என் மலர்
நீங்கள் தேடியது "வழக்குப்பதிவு"
- டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டது.
- இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் திடீரென தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் அவருடைய வீட்டிற்குச் சென்று தீயை அணைக்கும்போது கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. இந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும் 10 கோடி ரூபாய்க்கு அதிகமாக பணம் தீயில் எரிந்து சாம்பல் ஆனதாக கூறப்படுகிறது.
உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் உள்விசாரணை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
இந்த நிலையில் நீதிபதி வீட்டில் பணம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக டெல்லி காவல் நிலையம் வழக்குப்பதிவு (FIR) செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் அபய் எஜ். ஓஹா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக தற்போது உத்தரவிட முடியாது. உள்-விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் தலையிட முடியாது. தற்போது உத்தரவிட்டால் முன்னதாக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
மேலும், உள்விசாரணை முடிவடைந்ததும், அனைத்து தகவல்களும் வெளியாகும். தேவைப்பட்டால் தலைமை நீதிபதி வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியும். இந்த முடிவுக்கு நாம் ஏன் இப்போதே செல்ல வேண்டும்? என நீதிபகள் தெரிவித்தனர்.
- சட்டவிரோத சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய புகாரில் சைபராபாத் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- பணம் பெற்றுக்கொண்டு நடிகர்கள் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததாக தொழிலதிபர் பனிந்திர சர்மா புகார் அளித்திருந்தார்.
நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய புகாரில் சைபராபாத் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பணம் பெற்றுக்கொண்டு நடிகர்கள் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததாக தொழிலதிபர் பனிந்திர சர்மா புகார் அளித்திருந்தார்.
நடிகர்கள் மக்களை தவறாக வழி நடத்தியதால், அவர்கள் கடினமாக உழைத்த பணத்தை சூதாட்ட செயலியில் இழந்து விட்டனர் என்று புகார்தாரர் குறிப்பிட்டுள்ளார்.
2015ல் இதுபோன்ற விளம்பரத்தில் நடித்தேன். ஆனால் ஒரு வருடம் கழித்து விலகிவிட்டேன் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- திருச்சி விமான நிலையத்தில் அத்துமீறி நுழைந்து செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் கைது
- டீக்கடைக்கு முன்பாக வெடி வெடித்ததால் எழுந்த தகராறு தொடர்பாக எடமலைப்பட்டிப்புதூர் காவல்துறையினர் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்
திருச்சி:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்திற்குள் செல்போன் மூலம் வீடியோ மற்றும் போட்டோ எடுத்த நான்கு பேரிடம் அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.
இதில் எழுந்த தகராறில் நான்கு பேர் மீது ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல் ஆட்டோ டிரைவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட பத்துக்கும் மேற்பட்டோர் மீது கண்டோன்மென்ட் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் எடமலைப்பட்டிப்புதூர் பகுதியில் உள்ள டீக்கடைக்கு முன்பாக வெடி வெடித்ததால் எழுந்த தகராறு தொடர்பாக எடமலைப்பட்டிப்புதூர் காவல்துறையினர் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் பல்வேறு நிகழ்வுகளில் மொத்தம் 25-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை தண்ணீர் தொட்டி அருகே முகம்மது ரியாஸ் (வயது 23) என்பவரை கத்தியை காட்டி மிரட்டிய தர்மநாதபுரம் புனித அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த தாமஸ் அந்தோணி (22) என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் தில்லை நகர் பிரதான சாலையில் சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்த பாஸ்கர் (56) என்பவரிடம் தென்னூர் வாமடம் சப்பாணி கோவில் தெருவை சேர்ந்த அரவிந்த் (28) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக கைது செய்யப்பட்டார். மேலும் கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து கத்தி மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
- சிறிது நேரம் கழித்து சேகர் முழித்து பார்த்த போது கோமதியை காணவில்லை.
- சந்திரநதியில் ஆற்றின் கரையில் கோமதி பிணமாக கிடந்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சேகர்.
இவரது மனைவி கோமதி (வயது 45).
இந்த நிலையில் தீபாவளியன்று கணவன், மனைவி இருவரும் சேர்ந்து மது குடித்து விட்டு குண்டையூர் செல்லும் பாலம் அருகே தூங்கியதாக கூறப்படுகிறது.
சிறிது நேரம் கழித்து சேகர் முழித்து பார்த்த போது கோமதியை காணவி ல்லை. பல இடங்களில் தேடி பார்த்து ம் கண்டுபிடிக்க முடியவி ல்லை.
இந்த நிலையில் சந்திரநதியில் ஆற்றின் கரையில் கோமதி பிணமாக கிடந்தார்.
தகவல் அறிந்த திருக்குவளை போலீசார் சம்பவ இடத்து க்கு சென்று கோமதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுக் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிம்சோனி (34) ரிஜேஸை வழிமறித்து பணம் கேட்டார். ரிஜேஸ் பணம் இல்லை என கூறினார்.
