என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எதிர்ப்பு"

    • கறம்பக்குடியில் முருகன் கோவிலை இடிப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்
    • தகவல் அறிந்த வருவாய் துறையினர் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் வருகை தந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் முருகன் கோவில், அனுமார் கோவில் மற்றும் ஆதிபராசக்தி வழிபாடு மன்றம் ஆகியவை உள்ளது. இந்த கோவில்கள் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் உள்ளது என்றும் இது போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக எனவும் மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கோவில்களை அகற்றும் படி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட்டனர்.

    அதன்படி நெடுஞ்சாலைத் துறையினர் பலமுறை வந்து கோவிலை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். பொது மக்களின் கடும் எதிர்ப்பால் கோவில் இடிப்பது பலமுறை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் கோவிலை இடித்து அகற்றுவதற்கு முற்பட்டனர். பாதுகாப்பு பணிக்காக ஆலங்குடி துணை கண்காணிப்பாளர் தீபக் ரஜினி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். தகவல் அறிந்த கறம்பக்குடி சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணியினர் திரளாக கூடி கோவில் இடிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் நேற்று சுப முகூர்த்த தினம் என்பதால் ஏராளமான திருமணங்கள் முருகன் கோவிலில் நடைபெற்றது. திருமணத்துக்கு வருகை தந்த அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. தகவல் அறிந்த வருவாய் துறையினர் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் வருகை தந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு கோவிலை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.


    • பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • மயானத்திற்கு செல்லும் பாதைக்காக தனியார் நிலத்தை கையகப்படுத்த கூடாது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் மானியதஅள்ளி அஞ்சல் ஜருகு கிராமத்தைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில், ஜருகு கிராமம் அம்பேத்கர் காலனியில் 300- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    எங்கள் காலனியில் யாராவது இறந்தால் அவர்களின் சடலங்களை மயானத்திற்கு கொண்டு செல்ல ஒரு குறிப்பிட்ட பாதையை கடந்த நான்கு, ஐந்து தலைமுறைகளாக பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தற்போது ஒரு தனியாருக்கு சொந்தமான நிலத்தை மயானத்திற்கு செல்லும் பாதையாக மாற்ற சில அதிகாரிகள் முயற்சிக்கிறார்கள். இவ்வாறு அதிகாரிகள் புறம்போக்கு நிலமாக மாற்ற முயற்சிக்கும் பாதையில் ஒரு கிருஸ்துவ பேராலயம் கட்டி வழிபாடு செய்து வருகிறார்கள். எனவே மயானத்திற்கு செல்லும் பாதைக்காக தனியார் நிலத்தை கையகப்படுத்த கூடாது. இந்த முயற்சியை அரசு கைவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    தருமபுரி வெண்ணாம்பட்டி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த கோரிக்கை மனுவில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சுமார் 3000 வீடுகள் உள்ளது. இதில் நெடுஞ்சாலைத்துறை மூலம் 60 அடி கொண்ட தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் சாலையின் இருபுறமும் வீடுகள் மற்றும் கடை உரிமையாளர்கள் அத்துமீறி ஆக்கிரமித்துள்ளனர். இதனால் தற்சமயம் 30 அடி தார் சாலை மட்டுமே உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இந்த சாலையில் செல்லும் பள்ளி குழந்தைகளின் வாகனங்கள் மற்றும் பொதுமக்களும் சென்று வர மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. இந்த சாலையில் இருக்கும் பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணியும் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    எனவே எங்களது பகுதியில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி 60 அடி சாலையை, பொதுமக்கள் இடையூறின்றி பயன்படுத்துவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    • நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை இடத்தில் கழிப்பறை கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • ஊராட்சி ஒன்றிய நடுநிலையில் பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலையில் பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    12-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வரும் இப்பள்ளியில் வகுப்பறையில் போதிய இடவசதி இல்லாமல் மாணவர்கள் நெருக்கடியாக அமர்ந்து படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பள்ளியின் சமையல் அறை அருகே சேதமான ஓட்டு மேற்கூரை கட்டிடத்தில் செயல்பட்டு வந்த 6 மற்றும் 7ம் வகுப்பறை களை இடித்து அப்புறபடுத்தி காலி இடமாக இருந்து வந்த நிலையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் யூனியன் பொறியாளர் மேற்பார்வையில் பள்ளி விடுமுறை நாளில் கழிப்பறை கட்ட குழி தோண்டி உள்ளனர்

    இதற்கு பெற்றோர்கள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து மேலாண்மை குழு தலைவர் கலா கூறுகையில், இப்பள்ளி யில் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வரும் வேளையில் ஓட்டு கட்டிடத்தில் செயல்பட்டு வந்த 6 மற்றும் 7-ம் வகுப்பு கட்டிடம் அனுமதி பெற்று இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. வகுப்பறை பற்றாக்குறை உள்ளது.

