search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Swathi murder case"

    • ராம்குமார் தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க மனித உரிமை ஆணையம் முடிவு செய்தது.
    • சிறையில் உயிரிழந்த ராம்குமார் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

    சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் சுவாதி. இவர் கடந்த 2016ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த பரமசிவம் மகன் ராம்குமார் என்பவரை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் சிறையில் இருந்த ராம்குமார் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சுவாதி கொலை வழக்கு, ராம்குமார் தற்கொலை வழக்கு முடிவுக்கு வந்தது.

    ஆனால் ராம்குமார் சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர், உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து ராம்குமாரின் தந்தை பரமசிவம் மனித உரிமை ஆணைய புலனாய்வு பிரிவில் புகார் மனு கொடுத்தார்.

    சுவாதி கொலை வழக்கில் எனது மகனுக்கு தொடர்பு இல்லை. எனது மகனை வேண்டுமென்றே கொலை வழக்கில் சிக்க வைத்து கொலை செய்து விட்டனர். எனவே ராம்குமார் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும்.

    மீனாட்சிபுரத்தில் உள்ள வீட்டில் ராம்குமாரை போலீசார் கைது செய்தபோது, அவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் கூறினர். போலீசார்தான் அவருடைய கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றனர்.

    ராம்குமார் சிறையில் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அது முற்றிலும் தவறு. ஜெயிலில் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்ய வாய்ப்பு இல்லை. எனவே இந்த வழக்கில் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும். சுவாதி கொலை வழக்கில் உண்மை குற்றவாளியை கண்டு பிடிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    சுவாதி கொலை வழக்கு, ராம்குமார் தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க மனித உரிமை ஆணையம் முடிவு செய்தது. இந்நிலையில், சுவாதி கொலை வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணையம், கைதான ராம்குமார் புழல் சிறையில் மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் விவகாரம் தற்கொலையா? இல்லையா? என கண்டறிய சுதந்திரமான விசாரணை நடத்த தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், சிறையில் உயிரிழந்த ராம்குமார் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. சிறையில் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போதுமான அதிகாரிகளை பணியமர்த்தவும் மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

    ராம்குமார் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வரும் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் சுவாதி. கடந்த 2016-ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நெல்லை மாவட்டம் செங்கோட்டை டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவரை கைது செய்தனர்.

     அப்போது அவர், கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்பு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு மின்சார வயரை கடித்து தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்பட்டது.

    ஆனால், ராம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை பரமசிவம் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார்.

    இதைத்தொடர்ந்து, அப்போதைய புழல் ஜெயில் சூப்பிரண்டு செந்தாமரைக்கண்ணன், துணை ஜெயிலர் உதயகுமார், உதவி ஜெயிலர் பிச்சாண்டி, தலைமை வார்டன் சங்கர்ராஜ், முதல் நிலை வார்டன் ராம்ராஜ் உள்ளிட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்போது, சிறைத்துறை மருத்துவர் சான்று ஆவணத்தை சமர்ப்பித்தார்.

    ஏற்கனவே, ராம்குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக அரசு தரப்பு மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ராம்குமார் சிறையிலேயே இறந்துவிட்டதாக சிறைத்துறை மருத்துவரின் சான்று ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

    மேலும், இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வரும் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

    சுவாதி கொலையை மையப்படுத்தி உருவாகி வரும் நுங்கம்பாக்கம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய படத்தின் இயக்குநர் ஒரு கொலையை படமாக்கிவிட்டு ஓடி ஒளிந்து கொண்டிருப்பதாக வருத்தத்துடன் தெரிவித்தார். #Nungambakkam
    சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவம், திரைப்படமாக எடுக்கப்படுகிறது. ரமேஷ் செல்வன் இயக்கும் இந்த படத்தில் சுவாதி கதாபாத்திரத்தில் ஆயிரா நடித்துள்ளார். நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அஜ்மல் நடிக்கிறார். 

    ‘சுவாதி கொலை வழக்கு’ என முதலில் தலைப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் பெயரை நுங்கம்பாக்கம் என படக்குழுவினர் மாற்றினர். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் நடிகர் விஷால், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குனர் விக்ரமன், அஜ்மல், சினேகன், கதிரேசன்  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

    இதில் விஷால் பேசும் போது, இந்த படத்தின் முந்தைய டைட்டிலான சுவாதி கொலை வழக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொண்டேன்..



    ஒரு நிஜ சம்பவத்தை படமாக்கும் போது, அது சம்மந்தமான டைட்டில் வைப்பது தானே நியாயம். அப்புறம் எதுக்கு இப்போ நுங்கம்பாக்கம் என்று டைட்டிலை மாற்றினீர்கள், சென்சாருக்காகவா, இல்லை யாருடைய நெருக்குதலுக்காகவோ, டைட்டிலை மாற்றினீர்கள். ஏன் பயப்படனும், இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கு, அதே எதிர்பார்ப்பு எனக்கும் இருக்கு.

    என்னோட இரும்புத்திரை படத்துக்கு போராட்டம் நடத்தி இரண்டு காட்சிகளை கேன்சல் செய்த கொடுமையையும் சந்தித்தேன். டிஜிட்டல் இந்தியா ஆதார் கார்டு பற்றி சொல்லப்பட்டதால் நானும் பிரச்சனையை சந்தித்தேன். பிரச்சனையை சந்திப்போம் என்றார்

    படத்தின் இயக்குனர் எஸ்.டி.ரமேஷ் செல்வன் பேசும் போது...

    ஒரு கொலை பற்றிய கதையை படமாக எடுத்துவிட்டு நான் ஊர் ஊராக ஓடி ஒளிய வேண்டியதாகிவிட்டது. ஜெயிலுக்கு மட்டும் தான் போகல.. அந்தளவுக்கு பிரச்சனைகளை சந்தித்து விட்டேன்.

    எனக்கு வேற வேலை தெரியாது, சினிமா மட்டும் தான் தெரியும். அதுக்காக தான் போராடிக் கொண்டிருக்கிறேன் நிச்சயம் நுங்கம்பாக்கம் நல்ல படமாக வரும் என்றார்.



    இதில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும் போது, 

    ஆரம்பகாலத்தில் என்னுடைய எல்லா படங்களுமே பல பிரச்சனைகளை தாண்டியே ரிலீசானது. எனினும் நான் தலைப்பை மாற்றவில்லை, மாற்றக்கூடாது என்று உறுதியாக இருந்தேன். ரிலீஸ் தேதியை வைத்துக் கொண்டு அவர்களுக்கு பயந்து போய் நாம் மாற்றுகிறோம். ஏதாவது ஒரு அமைப்பு இதை படமாக எடுக்கக் கூடாது என்று கூறுகிறார்கள். நாட்டில் நடப்பதை தான் நாங்கள் பேசுகிறோம். 

    காமராஜர் காலத்தில் உழைப்பதற்காக அரசியலுக்கு வந்தார்கள். அத்தனை அரசியல்வாதிகளும் சம்பாதிக்கவே இன்று அரசியலுக்கு வருகிறார்கள். இதை சினிமாவில் காட்டுவது தப்பா. படத்தில் இதை காட்டினால் என்ன செய்வார்கள். என்ன தான் போய்விடும், கடைசியில் உயிர்தான் போகும், உயிர் போனால் 4 பேரால் பேசப்படும்.

    அந்த கொலை வழக்கு தான் இந்த படம் என்பதை, எப்படி மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பீர்கள். எதையும் தைரியமாக செய்யுங்கள். என்றார். #Nungambakkam
    ×