- அப்போது மோட்டார் சைக்கிளின் டேங்க் கவரில் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி ரிஜேஸிடமிருந்து ரூ.200 ஐ பறித்தாக கூறப்படுகிறது.
- குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிம்சோனியை கைது செய்தனர்.
குளச்சல், அக்.27-
குளச்சல் அருகே திக்கணங்கோடு கீழ புல்லுவிளையை சேர்ந்தவர் ரெத்தினகுமார்.
இவரது மகன் ரிஜேஸ் (வயது26).கூலி த்தொழிலாளி. கடந்த 24-ந் தேதி இவர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் சேனம்விளை அரசு மருத்துவமனை அருகில் செல்லும்போது பெத்தேல்புரத்தை சேர்ந்த சிம்சோனி (34) ரிஜேஸை வழிமறித்து பணம் கேட்டார். ரிஜேஸ் பணம் இல்லை என கூறினார்.
அப்போது மோட்டார் சைக்கிளின் டேங்க் கவரில் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி ரிஜேஸிடமிருந்து ரூ.200 ஐ பறித்தாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் படுகாய மடைந்த ரிஜேஸ் குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிம்சோனியை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட சிம்சோனி பிரபல ரவுடி என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் மீது மேலும் 4 வழக்குகள் குளச்சல் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.
- நேற்று காலை வீட்டில் இருந்த ஆதித்யாவை திடீரென காணவில்லை.
- பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இரணியல், அக்.27-
வில்லுக்குறி மேலப்பள்ளத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 47). இவரது மகள் ஆதித்யா (19). இவர் ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை வீட்டில் இருந்த ஆதித்யாவை திடீரென காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அவரது தாயார் மஞ்சு (44) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுவாமிமலையில் இருந்து பாபநாசம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
- பிரேக் பிடிக்காததால் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டர் சைக்கிள் மோதியது.
நீடாமங்கலம்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் திருப்பாலைத்துறையை சேர்ந்தவர் சாகிர் உசேன்.
இவரது மகன் அப்துல் ரஜும் (வயது 20). இவர் சம்பவத்தன்று இரவு சுவாமிமலையில் இருந்து பாபநாசம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, உத்தாணி அருகே சென்ற போது சாலையில் லாரி ஒன்று நின்றுகொண்டிருந்தது. லாரி நிற்பதை கண்டு அப்துல் ரஜும் பிரேக் அடிக்க முயற்சி செய்துள்ளார்.
பிரேக் பிடிக்காததால் லாரி மீது மோட்டர் சைக்கிள் மோதியது.
இதில் அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான கரூரை சேர்ந்த மணிவண்ணன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆலையில் டாரஸ் லாரியில் உள்ள தார்ப்பாய் கயிறுகளை அவிழ்க்கும் போது 40 கிலோ எடையுள்ள எட்டு நெல் மூடைகள் பிரம்ம நாயகத்தின் மீது சரிந்து விழுந்தது.
- உடனடியாக அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பலியானார்.
ஆரல்வாய்மொழி, அக்.27-
நாகர்கோவிலை அடுத்த சுசீந்தரம் யோகீஸ்வரர் தெருவை சேர்ந்தவர் பிரம்ம நாயகம் (வயது 54). இவர் நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தைச் சேர்ந்த பாபு என்பவர் க்கு சொந்தமான டாரஸ் லாரியை ஓட்டி வருகிறார்.கடந்த மாதம் 22-ந் தேதி நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து அரசுக்கு சொந்தமான நெல் மூட்டைகளை ஏற்றி ஆரல்வாய்மொழி அருகே உள்ள செண்பகராமன்புதூர் நவீன அரிசி ஆலைக்கு கொண்டு சென்றார்.
ஆலையில் டாரஸ் லாரியில் உள்ள தார்ப்பாய் கயிறுகளை அவிழ்க்கும் போது 40 கிலோ எடையுள்ள எட்டு நெல் மூடைகள் பிரம்ம நாயகத்தின் மீது சரிந்து விழுந்தது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். இவருக்கு சத்யகலா என்ற மனைவியும் ஹரிகனேஷ் என்ற மகனும் உமாமகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.
இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். நெல் மூடை கீழே விழுந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இந்த நிலையில் கொலை வழக்கு இன்று கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
- இதற்காக திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த ரபீக்கை டெல்லி போலீசார் பலத்த பாதுகாப்புடன் நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர்.
- அவன் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டான்.
நாகர்கோவில், அக். 27-
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் செய்யது அலி (வயது 30), வாசிம் என்ற முன்னா என்ற ரபீக் (34).
கொலை
நண்பர்களான இவர்கள் நாகர்கோவில் மீனாட்சி புரத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி இருந்து தொழில் செய்து வந்தனர். இந்த நிலையில் செய்யது அலிக்கும், ரபீக்கி ற்கும் தொழிலில் பணம் கொடுக்கல்- வாங்கல் தொடர்பாக அடிக்கடி பிரச்சினை எழுந்து உள்ளது.
சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ரபீக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செய்யதுஅலியை குத்தி கொலை செய்தார். இதைதொடர்ந்து, ரபீக் அங்கிருந்து தப்பிஓடி தலைமறைவாகி விட்டார்.
கைது
இந்த கொலை சம்ப வம் கடந்த 2010-ம் ஆண்டு நடந்தது. இது குறித்து கோட்டார் போலீ சார் வழக்குப்பதிவு செய்து தலை மறைவான ரபீக்கை தேடி வந்தனர். ஆனால் அவர் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
இதற்கிடையே டெல்லி யில் ஒரு கொலை வழக்கில் ரபீக் கைது செய்யப்பட்டார். இது பற்றிய தகவல் குமரி மாவட்ட போலீசுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் கோட்டார் கொலை வழக்கு தொடர் பாக விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
இதை தொடர்ந்து டெல்லி போலீசார் ரபீக்கை கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் படுத்தி இருந்தனர். விசாரணைக்குப் பின்னர் ரபீக் திகார் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பலத்த பாதுகாப்புடன்...
இந்த நிலையில் கொலை வழக்கு இன்று கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதற்காக திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த ரபீக்கை டெல்லி போலீசார் பலத்த பாதுகாப்புடன் நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர். அவன் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டான்.
- கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார்.
- கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை.
நீடாமங்கலம்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோ ட்டம் திருவிடைமருதூர் காவல் நிலைய சரகம் புளியம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சேகர் இவரது மகன் வைரப்பன் (33) அவரின் மனைவி குடும்பபிரச்சனை காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கோபித்த க்கொண்டு திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி தனது வீட்டில் தவறி விழுந்ததாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக வைர ப்பன் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
பின்னர் கும்பகோணத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்இரவு இறந்துள்ளார்
ஜெயலட்சுமி தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியதால், இறந்தவரின் பிரேதம் கும்பகோணம் அரசு மருத்து வமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்களர்.
இறந்த வைரப்பனுக்கு மகன் ஹரிஹரன் (6) மகள் சிவானி (3)இருவரும் அவரது அம்மாவுடன் திருப்பூரில் இருந்துள்ளார்கள்
இவ்வழக்கில் திடீர் திருப்பமாக அவரது சொந்த அண்ணன் வேலப்பன்(39) என்பவர் வைரப்பனை கட்டையால் தாக்கியது போலீஸ் விசாரணைகள் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உம்பளச்சேரி செல்லும் சாலையில் ரோந்து பணி.
- வழக்குப்பதிவு செய்து தலா ரூ. 20,000 இருவருக்கும் அபராதம்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த பிராந்தியங்கரையில் திருச்சி வன மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ், நாகை வன உயிரிக்காப்பாளர் யோஹேஸ்குமார் மீனா உத்தரவின்படி வேதாரண்யம் வனச்சரக அலுவலர் அயூப்கான் தலைமையில் பறவைகள் வேட்டை தடுப்பு சிறப்பு குழுவினர்கள் ராமதாஸ், வனவர், செல்வி, மகாலெட்சுமி, வனக்காப்பாளர்கள் ரணீஷ்குமார், செல்வி, இலக்கியா, வேட்டை தடுப்பு காவலர்கள் நிர்மல்ராஜ், பாண்டியன் ஆகியோர் பிராந்தியங்கரையில் உம்பளச்சேரி செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கட்டிமேடு பகுதியை சேர்ந்த அலி அக்பர், ஹாஜா அலாவுதீன் ஆகியோர் மூன்று மடையான், இரண்டு வக்கா பறவைகள் சமைக்க விலைக்கி வாங்கி வந்தனர்.
இருவரையும் பிடித்து கோடியக்கரை வனச்சரகர் அலுவலகம் கொண்டுவந்து விசாரணை செய்து இந்திய வன உயிரினப்பாதுகாப்பு சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து தலா ரூ. 20,000 இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
- தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறி பேரூராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- இவர் டி.கல்லுப்பட்டி 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார்
திருமங்கலம்
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகுடாதிபதி (வயது54). இவர் டி.கல்லுப்பட்டி 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். நேற்று மாலை 5.30 மணி அளவில் பேரூராட்சி அலுவலகத்தில் ஏழு ஊர் அம்மன் திருவிழாவிற்கு தனது வார்டில் சாலையை சுத்தம் செய்வதற்காக துப்புரவு பணியாளர்களை அனுப்ப வேண்டும் என மகுடாதிபதி டி.கல்லுப்பட்டி செயல் அலுவலர் மற்றும் என்ஜினியரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பேரூராட்சி தலைவரும், தி.மு.க. நகர செயலாளருமான முத்துகணேஷ் மற்றும் மேஸ்திரி கனகராஜ் இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் மகுடாதிபதி புகார் கொடுத்தார். அதன்பேரில் பேரூராட்சித் தலைவர் முத்து கணேசன் மற்றும் உடந்தையாக இருந்த பேரூராட்சி மேஸ்திரி கனகராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.