என் மலர்
நீங்கள் தேடியது "புத்தகம்"
- குத்தகை காலங்கள் தொடர்பான ஆவணங்களை மாநகராட்சி நிர்வாகம் பரிசீலனை.
- 5 ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய தமிழ் நூலகமும், டென்னிஸ் கிளப்பும் இயங்கியன.
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் 1872-ம் ஆண்டு வாசகசாலை மற்றும் நூலகம், நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தொடங்கப்பட்டது.
பின்னர் பழைய பேருந்து நிலையம் அருகே கோட்டை மதில் சுவர் இடிக்கப்பட்டு, அதிலிருந்த செம்புரான் கற்களை கொண்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு 1874-ம் ஆண்டு அப்போதைய மாவட்ட நீதிபதி பர்னர் ஆர்தர் கோக் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது.
இதையடுத்து 1892-ம் ஆண்டு இந்தக் கட்டிடத்துக்கு தஞ்சாவூர் யூனியன் கிளப் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த கிளப்பில் ஹாவ்லேக் என்ற பெயரில் ஆங்கில நூலகமும், பாவேந்தர் பெயரில் 5 ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய தமிழ் நூலகமும், டென்னிஸ் கிளப்பும் இயங்கியன.
1919-ம் ஆண்டு பிப்.12-ம் தேதி தஞ்சாவூருக்கு வருகை தந்த ரவீந்திரநாத் தாகூர், இந்த யூனியன் கிளப்புக்கு வருகை தந்து உரையாற்றியுள்ளார். அதேபோல் அண்ணா, பாரதிதாசன் உள்ளிட்ட தலைவர்களும் வந்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டிடங்களை நேரில் ஆய்வு செய்து, குத்தகை காலங்கள் தொடர்பான ஆவணங்களை மாநகராட்சி நிர்வாகம் பரிசீலனை செய்தது.
இதில் 99 ஆண்டுகள் குத்தகை காலம் முடிவடைந்ததாக கூறி யூனியன் கிளப் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் தண்டாரோ மூலம் அறிவித்து இடங்களை கையகப்படுத்துவதாக நோட்டீஸ் ஒட்டியது.
இதனால் தஞ்சாவூர் மாநகராட்சியை எதிர்த்து மதுரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதன் தீர்ப்பு வந்தது.
அதில் மாநகராட்சிக்கு சாதகமான தீர்ப்பு வெளியிடப்பட்டது.
இதையடுத்து இன்று மதியம் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் யூனியன் கிளப்புக்கு சென்று கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என எழுதப்பட்டது.
இது தொடர்பான அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.
இதுகுறித்து மேயர் சண். ராமநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
தஞ்சை நகரின் மையப் பகுதியில் யூனியன் கிளப் இயங்கி வந்தது.
150 ஆண்டுகால பழமையான கட்டிடம் ஆகும். இங்கு நூலகம் இயங்கி வந்தது.
இந்த இடத்திற்கு பல்வேறு தலைவர்கள் வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் இந்த யூனியன் கிளப் தனியார் வசமானது.
தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் யூனியன் கிளப் கையகப்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து மதுரை நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கின் தீர்ப்பு மாநகராட்சிக்கு சாதகமாக வந்துள்ளது.
தற்போது மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதன் மொத்த பரப்பளவு 35 ஆயிரம் சதுர அடி ஆகும். இவற்றின் மதிப்பு 60 முதல் 75 கோடி வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீட்கப்பட்ட யூனியன் கிளப் கட்டிடத்தில் அடுத்து என்ன செய்யலாம் என ஆணையர், கவுன்சிலர்கள் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.
பொது மக்களிடம் கருத்து கேட்கப்படும். தற்போது கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
- திருக்குறள், பன்னிரு திருமுறை வகுப்புகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது.
- மாணவர்களுக்கு தேவாரம், திருவாசகம் ஓதி தொடங்கி வைத்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் குழந்தைகளை நல்வழிப்படுத்தும் திருக்குறள், பன்னிரு திருமுறை வகுப்புகளுக்கான ஆனந்த குருகுலம் தொடக்க விழா மாடர்ன் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் அமைப்பு செயலாளர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் தீபா ராணி அனைவரையும் வரவேற்றார். ஆன்மீக ஆனந்தம் அமைப்பின் செயலாளர் எடையூர் மணிமாறன் மாணவர்களுக்கு தேவார புத்தகம் வழங்கி தொடங்கி வைத்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக துரை ராயப்பன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதில் பெற்றோர் ஆசிரியர் சங்க துணை தலைவர் விஜயராஜ் வாழ்த்துரை வழங்கினார். ஓதுவார் வடுகநாதன், துணை ஓதுவார் கருணாநிதி மாணவர்களுக்கு தேவாரம், திருவாசகம் ஓதி தொடங்கி வைத்தனர்.
இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாடர்ன் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி தாளாளர் முருகானந்தம் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை சர்வாலய உழவாரப்பணி குழு அமைப்புடன் இணைந்து ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பினர் செய்திருந்தனர்.
- விண்வெளியில் சாதித்த விஞ்ஞானிகளின் வரலாறு, விண்வெளி சாா்ந்த புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
- சந்திர கிரகணம் மற்றும் வானியல் நிகழ்வுகளை பொதுமக்கள் நுண்ணோக்கி மூலம் கண்டு ரசிக்க முடியும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் மேலஉளூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமாா் 921 மாணவா்கள் படித்து வருகின்றனா். இங்கு ரூ. 3.81 லட்சம் மதிப்பில் வானியல் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், அதிக திறன் கொண்ட தொலைநோக்கி, கோள்களின் இயக்கங்களை துல்லியமாக கண்டறிவதற்கான அதிநவீன உபகரணங்கள், நவீன அறிதிறன் தொலைக்காட்சி, வானியல் தொடா்பான சுமாா் 28-க்கும் மேற்பட்ட பொருள்கள், சூரிய மண்டல அமைப்பு, கோள்கள், நட்சத்திரங்கள் குறித்த விவரங்கள், விண்வெளியில் சாதித்த விஞ்ஞானிகளின் வரலாறு, விண்வெளி சாா்ந்த புத்தகங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இந்த வானியல் ஆய்வகத்தை பள்ளி கல்வி துறை அமைச்சா் அன்பில்மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தாா். பின்னர் அவர் தொலைநோக்கி கருவிகளை பார்வையிட்டார்.
இந்த விழாவில், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சிவக்குமாா், மாவட்டக் கல்வி அலுவலா் கோவிந்தராஜ், எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், முன்னாள் எம்.எல்.ஏ.ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி மற்றும் பள்ளி மேலாண் குழுவைச் சோ்ந்தவா்கள், பெற்றோா்-ஆசிரியா் கழக உறுப்பினா்கள், ஊராட்சித் தலைவா், ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.
வானியல் ஆய்வகம் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா் கூறும்போது:
தமிழகத்தில் மேலஉளூா் அரசுப் பள்ளியில்தான் முதல்முறையாக வானியல் ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. 2-வதாக கும்பகோணம் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வகத்தின் மூலம், சூரிய, சந்திர கிரகணம் மற்றும் வானியல் நிகழ்வுகளை மாணவா்கள், பொதுமக்கள் என அனைவரும் நுண்ணோக்கி மூலம் கண்டு ரசிக்க முடியும். மேலும், மாணவா்கள் வானியல் சாா்ந்த புத்தகங்களை படித்து வானியல் அறிவியல் குறித்து தெரிந்து கொள்ள முடியும் என்றாா்.
- புத்தக திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது
- புத்தகத் திருவிழாவை பொதுமக்கள் இலவசமாக பாா்வையிடலாம்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக புத்தகத் திருவிழா மாா்ச் 5-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, முதலாவது நீலகிரி புத்தகத் திருவிழா ஊட்டி பழங்குடியினா் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் வரும் 5-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவை பொதுமக்கள் இலவசமாக பாா்வையிடலாம். நீலகிரி மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் ஒருங்கிணைந்து இந்த புத்தகத் திருவிழாவை நடத்துகிறது.இந்தப் புத்தகத் திருவிழாவில் அமைக்கப்படும் 60-க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல்வேறு தலைப்புகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறுகின்றன. தொல்லியல் அருங்காட்சியகம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பழங்குடியினரின் கலைநிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், ஆளுமைகள் பங்கேற்கும் இலக்கிய நிகழ்வுகள் இத்திருவிழாவில் இடம் பெறவுள்ளன என்றாா்.
