என் மலர்
நீங்கள் தேடியது "ஆய்வு"
- தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் தெருக்களில் புதிய கழிவு நீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
- அமைச்சர் கீதாஜீவன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் மனுவை பெற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி 10-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 1-ந் தேதி நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் கிருஷ்ணராஜபுரம் பகுதியில் 4,5,6 ஆகிய தெருக்களில் புதிய கழிவு நீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனையடுத்து வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மழை பெய்தது. இருப்பினும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தா மல் ஆய்வினை முழுமையாக நடத்தி பின்னர் பொது மக்களிடம் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார்.
அம்போது, பகுதி சபா கூட்டத்தில் மக்கள் வைத்த கோரிக்கையான கிருஷ்ணராஜபுரம் பகுதியில் 4, 5, 6 ஆகிய தெருக்களில் புதிய கழிவுநீர் கால்வாய் விரைவில் அமைத்து தருவதாக உறுதியளித்தார்.
ஆய்வின் போது மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், போல் பேட்டை பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாநகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அந்தோணி கண்ணன், வட்ட செயலாளர் சக்கரைசாமி, கவுன்சிலர் அந்தோணி பிரகாஷ் மார்ஷ்லின், சங்கர், அசோக்குமார், கலைச் செல்வன் உள்பட பலர் உடனி ருந்தனர்.
- தோட்டக்கலைத்துறை இயக்குனர் ஆய்வு செய்தார்
- விவசாயிகளை சந்தித்து பேசினார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை தோட்டக்கலைத்துறை இயக்குனர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலில் அவர் கீழப்பழுவூர் அரசு தோட்டக்கலை பண்ணையினை ஆய்வு செய்தார். பின்னர் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் காவனூர் கிராம குழுக்களை ஆய்வு செய்து விவசாயிகளை சந்தித்து பேசினார். தொடர்ந்து தோட்டக்கலை துறை அலுவலர்களுடான நடந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
- அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து திடீர் ஆய்வு
- பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு
கன்னியாகுமரி:
தென்தாமரைக்குளம் பேரூராட்சிக்குட்பட்ட தென் தாமரை குளம், பூவியூர், முகிலன்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், மருந்தகங்கள், ஓட்டல்கள், துணிக்கடைகள், டீக்கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து திடீர் ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப், செயல் அலுவலர் கிருஷ்ணன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள்,பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். அவர்கள் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டு அதை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- வட்டவிளை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
- வட்டவிளை குளம் சீரமைக்க 47 லட்ச ருபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் உத்தரவு
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநக ராட்சிக்கு உட்பட்ட 41-வது வார்டுக்கு உட்பட்ட வட்டவிளை, ஈத்தாமொழி ரோடு, மேலபுது தெரு, பறக்கை ரோடு, பட்டாரியார் சாஸ்தா தெரு உள்ளிட்ட பகுதியில் மேயரும், தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ், அனைத்து துறை அதிகாரிகளுடன் சென்று திடீர் ஆய்வு நடத்தினார்.
ஆய்வின் போது பொது மக்களின் கோரிக்கையை ஏற்று வட்டவிளை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். மேலும் வட்டவிளை குளம் சீரமைக்க 47 லட்ச ருபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலா வாணி, மாமன்ற உறுப்பி னர் அனிலா, தலைமை செயற்குழு உறுப்பினர் சதா சிவன், மாநகர துணை செயலாளர்கள் வேல் முருகன், ராஜன், பகுதி செயலாளர்கள் ஷேக் மீரான், துரை, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் எம். ஜே ராஜன் உள்ளிட்ட பலரும் ஆய்வின் போது கலந்து கொண்டனர்.
- மழைநீர் தேங்கும் இடங்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டார்.
