என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கத்திக்குத்து"

    • தாக்குதல் நடத்திய நபர் 25 வயதான மொராக்கோ நாட்டை சேர்ந்தவர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
    • தாக்குதலில் பலியானவர் டியாகோ வலென்சியா என்பதும் அவர் டிலா பால்மா தேவாலயத்தில் பணியாற்றியவர் என்பதும் தெரியவந்தது.

    மாட்ரிட்:

    ஸ்பெயின் நாட்டின் தெற்கு துறைமுக நகரமான அல்ஜெசிராசில் உள்ள ஒரு தேவாலயத்தில் பொதுமக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது மர்மநபர் ஒருவர் கத்தியுடன் தேவாலயத்துக்குள் நுழைந்தார். அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்களை கத்தியால் குத்தி சரமாரியாக தாக்கினார்.

    இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். பின்னர் அந்த நபர் அருகில் உள்ள தேவாலயத்துக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை கத்தியால் குத்தினார். இந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். பாதிரியார்கள் உள்பட பலர் காயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை மடக்கி பிடித்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மர்மநபரை கைது செய்து அழைத்துச் செல்லும் வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர். ஆனால் அவரது பெயர் மற்றும் எந்த நாட்டை சேர்ந்தவர் என்ற விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.

    அதேவேளையில் தாக்குதல் நடத்திய நபர் 25 வயதான மொராக்கோ நாட்டை சேர்ந்தவர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலில் பலியானவர் டியாகோ வலென்சியா என்பதும் அவர் டிலா பால்மா தேவாலயத்தில் பணியாற்றியவர் என்பதும் தெரியவந்தது.

    படுகாயம் அடைந்த பாதிரியார் அன்டோனியா ரோட்ரிக்ஸ் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தாக்குதல் தொடர்பாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும் போது, 'பயங்கரமான தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

    இந்த தாக்குதல் சம்பவத்தில் இந்த பயங்கரவாத தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதை பயங்கரவாத சம்பவமாக விசாரிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.

    • வீட்டின் அருகே அதே தெருவை சேர்ந்த வாலிபர்கள் மது குடித்துக் கொண்டிருந்தனர்.
    • ஆத்திரமடைந்து கத்தியால் திருச்செல்வி மற்றும் அவரது 10 வயது மகள் ஆகியோரை குத்தினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பூக்கார மன்னயார் தெருவில் உள்ள கோவிலில் பால்குடம் திருவிழா நடைபெற்றது.

    இதே தெருவை சேர்ந்த சுகுமார் மனைவி திருச்செல்வி (வயது 35) என்பவரது வீட்டிற்கு உறவினரான திருச்சியை சேர்ந்த மணவாளன் என்பவர் கோவில் திருவிழாவிற்காக வந்துள்ளார்.

    இந்த நிலையில் வீட்டின் அருகே அதே தெருவை சேர்ந்த சிவா (30), பிராங்கிளின் (31) ஆகியோர் மது குடித்துக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த மணவாளன் இங்கிருந்து மது அருந்தாதீர்கள் என அவர்களை தட்டி கேட்டார்.

    இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து மணவாளன் நடந்த விவரங்களை திருச்செல்வியிடம் கூறினார்.

    இதையடுத்து திருச்செல்வி, மணவாளன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் நடந்த சம்பவங்கள் குறித்து தட்டி கேட்டனர்.

    இதில் சிவா ஆத்திரமடைந்து கத்தியால் திருச்செல்வி மற்றும் அவரது 10 வயது மகள் ஆகியோரை குத்தினார்.

    மேலும் அவரது ஆதரவாளர்கள் செல்வராஜ், திருக்குமரன் ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது.

    இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த திருச்செல்வி உள்பட 4 பேரும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவாவை கைது செய்தனர்.

    பிராங்க்ளினிடம் விசார ணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சுந்தர மூர்த்திக்கு பேன்சி கடையில் வேலை பார்த்த இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
    • 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை தெலுங்குபாளையம் வேடப்பட்டி ரோட்டை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 24). இவர் சலீவன் வீதியில் உள்ள நகைப்பட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.

