என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒப்பந்தம்"

    • மருத்துவம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சி.
    • முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மற்றும் அதனை சுற்றியுள்ள முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மீனாட்சி மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் மருத்துவமனையில் மருத்துவம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் விங் கமாண்டர் ஜெயகுமார் துணை தலைவர், விமான படை வீரர்கள் சங்கம், தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் பொது மேலாளர் டாக்டர். பாலமுருகன், மேஜர். சரவணன், துணை இயக்குநர் முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம், ஜி.பி. கேப்டன் கென்னடி அலுவலக பொறுப்பாளர் இ.சி.எச்.எஸ்.

    தஞ்சாவூர் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்து மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பம் செய்தனர். முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் அலுவலகத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் மனு
    • ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் கடந்த 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் வளாகத்தில் திங்கள்கிழமைகளில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

    அந்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொதுமக்கள் மனு அளிக்க திரண்டு வருகிறார்கள். திங்கள் கிழமையான இன்றும் மனு அளிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். பொதுமக்களை போலீசார் சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதித்தனர்.

    குமரி மாவட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் தங்கமோகன், பொன்ராஜா, இளங்கோ, முத்துகிருஷ்ணன் உள்பட பலர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்ட அரசு ரப்பர் தோட்ட தொழி லாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் காலவதியானது. இதைத் தொடர்ந்து அமைச்சர்கள் தலைமையில் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது ஏற்படுத்தப்பட்ட ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அரசு ரப்பர் கழக நிர்வா கம் இதுவரை அமல்படுத்த வில்லை.

    எனவே ஊதிய உயர்வை நிலுவை தொகை யுடன் உடனே வழங்க வலியுறுத்தி ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் கடந்த 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். ஆனால் தற்போது வரை எந்த தீர்வும் கிடைக்க வில்லை.

    எனவே தொழிலாளர் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். ஆரல்வாய்மொழி கூட்டு றவு நூற்பாலையில் வெளி ஒப்பந்ததாரர்கள் மூலம் தொழிலாளர்களை பணியில் அமர்த்த ஆலை நிர்வாக முடிவு செய் துள்ளது. அந்த முடிவை கைவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • நன்னீர் மீன் இறால் வளர்ப்பில் ஏற்படும் நன்மைகள் குறித்து நிகழ்வில் கூறப்பட்டது.
    • காப்பீட்டு நிறுவனம் மற்றும் மீன்வள பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த நாகூரில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைகழகத்தில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு நன்னீர் மீன் மற்றும் இறால் வளர்ப்பு மீனவர்களுக்கு காப்பீடு திட்டம் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    நன்னீர் மீன் இறால் வளர்ப்பில் ஏற்படும் நன்மைகள் குறித்து நிகழ்வில் கூறப்பட்டது.

    நிகழ்வில் காப்பீட்டு நிறுவனம் மற்றும் மீன்வள பல்கலைகழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடபட்டது.

    நிகழ்ச்சியில் நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்பு ராஜ், ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • புதிதாக பயணியர் நிழற்குடை அமைப்பதற்காக ஒப்பந்தம் விடப்பட்டு அதற்காக ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
    • தனி நபர் ஒருவர் அந்த இடத்தில் நிழற்குடை அமைக்க கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    மதுக்கூர்:

    தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, மதுக்கூர் அருகே உள்ள சிராங்குடி கிராமத்தில் உள்ள பழைய பயணிகள் நிழற்குடை ஒன்று சேதமானதை அடுத்து அதே இடத்தில் புதிதாக பயணியர் நிழற்குடை அமைப்பதற்காக ஒப்பந்தம் விடப்பட்டு அதற்காக ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

    இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த தனி நபர் ஒருவர் அந்த இடத்தில் நிழற்குடை அமைக்க கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து ஊராட்சி ஒன்றிய ஆணையர் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து நிதியை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சிரங்குடி கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சிராங்குடி மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பிரதீப் ராஜ் சவுக்கான், அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் துரை.செந்தில், தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த சாலை மறியலால் பட்டுக்கோட்டை- மன்னார்குடி போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

    • காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.
    • 14-வது ஊதிய ஒப்பந்தத்தில் உள்ள முரண்பாடுகள் சரி செய்யப்பட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நேரடி நியமனங்கள் மூலம் நிரப்பிட வேண்டும். நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்.