    இதனால் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை மற்ற வகுப்பறை கட்டிடத்தில் அமர வைத்து பாடம் நடந்து வரும்நிலையில் சமையல் அறை அருகிலே விடுமுறை நாளில் கழிப்பிடம் கட்ட யூனியன் அதிகாரிகள் குழி தோண்டி உள்ளனர். காலியான பள்ளி இடத்தில் கான்கிரீட் கட்டிட வகுப்பறை கட்டி மாணவர்களில் இடநெருக்கடியை போக்க மாவட்ட நிர்வாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படக்கூடிய இச்சாலையில் மூடுவது முறையல்ல
    • இங்கு கேட் அமைக்கக்கூடாது என்று பொதுமக்கள் தரப்பில் கூறியுள்ளனர்.

    கன்னியாகுமரி:

    ஆறு காணி பகுதியில் இருந்து சூரக்காணி கேர ளாவையொட்டி இருக்கக் கூடிய பகுதிகளுக்கு செல் லக்கூடிய சாலையின் குறுக்கே சோதனை சாவடி உள்ளது. தற்போது வனத்துறையினர் திடீரென்று கேட் அமைத்து மூடுவதற்காக கேட்டுடன் வந்து சாலையை மூடுவ தற்கான முயற்சியில் ஈடுபட்டனர். இதனை அறிந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

    இப்பகுதியில் கேட்டு அமைத்து தடைசெய்தால் யாரும் வனத்துறையின் அனுமதி இல்லாமல் சாலை யை கடக்க முடியாது. ஒவ்வொரு முறையும் சாலையை கடக்கும் பொழுதும் கையெழுத்து போட்ட பின்பு தான் அந்தப் பக்கமும் இந்த பக்கமும் செல்லமுடியும். இரவு நேரங்களில் கேட்டை திறந்து தருவதற்கோ திடீரென்று சாலையை கடப்பதற்கோ பொதுமக்களுக்கு இயலாது. ஆகையால் இங்கு கேட் அமைக்கக்கூடாது என்று பொதுமக்கள் தரப்பில் கூறி யுள்ளனர்.

    இது சம்பந்தமாக நேற்று மாலை சுமார் மாலை 5 மணி அளவில் தொடங்கிய போராட்டம் சுமார் மூன்று மணி நேரம் நீடித்தது. பின்னர் திருவட்டார் இன்ஸ்பெக்டர், கடையால் மூடு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் ஆர்டிஓ மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஆகியோர்களுடன் கலந்துரையாடிய தீர்மா னிக்கப்படும் என்று வாக்குறுதியை அளித்தபின் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

    கடையால்பேரூராட்சி தலைவர் கூறும்போது, கடையால் மூடு பேரூராட்சி ஆனது நிலப்பரப்பில் பெரிய பேரூராட்சி மக்கள் அதிகமாக வசிக்கக்கூடிய பேரூராட்சி எல்லா தரப்பு மக்களும் இப்பகுதியில் வசிக்கின்றனர்.கேரளா பகுதியோடு ஒட்டி இருக்கக்கூடிய பேரூராட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

    அவசர தேவைகள் என் றால் கேரளாவிற்கு அதாவது திருவனந்தபுரம் மாவட் டத்தை அமைந் துள்ள பனச்ச மூடு, வெள்ள றடை, அம்பூரி, ஆனபாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருக்கக் கூடிய பகுதியில் வெகு விரைவாக சென்று வரவும் ஆனப்பாறையில் அமைந்துள்ள கேரளா அரசின் அரசு மருத்துவ மனைக்கு அவசர சிகிச் சைக்காக செல்லவும் இப்பகுதி மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். அதேபோன்று திருவனந்த புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக செல்லக்கூடிய நோயாளி களை இச்சாலைவழியாக தான் கொண்டு செல்ல வேண்டும். எனவே மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக அதிகம் பயன்படக்கூடிய இச்சாலையில் சோதனை சாவடி இருந்தும் மறுபுறம் வனத்துறையினர் கேட்டு போட்டு மூடுவது என்பது முறையல்ல அதை ஒரு போதும் அனுமதிக்க முடி யாது என பேரூராட்சி தலைவர் கூறியுள்ளார்.

