search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Swami Temple"

    • இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 29-ந் தேதி மங்கல இசையுடன் தொடங்கியது.
    • விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை அருகே பிரசித்தி பெற்ற குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 29-ந் தேதி மங்கல இசையுடன் தொடங்கியது. அன்றைய தினம் பக்தர்கள் தீர்த்தகுடம் மற்றும், முளைப்பாரியும் எடுத்து வந்தனர். கும்பாபிஷேக விழாவினையொட்டி கோபூஜை,தனபூஜை, அணுக்கை,மகா கணபதி ஹோமம், தீர்த்த சங்கர கணம்,அக்னி சங்கர கணம் பூரணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடந்து வந்தது.

    சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா இன்று காலை நடந்தது. இதனை யொட்டி 6-வது கால யாக சாலை பூஜை நடைபெற்றது.

    யாக சாலையிலிருந்து தீர்த்த குடங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, கோவில் ராஜகோபுரம், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

    கும்பாபிஷேக விழாவில் காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ராஜகோ புரத்திற்கு புனித நீர் ஊற்றிய போது, பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா என விண்ணதிர கோஷம் எழுப்பினர்.

    தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், பூஜையும் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

    இன்று மாலை திருக் கல்யாண உற்சவமும், சுவாமி திருவீதி உலாவும் நடைபெறுகிறது. கும்பாபிேஷக விழாவில் மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஏ.கே.செல்வராஜ், இந்து சமய அறநிலையத்துறை கோவை மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கவிதா கல்யாணசுந்தரம், கராமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முக சுந்தரம்,செயல் அலுவலர் லோகநாதன்,காரமடை இன்ஸ்பெக்டர் செந்தில்கு மார், முன்னாள் எம்.எல்.ஏ. ஒ.கே.சின்னராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×