என் மலர்
நீங்கள் தேடியது "மாணவன்"
- கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
- கலெக்டரின் பதிலை சமூக வலைதங்களில் பலர் பகிர்ந்து வருகிறார்கள்.
சிவகாசி
விருதுநகர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினமும் மாலை நேரத்தில் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் பள்ளி சென்று திரும்பிய மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி வீட்டிற்கு திரும்பினர். இந்தநிலையில், இரவு 10.10 மணிக்கு சிவகாசியை சேர்ந்த ஒரு மாணவன், விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டியின் டுவிட்டரில் "சார், சிவகாசியில் மாலை முதல் மழை வந்த வண்ணம் இருக்கிறது. நாளை (அதாவது நேற்று) பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை கிடைக்குமா?" என கேள்வி எழுப்பி இருந்தான்.
இதற்கு கலெக்டர் மேகநாதரெட்டி இரவு 10.45 மணிக்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். அதில் விடுமுறை கிடையாது என்பதை சூசகமாக தெரிவித்து, "மாலையில் மழையை ரசித்த நீ, நாளை வழக்கம் போல் பள்ளிக்கு செல்" என்று ருசிகரமாக பதில் அளித்து இருந்தார். இந்த பதிலை சமூக வலைதங்களில் பலர் பகிர்ந்து வருகிறார்கள்.
+2
- தாய் சரண்யா தனது மகனை உள்ளே அனுப்பாததை கண்டித்து பள்ளி நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
- சுமார் 2 மணிநேரத்திற்கு பின்பு மாணவன் உள்ளே சென்றார். இந்த சம்பவத்தால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மனைவி சரண்யா. இவர்களது மகன் ரோகன். கீழ்பூமி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான். இதே பள்ளியில் மாணவனின் தாய் சரண்யா 4 ஆண்டுகளாக அலுவலக கணக்காளராக பணிபுரிந்து வந்தார்.
ஆனால் இவருக்கு எந்தவித சலுகைகளும் வழங்கப்படாததால் பள்ளியை விட்டு நின்றுவிட்டார். இதனைதொடர்ந்து இவருக்கு வழங்கப்படவேண்டிய சம்பள பாக்கியில் இருந்து தனது மகனுக்கு தேவையான கல்வி கட்டணத்தை பிடித்தம் செய்து கொள்ளுமாறு கூறியிருந்தார். அதன்படி பள்ளி நிர்வாகமும் ரோகன் செலுத்தி வேண்டிய கல்வி கட்டணத்தை எடுத்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த மாணவனை காவலாளி வாசலிலேயே நிறுத்திவிட்டார். இதுகுறித்து கேட்டபோது கல்வி கட்டணம் செலுத்தாதால் உன்னை உள்ளே விடக்கூடாது என்று அறிவுரை வந்துள்ளது என தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவன் தனது தாயாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தாய் சரண்யா தனது மகனை உள்ளே அனுப்பாததை கண்டித்து பள்ளி நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
இதுகுறித்து கொடைக்கானல் வருவாய்த்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் சரண்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக வகுப்பறைக்குள் நுழையவிடாமல் இருப்பது எந்தவிதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பினார்.
இதனைதொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்பு மாணவனை வகுப்பறைக்குள் செல்ல அனுமதித்தனர். இதனால் சுமார் 2 மணிநேரத்திற்கு பின்பு மாணவன் உள்ளே சென்றார். இந்த சம்பவத்தால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- வட்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
- திருவண்ணாமலையில் நடைபெறஉள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
காங்கயம் :
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பாக மாவட்ட அளவிலான தடகள போட்டி திருப்பூர் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் பங்குபெற்ற காங்கயம் சிவன்மலை ஜேஸீஸ் பள்ளி 9-ம் வகுப்பு மாணவன் லிங்கேஷ் 14 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் வட்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் இம்மாத இறுதியில் திருவண்ணாமலையில் நடைபெறஉள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவனை பள்ளி பொருளாளர் பழனிச்சாமி, மோகனசுந்தரம், சாவித்திரிசுப்ரமணியம், முதல்வர் சுப்ரமணி,பள்ளியின் தாளாளர்,அகடமிக் டைரக்டர்ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர்.
- குண்டியமல்லூரை சேர்ந்த 15 வயது மாணவன் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
- ஏறிய போது வழியில் நிற்காமல் சற்று வழி விடவும் என கூறியுள்ளார்.