    • விளையாட்டு மைதானத்தை வேறு பயன்பாட்டிற்கு தருவதையும் தவிர்க்க வேண்டும்.
    • கலெக்டர் மற்றும் கல்வித்துறை அலுவலர்களிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் புதிய கட்டிடங்கள் கட்டுவதை, வேறு பயன்பாட்டிற்கு மைதானத்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என பள்ளி மேலாண்மைக்குழு வலியுறுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மேலாண்மை குழுவினர் கூறும்போது, இப்பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானம், 400 மீட்டர் ஓடுகளத்துடன் இருந்தது.

    இங்கு கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, கோ-கோ, ஹாகி உள்ளிட்ட அனைத்து விளையாட்டுக்களுக்கும் பயன்படுத்தி மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்திய விளையாட்டு மைதானம் ஆகும்.

    இந்த விளையாட்டு மைதானத்தில் அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவனை கட்டிடங்கள், மாணவியர் விடுதிகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டு, கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளது. இதனால் 400 மீட்டர் ஓடுதளம் குறுகியது. இதே போல் தடகளப்போட்டிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்த முடியாத அளவிற்கு சுருங்கிவிட்டது.

    இதனால் மாணவர்களின் விளையாட்டுத்திறன் கேள்விக்குறியாக உள்ளது. இதே போல், காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்ட நிலையில், தற்போது அதுவும் குனறந்துவிட்டது.

    எனவே, இனிவரும் காலங்களில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் வேறு புதிய கட்டிடங்கள் கட்ட அனுமதியளிக்க கூடாது. விளையாட்டு மைதானத்தை வேறு பயன்பாட்டிற்கு தருவதையும் தவிர்க்க வேண்டும்.

    மேலும், மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் மைதானத்தை சீரமைத்து தர வேண்டும். இது தொடர்பாக கலெக்டர் மற்றும் கல்வித்துறை அலுவலர்களிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

    • 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று கூடி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • அதிகாரிகள் கிராம மக்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி சமரச தீர்வு ஏற்பட்ட பின் நிலஅளவீடு செய்யும் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தினர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சிக்கார்தனஅள்ளி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீகரக செல்லியம்மன் கோவிலுக்கு சொந்தமான 32 ஏக்கர் நிலம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இந்த கோவிலுக்கு போதிய வருவாய் இல்லாததால் கோவில் சிதிலமடைந்தும் பராமரிப்பு இன்றி காணப்பட்டு வருகிறது.

    கோவில் நிலத்தில் இருந்து வரும் வருமானத்தை கொண்டு கோவில் பூஜை, திருவிழா மற்றும் பராமரிப்பு பணிகளை செய்ய முன்னோர்கள் கோவில் நிலத்தை ஒதுக்கி தந்தனர் , ஆனால் கோவில் நிலத்தை பயன்படுத்தி வருபவர்கள் கோவிலுக்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தாமல் சொந்த பயன்பாட்டிற்கே பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கோவிலுக்கு சொந்தமாக 32 ஏக்கர் நிலத்தை பொது ஏலம் விட இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஏலம் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று 8 ஏக்கர் நிலத்தை மட்டும் நிலஅளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற சிக்கார்தானஅள்ளி கிராமத்திற்க்கு இந்து அறநிலையத் துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினருடன் வந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சி யடைந்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று கூடி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    நிலஅளவீடு செய்வதாக இருந்தால் 32 ஏக்கர் மொத்த நிலத்தையும் அளவீடு செய்து முறையாக பொது ஏலம் விட வேண்டும், ஒரு பகுதி மட்டும் அளவீடு செய்ய கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் கூச்சல் குழப்பம் நிலவியது.

    இதையடுத்து பாலக்கோடு காவல் ஆய்வாளர் தவமணி மற்றும் அதிகாரிகள் கிராம மக்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி சமரச தீர்வு ஏற்பட்ட பின் நிலஅளவீடு செய்யும் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தினர்.

