து போலீசாரை உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து செல்ல வைக்க முடியும். மேலும் குற்றவாளி தப்பிச் சென்றால் அவர் எந்த வழியாக தப்பிச் சென்றார், அவரது உருவம் எந்த கேமராவில் துல்லியமாக பதிவாகி இருக்கும் என்பது போன்ற விவரங்களையும் புவியியல் தகவல் அமைப்பு வரைபடம் மூலம் தெளிவாக உடனடியாக கண்டறிய முடியும்.
இதன் மூலம் ஒரு குற்றத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுக்க முடியும். குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய முடியும். குற்ற சம்பவங்களை உடனடியாக தடுக்கும் நடவடிக்கைகளில் 5 ஆயிரம் ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட்ட போலீஸ் ரோந்து வாகனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளது. சிறப்பு மொபைல் செயலியுடன் 2000 ரோந்து போலீசாரும் இந்த பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இந்த வரைபட திட்டத்தில் உள்ள தானியங்கி வாகன இருப்பிட அமைப்பானது குற்றம் நடைபெறும் இடத்தின் அருகில் உள்ள ரோந்து வாகனத்தை அனுப்புவதற்கு பயன்படுத்தப்படும். இதனால் போலீசாருக்கு நேரம் மிச்சமாவதுடன் விரைவாக சம்பவ இடத்தை அறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும்.
ரூ.6.5 கோடி மதிப்பு கொண்ட இந்த புவியியல் தகவல் அமைப்பு வரைப்பட திட்டத்தை போலீஸ் கமிஷன் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில்,
"சென்னை நகரில் நடக்கும் குற்றங்களின் முறைகள் மற்றும் அதன் போக்கை ஆய்வு செய்ய இது எங்களுக்கு உதவியாக இருக்கும். சென்னை நகரில் நடக்கும் பாலியல் குற்றங்கள், கற்பழிப்பு, போக்சோ குற்றங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அனைத்தையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ குற்றங்கள் அதிக மாக இருந்தால் குற்றங்களை தடுக்க அந்த பகுதிகளுக்கு போலீசார் அதிக ரோந்து வாகனங்களை ஒதுக்கலாம். அந்த பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் அல்லது அனைத்து பெண் போலீ சாரையும் போலீசார் நியமிக்கலாம்" என்றார்.
- தேரின் முன்பாக போலீஸ் வேனில் சுழலும் காமிராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
- ஜாதி ரீதியிலான பனியன்கள், ரிப்பன்கள் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
நெல்லை:
தேரோட்டத்தின் போது பக்தர்களிடம் இருந்து செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக சி.சி.டி.வி காமிராக்கள் கூடுதலாக பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து நெல்லையப்பர் தேரின் முன்பாக போலீஸ் வேனில் சுழலும் காமிராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த ஆண்டு ஜாதி ரீதியிலான பனியன்கள், ரிப்பன்கள் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் சில தனியார் நிறுவனங்கள் ஒரே மாதிரியான பனியன்களை வழங்கினர். அதனை அணிந்து தேருக்கு தடி போடுபவர்கள் தடி போட்டனர். மேலும் தேருக்கு முன்பாக நாதஸ்வரம், செண்டை மேளம் முழங்கப்பட்டது. மேலும் சிவனடியார்களும் சங்கொலி எழுப்பினர். தேரோட்டத்தை ஒட்டி 4 ரதவீதிகளிலும் மின்வாரிய ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு மின் வயர்களை அகற்றி தேரோட்டத்திற்கு வழிவகை செய்தனர்
- கோவை வாளையாற்றில் ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பது குறித்த இருதரப்பு ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது.