    அப்போது சுந்தர மூர்த்திக்கு ராஜவீதியில் உள்ள பேன்சி கடையில் வேலை பார்த்த செல்வபுரத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது.கடந்த டிசம்பர் 25-ந் தேதி வேலைக்கு சென்ற இளம்பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர் தனது தாயின் செல்போனுக்கு நான் சுந்தரமூர்த்தி என்பவரை காதலித்ததாகவும், அவருடன் வந்துவிட்டதாகவும் தன்னை யாரும் தேட வேண்டாம் என மெசேஜ் அனுப்பினார்.

    இளம்பெண்ணை சுந்தரமூர்த்தி அழைத்து சென்றார். பின்னர் 10 நாட்களுக்கு பின்னர் 2 பேரும் கோவை க்கு திரும்பினர். இருவரும் தங்களது வீட்டுகளுக்கு தனித்தனியாக சென்றனர். வீட்டுக்கு சென்ற இளம்பெண் தனது பெற்றோரிடம் சுந்தரமூர்த்தியை அவர் திருமணம் செய்ய வில்லை என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து இளம்பெண் மீண்டும் பேன்சி கடைக்கு வேலைக்கு சென்றார்.

    ஆனால், சுந்தரமூர்த்தி இளம்பெண்ணை பின்தொடர்ந்து தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால் அவர் செல்ல மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்று சுந்தரமூர்த்தி தனது நண்பர் ஹரிஹரன் (23) என்பவருடன் காதலி வீட்டுக்கு சென்று இளம்பெண்ணின் தாயாரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினார். அப்போது அங்கு வந்த இளம்பெண்ணின் உறவினர் செல்வின் (19) அவரது நண்பர் மெக்கானிக் பிரகாஷ் (19) ஆகிய இருவரும் சேர்ந்து சுந்தரமூர்த்தியை தாக்கி கத்தியால் குத்தினர். ஹரிஹரனையும் தாக்கி மிரட்டல் விடுத்தனர்.

    கத்தி குத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து இருதரப்பினரும் செல்வபுரம் போலீசில் அளித்தனர்.

    புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோதலில் ஈடுபட்டு கத்தியால் குத்திய செல்வின், பிரகாஷ், ஹரிஹரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர், பின்னர் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மேலும் சுந்தரமூர்த்தி மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியதை தட்டி கேட்டனர்
    • ஒருவர் கைது செய்யப்ட்டுள்ளார். 2 பேரை தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 19). இவர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார்.

    இவர் தனது நண்பர் ஒருவரது மோட்டார் சைக்கிளை வாங்கி பயன்படுத்தி வருகிறார். சம்பவத்தன்று கார்த்திகேயனின் மற்றொரு நண்பர் ஆண்டோ என்பவர் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை வாங்கி வெளியே சென்றார்.

    பின்னர் மோட்டார் சைக்கிளை கொண்டு வந்து கார்த்திகேயனிடம் கொடுத்தார். அப்போது மோட்டார் சைக்கிள் டேங்கில் சேதம் ஏற்பட்டு இருந்தது. இதனை பார்த்த கார்த்திகேயன் இதுகுறித்து ஆண்டோவிடம் கேட்டார்.

    அதற்கு அவர் தான் வெளியே சென்று இருந்த போது ரியாஸ் என்பவர் கல்லை எறிந்து மோட்டார் சைக்கிளில் சேதம் ஏற்பட்டதாக கூறினார். உடனே கார்த்திகேயன், ரியாசுக்கு போன் செய்து கண்டித்தார்.

    இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரியாஸ் அவரது நண்பர்கள் அர்ச்சகன் மற்றும் முனி ஆகியோரை அழைத்து கொண்டு கார்த்திகேயன் வீட்டுக்கு வந்தார். அங்கு 3 பேரும் சேர்ந்து கார்த்திகேயனிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ரியாஸ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கார்த்திகேயனின் தலையில் குத்தினார்.

    இதில் பலத்த காயம் அடைந்த கார்த்திகேயன் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்து அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    பலத்த காயம் அடைந்த கார்த்திகேயனை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து கார்த்திகேயன் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரியாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அர்ச்சகன், முனியை தேடி வருகின்றனர்.

    • முஜூபூர் ரகுமான் காய்கறி வியாபாரியாக இருந்து வருகிறார்
    • முஜூபூர் ரகுமான் குடிபோதயைில், பாபுவின் தங்கையிடம் பேச அவரது வீட்டு சென்றார்.