    அரசு மேல் முறையீடு சென்றதை திரும்ப பெற வேண்டும்.

    14-வது ஊதிய ஒப்பந்தத்தில் உள்ள முரண்பாடுகள் சரி செய்யப்பட வேண்டும், 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வாரிசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யூ.சி தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மண்டலங்களிலும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    அதன்படி கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஜெபமாலைபுரம் தஞ்சாவூர் நகர் கிளை முன்பு நடந்த போராட்டத்துக்கு கும்பகோணம் அரசு போக்குவரத்து ஏ.ஐ.டி.யூ.சி மத்திய சங்கத் தலைவர்சேகர் தலைமை வகித்தார் .

    ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் அப்பாதுரை, தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போராட்டத்தை ஏ.ஐ.டி.யூ.சி மாநில செயலாளர் தில்லைவனம் தொடக்கி வைத்தார். சம்மேளன துணைத்தலைவர் துரை.மதிவாணன் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.

    இதில் ஏ.ஐ.டி.யூ.சி ஓய்வு பெற்றோர் சங்கத் தலைவர் மல்லி தியாகராஜன், பொருளாளர் பாலசுப்பிர மணியன், துணைத்த லைவர்கள்சுப்பிரமணியன், பொறியாளர் ஓய்வு முருகையன், போக்குவரத்து சங்க நிர்வாகிகள் கஸ்தூரி, சுந்தபாண்டியன், தங்கராசு, இருதயராஜ், கலியமூர்த்தி, தமிழ் மன்னன், சண்முகம், சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மத்திய சங்க பொருளாளர் ராஜமன்னன் நன்றி கூறினார். 

    • கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
    • விவசாயிகள் கோரிக்கை மீது பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்து தர வேண்டுமென மனுக்கள் வழங்கினார்,

    கடலூர்

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் இன்று காலை நடைபெற்றது குஞ்சிதபாதம் - என்.எல்.சி. சார்பாக விருத்தாச்சலம்,புவனகிரி,ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளில் உள்ள 30 ஏரிகளை தூர்வாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்   த்துறையூர் காந்தி: -அரசூர் தென்பெண்ணை ஆற்றில் உள்ள மலட்டாறு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் மற்றும் அதே பகுதியில் உள்ள வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் வீராணம் ஏரி விவசாயிகள் சங்கத் தலைவர் பாலு: - மத்திய கனிம வள நிறுவனம் சார்பில் வீராணம் ஏரியை சுற்றியும் 2017 முதல் ஆய்வு செய்து வருகிறார்கள். அப்பகுதி கிராம மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையில் 2020 பாதுகாத்த வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த ஆய்வு தொடரப்படுவதால் இந்த ஆய்வை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த நிலையில் என்.எல்.சி.க்கு வீடு , நிலம் கொடுத்த பாதிக்கப்பட்டோர் கூட்டமைப்பு சேர்ந்தவர்கள் திடீரென்று கூட்டத்தில் திரண்டு மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது- 2000 ஆம் ஆண்டு முதல் நிலம் வீடு எடுத்த அனைவருக்கும் நிரந்தர வேலை கொடுக்க வேண்டும். வேலை வாய்ப்புக்கு பதில் ரு 1, 09, 500 கொடுத்ததை ஏற்க முடியாது. அத்தொகையை வாங்கிய அனைவருக்கும் நிரந்தரவேலை கொடுக்க வேண்டும்.வேலை வேண்டாம் என்பவருகளுக்கு இன்றைய வாழ்வாதார தொகை கொடுக்க வேண்டும்.  2000-ம் ஆண்டு முதல் நிலம் கொடுத்த அனைவருக்கும் 01.01.2014 முதல் கொடுக்க கூடிய இழப்பீடுத் தொகையை வழங்க வேண்டும். நிலத்தில் இருந்த ஆழ்துளை கிணற்றுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அதில் உள்ள மின் இணைப்பை என்எல்சி செலவில் மாற்றம் செய்து கொடுக்க வேண்டும் தன்னிச்சையாக செயல்படாமல் விவசாயிகள் கோரிக்கை மீது பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்து தர வேண்டும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் வழங்கினர். இதனை தொடர்ந்து விவசாய குறை கேட்பு கூட்டம் நடந்தது.