- குற்றவாளிகள் மீது ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்வது என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கோவை,
கோவை மாவட்டத்தில் இருந்து வாளையாறு, வேலந்தாவளம், பொள்ளாச்சி வழியாக கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் தமிழகம், கேரள அதிகாரிகள் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்கதையாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் கோவை வாளையாற்றில் ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பது குறித்த இருதரப்பு ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தமிழகம் சார்பில் மாவட்ட வழங்கல் அதிகாரி குணசேகரன், ரேஷன் பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் டி.எஸ்.பி கிருஷ்ணன், வாளையாறு இன்ஸ்பெக்டர் அஜீஸ், வனத்துறை அதிகாரி ஆதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கேரளாவில் இருந்து போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கேரளாவில் ரேஷன் அரிசி வாங்கும் வியாபாரிகள் பற்றிய விவரங்களை சேகரிப்பது, அரிசி கடத்தி தப்பிய குற்றவாளிகளை தேடுவது, ஜாமீனில் வந்தவர்களின் விவரங்களை ஆய்வு செய்வது, பஸ் மற்றும் ரெயில் மூலம் யார் யார் எல்லாம் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்? என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து தமிழகம், கேரளா எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகள் பற்றிய விவரங்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்வது, கோவையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்வது என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
- பிரத்தியேக ட்ரோன் கேமரா மூலம் தினமும் இந்த பகுதிகளை கண்காணிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
- ரவுடிகள் நடமாட்டம், ரவுடிகள் தஞ்சம் அடைவது, சூதாட்டம் நடக்கும் இடம், கஞ்சா பயன்படுத்தும் நபர்களை கண்டறிய முடியும்.
புதுச்சேரி:
புதுவை-தமிழக எல்லை பகுதி அடர்ந்த பசுமையான காடுகளையும் முந்திரி தோப்புகளையும் கொண்ட பகுதியாகும்.
புதுவையில் குற்ற சம்பவங்களை செய்துவிட்டு இங்குள்ள பகுதிகளில் குற்றவாளிகள் தஞ்சம் அடைந்து வருவது வழக்கமாகியுள்ளது. கோட்டகுப்பம் ஆரோவில் பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற அடர்ந்த காட்டுப்பகுதிகளில் கஞ்சா புழக்கம் இருந்து வருகிறது.
கோட்டகுப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் திருட்டு வழிபறி சம்பவங்களில் ஈடுபட்டு இது போன்ற பகுதிகளில் குற்றவாளிகள் தலைமறைவாகி விடுகின்றனர்.
மேலும் போலீசார் கண்ணில் படாமல் இருக்க காட்டுப்பகுதிகளில் மது அருந்தும் ரவுடி கும்பல்களுக்கு இடையே அவ்வப்போது ஏற்படும் மோதல் காரணமாக கொலை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் இவர்களை பிடிப்பது போலீசாருக்கு சவாலாக இருந்து வரும் நிலையில் பிரத்தியேக ட்ரோன் கேமரா மூலம் தினமும் இந்த பகுதிகளை கண்காணிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி சின்ன கோட்டகுப்பம் பிரின்ஸ்பர்க் ரோட்டில் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையில் போலீசார் ட்ரோன்களை இயக்கி பார்த்தபோது அங்கு ஒரு கும்பல் மது அருந்தி கொண்டிருந்தது.
ட்ரோன் கேமராவில் இருந்து செல்போனுக்கு நேரடியாக வந்த காட்சிகளை வைத்து அங்கு சென்ற போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மது அருந்தியவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
ட்ரோன் கேமரா மூலம் தேவைப்படும் பொழுது அடர்ந்த காட்டு பகுதியில் எப்போது வேண்டுமானாலும் போலீசார் கண்காணிக்கலாம். இதன் மூலம் ரவுடிகள் நடமாட்டம், ரவுடிகள் தஞ்சம் அடைவது, சூதாட்டம் நடக்கும் இடம், கஞ்சா பயன்படுத்தும் நபர்களை கண்டறிய முடியும். மேலும் முன்கூட்டியே குற்றவாளிகளை கைது செய்யவும் இது உதவியாக இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
- கடந்த 2 மாதங்களுக்கு முன் எக்கியார் குப்பம் மற்றும் மரக்காணம் பகுதிகளை சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர்.
- விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ சசாங்சாய் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார் .
விழுப்புரம்:
மரக்காணம் அருகே எக்கியார் குப்பம் கடற்கரையோரம் விற்ற விஷ சாராயத்தை குடித்துவிட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன் எக்கியார் குப்பம் மற்றும் மரக்காணம் பகுதிகளை சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். இதேபோல் 50-க்கும் மேற்பட்டோர் விஷ சாராயத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நபர்களில் ஒருவர் கடந்த வாரம் இறந்து விட்டார். இந்நிலையில் எக்கியார் குப்பம் பகுதி கடற்கரை ஓரம் இருப்பதால் ஒரு சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தொடர்ந்து ரகசிய தகவல்கள் கிடைத்து வருகின்றது.
