என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Suryakala"
- மிகவும் சுவையான சூரியகலா எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
- தஞ்சாவூரில் மிகவும் பிரபலமான டிஷ் சூரியகலா
`சந்திரகலா', `சூர்யகலா' என்ற இரண்டு பெயர்களை கேட்டதும் ஏதோ ஒட்டிப் பிறந்த இரட்டை பெண் குழந்தைகளின் பெயர் என்று தான் நாம் நினைப்போம். ஆனால், உண்மையிலேயே அவை ஒரு ஸ்வீட் பெயர் என்று சொன்னால் ஆச்சர்யம்தான். இந்த பதிவில் மிகவும் சுவையான சூரியகலா எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
தஞ்சாவூரில், `பாம்பே ஸ்வீட்ஸ்' என்றாலே `சந்திரகலா, சூர்யகலா ஸ்வீட்ஸ்' என்கிற அளவுக்கு பிரபலமான டிஷ். தஞ்சாவூரின் அடையாளங்களை சொல்லும் பட்டியலில் புதுவரவு இந்த சூரியகலா ஸ்வீட் என்றால் அது மிகையாகாது.
தேவையான பொருட்கள்:
மைதாமாவு -ஒரு கப்
சர்க்கரை- ஒரு கப்
நெய்- 3 ஸ்பூன்
உப்பு- ஒரு சிட்டிகை
கோவா- ஒருகப்
முந்திரி, பாதாம்- உடைத்தது
ஏலக்காய் தூள்- ஒரு ஸ்பூன்
செய்முறை:
கோவாவை பூரணமாக வைத்து செய்யக்கூடிய ஸ்வீட் வகையின் பெயர் தான் சூரியகலா. முதலில் பூரணம் தயார் செய்துகொள்ளலாம். அதற்கு ஒரு கப் இனிப்பாக இருக்கும் கோவாவை ஒரு பவுளில் சேர்க்க வேண்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும். அதில் நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம் ஆகிய நட்ஸ் வகைகளை உடைத்து இதனுடன் சேர்த்து நன்றாக கிளறி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் சூரியகலா செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதில் ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை சர்க்கரை மற்றும் 3 ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு தயார் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மாவை 10 நிமிடம் முடிவைக்க வேண்டும்.
தயாரித்து வைத்த மைதாமாவு கலவையை எடுத்து சிறிய உருண்டைகளாக அதாவது பூரிக்கு உருட்டுவது போன்று உருட்டி அதனை சிறிய வட்ட வடிவில் தேய்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். சிறிய சிறிய உருண்டைகளையும் வட்டமாக தட்டி அதன் ஒருபகுதியில் நாம் ஏற்கனவே தயாரித்து வைத்த கோவா கலவைகளை நடுவே வைத்து அதன் மேல் மற்றொரு தட்டையை வைக்க வேண்டும். அதன் ஓரங்களை தண்ணீர் கொண்டு ஒட்ட வேண்டும். மற்றும் இதன் ஓரங்களை கைமுருக்கு உருட்டுவது போல நன்றாக மடித்து விட வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு உருண்டைகளையும் சூரியகலாக்களாக வட்டமான வடிவில் தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதனை ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து இந்த சூரியகலாக்களை பொறித்து எடுக்க வேண்டும்.
ஜீரா தயார் செய்வதற்கு ஒரு வாணலியில் ஒரு கப் சர்க்கரை போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். நாம் கையில் தொட்டு பார்த்தால் பிசுபிசுப்பாக இருக்கும் அளவுக்கு ஜீரா தயார் வேண்டும். கம்பி பதம் தேவையில்லை.
நாம் ஏற்கனவே எண்ணெயில் பொறித்து தயாராக வைத்துள்ள சூரியகலாக்களை அந்த ஜீராவில் சேர்க்க வேண்டும். நன்கு அந்த ஜீராவில் சூரியகலாக்களை புரட்டி எடுத்து 5 நிமிடத்திற்கு ஜீராவில் இருக்குமாறு அதனை வைக்க வேண்டும். ஜீரா முழுவதும் சூரியகலாவில் கலந்ததும் இதனை தனியாக எடுத்து வைக்கலாம். சுவையான சூரியகலா தயார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்