கடலூர்:
கடலூர் அருகே குண்டியமல்லூரை சேர்ந்த 15 வயது மாணவன் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அதேப்பகுதியை சேர்ந்த 16 வயது மாணவன் குறிஞ்சிப்பாடியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று குறிஞ்சிப்பாடியில் இருந்து குண்டியமல்லூர் பகுதிக்கு அரசு பஸ்ஸில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் முதலில் ஏறி உள்ளார். இதனை தொடர்ந்து 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் பின்னால் ஏறிய போது வழியில் நிற்காமல் சற்று வழி விடவும் என கூறியுள்ளார்.
இந்த நிலையில் 11-ஆம் வகுப்பு மாணவன் தனது நண்பர்களுக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு 10-ம் வகுப்பு மாணவன் என்னிடம் சண்டை ஏற்படுத்துவது போல் பேசி சென்றுள்ளார் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து குண்டியமல்லூர் பகுதியில் 10-ம் வகுப்பு மாணவன் இறங்கி நடந்து சென்ற போது, 11ஆம் வகுப்பு மாணவன் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பல் 10-ம் வகுப்பு மாணவனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த 10-ம் வகுப்பு மாணவன் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் 11-ம் வகுப்பு மாணவன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா அர்த்தனாரி பாளையம் அருகே உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 14-ந் தேதி காலையில் வீட்டிலிருந்த யஸ்வந்த் அப்பகுதியில் உள்ள கடைக்கு பொருள் வாங்குவதற்காக சென்றவர் வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை .
- வழக்கு பதிவு செய்து கடைக்குச் சென்ற சிறுவன் யஸ்வந்த்தை யாராவது கடத்திச் சென்று விட்டார்களா ?அல்லது யஸ்வந்த் தானாக எங்காவது சென்று விட்டாரா என தீவிரமாக தேடி வருகின்றனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி பழனியப்பா ஆயில் மில் தெருவை சேர்ந்தவர் குழந்தைவேல் .இவரது மகன் யஸ்வந்த்
(வயது 13 ).இவர் அர்த்தனாரி பாளையம் அருகே உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 14-ந் தேதி காலையில் வீட்டிலிருந்த யஸ்வந்த் அப்பகுதியில் உள்ள கடைக்கு பொருள் வாங்குவதற்காக சென்றவர் வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை .
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அப்பகுதியில் நீண்ட நேரம் தேடிப் பார்த்தனர்.பிறகு உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கும், பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து யஸ்வந்த் தந்தை குழந்தைவேல் பரமத்தி போலீசில் புகார் செய்தார் .
அதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்கு பதிவு செய்து கடைக்குச் சென்ற சிறுவன் யஸ்வந்த்தை யாராவது கடத்திச் சென்று விட்டார்களா ?அல்லது யஸ்வந்த் தானாக எங்காவது சென்று விட்டாரா என தீவிரமாக தேடி வருகின்றனர்.
- உயிரிழந்த மாணவனின் தாயார் அதே பள்ளியில் ஆசியையாக பணியாற்றுகிறார்.
- தலைமறைவான ஆசிரியர் முத்தப்பாவை போலீசார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் ஹாக்லி என்ற கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்த பாரத் என்ற மாணவனை, அவனது ஆசிரியர் முத்தப்பா இன்று மண்வெட்டியால் கடுமையாக தாக்கி உள்ளார். அப்போதும் ஆத்திரம் தணியாத அவர், மாணவனை முதல் மாடியின் பால்கனியில் இருந்து கீழே தள்ளி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாணவன் பாரத், பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
உயிரிழந்த மாணவனின் தாயார் அதே பள்ளியில் ஆசியையாக பணியாற்றுகிறார். அவரையும் ஆசிரியர் முத்தப்பா கடுமையாக தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த ஆசிரியை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தலைமறைவான ஆசிரியர் முத்தப்பாவை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த கொலைக்கான காரணம் குறித்து எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை. அவர்களின் குடும்பங்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- கார்த்திக் ஷெகோக்கர் என்ற 3-ம் வகுப்பு மாணவர் மட்டுமே பள்ளிக்கு வருகிறார்.
- காலையில் வகுப்பு தொடங்குவதற்கு முன்பு இருவரும் தேசிய கீதம் பாடுகின்றனர்.
புனே:
மகாராஷ்டிரத்தில் வாஷிம் மாவட்டத்தில் கணேஷ்பூர் கிராமம் உள்ளது. மொத்தம் 150 பேர் வசித்து வரும் இந்த கிராமத்தில் அரசால் நடத்தப்படும் பள்ளி ஒன்று உள்ளது. 1 முதல் நான்காம் வகுப்பு வரையிலான வகுப்புகளை கொண்டிருந்தபோதும், அந்த பள்ளியில் ஒரே ஒரு மாணவர் படித்து வருகிறார்.