    கோவை,

    கோவை தெற்கு உக்கடம் புல்லுகாடு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் முஜூபூர் ரகுமான் (வயது 42). காய்கறி வியாபாரி. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பாபு என்கிற முகமது (36). ஆட்டோ டிரைவர்.

    இந்த நிலையில் முஜூபூர் ரகுமான் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றார். 2-வதாக அவர் பாபுவின் சகோதரியை திருமணம் செய்ய முடிவு செய்து அவரிடம் பேசி வந்தார்.

    சம்பவத்தன்று முஜூபூர் ரகுமான் குடிபோதயைில், பாபுவின் தங்கையிடம் பேச அவரது வீட்டு சென்றார். அப்போது வீட்டில் இருந்த பாபு அவரிடம் அங்கிருந்து செல்லுமாறு கூறினார். ஆனால் அவர் அங்கிருந்து செல்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாபு அவரை சரமாரியாக தாக்கினார். இதனை பார்த்த பாபுவின் நண்பர் முகமது ரபிக் என்பவர் அங்கு வந்தார்.

    அவரும் முஜூபூர் ரகுமானை தாக்கி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தினார். பலத்த காயம் அடைந்த அவர் வலியால் அலறி துடித்தார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்து முகமது ரபிக் அங்கிருந்து தப்பி சென்றார்.

    பின்னர் அங்கிருந்தவர்கள் முஜூபூர் ரகுமானை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து முஜூபூர் ரகுமான் பெரிய கடை வீதி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை கைது செய்தனர்.

    அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    தப்பி ஓடிய முகமது ரபிக் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முகமது ரபிக் மீது பெரிய கடை வீதி, போத்தனூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வெட்டுப்பட்டான் குட்டை என்ற பகுதியில் அரசு மதுபான கடை உள்ளது.
    • சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே வெட்டுப்பட்டான் குட்டை என்ற பகுதியில் அரசு மதுபான கடை உள்ளது. இங்கு ஆறுமுத்தாம்பாளையம் தொட்டி அப்புச்சி கோவில் தெருவை சேர்ந்த தர்மராஜ் (வயது 36), கண்ணன்(32,)ஆகியோர் மது அருந்த சென்றனர். மது அருந்தும் போது, அருகே இருந்த அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்த ராஜ்கமல்(34) என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. 

    இதில் ராஜ் கமல் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, கண்ணன் மற்றும் தர்மராஜ் ஆகிய இருவரையும், கை மற்றும் வயிறு உள்ளிட்ட பகுதிகளில் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர்கள் 2 பேரும் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • மாரிமுத்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒண்டிப்புதூரில் வசித்து வருகிறார்.
    • கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்ச்சை பெற்றுவரும் மாரிமுத்துவிடம் விசாரித்தனர்.

    கோவை,

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது38).கூலித்தொழிலாளி. இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒண்டிப்புதூரில் வசித்து வருகிறார்.

    இன்று காலை மாரிமுத்து வேலைக்கு செல்வதற்காக அங்குள்ள தியேட்டார் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்களில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாரிமுத்துவின் தோள்பட்டை, முதுகு மற்றும் முகத்தில் குத்தினார்.

    பின்னர் 2 பேரும் அங்கு இருந்து தப்பி ெசன்றனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியை மாரிமுத்துவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்த சிங்கா நல்லூர் போலீசார் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்ச்சை பெற்றுவரும் மாரிமுத்துவிடம் விசாரித்தனர்.

    விசாரணையில் மாரிமுத்துவின் மனை–விக்கும், வாடிபட்டியை சேர்ந்த மணிகண்டன் என்ப–வருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.

    இதையறிந்த அவர் மனைவியை கண்டித்தார். இதையடுத்து மாரிமுத்துவின் மனைவி கள்ளக்காதலை கைவிட்டு திருந்தி தனது கணவருடன் வசித்து வந்தார்.

    ஆனால் அவரை மணிகண்டன் தொடர்பு கொண்டு உனது கணவனை பிரிந்து வருமாறு தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் அவர் வர மறுத்து தனது கணவருடன் திண்டுக்கல்லில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.

    அப்போது தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மாரிமுத்துவின் மனைவியை மணிகண்டன் வெட்டினார். இந்த வழக்கு திண்டுக்கல் போலீஸ் நிலையத்தில் நடந்து வருகிறது.