    • பி.எஸ்.ஆர். கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தது.
    • தாளாளர் ஆர்.சோலைசாமி, அட்வான்டேஜ் மேலாளர் கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    சிவகாசி

    அமெரிக்காவின் பன்னாட்டு ஐ.டி. நிறுவ னமான ரெட்ஹாட் நிறுவனம் இந்தியாவில் ரெட்ஹாட் லினகஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் திறமை சாலியான மாணவர்களை உருவாக்குவதற்கான திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

    அதன்படி சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூ ரியின் அசோசி யேஷன் பார் கம்ப்யூட்டிங் மெஷினரி அமைப்பின் மூலமாக ரெட்ஹாட் நிறுவ னத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் தாளாளர் ஆர்.சோலைசாமி சென்னை, அட்வான்டேஜ் மேலாளர் சுகுமார் ஆகி யோர் கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் தென் தமிழகத்தை சேர்ந்த அனைத்து பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் ரெட்ஹாட் சர்வதேச சான்றிதழ் பெறுவதற்குரிய மையமாக பி.எஸ்.ஆர். கல்லூரி திகழும் என்பது குறிப்பிடத்தக்து.

    இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் இயக்குநர் விக்னேஷ்வரி அருண் குமார், கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார், கல்லூரியின் டீன் மாரிச்சாமி, கணிப்பொறியியல் துறைத்தலைவர் ராம திலகம், பேராசிரியர் பால சுப்பிரமணியன், பயிற்சியாளர்கள் மகேஷ்வரன், வசந்தகுமார் (அட்வான் டேஜ் புரோ) மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • 29.5 சதவீதம் கூலி உயர்வு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் பித்தளை, செம்பு, வார்ப்பு பாத்திரங்கள் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து பின்னர் உற்பத்தியாளர்களுடன் பேசி முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (சமர–ம்) செந்தில்குமரன் முன்னிலையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    பாத்திர வியாபாரிகள் சங்கம் சார்பில் தலைவர் மனோகரன், செயலாளர் முத்தையா, பொருளாளர் குமார் உள்ளிட்டவர்களும், தொழிற்சங்கம் சார்பில் கண்ணபிரான், தேவராஜ் (ஏ.டி.பி.), குப்புசாமி, குருணாமூர்த்தி (சி.ஐ.டி.யு.), வேலுச்சாமி, ரத்தினசாமி (எல்.பி.எப்.), செல்வராஜ், நாகராஜ் (ஏ.ஐ.டி.யு.சி.), திருஞானம், அப்புக்குட்டி (எச்.எம்.எஸ்.), பரமேஸ்வரன், அசோக் (ஐ.என்.டி.யு.சி.), சீனிவாசன், லட்சுமிநாராயணன் (பி.எம்.எஸ்.), அர்ஜூனன், ஆறுமுகசாமி (காமாட்சியம்மன் சங்கம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இருதரப்பினரின் கருத்துக்களையும் கேட்கப்பட்டது. தொழில் அமைதி ஏற்படுத்தும் வகையில் இருதரப்பினர் ஏற்றுக்கொண்டபடி ஒப்பந்தமானது. அதன்படி பித்தளை, செம்பு, வார்ப்பு அயிட்டங்கள் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் கூலியுடன் 22.5 சதவீதம் கூலி உயர்வு வழங்கப்பட வேண்டும். பித்தளை ஈயப்பூச்சு அயிட்டமான டேசாவுக்கு 29.5 சதவீதம் கூலி உயர்வு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இதை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனர். இந்த கூலி உயர்வு 1-1-2023 முதல் 3 ஆண்டுகளுக்கு அதாவது 31-12-2026 வரை அமலில் இருக்கும் என்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இதுபோல் எவர்சில்வர் பாத்திர உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்காக கூலி உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. திருப்பூர் வட்டார முழு கூலி பட்டறைதாரர்கள் சங்கம் தரப்பில் தலைவர் துரைசாமி, துணை தலைவர்கள் குமாரசாமி, மதிவாணன், செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். தொழிற்சங்கம் தரப்பில் வேலுச்சாமி (எல்.பி.எப்.), ரங்கராஜ் (சி.ஐ.டி.யு.), தேவராஜ் (ஏ.டி.பி.), நாகராஜ் (ஏ.ஐ.டி.யு.சி.), அப்புக்குட்டி (எச்.எம்.எஸ்.), சீனிவாசன் (பி.எம்.எஸ்.), அசோக் (ஐ.என்.டி.யு.சி.), அர்ஜூணன் (காமாட்சியம்மன் சங்கம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