கார்த்திக் ஷெகோக்கர் என்ற 3-ம் வகுப்பு மாணவர் மட்டுமே பள்ளிக்கு வருகிறார். அவருக்கு பாடம் நடத்துவதற்காக கிஷோர் மங்கார் என்ற ஆசிரியர் தினமும் 12 கி.மீ. பயணம் செய்து பள்ளிக்கு வருகை தருகிறார். காலையில் வகுப்பு தொடங்குவதற்கு முன்பு இருவரும் தேசிய கீதம் பாடுகின்றனர். அதன்பின்னர் வகுப்பு தொடங்கும்.
இதுபற்றி ஆசிரியர் கிஷோர் மங்கார் கூறும்போது, 2 ஆண்டுகளாக இந்த பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே படித்து வருகிறார். பள்ளியில் நான் மட்டுமே ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். இந்த மாணவருக்கு அனைத்து பாடங்களையும் கற்று தருகிறேன். அரசால் வழங்கப்படும் மதிய உணவு உள்பட அனைத்து வசதிகளும் அந்த மாணவருக்கு வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளார். ஒரே ஒரு மாணவர் மட்டுமே பள்ளிக்கு வந்தபோதும், மாணவரின் கல்விக்கு தடை விதிக்காமல், பள்ளி நிர்வாகம் தொடர்ந்து இந்த பள்ளியை நடத்தி வருகிறது.
- 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிளஸ்-1 மாணவருடன் ஓட்டம் பிடித்த 14 வயது சிறுமியை தேடி வருகிறார்கள்.
கோவை:
கோவை அருகே உள்ள கோவில் பாளையத்தை சேர்ந்த 15 வயது சிறுவன். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
மாணவருக்கு அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் 2 பேரின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது மகன், மகளுக்கு அறிவுரை வழங்கினார்.
சம்பவத்தன்று 2 பேரும் வழக்கம் போல தங்களது பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றனர். ஆனால் அவர்கள் பள்ளிக்கு செல்லாமல் ஓட்டம் பிடித்தனர்.
நீண்ட நேரம் ஆகியும் பள்ளிக்கு சென்ற தங்களது மகன், மகள் வீட்டிற்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவர்களை அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது 2 பேரும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.
இது குறித்து 2 பேருடைய பெற்றோரும் மாயமான தங்களது மகன், மகள் ஆகியோரை கண்டுபிடித்து தரும்படி கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிளஸ்-1 மாணவருடன் ஓட்டம் பிடித்த 14 வயது சிறுமியை தேடி வருகிறார்கள்.
- அதிர்ச்சியடைந்த பெற்றோர் குளச்சல் போலீசில் புகார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து அபிலாஷை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
குளச்சல் அருகே மேற்கு நெய்யூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் மகன் அபிலாஷ் (வயது 15). குளச்சலில் ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.கடந்த 9-ந் தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அபிலாஷிற்கு லேசான காய்ச்சல் இருந்த நிலையில் அறையில் படுக்க சென்றார்.
மறுநாள் காலை பெற்றோர் அறைக்கு சென்று பார்த்த போது அபிலாஷை காணவில்லை. வீட்டிலிருந்த தந்தையின் ஸ்கூட்டர் மற்றும் பீரோவி லிருந்து ரூ.7 ஆயிரம் மற்றும் துணி மணிகளையும் எடுத்துக்கொண்டு மாய மானது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சிய டைந்த பெற்றோர் அறையை சோதித்து பார்த்த னர். அப்போது அபிலாஷ் எழுதிய கடிதம் சிக்கியது.
அதில் அன்புள்ள அப்பா அம்மாவுக்கு என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு படிப்பதற்கு விருப்பமில்லை. வீட்டில் என்னை அடிக்கடி படிக்க வற்புறுத்துவதால் வீட்டை விட்டு நான் கண்காணாத இடத்திற்கு செல்கிறேன்.
என்னை அப்பாவும், அம்மாவும் தேட வேண்டாம். நான் கண்காணாத இடத்தில் ஓர் சிறிய கூலி வேலை செய்தாவது வாழ்கையில் முன்னேறுவேன்.அதனால் என்னை தேட வேண்டாம்.