    இந்த வழக்கை வாபஸ் பெறும்படி மாரிமுத்துவிடம் மணிகண்டன் கூறி வந்தார். ஆனால் அவர் மறுத்ததால் தனது நண்பர் மகேந்திரன் என்பவருடன் சேர்ந்து மாரிமுத்துவை கத்தியால் குத்தியது தெரியவந்தது.

    இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள மணிகண்டன் மற்றும் மகேந்திரனை தேடி வருகின்றனர்.

    • ஹரிகரன் தந்தையின் மெஸ்சில் வேலை செய்து வருகிறார்.
    • ஹரிகரனை தாக்கி தலையில் கத்தியால் குத்தினார்.

    கோவை,

    கோவை பீளமேடு அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மகன் ஹரிகரன் (வயது 22). இவர் தனது தந்தையின் மெஸ்சில் வேலை செய்து வருகிறார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு ஆவாரம்பாளையத்தை சேர்ந்த இளம்பெண் மீது காதல் ஏற்பட்டது. அந்த இளம்பெண் ஏற்கனவே விக்கி என்ற விக்னேஷ் என்பவரை காதலித்து வந்தார். ஹரிகரன் தனது காதலி பின்னால் சுற்றுவது விக்கிக்கு பிடிக்கவில்லை. இதன் காரணமாக 2 பேருடன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனை அறிந்த இளம்பெண் தனது காதலன் விக்கியுடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார். தனது காதலி தன்னுடன் பேசாததற்கு ஹரிகரன் தான் காரணம் என விக்கி நினைத்தார். இதனால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்தார்.

    சம்பவத்தன்று ஹரிகரன் வீட்டில் இருந்த போது விக்கி தனது நண்பர்கள் 2 பேரும் அத்துமீறி உள்ளே நுழைந்தார். பின்னர் தகாத வார்த்தைகள் பேசி ஹரிகரனை தாக்கி தலையில் கத்தியால் குத்தினார். இதனை பார்த்து ஹரிகரனின் தந்தை தடுக்க சென்றார். அவரையும் இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து 3 பேரும் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய தந்தை, மகன் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் தகராறில் தந்தை மகன் ஆகியோரை கத்தியால் குத்திய விக்கி உள்பட 3 பேரை தேடி வருகிறார்கள். 

    • முத்து மாரியம்மன் கோவில் நிர்வாகம் செய்வதிலும், ஊராட்சி மன்ற தேர்தலிலும் முன்விரோத தகராறு இருந்து வந்தது.
    • கும்பல் மதியழகனை கத்தியால் குத்தியும், இரும்பு கம்பியால் அடித்து கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    கடலூர்:  

    கடலூர் அடுத்த தூக்கணாம்பாக்கம் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் (வயது 40). தி.மு.க. பிரமுகர். அதே பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி. இவரது கணவர் ராமச்சந்திரன் அ.தி.மு.க.பிரமுகர். இவர்களுக்குள் அதே பகுதியில் உள்ள இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் நிர்வாகம் செய்வதிலும், ஊராட்சி மன்ற தேர்தலிலும் முன்விரோத தகராறு இருந்து வந்தது.இதன் காரணமாக இருத்தரப்பினருக்கும் அடிக்கடி வாய் தகராறு மற்றும் பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது . இது தொடர்பாக தூக்கணாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வழக்கு மற்றும் ஆர்.டி.ஓ தலைமையில் சமாதான பேச்சுவார்த்தைக்கு போலீசார் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு தி.மு.க. பிரமுகர் மதியழகன் தனது வீட்டில் இருந்து வந்தார்.

    அப்போது ஒரு கும்பல் வீட்டின் கதவை தட்டியதால் மதியழகன் கதவை திறந்தார். இதில் ஒரு நபர் திடீரென்று முகத்தில் துணி கொண்டு மூடினார். பின்னர் அந்த கும்பல் மதியழகனை கத்தியால் குத்தியும், இரும்பு கம்பியால் அடித்து கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மதியழகன் கதறி துடித்தார். இதனை தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து மதியழகனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் திரண்டனர். போலீசார் பள்ளிப்பட்டு பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து மதியழகன் கொடுத்த புகாரின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி கணவர் புதுச்சேரியை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 67), விஷ்ணு மூர்த்தி (வயது 57), பள்ளிப்பட்டை சேர்ந்த சீத்தா (வயது 58), பார்த்திபன் (வயது 42), அன்பழகன் (வயது 43), தினகரன் (வயது 48) ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அனைவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் புதுச்சேரி ரவுடிகள் ஈடுபட்டு உள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ரஞ்சித் குமாருக்கு ஆதரவாக அவரது நண்பர் ஏழுமலை என்பவர் வந்தார். இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
    • நிர்மல் குமார் தரப்பினர் கத்தியால் ரஞ்சித் குமார் மற்றும் ஏழுமலையை குத்தினர்.

