search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sweet mango pickle"

    • மாதக்கணக்கில் கெட்டுப்போகாது.
    • இனிப்பான மாங்காய் ஊறுகாய்

    மாதக்கணக்கில் கெடாத சுவை மிகுந்த இனிப்பான மாங்காய் ஊறுகாய் எவ்வாறு செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    துருவிய (அல்லது) பொடியாக நறுக்கிய மாங்காய் – 1 கப்

    மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்

    சர்க்கரை – 1 கப்

    கசகசா தூள் – 1 ஸ்பூன்

    வறுத்த சீரகம் (எண்ணெய் சேர்க்காமல்) – 2 ஸ்பூன்

    உப்பு – 1 ஸ்பூன்

    செய்முறை:

    முதலில் மாங்காயை துருவிக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம் தாளித்து பின்னர் துருவிய மாங்காயை சேர்க்க வேண்டும். மாங்காய் நன்றாக வதக்க வேண்டும்.

    பின்னர் அதில் மிளகாய்தூள், வறுத்த சீரகம் தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து வதக்க வேண்டும். அப்போது சர்க்கரையுடன் மாங்காய் கலந்து ஜாம் பதத்திற்கு வந்தவுடன் இறக்கலாம்.


    மாதக்கணக்கில் கெடாமல் இருக்கும் இந்த இனிப்பு மாங்காய் ஊறுகாயை பூரி, உப்புமா மற்றும் சப்பாத்தி போன்ற டிபன் வகைகளுடன் சேர்த்து உண்ண சுவையாக இருக்கும்.

    மாங்காய் ஊறுகாயை பல்வேறு முறைகளில் தயாரிக்கலாம். இன்று குஜராத்தி முறையில் இனிப்பு சேர்த்து ஊறுகாய் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மாங்காய்த் துருவல் - 2 கப்,
    சர்க்கரை - ஒன்றரை கப்,
    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
    சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,
    பட்டைத்தூள், லவங்கத்தூள் - தலா கால் டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள், உப்பு - தலா ஒரு டீஸ்பூன்.



    செய்முறை :

    மாங்காய்த் துருவலுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு மணி நேரம் மூடி வைக்கவும். (மாங்காயில் சிறிதளவு தண்ணீர் விட்டிருக்கும்).

    அதனுடன் சர்க்கரை, மிளகாய்த்தூள், சீரகத்தூள், பட்டைத்தூள், லவங்கத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி மெல்லிய துணியால் மூடி வெயிலில் வைக்கவும் (ஏழு நாள்கள் வெயிலில் வைக்கவும்). காலையும் மாலையும் ஊறுகாயை நன்றாகக் கிளறிவிடவும்.

    சர்க்கரைப்பாகு இரண்டு கம்பிப் பதம் வந்தவுடன் வெயிலில் வைப்பதை நிறுத்திவிடவும்.

    சூப்பரான ஸ்வீட் மாங்காய் ஊறுகாய் ரெடி.

    மற்றொரு முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை அடிகனமான பாத்திரத்தில் சேர்த்து மிதமான தீயில் வைத்து இரண்டு கம்பிப் பதம் பாகு வரும் வரை கிளறி இறக்கவும். இந்த ஊறுகாயைச் சப்பாத்தி, பூரியுடன் தொட்டுக்கொள்ளலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×