search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமித்ஷா"

    நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கனவுகள், எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பளித்து பிரதமர் நம்பிக்கையை விதைத்துள்ளார் என்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் பிரதமர் மோடி தமது நமோ செயலி மற்றும் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

    கடந்த எட்டு ஆண்டுகள் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய பயன்பட்டது.  சேவை, நல்லாட்சி மற்றும் ஏழைகளின் நலன் என்ற எங்களது குறிக்கோளை பூர்த்தி செய்ய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். 

    நமோ செயலியில் உள்ள முன்னேற்றப்பயணம் பற்றிய பிரிவு, உங்களை இந்த வளர்ச்சிப் பயணத்திற்கு அழைத்து செல்லும். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இதனிடையே, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

    பிரதமர் நரேந்திர மோடி, தனது அதிகாரத்தை சேவை செய்யும் கருவியாக நினைத்து, ஏழைகள், விவசாயிகள், பிற்படுத்தப்பட்டோர், மற்றும் பெண்களுக்கு பல்வேறு உரிமைகளை வழங்கியுள்ளார். 

    இது ஜனநாயகத்தின் மீதான அவர்களுடைய நம்பிக்கையை  வலுப்படுத்தி
    உள்ளது. அவர்கள் நாட்டின் வளர்ச்சிப் பாதையின் பங்கேற்பாளர்களாக மாறியுள்ளனர். பல வரலாற்று சாதனைகள் நிறைந்த எட்டு ஆண்டுகளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    கடந்த 8 ஆண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கனவுகள், எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பளித்து நம்பிக்கையை விதைத்துள்ளார்.

    நரேந்திர மோடி தனது திறமைான தலைமைத்துவத்தாலும், வலிமையாலும் நாட்டை பாதுகாப்பாக மாற்றியது மட்டுமின்றி, பல்வேறு முடிவுகளை எடுத்து நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

    இவ்வாறு அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.


    காஷ்மீர் பண்டிட் கொலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாளை அவசர ஆலோசனை நடத்துகிறார்.
    டெல்லி:

    ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்தவ ராஜ்னி பாலா என்ற ஆசிரியை  2 நாட்களுக்கு முன்பு பள்ளியில் வைத்து பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    காஷ்மீர் பண்டிட் இனத்தை சேர்ந்த அந்த ஆசிரியை சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக சாடி உள்ளார்.

    காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரும், பொதுமக்களும் உயிரிழக்கின்றனர், இதுவே உண்மை, இது (காஷ்மீர் பைல்ஸ்) படம் அல்ல என்று தமது டுவிட்ர் பதிவில் அவர் கூறியுள்ளார். 

    காஷ்மீரில், கடந்த 5 மாதங்களில் 15 பாதுகாப்பு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர், 18 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். (நேற்று முன்தினம்) ஒரு ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டார்  என்று அவர் கூறியுள்ளார்.

    காஷ்மீர் பண்டிட்கள் போராட்டம் நடத்துகிறார்கள், ஆனால் பாஜக மோடி அரசு தனது 8 ஆண்டு கொண்டாட்டத்தில் மும்முரமாக உள்ளது என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில், காஷ்மீர் பண்டிட் கொலைகள் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுனர் மனோஜ் சின்ஹாவுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளார். 

    டெல்லியில் நாளை நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள்,  ஜம்மு காஷ்மீர் டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.


    ×