    வேலூர்:

    வேலூர் காகிதப்பட்டறை மேலாண்ட தெருவை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 23) மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவர் வேலூரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்தார்.

    அதே மாணவியை தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நிர்மல் குமார் என்ற வாலிபரும் காதலித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ரஞ்சித்குமார், நிர்மல் குமார் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

    சம்பவத்தன்று நிர்மல் குமார் வேலூர் புதிய பஸ் நிலையம் பாலாற்றின் கரையோரம் நின்று கொண்டிருந்தார். அந்த பகுதிக்கு ரஞ்சித் குமார் வந்தார்.

    அப்போது இருவருக்கும் இடையே மாணவியை காதலிப்பது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து நிர்மல் குமார் அவரது நண்பர்களான ரெட் என்கிற ராம்குமார், அருண்குமார், பிரவீன் குமார் ஆகியோரை அழைத்தார். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    ரஞ்சித் குமாருக்கு ஆதரவாக அவரது நண்பர் ஏழுமலை என்பவர் வந்தார். இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    அப்போது நிர்மல் குமார் தரப்பினர் கத்தியால் ரஞ்சித் குமார் மற்றும் ஏழுமலையை குத்தினர்.

    இதில் ரஞ்சித் குமாருக்கு மார்பு மற்றும் வயிறு பகுதியில் கத்திக்குத்து விழுந்தது. ஏழுமலைக்கு தலை மற்றும் கைகளில் கத்தியால் வெட்டினர்.

    படுகாயம் அடைந்த இருவரும் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டாஸ்மாக் கடையில் உதவி விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.
    • கத்தியை எடுத்து நாகமாணிக்கத்தின் தோள் பட்டையில் குத்தினர்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குஞ்சிபாளையத்தை சேர்ந்தவர் நாகமாணிக்கம்(வயது51). இவர் கிணத்துக்கடவு அருகே உள்ள முள்ளுப்பாடி டாஸ்மாக் கடையில் உதவி விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு நாகமாணிக்கம் வழக்கம் போல கடையை மூடிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார்.

    டாஸ்மாக் கடையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் சென்றபோது அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் ஹெல்மெட் அணிந்தபடி வந்தனர்.

    அவர்கள் நாகமாணிக்கத்தின் மோட்டார் சைக்கிள் அருகே வந்ததும், மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர்.

    அவரிடம் பொள்ளாச்சிக்கு எப்படி செல்ல வேண்டும் என வழி கேட்டனர். நாகமாணிக்கம் அவர்களுக்கு வழி கூறிக் கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென அந்த வாலிபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நாகமாணிக்கத்தின் தோள் பட்டையில் குத்தினர்.

    இதில் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். உடனடியாக அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிள் ஏறி தப்பி சென்றனர்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய டாஸ்மாக் விற்பனையாளரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களையும் தேடி வருகிறார்கள்.

    • சேலம் கொண்டலாம்பட்டி பெரியபுதூர் அருகே கடனை திருப்பிக் கேட்ட வாலிபரை கத்தியால் குத்தினார்.
    • இதில் படுகாயம் அடைந்த தியாகராஜனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி பெரியபுதூர் அருகே உள்ள வானகாரன் காடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் தியாகராஜன் (வயது 26). இவரது தம்பி அசோக், அதே பகுதியைச் சேர்ந்த சித்தேஸ்வரன் மகன் முனுசாமி என்கிற விஷால் (28) என்பவருக்கு ரூ.200 கடன் கொடுத்துள்ளார்.

    வாங்கிய பணத்தை திருப்பி தராததால், இதுகுறித்து நேற்று மாலை விஷாலிடம், எனது தம்பியிடம் வாங்கிய பணத்தை ஏன் திருப்பி தரவில்லை என தியாகராஜன் கேட்டுள்ளார்.

    இதில் ஆத்திரமடைந்த விஷால், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தியாகராஜனை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த தியாகராஜனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தியாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விஷாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×