- வாறுகால் வசதியை மேம்படுத்துவது குறித்தும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் காமராஜ் நகர் 13-வது வார்டு 4-வது தெருவில் மழைநீர் தேங்கும் இடங்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டு மழைநீர் செல்லுவதற்கு ஏதுவாக சாலை வசதியை மேம்படுத்தவும், வாறுகால் வசதியை மேம்படுத்தவும் ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் விளாத்திகுளம் நகர செயலாளர் வேலுச்சாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், வார்டு கவுன்சிலர் கலைச்செல்வி செண்பகராஜ், ஆற்றங்கரை ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாராமன், வார்டு செயலாளர் லெனின், சூரங்குடி கூட்டுறவு சங்க செயலர் ராமச்சந்திரன், முன்னாள் ராணுவ வீரர் மாரிமுத்து, வார்டு பிரதிநிதி இளையராஜா, சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்
- தடாகோவில் பகுதியில் நாளை நடைபெறுகிறது
கரூர்:
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள தடாகோவிலில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கும் திட்டத்தை நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதனையடுத்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பந்தல், மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி கடந்த 20 ஆண்டுகளாக இலவச மின்சாரம் கேட்டு விண்ணப்பித்திருந்த விவசாயிகளுக்கு முதல் கட்டமாக ஆட்சிப்பொறுப்பேற்ற 6 மாதத்திற்குள் ஒரு லட்சம் இலவச மின்இணைப்பு வழங்கப்பட்டது. தற்போது 2-வது கட்டமாக கரூர் மாவட்டத்தில் நாளை (11-ந்தேதி, வெள்ளிக்கிழமை) மின்சாரத்துறை சார்பில் நடைபெற உள்ள விழாவில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கும் திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் 20 ஆயிரம் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற உள்ளனர். அடுத்த கட்டமாக மீதமுள்ள விவசாய பெருமக்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படும். மேலும், கரூர் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரக்கூடிய விவசாய பெருமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, கலெக்டர் பிரபுசங்கர், எம்.எல்.ஏ.கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, மாணிக்கம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சச்சிதானந்தம் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- 20ஆயிரம் ஏக்கரில் சம்பா நேரடி மற்றும் நடவு பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.
- விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் உறுதியளித்தனர்.
சீர்காழி:
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சீர்காழி பகுதியில் விட்டு, விட்டு கனமழை பெய்து வருகிறது.
இதனால் சீர்காழி, கொள்ளிடம், ஆச்சாள்புரம், நல்லூர், பன்னீர்கோட்டம், ஆரப்பள்ளம், வேட்ட ங்குடி, கேவரோடை, வெள்ளப்பள்ளம், திருநகரி, மங்கைமடம், திருவெண்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 20ஆயிரம் ஏக்கரில் சம்பா நேரடி மற்றும் நடவு பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அவ்வபோது மழை பெய்துவருவதால் வயல்களில் தேங்கியுள்ள மழைநீர் வடியாமல் உள்ளது.
இதனிடையே கொள்ளிடம் வட்டாரம் பன்னீர்கோட்டம், ஆரப்பள்ளம், வேட்டங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சீர்காழி எம்.எல்.ஏ. எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மழைநீர் வடிந்த பின்னர் உரிய கணக்கீடு செய்யப்பட்ட பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசா யிகளிடம் உறுதியளித்தனர். ஆய்வின்போது கொள்ளிடம் ஒன்றியக்குழுத்தலைவர் ஜெயபிரகாஷ் உடனி ருந்தார்.
- பாதாள சாக்கடை இணைப்பில் ஏற்பட்ட உடைப்பை ராமநாதபுரம் நகரசபை தலைவர் ஆய்வு செய்தார்.
- பழுதடைந்த எந்திரத்தை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விரைவில் சீரமைக்கும்படி ஒப்பந்ததாரரிடம் நகர்மன்ற தலைவர் அறிவுறுத்தினர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட பல வார்டுகளில் கடந்த சில தினங்களாக பாதாள சாக்கடை இணைப்பில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் தேங்குவதாக பொதுமக்கள் நகர்மன்ற தலைவர் கார்மேகத்திடம் புகார் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர்-தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அறிவுறுத்தலின்படி உடைப்பு ஏற்பட்ட குழாய்கள் அகற்றி போர்க்கால அடிப்படையில் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.
நகராட்சியின் 7.10 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நகர் மன்ற தலைவர் கார்மேகம், பொறியாளர் சுரேந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பழுதடைந்த எந்திரத்தை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விரைவில் சீரமைக்கும்படி ஒப்பந்ததாரரிடம் நகர்மன்ற தலைவர் அறிவுறுத்தினர்.
