என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள்"

    • மாடலிங் துறையில் விருப்பமுள்ள பெண்களை குறிவைத்துள்ளனர்.
    • பெண்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஆபாச படத்தில் நடிக்கும் தொழிலில் தள்ளியுள்ளனர்.

    உத்தரபிரதேசத்தில் வெளிநாட்டினரின் நிதி உதவியுடன் ஆபாசப்படம் எடுப்பதையே 5 ஆண்டுகளாக தொழிலாக செய்து வந்த தம்பதி சிக்கியது.

    உஜ்வால் கிஷோர் மற்றும் அவரது மனைவி நீலு ஸ்ரீவஸ்தவா ஆகியோர் நொய்டாவில் வசித்து வந்தனர். இந்த தம்பதி வெளிநாட்டினரிடம் இருந்து நிதி பெற்றுக்கொண்டு 5 ஆண்டுகளாக ஆபாசப்படம் எடுப்பதையே தொழிலாக செய்து வந்ததை அமலாக்கத்துறை கண்டுபிடித்தது.

    இதனையடுத்து நொய்டாவில் உள்ள இந்த தம்பதியினரின் வீட்டில் அமலாக்கத்துறை (ED) சோதனை நடத்தியது. இதில் ரூ.15.66 கோடி சட்டவிரோத வெளிநாட்டு நிதியைக் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.

    இந்த தம்பதி சமூக ஊடகங்களை பயன்படுத்தி மாடலிங் துறையில் விருப்பமுள்ள பெண்களை குறிவைத்துள்ளனர். மாடலிங் விளம்பரம் பார்த்து வரும் பெண்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஆபாச படத்தில் நடிக்கும் தொழிலில் தள்ளியுள்ளனர்.

    இந்தியாவில் இந்த தொழிலில் ஈடுபடுவதற்கு முன்பாக ரஷ்யாவில் இதேபோன்ற மோசடியில் ஈடுபட்டதை அமலாக்கத்துறை கண்டுபிடித்தது. .

    இந்த மோசடியில் ஆயிரக்கணக்கான பெண்கள் ஆபாச பட தொழிலில் தள்ளப்பட்டிருக்கலாம் என்று அமலாக்கத்துறை தெரிவித்தது.

    • லண்டனில் டிண்டர் டேட்டிங் செயலியை பயன்படுத்துவோரில் 27.4% பேர் தங்கள் இணையை வேவுபார்க்கின்றனர்.
    • குறிப்பாக 18 முதல் 24 வயதுடையோர்தான் இதில் தீவிரம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தற்காலத்தில் ஆண்களும் பெண்களும் தங்களின் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதற்கு பல ஆப்கள் மற்றும் வெப்சைட்டுகள் வந்துவிட்டது.

    அதில் டிண்டர் எனும் ஆப் மிகவும் பிரபலமானது. இதில் உங்களுக்கு பிடித்த பெண்களுக்கு அவருக்கும் உங்களை பிடித்திருந்தால் அவர்களுடன் நீங்கள் பேசலாம். இவ்வாறு டிண்டரில் தன்னுடைய வாழ்க்கை துணை கிடைத்தவர்கள் ஏராளம்.

    உலக அளவில் லட்சக்கணக்கானோர் டிண்டர் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் டிண்டர் டேட்டிங் செயலியை பயன்படுத்துவோரில் 27.4% பேர் தங்கள் இணையை வேவுபார்ப்பதற்காகவே அச்செயலியை பயன்படுத்துவதாக CHEAT EYE ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதில், கணவர்களோ காதலர்களோ தங்களை ஏமாற்றுகிறார்களா என துப்பறிவதற்காகவே லண்டன் பெண்கள் அதிகளவில் (62.4%) டிண்டர் டேட்டிங் செயலியை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு அடுத்தபடியாக மான்செஸ்டரில் 8.8% பெண்களும், பிர்மிங்கத்தில் 8.3% பெண்களும் காதலர்கள் குறித்து துப்பறிந்துள்ளனர். குறிப்பாக 18 முதல் 24 வயதுடையோர்தான் இதில் தீவிரம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • செல்வம் வளரும், மங்கல வாழ்க்கை அமையும், கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.
    • சுமங்கலி பெண்கள் மஞ்சள் கயிறு வைத்து பூஜை செய்து அதை அணிந்து கொள்வார்கள். இதனால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலைதுறை நவசக்தி விநாயகர் ஆலயத்தில் வரலட்சுமி நோம்பு நடைபெற்றது. வரலட்சுமி விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வம் வளரும், மங்கல வாழ்க்கை அமையும், கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.

