search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனுக்கள்"

    தலைமை செயலகத்தில் இருந்தே மனுக்கள் விபரத்தை கண்காணிக்க முடியும்.

    திருப்பூர்:

    தமிழக அரசின் வருவாய்த்துறை சார்பில், மாவட்டம் தோறும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) ஜூன் மாதத்துக்கு முன்னதாக பசலி ஆண்டு கணக்குகளை சரிபார்த்து ஒப்புதல் அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வருவாய் கிராமத்தை சேர்ந்த மக்கள் அந்தந்த நாட்களில், ஜமாபந்தி அலுவலரிடம் மனுக்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகாம்களில் பெறப்படும் மனுக்கள் விபரத்தை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து உரிய அதிகாரிகள் வாயிலாக மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருப்பூர் வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    ஜமாபந்தி முகாமில், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் மனு கொடுக்கலாம். அந்த மனு மீது விரைந்து நடவடிக்கை எடுத்து நிறைவு நாளில் சான்றிதழ் அல்லது நல உதவி வழங்கப்படும். மக்கள் அளிக்கும் மனுக்கள் விவரத்தை புதிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, வருவாய்த்துறை கமிஷனரகம் உத்தரவிட்டுள்ளது.

    மனுக்கள் விவரத்தையும் அதன் மீதான நடவடிக்கை விவரத்தையும் பதிவு செய்யப்படும். தமிழகத்தில் எந்த தாலுகாவாக இருந்தாலும் தலைமை செயலகத்தில் இருந்தே மனுக்கள் விபரத்தை கண்காணிக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

    ராஜபாளையத்தில் ஜமாபந்தி நடந்தது. இதில் 200 மனுக்களுக்கு தீர்வு வழங்கப்பட்டது.
    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் நடப்பு ஆண்டிற்கான ஜமாபந்தி எனும் கணக்குகள் தேர்வாணையம் நடத்தப்பட்டது. 

    ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சாத்தூர் கோட்டாட்சியர் புஷ்பம் கலந்துகொண்டு மனுக்களை பெற்றார். ராஜபாளையம் வட்டாட்சியர் சீனிவாசன்,  துணை வட்டாட்சியர் கோதண்டராமன், தனி வட்டாட்சியர்கள் ராமநாதன், சரஸ்வதி மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய் அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்துகொண்டு கணக்குகளை காட்டி சரிபார்க்கப்பட்டது. இதில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. ஒருவார காலம் நடந்த  ஜமாபந்தியில் 360 மனுக்கள் பெறப்பட்டது‌. 200 மக்களுக்கான தீர்வு காணப்பட்டது. 

    பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, விதவைகளுக்கான சான்றிதழ் உள்பட பல்வேறு திட்டங்களுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன. 
    ×