    இதனை ஏற்று அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரும்பி சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இருபுறமும் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியும், சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • நேற்று முன்தினம் நள்ளிரவு சாலை ஓரத்தில் இருந்த பயணியர் நிழற்குடையை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் பெரிய கங்கணாங்குப்பத்திலிருந்து மஞ்சகுப்பம் மணிகூண்டு வரை தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றது. இருபுறமும் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியும், சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சாலை விரிவாக்க பணிக்காக 43 வீடுகளை இடிப்பதற்கு தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் ஆல்பேட்டை பாபு தலைமையில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து எங்களுக்கு மாற்ற இடம் வழங்கினால், நாங்கள் வீட்டை காலி செய்கிறோம் என திட்டவட்டமாக தெரிவித்தனர். தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிசை மாற்று வாரியம் மூலமாக வீடுகள் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான முழுமையான சான்று பொதுமக்களிடம் வழங்கவில்லை.

    இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் நள்ளிரவு சாலை ஓரத்தில் இருந்த பயணியர் நிழற்குடையை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 43 வீடுகளை இடிக்க பொக்லைன் எந்திரத்துடன் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து வந்தனர். அப்போது அங்கு திரண்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் எந்திரத்தை சிறை பிடித்து வீடுகளை இடிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் எங்கள் வீடுகளை இடிக்க வேண்டுமானால் எங்களுக்கு மாற்ற இடம் வழங்கியதற்கான சான்று வழங்கிய பிறகு இடியுங்கள். அதுவரை வீடுகளை இடிக்க அனுமதிக்க மாட்டோம். எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விரைவில் முதலமைச்சரை நேரில் சந்தித்து எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்க உள்ளோம் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து பேசி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • இங்கு ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யாமல் பணிகள் மேற்கொள்வதாலும் சாலைகள் அகலப்படுத்தாமல் இருப்பதாலும், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு .வருகின்றனர்.
    • பொதுமக்கள் இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்

    கடலூர்:

    கடலூர் கோண்டூரில்இருந்து மடப்பட்டு வரை 230 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்க பணி நடை பெற்று வருகிறது. இந்த நிலையில் நெல்லிக்குப்பத்தில் விநாயகர் கோவிலில் இருந்து கீழ்பட்டாம்பாக்கம் வரை நெடுஞ்சாலைத்துறையினர் ஒரு சிலருக்கு ஆதரவாகவும், லஞ்சம் பெற்றுக் கொண்டும் சரியான முறையில் ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்யாமல் சாலையின் இரு புறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்தினார்கள்.  இதனை தொடர்ந்து கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, கடந்த 2019 -ம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில் அளவீடு செய்து அதற்கான குறியீடுகள் வரைந்தனர் . ஆனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஒரு சிலருக்கு ஆதரவாக தற்போது சரியான முறையில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யாமல் பணிகள் மேற்கொள்வதால் சாலைகள் அகலப்படுத்தாமல் வழக்கமாக இருப்பது போல் சாலைகள் இருந்தால் வாகனங்கள் எப்படி செல்வது? இதன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிப்படைந்து வருவதாக தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, மீண்டும் 4 சர்வேயர்கள் அனுப்பி புதிதாக அளவீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதன்படி இன்று காலை 4 சர்வேயர்கள் நெல்லிக்குப்பத்திற்கு வந்தனர். அப்போது நெல்லிக்குப்பம் நகர சர்வேயர் கொண்டு மீண்டும் அளவீடு செய்யப் போவதாக தெரிவித்தனர் . அப்போது முன்னாள் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ராமலிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் , நகர அ.தி.மு.க. செயலாளர் காசிநாதன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திலகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் திருமாறன் த.வா.காநகர செயலாளர் கார்த்திக், சமூக ஆர்வலர் குமரவேல், பாரதீய ஜனதா வேலாயுதம், தி.க. இளங்கோ , கவுன்சிலர் புனிதவதி மற்றும் பொதுமக்கள் இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எங்கள் கோரிக்கை தொடர்பாக உங்கள் உயர் அதிகாரியிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அங்கு வந்திருந்த 4 சர்வேயர்கள் தற்போது அளவீடு செய்கிறோம். அதன்பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து உயர் அதிகாரியிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்வோம் என தெரிவித்து அளவீடு செய்ய தொடங்கியுள்ளனர். இந்த சம்பவத்தால் நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • வியாபாரிகள் வாக்குவாதம் - போலீஸ் குவிப்பு
    • இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கன்னியாகுமரி:

    திங்கள் நகர் பேரூராட்சிக்குட்பட்ட பஸ் நிலையத்தில் கடைகள் முன்பு ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

    அதனைத் தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வியா பாரிகளுக்கு நோட்டீஸ் கொடுக்க பட்டதாகவும், வியாபாரிகள் யாரும் ஆக்கிரமிப்பு களை அகற்ற முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

    இதனை அடுத்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்ற முடிவு செய்யப் பட்டது. நேற்று மதியம் பேரூராட்சி செயல் அலுவ லர் அம்புஜம் தலைமையில் இளநிலை பொறியாளர் லிங்கேஸ்வரன் மற்றும் பணியாளர்கள் கடைகள் முன்பு உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றினர்.

    இதற்கு சில வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து தங்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்பட வில்லை என்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையொட்டி இரணியல் போலீஸ் நிலையத்தில் தகவல் அளிக்கபட்டது.

    இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி (பொறுப்பு) சப் இன்ஸ்பெக் டர் முத்துகிருஷ்ணன், ஏட்டு ஸ்டாலின் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்ட னர். இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதனால் இப்பகுதி யின் பரபரப்பு ஏற்பட்டது. அப்புறப்படுத்த பட்ட பொருட்கள் பேரூராட்சி அலுவலகம் கொண்டு செல்லபட்டது.

    • மனித நேய மக்கள் கட்சி சார்பில் போராட்டம்
    • 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்பு

    கறம்பக்குடி.

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் முகமது சுலைமான் தலைமையில் சமீபத்தில் கேரளாவில் வெளியாகியுள்ள தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து சுமார் 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் எதிர்ப்பை மீறி இந்த படம் திரையரங்குகளில் வெளியிட்டால் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீரழிந்து விடும் என்றும், ஆகவே படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஆலங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன் முன்னிலையில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.

    • பள்ளி இடத்தில் ஊராட்சி அலுவலகம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்
    • சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் கோவிந்தபுத்தூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு சொந்தமான இடத்தில் தற்போது ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கு அளவீடு செய்து உள்ளனர். இதனை அறிந்த அந்த கிராம மக்கள், தற்போதுள்ள நடுநிலைப்பள்ளி எதிர்காலத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியாக மாறும்போது, அதற்கு இடம் தேவைப்படும். எனவே அரசு பள்ளிக்கு சொந்தமான இந்த இடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டக்கூடாது என்றும், அதனை வேறு இடத்தில் கட்ட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மனு அளித்துள்ளனர்.இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பள்ளிக்கு சொந்தமான இடத்திலேயே ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கு வேலைகள் நடைபெற்று வருவதை அறிந்த அந்த கிராம மக்கள் நேற்று காலை ஒன்று கூடி கோவிந்தபுத்தூர் கிராமத்தில் முத்துவாஞ்சேரி தா.பழுர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் போலீசார், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன்பேரில், கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு எதிராக ஏகனாபுரம் மக்களின் போராட்டம் இன்று 300-வது நாளை எட்டியது.
    • ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

    புதிய விமான நிலையம் அமைக்க பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள 13 கிராமங்களில் இருந்து சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் குடியிருப்பு பகுதிகளையும் நீர்நிலை பகுதிகளையும் எடுக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.

    இதற்கு ஏகனாபுரம், அக்கமாபுரம், மேலேரி, வளத்தூர், தண்டலம், நாகப்பட்டு, நெல்வாய், மகா தேவி மங்கலம், உள்ளிட்ட 13 கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    புதிய விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் 13 கிராம மக்களும் கிராம சபை கூட்டத்தின்போது பரந்தூர் புதிய விமான நிலையம் வருவதை எதிர்த்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி வருகிறார்கள்.

    இந்நிலையில் பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு எதிராக ஏகனாபுரம் மக்களின் போராட்டம் இன்று 300-வது நாளை எட்டியது.

    இதைத்தொடர்ந்து பரந்தூரை சுற்றி உள்ள நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் 13 கிராமங்களை சேர்ந்த விமானநிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் 300-வது நாள் போராட்டத்தை இன்று காலை திடீரென வயலூர் பகுதியில் உள்ள ஏரியில் இறங்கி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    ×