    சுமங்கலி பெண்கள் இந்த பூஜையின் போது மஞ்சள் கயிறு வைத்து பூஜை செய்து அதை அணிந்து கொள்வார்கள்.

    இதனால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும். அதுசமயம் திருப்பலைதுறை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளிலிருந்து திரளான பெண்கள் கலந்துகொண்டு சுவாமியை பூஜை செய்து வழிபட்டனர்.

    48 நாட்கள் பெண்கள் விரதமிருந்து வரலட்சுமி விரதத்தை முடித்துக்கொண்டனர்.

    • திறந்த வெளியில் உப்பள உற்பத்தி பேக்கிங் செய்யும் சூழலில் பெண்களுக்கு அடிப்படை வசதி இல்லை.
    • பல்வேறு நோய்த்தொற்றுக்கு ஆளாகும் சூழல் குறித்து கூட்டத்தில் எடுத்துக்கூறினர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதார ண்யம் அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் உப்பள தொழிலாளர்களின் பணிசூழல் தொடர்பான மாநில மனித உரிமை கழக ஆய்வு கூட்டம் கோடி யக்காட்டில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாநில மனித உரிமை கழக உறுப்பினர் ஜெயச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின், கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி மற்றும் உப்புத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம் உப்பள தொழிலாளர்களின் பணிச்சூழல், பணியில் இருக்கும் தொழிலாளர்களின் அடிப்படை வசதிகள் மற்றும் திறந்த வெளியில் உப்பள உற்பத்தி பேக்கிங் செய்யும் சூழலில் பெண்களுக்கு அடிப்படை வசதி இல்லாத நிலையில் பல்வேறு நோய்த்தொற்றுக்கு ஆளாகும் சூழல் ஆகிய குறைகள் குறித்து கூட்டத்தில் எடுத்துக்கூறினர்.

    இதுகுறித்து மாநில மனித உரிமை கழக உறுப்பினர் ஜெயச்சந்திரன் கூறியதாவது:-

    உப்பள தொழிலாளர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • பாட்டு பாடி விவசாய நடவுப்பணியில் பெண்கள் ஈடுபட்டனர்.
    • சம்பா நடவுப்பணி தீவிரமடைந்துள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் டெல்டா பகுதிகளில் சம்பா நடவுப்பணி தீவிரமடைந்துள்ளது. பாரம்பரிய நெல் ரகங்களில் தூய மல்லி, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவனி, ஆத்தூர் கிச்சலி சம்பா உள்ளிட்ட பல்வேறு நெல் ரகங்களை இந்தாண்டு தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும் குட்டை ரகங்களில் ஐ.ஆர். 20, 1009, கோ 43 வெள்ளைப் பொன்னி போன்ற ரகங்களும் பரவலாக நடவு செய்யப்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில் கொட்டும் மழையிலும் விவசாய கூலித்தொழிலாளர்கள் நடவுப் பணிகளில் ஈடுபடும் போது வயல்வெளியில் நல்ல விளைச்சல் தர வேண்டும் என நாட்டுப்புற பாடல்களை பாடுவது வழக்கம். அண்மை காலமாக அருகி வந்த நிலையில் பாடல்களை பாடி நடவுப் பணிகளில் ஈடுபடுவது வருங்கால தலைமுறைக்கு வியப்பான ஒன்றாக உள்ளது. விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் செடி கொடிகளுக்கு இசையை உணரும் தன்மையும், நல்ல காய், கனிகளை தருகிறதை உறுதி செய்துள்ள நிலையில் கிராமப்புறத்தில் தொன்று தொட்டு நடவுப்பணியில் பாடல் பாடி வருவது நம் முன்னோர்கள் தங்களது விவசாய தொழிலை நேசித்தது தெளிவாக விளங்குகிறது என நடவுப்பணியில் ஈடுபட்ட பெண்கள் கூறினர்.

