search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீலே"

    ரஷிய அதிபர் புதின், பீலேவை தனக்கு பிடித்த வீரர்களில் ஒருவர் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    பிரேசிலியா:

    உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 100வது நாட்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்த படையெடுப்பில் ஆயிரக்கணக்கான வீரர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனின் பல நகரங்களை முற்றுகையிட்டுள்ள ரஷியா தொடர்ந்து முன்னேறி வருகிறது.

    இந்த போரினால் உலக அளவில் பொருளாதாரமும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த போர் மூலம் உக்ரைன் மற்றும் ரஷியாவில் இருந்து ஏற்றுமதி செய்யாமல் இருக்கும் உணவு தானியங்கள் மூலம் உலகின் பல நாடுகளில் பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் உக்ரைன் மீதான போரை ரஷியா உடனே நிறுத்த வேண்டும் என கால்பந்து ஜாம்பவான் பீலே, ரஷிய அதிபர் புதினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது:-

    "இந்தப் படையெடுப்பை நிறுத்துங்கள்." இந்த சண்டை பொல்லாதது மற்றும் நியாயப்படுத்தவே முடியாதது. இந்த போர் வலி, பயம், மற்றும் வேதனையைத் தவிர வேறெதையும் கொண்டுவருவதில்லை.

    இவ்வாறு பீலே கூறியுள்ளார். 

    உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று ஆட்டத்தில் உக்ரைனின் தேசிய அணி விளையாடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அவர் இதனை தெரிவித்தார்.

    பீலேவும், புடினும் கடைசியாக மாஸ்கோவில் 2017 இல் உலகக் கோப்பைக்கு முன் நடைபெற்ற கான்ஃபெடரேஷன் கோப்பையின் போது சந்தித்தனர். ரஷிய அதிபர் புதினும், பீலேவை தனக்கு பிடித்த வீரர்களில் ஒருவர் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×