    எவர்சில்வர் பாத்திர தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு தற்போது 2020-ம் ஆண்டு முதல் வழங்கப்படும் கூலியுடன் சேர்த்து 16 சதவீத கூலி உயர்வு வழங்க வேண்டும். இந்த கூலி உயர்வு 1-1-2023 முதல் வருகிற 31-12-2026 வரை அமலில் இருக்கும் என்று ஏற்கனவே ஒப்பந்தம் கையெழுத்தானது.

    • கரூர் வள்ளுவர் அறிவியல், மேலாண்மை கல்லூரியல் புரிந்துணர்வு ஒப்பந்த விழா நடைபெற்றது
    • மும்பை நிறுவனத்துடன் ஒப்பந்தம்

    கரூர்,

    கரூர் வள்ளுவர் கல்லூரியில் கடந்த 12 வருடங்களாக பேங்கிங் மற்றும் பைனான்ஸ் டிப்ளோமா படிப்புக்கு சிறந்த பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த டிப்ளோமா படிப்பு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் அண்ட் ஸ்பைனாட் மும்பை மூலமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் பெற்று நடத்தபடுகிறது. இதுவரை இக்கல்லூரியில் பயின்ற நூற்றுக்கணக்கான மாணவர்களை இந்த படிப்பில் தேர்ச்சிபெற செய்து வங்கி பணியையும் பெற்றுத் தந்துள்ளது.இந்த மண்டலத்தில் வேறு எந்த கல்லூரியிலும் இந்த படிப்பு வழங்கபடுவதில்லை. எனவே இந்த படிப்புக்காகவே ஏராளமான மாணவர்கள் இக்கல்லூரியில் சேர்ந்து வருகின்றனர். மேற்கண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பிக்கும் நிகழ்வு கல்லூரியின் வள்ளலார் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் முனைவர் இருளப்பன் வரவேற்புரை நிகழ்த்தினார். உதவி செயலர் ராகவி தலைமை உரையாற்றினார்.கரூர் வைஸ்யா வங்கியின் தகவல் தொழில்நுட்பத்துறை பொதுமேலாளர் சேகர் வாழ்த்துரை வழங்கினார். இதில் மும்பை இந்தியன் இன்ஸ்டிலைட் ஆப் பேங்கிங் அண்டு பைனான்ஸ் நிறுவன தலைமை செயல் அலுவலர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு சிறப்புரையாற்றினார். பேங்கிங் அண்டு பைனான்ஸ் டிப்ளோமா படிப்புக்கு கல்லூரி சிறந்த பயிற்சி அளித்து நல்ல முறையில் பணியாற்றி வருவதாக பாராட்டி பேசினார்.விழாவில் கல்லூரி தலைவர் செங்குட்டுவன், செயலர் ஹேமலதா செங்குட்டுவன் மற்றும் திரளான ஆசிரியர்கள் வங்கி அதிகாரிகள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த டிப்ளோமா படிப்பில் புதிதாக சேர பல மாணவர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர்.

    • பிரதமர் மோடியும், நேபாள பிரதமர் பிரசண்டாவும் நேற்று சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு ஏற்ற வகையில் ஒப்பந்தம்.

    நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசண்டா, அரசுமுறை பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் 4 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இவருடன் உயர்மட்டக் குழுவினரும் வந்துள்ளனர்.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள ஐதராபாத் பவனில் பிரதமர் மோடியும், நேபாள பிரதமர் பிரசண்டாவும் நேற்று சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பேச்சுவார்த்தையை தொடர்ந்து, வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு ஏற்ற வகையில் இருநாடுகளுக்கிடையே 7 ஒப்பந்தங்களில் கையெழுத்தாகின.

    இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, " நாங்கள் இரு தரப்பு உறவை இமாலய உயரத்துக்கு எடுத்துச்செல்வதற்கு தொடர்ந்து பாடுபடுவோம். இதே உணர்வுடன் நாங்கள், அது எல்லைப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, பிற பிரச்சினைகளாக இருந்தாலும் சரி எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்போம்.

    கலாசார, ஆன்மிக உறவுகளை மேலும் பலப்படுத்தும் விதத்தில், பிரதமர் பிரசண்டாவும் நானும் ராமாயண சுற்று தொடர்பான திட்டங்களை விரைவுபடுத்த முடிவு செய்துள்ளோம்" என்றார்.

    • அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பிரிடேட்டர் டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் பலஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது.
    • நவீன டிரோன்களை வாங்க இந்தியா முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நட்பு நாடாக இந்தியா இருந்து வருகிறது. இரு நாடுகள் இடையே பல்வேறு துறைகளில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அமெரிக்காவிடம் இருந்து நவீன டிரோன்களை (ஆளில்லா விமானம்) வாங்குவது தொடர்பாக இந்தியா இன்று முடிவு செய்ய உள்ளது.

    அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பிரிடேட்டர் டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் பலஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது. ஆனால் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இதற்கிடையே அமெரிக்காவின் பிரிடேட்டர் டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இன்று முடிவு செய்ய உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

    இன்று நடைபெறும் கூட்டத்தில் ஒப்பந்தம் குறித்து இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகிற 21-ந் தேதி அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக செல்வதற்கு முன்பாக பாதுகாப்பு அமைச்சக கூட்டம் நடைபெறுகிறது.

    பிரதமர் மோடியின் அமெரிக்க வருகைக்கு முன்பாக இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசை அமெரிக்க அதிபர் ஜோபைடன் நிர்வாகம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகின.

    அமெரிக்க வெளியுறவுத் துறை, பென்டகன் மற்றும் வெள்ளை மாளிகை ஆகியவை இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள இந்தியாவிடம் கேட்டு கொண்டன. இதையடுத்து அமெரிக்க நவீன டிரோன்களை வாங்க இந்தியா முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த டிரோன்கள் அதிக உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது. ஏவுகனைகளை ஏந்தி சென்று இலக்குகளை அதிக துல்லியத்துடன் தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா தற்போது ஒரு அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து டிரோன்களை குத்தகைக்கு எடுத்து இயக்கி வருகிறது. அந்த டிரோன்கள் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் கண்காணிக்க கடற்படைக்கு உதவுகின்றன.

    • தமிழக அரசு 6 மாதங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தம் மேற்கொண்டு நிதி வழங்குகிறது.
    • இ-சேவை மையங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறது.

    சென்னை:

    அரசு அலுவலகங்களை, மாநில தரவு மையத்துடன் இணைப்பதற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளை டி.சி.எஸ் நிறுவனம் செய்து கொடுத்து வருகிறது. இ.சேவை மையங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறது.

    இதற்காக தமிழக அரசு 6 மாதங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தம் மேற்கொண்டு நிதி வழங்குகிறது.

    இப்போது இதன் ஒப்பந்தம் முடிவடையும் நிலையில் டி.சி.எஸ்.நிறு வனத்துக்கு மேலும் 6 மாத காலத்துக்கு ஒப்பந்தத்தை நீட்டித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது. இதற்காக டி.சி.எஸ் நிறுவனத்துக்கு அரசு ரூ.12.56 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

    ×