    • பெருநகரங்களில் பெண்களும் பாருக்கு வருகிறார்கள்.
    • டெல்லியில் மதுவிற்பனை ஒட்டுமொத்தமாக 87 சதவீதம் உயர்ந்து இருக்கிறது.

    புதுடெல்லி :

    மது குடிக்கும் பழக்கம் தற்போது ஒரு 'பேஷன்' ஆகி விட்டது. பெருநகரங்களில் பெண்களும் பாருக்கு வருகிறார்கள். இந்தநிலையில் டெல்லியில் பெண்களின் மது பழக்கம், கொரோனாவுக்கு முன்பு இருந்த நிலையைவிட தற்போது அதிகரித்து உள்ளது. இதற்கு கொரோனா கால ஊரடங்கே முக்கிய காரணம் என பெண்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    ஒரு தொண்டு நிறுவனம் இது தொடர்பான ஆய்வை 5 ஆயிரம் பெண்களிடம் நடத்தியது. இதில் கொரோனாவுக்கு பிறகு பெண்களிடையே மது அருந்தும் பழக்கம் 37 சதவீதம் அதிகரித்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

    கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட மன அழுத்தம் தங்களை குடிகாரிகளாக மாற்றிவிட்டதாக பல பெண்கள் கூறியுள்ளனர். மேலும், டெல்லியில் மதுபானத்துக்கு அளிக்கப்பட்ட 'ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்', சிறப்பு தள்ளுபடி விற்பனை, டோர் டெலிவரி போன்ற சலுகைகளும் மது வாங்க தங்களை தூண்டியதாக 77 சதவீத பெண்கள் தெரிவித்து உள்ளனர்.

    மது அருந்தும் பெண்களில் 38 சதவீதம் பேர் வாரத்துக்கு இருமுறையும், 19 சதவீதம் பேர் வாரத்துக்கு 4 முறையும் மது அருந்துவதாக கூறியுள்ளனர். ஒரு அமர்வுக்கு 4 'பெக்'குகள் வரை தள்ளுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

    பெண்களிடம் மட்டுமின்றி ஆண்களிடமும் மது அருந்தும் பழக்கம் டெல்லியில் அதிகரித்துள்ளது. இதன்மூலம் டெல்லியில் மதுவிற்பனை ஒட்டுமொத்தமாக 87 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. இதில் விஸ்கி விற்பனை 59.5 சதவீதம், பீர் விற்பனை 5.5 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
    • வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்க ளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்திலுள்ள போலீஸ் நிலையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நித்திரவிளை, சுசீந்திரம், வடசேரி, நேச மணி நகர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டு இருந்தார்.

    இந்த நிலையில் நாகர்கோவில் மகளிர் போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் திடீர் ஆய்வு மேற்கொண் டார். அப்போது போலீ சார் அவருக்கு அணி வகுப்பு மரியாதை அளித்த னர். அணிவகுப்பு மரியா தையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட் டார்.

    இதை தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் பரா மரிக்கப்பட்டு வரும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் வருகை பதிவேடு ஆகிய வற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதல் தகவல் அறிக்கை புகார் மனு அளிக்க வந்தவர்களின் விபரங்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். இந்த ஆண்டு இதுவரை எத்த னை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.அந்த வழக்குகளில் எத்தனை குற்றவாளிகள் கைது செய் யப்பட்டுள்ளனர். குற்றப் பத்திரிகைகள் அனைத்து வழக்குகளி லும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என் பது குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.வழக்கு களை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறியதாவது:-

    மகளிர் போலீஸ் நிலை யங்களுக்கு குடும்ப பிரச்சி னைகள் பெண்கள் மீதான தொந்தரவுகள் தொடர்பான புகார் மனுக்கள் வரும்.அவ்வாறு வரும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவ டிக்கை எடுக்க வேண்டும். போலீசார் அனைவரும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் அதை தெரிவிக்க மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் புகார் பெட்டி வைக்கப் பட்டுள்ளது.