இதனால் அப்பகுதியில் கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட எந்தவித போதைப் பொருட்களை விற்பனை செய்வதையும் முழுமையாக தடை செய்ய வேண்டும் என விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ சசாங்சாய் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார் . இதனை தொடர்ந்து கோட்டகுப்பம் டிஎஸ்பி சுனில் மேற்பார்வையில் மரக்காணம் காவல்து றை ஆய்வாளர் பாபு தலைமையில் மரக்கா ணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, திவாகர் மற்றும் போலீசார் எக்கியார் குப்பம் மீனவர் பகுதிக்கு அந்த பகுதி பொதும க்களிடம் இந்தப் பகுதியில் யாராவது போதை பொருட்கள் விற்பனை செய்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். பொது மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்ய முடியும் என கோரி விழிப்புணர்வு அளித்தனர். மேலும் இப்பகுதியில் ஆள் நடமா ட்டம் இல்லாத இடத்தில் கள்ளச்சாரா யம் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை ரகசியமாக கண்காணித்து கைது செய்யும் வகையில் டிரோன் கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சுதந்திர தினத்தைெயாட்டிமதுரையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- ரெயில், விமான நிலையங்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை
இந்திய திருநாட்டின் 77-வது சுதந்திர தினம் நாளை மறுநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழு–வதும் உள்ள விமான நிலை–யங்கள், வழிபாட்டு தளங் கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான ரெயில், பஸ் நிலையங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டு உள் ளது. மதுரையில் தீவிர பாது–காப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
மதுரை விமான நிலை–யத்துக்கு வரும் வாகனங் களை பிரதான நுழைவாயில் பகுதியிலேயே நிறுத்தி சந்தேகப்படும் வாகனங் களை பாதுகாப்பு படையி–னர் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்கின்றனர். வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் விமான நிலையம் முழுவதும் பரிசோதிக்கின்ற–னர்.
விமான நிலைய வளாகத் தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து வந்து கண்காணிக்கின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மோப்ப நாய் களுடன் மதுரை விமான நிலையத்தின் உள்பகுதிக–ளில் தீவிரமாக சோதனை செய்து கண்காணித்து வரு–கின்றனர். முக்கிய பிரமுகர் கள் வரும்போது வழங்கப்ப–டும் பாஸ்களுக்கு கட்டுப் பாடு விதிக்கப்பட்டு உள் ளது.
விமானங்களுக்கு எரி–பொருள் நிரப்பும் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பா–டுகள் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள கண்கா–ணிப்பு கேமராக்களு–டன் கூடுதலாக கேமராக்களை அமைத்து விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் தொடர்ந்து கண் காணிக்கப்பட உள்ளது. விமான பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன் மேலும் ஒருமுறை விமானங் களில் ஏறும் முன் சோதனை செய்ய திட்டமிடப்பட்டு உள் ளது.
பயணிகள் எடுத்து வரும் உடைமைகள் ஸ்கேனிங் எந்திரம் மூலம் சோதனை செய்யப்படுகிறது. விமானங் களில் சரக்கு பார்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும் தீவி–ரமாக கண்காணித்து, பல–கட்ட சோதனைக்கு பின் ஏற்ற அனுமதிக்கப்படுகின் றன. விமான பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால் உள் நாட்டு பயணிகள் விமானம் புறப்படும் நேரத்துக்கு 1.5 மணி நேரம் முன்னதாகவும், சர்வதேச பயணிகள் 3.5 மணி நேரத்துக்கு முன்னதா–கவும் வருவதற்கு மதுரை விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மதுரை விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
வருகிற 20-ந்தேதி நள்ளி–ரவு வரை இந்த பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரி–வித்துள்ளனர். இதேபோல் அசம்பாவிதங்கள் ஏற்படமால் தடுக்கும் வகையில் தென்மண்டல ஐ.ஜி. நரேந்திரன்நாயர், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதி–களிலும் மாட்டுத்தா–வணி, ஆரப்பாளையம், பெரியார் பஸ் நிலையங்க–ளில் போலீஸ் பாதுகாப்பு அதி–கரிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் நட–மாட்டத்தை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
மதுரை ரெயில் நிலையத் தில், ரெயில்வே பாதுகாப்புப் படையினர் தீவிர பாது–காப்பு பணிகளில் ஈடுபட் டுள்ளனர். சந்தேகத்திற்கிட–மாக சுற்றித் திரிபவர்களை உடனடியாக பிடித்து விசா–ரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரெயில்வே தடங்க–ளிலும், நடைமேடைகளிலும் மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தப்படுகிறது. பயணிகள் மற்றும் அவர்க–ளது உடைமைகள் மெட்டல் டிடெக்டர் சோத–னைக்கு பின்னரே அனும–திக்கப்ப–டுகின்றனர்.
