என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 112912
நீங்கள் தேடியது "மாணவர்"
சேலம் சன்னியாசிகுண்டு அருகே என்ஜினீயரிங் மாணவர் விபத்தில் பலியானார்.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டை ராமநாதபுரம் ரஷிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் ஜெய்விஷ்வா (வயது 25). இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு சீலநாயக்கன்பட்டி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சன்னியாசி குண்டு பிரிவு ரோடு அருகே ெசன்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறிய ேமாட்டார் சைக்கிள் ரோட்டின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கிச்சிப்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே அங்கு வந்த உறவினர்கள் ஜெய்விஷ்வாவின் உடலை பார்த்து கதறி அழுதனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திரும ங்கலம் அருகே கிழவனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமராஜ். இவருடைய மகன் ராஜதுரை(வயது21). இவர் மதுரை கப்பலூரில் உள்ள காமராஜர் உறுப்புக் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார் அப்போது அவர் வைத்திருந்த செல்போன் தொலைந்துவிட்டது. செல்போன் தொலைந்ததால் பெற்றோர்கள் திட்டுவார்கள் என்ற பயத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜதுரை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து திருமங்கலம் தாலுகா போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ்(48).
எம்.பி.ஏ. பட்டதாரி, இவருக்கு 2 திருமணம் முடித்து குழந்தைகள் இல்லை.
2 மனைவிகளிடமும் விவகாரத்து ஆகிவிட்டது. இதனால் முத்துராஜ் தனிமையில் இருந்து வந்துள்ளார்.
இதில் விரக்தியடைந்த முத்துராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் முத்துராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். முத்துராஜ் அண்ணன் கணேசன் கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கல்லூரி பஸ்சில் சிக்கி மாணவர் பலி: கைதான டிரைவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
சேலம்:
சேலம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக். இவரது மகன் அப்துல்கலாம் (வயது 20), இவர் சேலம் சின்ன திருப்பதியில் உள்ள ஜெயராம் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம். நேற்று முன்தினம் கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்ல கல்லூரி பஸ்சில் ஏறினார்.
அப்போது கல்லூரியை விட்டு சற்று தூரத்தில் வந்ததும் வளைவில் சென்ற போது பஸ்சில் இருந்து அப்துல்கலாம் நிலை தடுமாறி கீேழ விழுந்தார். இதில் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து டிரைவர் மணியை கைது செய்தனர்.
இந்தநிலையில் கல்லூரி மாணவர்கள் அந்த கல்லூரிக்கு உள்ளே பஸ்சை விடாமல் பஸ்சை சிறைபிடித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும்போலீசார் சமாதானப்படுத்தினர்.
இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையே கைது செய்யப்பட்ட டிரைவர் மணியை நேற்று கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X