    உங்களது பிரச்சினை களை புகார் பெட்டியில் போட்டால் அதை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பெண்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்க ளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • சாலையில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது.
    • தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசு தொல்லை அதிகமாக உள்ளது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், மணக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட நெல்லியடிக்காடு கிராமம், காளியம்மன் கோயில் தெருவில், சாலையில் மழை நீர் தேங்கி நிற்கிறது.

    இப்பகுதியில் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    200 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். வெள்ள நீர் வடிய ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் முறையிட்ட நிலையில், சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டது.

    சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு கண்டு கொள்ளாமல் அப்படியே விடப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக சிறிது தூரம் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் தண்ணீரில் இறங்கி நடந்து செல்லும் அவலம் உள்ளது.

    மேலும், தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் குழந்தைகளுடன் உறங்க முடியாத சூழல் உள்ளது.

    தண்ணீர் தேங்கி நிற்பதால் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.

    இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

    இதனால் ஆவேசமடைந்த இப்பகுதி பொதுமக்கள், சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வீ.கருப்பையா தலைமை வகித்தனர்.

    சிபிஎம் சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு உறுப்பினர் சேகர், சீனிவாசன், முத்துக்குமார், பன்னீர் செல்வம், பாக்கியம், அஞ்சம்மாள், ராஜ்குமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • நாகரில் 22 மையங்களில் நடந்தது
    • பலத்த சோதனைக்கு பிறகு அனுமதி

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், வணிகவரி உதவி ஆணையர், ஊரக மேம்பாட்டு உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் என 92 பணியிடங்கள் காலி யாக உள்ளது.

    இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடந்தது. குமரி மாவட்டத்தில் குரூப்-1 தேர்வு எழுதுவதற்கு 7329 பேர் விண்ணப்பித்து இருந்தனர். நாகர்கோவிலில் 22 மையங்களில் இன்று தேர்வு நடந்தது. தேர்வு மையங்களுக்கு காலை யிலேயே தேர்வு எழுதுப வர்கள் வந்திருந்தனர். இளம்பெண்கள், வாலி பர்கள் பலரும் தேர்வு மையத்திற்கு வந்தனர். கைக் குழந்தைகளுடனும் பெண்கள் வந்தனர்.

    நாகர்கோவில் எஸ்.எல். பி. பள்ளியில் தேர்வு எழுதுவதற்கு வந்தவர்கள் பலத்த சோதனைக்கு பிறகு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க பட்டனர்.காலை 8.30 மணி முதல் தேர்வு எழுத வந்தவர்களின் அனுமதி சீட்டுகள் பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையத்திற்குள் செல்போன், கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக்கல் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    இதனால் தேர்வு எழுத வந்த இளம்பெண்கள் தங்களது உறவினர்களிடம் செல்போன்களை ஒப்படைத்து சென்றனர். சிலர் செல்போன் வைப்ப தற்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் செல்போன்களை வைத்துவிட்டு தேர்வு எழுத சென்றனர்‌. கைக்கு ழந்தையுடன் வந்த பெண் கள் தங்களது குழந்தை களை கணவர்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்ப டைத்துவிட்டு தேர்வு மையத்திற்கு சென்றனர். இளம்பெண்கள் தேர்வு எழுத சென்ற பிறகு அவர்களுடன் வந்த பெற்றோர் தேர்வு மையத்திற்கு வெளியே காத்திருந்தனர்.

    டதி பள்ளி, டி.வி.டி. பள்ளி, கோலி கிராஸ் கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, இந்து வித்யாலயா பள்ளி, பயோனியர் கல்லூரி, சி.எஸ்.ஐ. மெட்ரிக் பள்ளி உள்பட அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த பாதுகாப்புடன் தேர்வு நடந்தது. காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு மதியம் 12.45 மணிக்கு முடிந்தது.