- தூத்துக்குடி மாநகர் முழுவதும் அமைச்சர், மேயர், அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
- மழைநீர் தேங்காதவாறு பாதுகாக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் உத்தரவிட்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மழையின் காரணமாக மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் பல்வேறு கட்ட முன்னெச் சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு பாதிப்பை போல் இந்த ஆண்டு மழைகாலங்களில் அது போன்ற நிலை வரக்கூடாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி மாநகராட்சி பகுதி முழுவதும் புதிய கால்வாய் சாலை வசதி என கட்டமைப்பு பணிகளை விரைவாக செய்துகொடுக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை மாநகர் முழுவதும் அதிகாரிகள் உள்பட அமைச்சர், மேயர் கண்காணித்து வருகின்றனர்.
50-வது வார்டு என்.ஜி.ஓ. காலனி கிழக்கு தாழ்வான பகுதிகளில் மழைநீர் கடந்த காலங்களில் தேங்கியதையடுத்து இந்த ஆண்டு அது போல் நடைபெறாமல் பாதுகாத்து கொள்ளும் வகையில் 50-வது வார்டு கவுன்சிலர் சரவணக்குமாரிடம் பகுதி சபா கூட்டத்தின் போது பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பகுதியில் சாலையை உயர்த்துவது, மணல் சரல் போன்றவற்றை நிரப்பி மழைநீர் தேங்காதவாறு பாதுகாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு பணியை தொடங்கி வைத்தார்.
ஆய்வின் போது மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர் சரவணக்குமார், வட்டப்பிரதிநிதிகள் வேல்மணி, ராஜேந்திரன், செல்வம், ராஜேஷ், சங்கரநாராயணன், பகுதி சபா உறுப்பினர் சிவசங்கர், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார் மற்றும் அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.
- திருச்செங்கோடு, மல்லசமுத்திரம் பகுதிகளில் வளர்ச்சித்திட்ட பணிகளை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு செய்தார்.
- ஆய்வின் போது மழைக்காலத்திற்கு முன்னரே அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், கருவேப்பம்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 கீழ் ரூ.9.75 லட்சம் மதிப்பீட்டில் நாராயணம்பாளையம் ஏரி புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநருமான மகேஸ்வரன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, ஏரியின் நீர் வரத்து கால்வாயினை சுத்தமாக பராமரிப்பு செய்திடவும், மழைக்காலத்திற்கு முன்னரே அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் ஓ.ராஜபாளையம் ஊராட்சி, சிவசக்தி நகர் முதல் தெருவில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 கீழ் ரூ.5.30 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளதை அவர் நேரில் பார்வையிட்டார்.
தொடர்ந்து மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், ராமாபுரம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 கீழ் ரூ.12.91 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டும் பணியினை பார்வையிட்டு நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் ராமாபுரம் அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேலகவுண்டம்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாணவர்களுக்காக சமைக்கப்பட்ட உணவு மற்றும் சுண்டல் ஆகியவற்றின் தரத்தை ருசி பார்த்தார். விடுதியில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா என்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் சமையலறை சுகாதாரமான முறையில் உள்ளதா என்றும் ஆய்வு செய்தார். கழிப்பிடங்கள், குளியலறை ஆகியவை சுத்தமாக உள்ளனவா என்றும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கவுசல்யா, ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (திருச்செங்கோடு) மகாலட்சுமி, டேவிட் அமல்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (மல்லசமுத்திரம்) அருண்குமார், ரமேஷ் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் ஆய்வு நடத்தினார்.
- கூடுதலாக இந்த பள்ளியில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 386 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 19 ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
கூடுதலாக இந்த பள்ளியில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதனை அமைச்சர் ராஜகண்ணப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
பள்ளி மைதானம் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
- மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் உடனடியாக அந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.
- உடுமலையிலிருந்து பழனி செல்லும் வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்லவும் ஏற்பாடு செய்தார்.
உடுமலை:
உடுமலை - பழனி நெடுஞ்சாலையில் ராஜாவூர் பிரிவுஅருகே சாலையில் மழை நீர் அதிக அளவில் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதையறிந்த மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் உடனடியாக அந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் மழை நீரை அகற்ற அதிகாரிகளை நேரடியாக வரவழைத்து, அங்கே காத்திருந்து மழைநீரை வெளியேற்றும் பணியை பார்வையிட்டார் .மேலும் உடுமலையிலிருந்து பழனி செல்லும் வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்லவும் ஏற்பாடு செய்தார்.