search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "t 20 match"

    ஆஸ்திரேலியாவுடனான முதல் டி 20 போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது பாகிஸ்தான். #PAKvAUS
    அபு தாபி:

    ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி அபு தாபியில் நேற்று நடைபெற்றது.

    டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பாபர் அசாம் சிறப்பாக ஆடி அரை சதமடித்து 68 ரன்களில் அவுட்டானார். அவருக்கு அடுத்தபடியாக மொகமது ஹபீஸ் 39 ரன்கள் எடுத்து வெளியேறினார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை

    இறுதியில், பாகிஸ்தான் அணி நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்துள்ளது.

    ஆஸ்திரேலியா சார்பில் பில்லி ஸ்டான்லேக், ஆண்ட்ரூ டை ஆகியோர் 3 விக்கெட் எடுத்தனர்.



    இதையடுத்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. ஆனால் அவர்களுக்கு பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர்.

    இதனால் ஆஸ்திரேலிய அணி 22 ரன்களை எடுப்பதற்குள் முன்னணியில் உள்ள 6 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.
    அதன்பின் வந்த வீரர்கள் ஓரளவு தாக்குப் பிடித்தனர். நாதன் கால்டர் நீல் மடடும் அதிகமாக 34 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 16.5 ஓவரில் 89 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பரிதாபமாக தோற்றது.

    இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. #PAKvAUS
    இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா இரண்டாயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். #RohitSharma
    இந்திய அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்று உள்ளது. இதற்கு முன் அயர்லாந்துடன் இரண்டு டி20 போட்டியில் விளையாடியது. இரண்டிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

    அயர்லாந்து தொடருக்கு முன் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா டி20 போட்டியில் 1949 ரன்கள் எடுத்திருந்தார். 51 ரன்கள் எடுத்தால் 2000 ரன்களை கடந்த 5-வது வீரர் என்ற பெருமையை பெறுவார் என்ற நிலை இருந்தது.

    ஆனால், முதல் போட்டியில் 32 ரன்னும், இரண்டாவது போட்டியில் 5 ரன்னுடனும் ரோகித் சர்மா அவுட்டானார். இதனால் 2000 ஆயிரம் ரன்களை எட்ட முடியவில்லை. இதற்கிடையே, இந்திய கேப்டன் விராட் கோலி 2000 ரன்களை கடந்த 4-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.



    இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 14 ரன்களை எடுத்தபோது இரண்டாயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார்.

    டி-20 போட்டிகளில் இரண்டாயிரம் ரன்களை கடந்த ஐந்தாவது வீரர் ரோகித் சர்மா. இவர் 84 போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

    ஏற்கனவே விராட் கோலி 56 போட்டிகளிலும், மெக்கல்லம் 66 போட்டிகளிலும், கப்தில் 68 போட்டிகளிலும், சோயப் மாலிக் 92 போட்டிகளிலும் இரண்டாயிரம் ரன்களை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், டி 20 போட்டிகளில் மூன்றாவது சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் ரோகித் சர்மா படைத்துள்ளார். இவருக்கு முன்னதாக நியூசிலாந்தின் காலின் முன்ரோ 3 சதங்கள் அடித்துள்ளார். #RohitSharma
    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி 9 ரன்களை எடுத்தபோது இரண்டாயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். #ViratKohli
    இந்திய அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்று உள்ளது. இதற்கு முன் அயர்லாந்துடன் இரண்டு டி20 போட்டியில் விளையாடியது. இரண்டிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

    அயர்லாந்து தொடருக்கு முன் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டி20 போட்டியில் 1983 ரன்கள் எடுத்திருந்தார். 17 ரன்கள் எடுத்தால் 2000 ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற பெருமையை பெறுவார் என்ற நிலை இருந்தது.

    ஆனால், முதல் போட்டியில் டக்அவுட் ஆன கோலி, 2-வது ஆட்டத்தில் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 2000 ஆயிரம் ரன்களை எட்ட முடியவில்லை. இதற்கிடையில் பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் 2000 ரன்களை கடந்து 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி 9 ரன்களை எடுத்தபோது இரண்டாயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

    டி-20 போட்டிகளில் இரண்டாயிரம் ரன்களை கடந்த நான்காவது வீரர் விராட் கோலி. இவர் 56 போட்டிகளில் மிக விரைவாக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

    இவருக்கு அடுத்தபடியாக மெக்கல்லம் 66 போட்டிகளிலும், கப்தில் 68 போட்டிகளிலும், சோயப் மாலிக் 92 போட்டிகளிலும் இரண்டாயிரம் ரன்களை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #ViratKohli
    ×