    தேர்வை கண்காணிக்க 2 பறக்கும் படைகள், 6 நடமாடும் குழுக்கள் மற்றும் 22 ஆய்வு அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர். அவர்கள் தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவில் டதி பள்ளியில் நடந்த தேர்வு மையத்தில் கலெக்டர் அரவிந்த் ஆய்வு மேற்கொண்டார்.

    • 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், பட்டப்படிப்பு, டிப்ளமோ முடிக்காதவர்களாகவும் இருக்க வேண்டும்.
    • விருப்பமும் உள்ளவர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக் குறிப்பு ஆகியவற்றுடன் நேரில் கலந்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சைமாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலை தேடும் பெண்களுக்காக ஓசூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்திற்கு பெண் பணியாளர்களை தேர்வு செய்யும் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

    மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு நகர்ப்புற மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

    இந்த முகாமில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், பட்டப்படிப்பு, டிப்ளமோ முடிக்காதவர்களாகவும் இருக்க வேண்டும்.

    இவர்கள் 18 வயது முதல் 26 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

    நாளை காலை 8 மணி முதல் 10 மணிக்குள் நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்பவர்களுக்கு தொடர்ந்து காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நேர்காணல் நடைபெறும். இந்த முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு கட்டணம் ஏதும் இல்லை. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக் குறிப்பு ஆகியவற்றுடன் நேரில் கலந்து கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு 8110919990, 9442557037 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சப் -ஜூனியர், ஜூனியர், சீனியர், யூத் ஆகிய நான்கு பிரிவின் கீழ் போட்டிகள் நடைபெற்றன.
    • ஒவ்வொரு பிரிவுகளிலும் தலா 10 பேர் என 40 ஆண்கள், 40 பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு உள்ளரங்கு மைதானத்தில் 41-வது மாவட்ட சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது . 2 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியை நேற்று மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தொடங்கி வைத்தார். மாவட்ட சிலம்பா ட்ட கழகம் தலைவர் புனிதா கணேசன், செயலாளர் ஜலேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 560 பேர் கலந்து கொண்டனர். போட்டி யானது ஆண்கள் மற்றும் பெண்க ளுக்கு தனித்தனியாக நடைபெற்றது. சப் -ஜூனியர், ஜூனியர், சீனியர், யூத் ஆகிய நான்கு பிரிவின் கீழ் போட்டிகள் நடைபெற்றன.

    இன்று 2-வது நாளாக சிலம்பாட்ட போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    தொடர்ந்து மாலை வரை போட்டி நடைபெறும். முடிவில் ஒவ்வொரு பிரிவுகளிலும் தலா 10 பேர் என 40 ஆண்கள் , 40 பெண்கள் தேர்வு செய்யப்படஉள்ளனர். தேர்வு செய்யப்படுபவர்கள் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொள்வர்.

    முன்னதாக ஆணையர் சரவணகுமார் சாதனையை பாராட்டி சிலம்பாட்ட கழகம் சார்பில் வரலாற்று பதிவு பட்டயம் வழங்கப்பட்டது.

    • பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சேரன்குளம் அரசு பள்ளி மாணவர் மாணவிகளின் சிலம்பம், வாள்வீச்சு, கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளை மாணவர்கள் செய்து காண்பித்தனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சேரன்குளம் ஆழ்காட்டியம்மன் கோயில் வளாகத்தில் தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, மாவட்ட ஊராட்சி உறுப்பினர், மன்னார்குடி ஒன்றியக்குழு தலைவர் மனோகரன், துணைத்தலைவர் வனிதா அருள்ராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இதில் பேசிய மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்களா பாலு மனதை நாம் சரியாக வைத்துக்கொண்டால் எந்த பெண்ணையும் யாரும் தொந்தரவு செய்ய முடியாது என தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் சேரன்குளம் அரசு பள்ளி மாணவர் மாணவிகளின் சிலம்பம், வாள்வீச்சு, கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளை மாணவர்கள் செய்து காண்பித்தனர்.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற சேரன்குலம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மாணவ மாணவிகள் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    ×