- திட்டங்கள் மற்றும் சிறப்பு முயற்சிகளின் பயன்களை கண்காணிக்க புத்தகம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
- மக்கள் பிரதிநிதிகளும், அரசுத் துறைகளும், பெரு நிறுவனங்களும், அரசு சாரா அமைப்புகளும் பயன்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற புத்தகமாகும்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
நீடித்த வளர்ச்சி இலக்குகளின் ஐந்து அடிப்படைக் கொள்கைகளான, மக்கள், வளம், புவிக்கோள், அமைதி மற்றும் கூட்டாண்மை ஆகியவற்றினை கருத்திற் கொண்டு, தமிழ்நாடு அரசால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளை விவரிக்கும் வகையிலும், அரசின் கொள்கை முடிவெடுப்பவர்களுக்கு, திட்டங்கள் மற்றும் சிறப்பு முயற்சிகளின் பயன்களை கண்காணிக்கவும், அதனை மேலும் முன்னேற்றுவதற்கு தேவையான தகவல்களை அளிக்கும் வகையிலும் புத்தகம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இப்புத்தகம், நீடித்த வளர்ச்சி இலக்குகளில் பங்காற்றும் துறைகளின் மாவட்ட மற்றும் வட்டார அளவிலான அலுவலர்களுக்கு இதன் முக்கியத்துவத்தையும், நீடித்த வளர்ச்சி இலக்குகளை கிராம அளவிலும் எய்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை விவரித்தும் நடத்தப்பட்ட தொகுப்பு மாவட்ட கூட்டத்தின் வெளிப்பாடுகளை உள்ளடக்கியது.
இப்புத்தகமானது, நீடித்த வளர்ச்சி இலக்குகளின் கீழ் உள்ள குறிகாட்டிகளின் வழியாக மாநிலத்தின் முன்னேற்றத்தை ஆர்வத்துடன் அறிய விரும்பும் அனைத்து தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ளக்கூ டிய வகையில் அமையப் பெற்ற ஒரு ஆவணமாகும். இந்த தரவுதாள், மாநிலத்தின் செயல்திறனை மேம்படுத்த தேவையான இலக்குகளின் மீது சிறப்பு கவனம் செலுத்திடும் வகையில் கொள்கைகளை வடிவமைக்கப் பயன்படும்.
நீடித்த வளர்ச்சி இலக்குகளை உள்ளுர் மயமாக்கல் என்பதன் பகுதியாக, பல்வேறு குறிகாட்டிகளில் உலகளாவிய இலக்குகளை அடைந்திட முயலும் தமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்வதில், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும், அரசுத் துறைகளும், பெரு நிறுவனங்களும், அரசு சாரா அமைப்புகளும் பயன்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற புத்தகமாகும்.
சர்வதேச மற்றும் தேசிய சிறப்பு தினங்களின் கருப்பொருளையொட்டி, ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு நீடித்த வளர்ச்சி இலக்கு அனுசரிக்கப்பட உள்ளதை விளக்கும் வண்ணம், மாத நாட்காட்டி தயாரிக்கப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் 2030-ம் ஆண்டிற்குள் நீடித்த வளர்ச்சி இலக்குகளை தமிழ்நாடு முழுவதுமாக அடையும் வண்ணம் அரசின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் விதமாக நீடித்த வளர்ச்சி இலக்கின் இலச்சினையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இளைஞர்கள், கூட்டாண்மை நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்குகளில் பணிபுரிய ஆர்வமுள்ள தனிநபர்களுக்கு தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படும் நீடித்த வளர்ச்சி இலக்கு தொடர்பான செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், தகவல்களை பரப்புவதற்கும் உருவாக்கப்பட்ட நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான சமூக ஊடகங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், லிங்க்டின், டுவிட்டர் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநில திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன், தலைமைச் செயலாளர் இறையன்பு, திட்டம் மற்றும் வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் டாக்டர் தாரேஸ் அகமது, திட்டம் மற்றும் வளர்ச்சி துறை சிறப்பு செயலாளர் த.சு. ராஜசேகர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- எண்ணம், செயல் இவற்றில் வேகத்துடனும், விவேகத்துடனும் செயல்படுபவர்களாக இருக்க வேண்டும்.
- நல்ல புத்தகங்களை வாசிக்க பழகி, அதற்கு தகுந்தார் போல் வாழ பழகி கொள்ளவேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் உள்ள யாகப்பா பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வர்த்தக மற்றும் தொழில் சபை தலைவர் மாறவர்மன் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில்,
மாணவர்களின் சிந்தனை திறன் வித்தியாசமாக இருக்க வேண்டும். எண்ணம், செயல் இவற்றில் வேகத்துடனும், விவேகத்துடனும் செயல்படுபவர்களாக சமுதாயத்தில் மிளிர வேண்டும்.
அன்றைய பொறுப்புகளை அன்றே செய்து முடித்து சுறுசுறுப்புடன் திகழ்ந்து வெற்றியாளர்களாக, யாகப்பா பள்ளி மாணவர்கள், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும்.