மேலும் நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடு–பட்டு வருகின்றனர். நகர் பகுதியின் எல்லையில் உள்ள சோதனை சாவடிக–ளில் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர்.
மேலும் மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பெரியார் பஸ் நிலையங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள தங்கும் விடுதிகளிலும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்ப–டுத்தியுள்ளனர்.
இதேபோல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் சுப்பிர–மணிய சுவாமி கோவில், அழகர் கோவில்கள் மற்றும் முக்கிய வழிபாட்டுத் தலங்க–ளிலும் போலீசார் கண்கா–ணித்து வருகின்றனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- இவர்கள் குற்ற செயலில் ஈடுபட்டால் ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் சிறையில் அடைக் கப்படுவார்கள்.
ராமநாதபுரம்
பரமக்குடியில் வருகிற 11-ந்தேதி தியாகி இமானு வேல் சேகரன் நினைவு தினம் கடைப்பிடிக்கப்ப டுவதையொட்டி பாது காப்பு பணியில் 8 ஆயி ரம் போலீசார் ஈடுபடுத் தப்பட உள்ளனர் என்று போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்க துரை நிருபர்களிடம் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானு வேல் சேகரன் நினைவு தினம் நாளை மறுநாள் (11- ந்தேதி) நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியையொட்டி மாவட்டம் முழுவதும் விரி வான பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக 3 போலீஸ் டி.ஐ.ஜி.க்கள், 25 போலீஸ் சூப்பிரண்டுகள், 30 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 70 துணை சூப்பிரண்டுகள் மற்றும் உ களை சேர்ந்த சுமார் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக் கூடும் என்று கண்டறியப் பட்ட 166 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் தடையை மீறி யாரும் வாகனங்களில் செல்லவோ, வரவோ கூடாது. இதனை மீறி சென்றால் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
விழா நடைபெறும் பகுதி உள்ளிட்ட பரமக்குடி முழுவதும் 200 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர மாவட்டம் முழுவதும் 67 இடங்களில் வீடியோ காமிரா மூலம் வாகனங்க ளில் வருபவர்கள், வாக னங்களில் இருப்பவர்கள் பதிவு செய்து கண்கா ணிக்கப்பட உள்ளனர். நினைவிடத்திற்கு எக் காரணம் கொண்டு யாரும் இருசக்கர வாகனங்களில் வரக்கூடாது. இதனை மீறி யாராவது வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கடந்த காலங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்ட வர்கள் என கண்டறியப்பட்ட 350 பேர் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் ஓராண்டுக்கு குற்ற செயலில் ஈடுபடமாட் டோம் என்ற உறுதிமொழி பிணைய பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் இவர்கள் குற்ற செயலில் ஈடுபட்டால் ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் சிறையில் அடைக் கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மானாசாலை சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
- 450-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சுழி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை (11-ந் தேதி) இமானுவேல் சேகரன் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மாவட்ட எல்லை பகுதியில் உள்ள மானாசாலை சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தி லிருந்து அஞ்சலி நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் இந்த சோதனை சாவடியை கடந்து செல்ல வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து முறையான அனுமதி யுடன் குறிப்பிட்ட வழித்த டங்கள் வழியாக அஞ்சலி செலுத்த வரும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்கும் விதமாக திருச்சுழி, நரிக்குடி மற்றும் மானாச்சாலை ஆகிய பகுதிகளின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கண்காணிப்பு காமிராக்களின் காட்சிப் பதிவுகளின் செயல்பாடு களையும் திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன், நரிக்குடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த பகுதி யில் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 450-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.