search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்னல்"

    • எரிமலை வெடித்து தீக்குழம்பு வெளிவருவதுபோன்று....
    • இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்

    மெக்சிகோ நாட்டிற்கு தெற்கே உள்ள மத்திய அமெரிக்க நாடு கவுதமாலா. இது எரிமலைகள், மழைக்காடுகள் மற்றும் பண்டைய மாயன் கலாச்சாரத்தின் தாயகமாக கருதப்படுகிறது.

    இந்நாட்டில் உள்ள ஒரு எரிமலைக்கு அருகே தோன்றிய பெரிய மின்னலை காட்டும் அற்புதமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ஜூலை 10-ம் தேதி ஆன்டிகுவா நாட்டிலிருந்து படம்பிடிக்கப்பட்டிருக்கிறது.

    அகுவா எரிமலையின் மேல் தோன்றும் இந்த மின்னல், பார்ப்பதற்கு எரிமலை வெடித்து தீக்குழம்பு வெளி வருவது போல் தெரிகிறது. இக்காட்சிகள் 3.23 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு 4,000 லைக்குகளைக் குவித்துள்ளது.

    எரிமலை வெடித்து வெளிப்படும்போது சிதறும் பாறை மற்றும் கல் துண்டுகள் டெஃப்ரா எனப்படும். இந்த எரிமலை கடின தீக்குழம்பு மற்றும் டெஃப்ரா ஆகியவற்றின் பல அடுக்குகளால் உருவாகிறது. இதனால் இது எரிமலை வகைகளில் ஸ்ட்ராட்டோ அல்லது கலவை எரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த எரிமலையின் உயரம் 12,340 அடியாகும். வீடியோவில் இந்த மின்னல் தாக்குதல், அதன் மேலே உள்ள முழு வானத்தையே ஒளிரச் செய்வது போல் தோன்றுகிறது.

    • பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது அன்ஷிகா (11) உயிரிழந்தார்.
    • ரேபரேலியில், திஹ், படோகர் மற்றும் மில் பகுதி காவல் நிலையப் பகுதிகளில் மூன்று பேர் இறந்தனர்.

    உத்தரபிரதேசத்தின் புடான், எட்டா மற்றும் ரேபரேலி மாவட்டங்களில் நேற்று மின்னல் தாக்கியதில் இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

    விவசாயிகள் பப்லு (30) மற்றும் வர்ஜீத் யாதவ் (32) ஆகியோர் உஷைத் பஜாரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பலத்த மழையுடன் அப்பகுதியில் மின்னல் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    உஷைத் நகரில் நடந்த மற்றொரு மின்னல் சம்பவத்தில், பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது அன்ஷிகா (11) உயிரிழந்தார். மூன்று உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், ரேபரேலியில், திஹ், படோகர் மற்றும் மில் பகுதி காவல் நிலையப் பகுதிகளில் மூன்று பேர் இறந்தனர். மேலும், மூன்று பேர் மின்னல் தாக்கியதில் பலத்த காயமடைந்தனர்.

    திஹ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெண்டலால் கிராமத்திற்கு அருகில் உள்ள வயல்வெளியில் மோஹித் பால் (14) என்பவர் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மில் பகுதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூர்வா கிராமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஜமுனா பிரசாத் (38) என்பவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.

    ரேபரேலியின் சராய் டாமோ கிராமத்தில் படோகர் காவல் நிலையப் பகுதியில் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், ராமகாந்தி (38) மின்னல் தாக்கி இறந்தார். மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் மேலும் மூவர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    மாட்டை அழைத்து சென்ற சிறுவன் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    மேலூர்

    அழகர் கோவில் கோட்டைவாசல் பகுதியை சேர்ந்த அம்மாசி.  வேன் டிரைவர். இவரது மனைவி சுனிதா. 

    இந்த தம்பதியினருக்கு 2 மகள், 1 மகன் உள்ளனர்.   நேற்று இரவு 7 மணியளவில் மழை பெய்தது. இதனால் மாட்டை பிடித்து கட்டுவதற்காக வீட்டுக்கு வெளியே அம்மாசி, மனைவி சுனிதா, மகன்  அர்ஜூன் (6) ஆகியோர் சென்றனர்.

     அப்போது  பயங்கர சத்தத்துடன் மின்னல் தாக்கியதில்,  3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அம்மாசியும், சுனிதாவும் காயமின்றி தப்பினர். சிறுவன் அர்ஜூன் பரிதாபமாக உயிரிழந்தான். 

    இதுகுறித்து மேலவளவு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.
    ×