நான் இனி இந்த கன்னி யாகுமரி மாவட்டத்திற்கு வரவே மாட்டேன். நீங்கள் என்னை போலீசில் புகார் செய்தால், போலீஸ் என்னை பிடித்தால் நான் வரும் வழியிலேயே இறந்து விடுவேன். அதை மீறி அவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்தார்கள் என்றால் நான் என் வீட்டிலேயே தூக்கில் தொங்குவேன். எனவே நான் கண்காணாத இடத்தில் போய் எனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்வேன். சாரி என எழுதப்பட்டிருந்தது. இது குறித்து தந்தை சதீஷ்குமார் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அபிலாஷை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமாரி, மார்ச். 14 -
பொன்மனை அருகே சமாதிநடையைச் சேர்ந்தவர் சதீஸ்குமார். இவரது மனைவி நந்தினி. சதீஸ் குமார் வெளிநாட்டில் ஒரு கட்டிட கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன்கள் சபரீஷ் (வயது 9), சூரிய நாத் (7). இருவரும் குலசேகரம் படநிலம் பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு மற்றும் 1 -ம் வகுப்பு படித்து வந்தனர்.
தற்போது பிளஸ்-2 தேர்வுகள் தொடங்கி யுள்ள நிலையில் மாணவர் களுக்கு பிற்பகலில் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், சபரீஷ் மற்றும் சூரிய நாத் ஆகியோர் நேற்று பிற்பகலில் வழக்கம் போல் செல்லும் தனியார் வேனில் பள்ளிக்குச் சென்று விட்டு மாலை 4.30 மணி அளவில் அதே தனியார் வேனில் வீட்டின் அருகில் வந்து இறங்கினர்.
அப்போது சபரீஷ், சூரியநாத் ஆகியோர் வேனின் முன்பக்கம் வழியாக சாலையைக் கடந்துள்ளனர். இதனைக் கவனிக்காத வேன் டிரைவர் வேனை இயக்கியுள்ளார். இதில் சபரீஷ், சூரிய நாத் ஆகிய இருவரும் வேனின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குழந்தைகளை அழைத்துச் செல்லும் வகையில் சாலையின் எதிரே வந்து கொண்டிருந்த மாணவர்களின் தாய் நந்தினியின் கண்முன்னே நடந்தது. அப்போது அவர் அலறித்துடித்த வண்ணம் வேனில் அருகில் ஓடிச்சென்றார்.
இதையடுத்து படுகாய மடைந்த 2 மாணவர் களையும் உடனடியாக ஒரு ஆட்டோவில் ஏற்றி குலசேகரத்திலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் ஆஸ்பத்திரியில் சூரிய நாத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். மேலும் சபரீசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். வேன் டிரைவர் பொன்மனையைச் சேர்ந்த ஜார்ஜ் (52) என்பவரிடம் விசாரணை நடத்தி வரு கின்றனர். பலியான மாணவன் சூரியநாத் உடல் பிரேத பரி சோதனைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- கேரள மாநிலத்திற்கு சுற்றுலா செல்ல மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
- நிலைதடுமாறி விழுந்து அருகில் உள்ள ஒரு மரத்தில் மோதியது.
பரமத்திவேலூர்:
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், திருப்பதி அர்பன் பகுதியைச் சேர்ந்தவர் மோடன் வெங்கிட்டு. இவரது மகன் மோடன் கிரண் (26). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.டெக் இறுதி ஆண்டு படித்து வந்தார்.
இவரது நண்பர் திருப்பதி, அசோக் நகரை சேர்ந்தவர் விஜயபிரதாப்ரெட்டி (25). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் திருப்பதியில் இருந்து புறப்பட்டு கேரள மாநிலத்திற்கு சுற்றுலா செல்ல மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். நாமக்கல் அருகே உள்ள புலவர்பாளையம் சர்வீஸ் ஸ்டேஷன் அருகே கல்லூரி மாணவர் மோடன் கிரண் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் சாலையின் இடது புறத்தில் இருந்த ஒரு பள்ளத்தில் எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி விழுந்து அருகில் உள்ள ஒரு மரத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த மோடன் கிரணையும், அவரது நண்பர் விஜய பிரதாப்ரெ ட்டியையும் அவ்வழியாக வந்தவர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவர் மோடன் கிரண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் விஜயபிரதாப்ரெட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- விருதுநகர் மாவட்டம் சங்கரநத்தம் கிராமத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலியானார்.
- இந்த சம்பவம் சங்கரநத்தம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சங்கரநத்தம் ஊராட்சி உள்ளது. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு பெரும்பாலும் பட்டாசு தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமியின் ஒரே மகன் பாலமுருகன் (வயது15) 10-ம் வகுப்பு படித்தான். இந்த சிறுவனுக்கு சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது.
சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பாலமுருகன் பரிதாபமாக உயிரிழந்தான். சிறுவன் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும், சரியான சுகாதாரமின்றி இருப்பதால் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பாதிக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். டெங்கு காய்ச்சலால் 10-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சங்கரநத்தம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.