நல்ல புத்தகங்களை வாசிக்க பழகி, அதற்கு தகுந்தார் போல் வாழ பழகி கொள்ளவேண்டும் என்றார்.
தொடர்ந்து பொதுதேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், ஒவ்வொரு பாடத்திலும் நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் கண்ணகி மாறவர்மன் பரிசளித்து பாரட்டினார்.
பின்னர், பள்ளி மாணவர்கள் ஆண்டறிக்கை வாசித்தனர்.
தொடர்ந்து, கருத்தை கவரும் நடனங்கள், கலைகளை ஊக்கப்படுத்தும் நாட்டுப்புற நடனங்கள், விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரங்க நாடகம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
விழா ஏற்பாடுகளை பள்ளி டிரஸ்டி மேரிஞானம், தாளாளர் எட்வர்ட் ஆரோக்கியராஜ் தலைமையில் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.
- முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்...
- ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற செய்ய முடிவு
பெரம்பலூர்
பெரம்பலுாரில் புத்தக திருவிழாவினை சிறப்பாக நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மாவட்டந்தோறும் புத்தகக திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் 8-வது புத்தக திருவிழா வருகிற 25-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி வரை பெரம்பலூர் நகராட்சி திடலில் நடத்தப்பட உள்ளது. மாவட்ட நிர்வாகமும், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றமும் இணைந்து நடத்தவுள்ள இந்த புத்தகக திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட பதிப்பகத்தாரின் அரங்குகள், 1,000-க்கும் மேற்பட்ட தலைப்புகளிலான 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெறவுள்ளது. மேலும் புத்தக திருவிழாவில் தமிழ்நாட்டின் தலைசிறந்த பேச்சாளர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் பங்குபெற உள்ளார்கள். மேலும், அனைத்து புத்தகங்களும் 10 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. புத்தக திருவிழாவில் ஒவ்வொரு துறையின் சார்பிலும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் பணிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொள்ள வேண்டும், என்றார்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறைக்கு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறை கண்காணிப்பாளர் சின்னமருதுபாண்டியன் செய்திருந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறைக்கு வத்திராயிருப்பு அலையன்ஸ் சங்கங்கள் சார்பில் 650 புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி தலைமை வகித்தார். அலையன்ஸ் சங்க மாவட்ட துணை ஆளுநர் சுப்புராஜ் முன்னிலை வகித்தார்.
விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் வத்திராயிருப்பு வட்டார அலையன்ஸ் சங்கங்களின் சார்பில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டது. சிறைத்துறை டி.ஐ.ஜி.யிடம் மாவட்ட நீதிபதி புத்தகங்களை வழங்கினார்.
பின்னர் சிறையில் வருகைப்பதிவு, உணவு மற்றும் விசாரணை சிறை கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்த கிறிஸ்டோபர் தேவையானவர்களுக்கு சட்ட உதவிகளை வழங்க உத்தரவிட்டார். இந்த விழாவில் தலைமை குற்றவியல் நீதிபதி (பொறுப்பு) செல்வன் ஜேசுராஜா, ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சபரிநாதன், சிறைத்துறை கண்காணிப்பாளர் வசந்த கண்ணன், அரசு வழக்கறிஞர்கள் அன்னக்கொடி, ஜான்சி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில குழு உறுப்பினர் நித்தியானந்தன், எழுத்தாளர் தமிழ்பித்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை சிறை கண்காணிப்பாளர் சின்ன மருதுபாண்டியன் நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறை கண்காணிப்பாளர் சின்னமருதுபாண்டியன் செய்திருந்தார்.
- செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தித்தர வேண்டும்.
- மாணவர்கள் வாழ்வில் முன்னேற சிறந்த புத்தகங்களை படித்து பயன்பெற வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் அழிஞ்சமங்கலம் அரசு ஆதிதிராவிட நலப்பள்ளி துவங்கப்பட்டு நூற்றாண்டு கடந்துள்ளன.
இதை முன்னிட்டு நடை பெற்ற நூற்றாண்டு விழாவில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கலந்து கொண்டு பேசியதாவது:-
குழந்தைகளின் திறமைகளை வெளிக் கொண்டு வருவது என்பது ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உள்ள கடமை, பிள்ளைகளின் கல்வியை மெருகேற்ற செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி தருவது மிக, மிக முக்கியமானது, எனவே மாணவர்கள் வாழ்வில் முன்னேற சிறந்த புத்தகங்களை படித்து பயன்பெற வேண்டும் எனவும் அவர் அறிவுரை கூறினார்.
பின்னர் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பாராட்டினார்.
நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர்கள், உதவியாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- சிறந்த சொற்பொழிவாளர்களை கொண்டு மாபெரும் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
- உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம் வழங்கப்பட்டு உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரியில் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.
அப்போது அவர் பேசியதாவது:-
உலகின் பலவேறு பகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடுகளில் தமிழர் பண்பாடு மிகவும் தொன்மையானது.
நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு, குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவதென்பது ஆரோக்கியமான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பின் ஒரு முக்கியமான பகுதியாகும்.
எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழர் மரபும் -நாகரிகமும், தமிழ்நாட்டில் சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம், திசைதோறும் திராவிடம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தோற்றமும் தொழில் முனைவுக்கான முன்னெடுப்புகள், வளர்ச்சியும், கணினித் தமிழ் வளரச்சியும் தமிழ்நாட்டில் சுற்றுலா வாய்ப்புகள், நூற்றாண்டு கண்ட ஊடகங்களின் சவால்களும், கல்விப் புரட்சி மற்றும் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தும் முறைகள் ஆகிய தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
ஆகவே நீங்கள் அனைவரும் தமிழின் பெருமைகள் கேட்டறிந்தும், மேலும், இந்நிகழ்ச்சியில் உங்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம் வழங்கப்பட்டு உள்ளது.
இதனை மாணவர்கள் தவறாது படித்து பயன்பெறு வதோடு மட்டுமல்லாமல் சக மாணவர்கள் மற்றும் நண்பர்களிடமும் கொண்டு சேர்த்து விழிப்புணர்வுள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கவிஞர் யுகபாரதி, கரு .பழனியப்பன், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இலக்கியா, கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரி முதல்வர் யுஜின் அமலா, முனைவர் ஹேமலதா, முத்துக்குமார், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- மணக்கோலத்தில் நூலகம் வந்தனர்
- 3 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் வழங்கினர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே த.சோழன்குறிச்சி கிராமத்தில் நேற்று திருமணம் செய்துகொண்ட மணமக்கள் திருநாவுக்கரசு-பவளக்கொடி தம்பதியினர் மணக் கோலத்தில் நூலகத்திற்கு சென்றனர். அரசு தேர்வுக்கு பயிலும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் ரூ.3 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை த.சோழன்குறிச்சி நூலகத்திற்கு வழங்கினர்.
- நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத்துணைத்தலைவா் ஆதிமூலம் தலைமை தாங்கினார்.
- புதூர் பேரூராட்சி மன்றத்தலைவா் ரவிசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
செங்கோட்டை:
செங்கோட்டை அரசு பொதுநூலக கட்டிடத்தில் தமிழ்நாடு அரசின் நூலக நண்பர்கள் திட்ட தொடக்க விழா நடந்தது. வாசகர் வட்டத்துணைத்தலைவா் ஆதிமூலம் தலைமை தாங்கி னார். இணைச்செயலாளா் செண்பகக்குற்றாலம், போட்டித் தேர்வு பொறுப்பாளா் விழுதுகள், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனா். பொரு ளாளா் தண்டமிழ்தாசன்சுதாகர் வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினராக புதூர் பேரூராட்சி மன்றத்தலைவா் ரவிசங்கர் கலந்து கொண்டு நூலக நண்பர்கள் திட்டத்தை தொடங்கி வைத்து தேர்வு செய்யப்பட்ட 22 தன்னார்வ லா்களுக்கு அடையாள அட்டை, புத்தகபைகள், புத்தகங்களை வழங்கி பேசினார். பின்னா் ரூ.5ஆயிரம் செலுத்தி 247-வது புரவலராக இணைத்து கொண்டார். நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி சுடலை, குற்றாலம் ரோட்டரி கிளப் தலைவா் திருவிலஞ்சி குமரன், எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க தலைவா் ஜவஹர்லால்நேரு, எஸ்.எஸ்.ஏ.திட்ட மேற்பார்வையாளா் சுப்புலெட்சுமி, ஓவிய ஆசிரியா் முருகையா மற்றும் சமூக ஆர்வலா்கள் மணிகண்டன், கவிஞா்தங்கராஜ் பழனிச்சாமி, இளங்குமரனார் உள்பட பலா் கலந்து கொண்டனா். நல்நுாலகர் ராமசாமி நன்றி கூறினார்.