என் மலர்
நீங்கள் தேடியது "குடிநீர்"
- இரவில் தொடங்கிய இந்த தகராறு காலை வரை நீடித்தது.
- பேச்சுவார்த்தை நடத்தியும் இருதரப்பும் சமாதானம் அடையவில்லை.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் தாவன்கரே மாவட்டம் ஜகல்பூரைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். இவருக்கும் தும்கூர் மாவட்டம் சிரா பகுதியைச் சேர்ந்த அனிதா என்ற பெண்ணுக்கும் திருமணம் முடிவானது. இவர்களது திருமணம் நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்தது.
கடந்த சனிக்கிழமை இரவு ஹிரியூர் நகரில் பெங்களூரு சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணமகன், மணமகளின் உறவினர்கள், நண்பர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அனைவருக்கும் இரவு விருந்து வழங்கப்பட்டது. ஏராளமானோர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். விருந்து முடியும் தருவாயில் சிலர் வந்து சாப்பிட அமர்ந்தனர். அப்போது அவர்களுக்கு கேட்டரிங் ஊழியர்கள் முறையாக குடிநீர் வழங்கவில்லை எனக்கூறி மணமகன், மணமகள் குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது.
இரவில் தொடங்கிய இந்த தகராறு காலை வரை நீடித்தது. எவ்வளவு பேச்சுவார்த்தை நடத்தியும் இருதரப்பினரும் சமாதானம் அடையவில்லை.
ஒரு கட்டத்தில் மணமகனும், மணமகளும் தகராறில் ஈடுபட்டனர். உறவினர்கள் சமாதானம் செய்ய முயன்றும் அவர்கள் சமாதானம் அடையவில்லை. இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது.
பந்தியில் தண்ணீர் பரிமாறுவதில் ஏற்பட்ட குளறுபடியால் திருமணம் நிறுத்தப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
- வீட்டு வரி குடிநீர் வரி மற்றும் இதர வரி வகைகளை அனைவரும் செலுத்த வேண்டும்.
- வேளாண்மை திட்ட பணிகளை பற்றி எடுத்து கூறி பயனாளிகளின் பட்டியலை கிராம சபை பார்வைக்கு வைத்தனர்.
கபிஸ்தலம்:
ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு கபிஸ்தலம் பகுதியில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடந்தன
கபிஸ்தலம் பகுதியில் கபிஸ்தலம், மேல கபிஸ்தலம், சருக்கை, உம்பளப்பாடி, ராமானுஜபுரம், சத்திய–மங்கலம், உமையாள்புரம், தியாக சமுத்திரம், அலவந்திபுரம், ஓலைப்பாடி, கொந்தகை, ஆதனூர், திருவைகாவூர், துரும்பூர், கூனஞ்சேரி, திருமண்டங்குடி, உள்ளிட்ட ஊராட்சிகளில் ஊராட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமை வகித்தனர். மேல கபிஸ்தலம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் தஞ்சாவூர் வேளாண்மை பயிற்சி நிலைய துணை இயக்குனர் பால சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வேளாண்மை திட்டப் பணிகளை பற்றி எடுத்துக் கூறி பயணாளிகளின பட்டியலை கிராம சபை பார்வைக்கு வைத்தனர்.
கபிஸ்தலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன் தலைமை வகித்தார்.
ஒன்றிய கவுன்சிலர்கள் சுரேஷ், சரவண பாபு, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவக்குமார், ஆனந்தராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
முன்னதாக அனைவரையும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகாலட்சுமி பாலசுப்பிரமணியன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் 2022 -23 ஆம் ஆண்டுக்கான வீட்டு வரி குடிநீர் வரி மற்றும் இதர வரி வகைகளை அனைவரும் செலுத்த வேண்டும் எனவும் உள்ளாட்சி தினத்தில் கிராம சபை நடத்த அனுமதி அளித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் முடிவில் ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.
- மேற்கு பகுதி ஊராட்சிகளில் திட்ட பணிகள் ஆய்வு மற்றும் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டார்.
- எம்.பி. அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர்களோடு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
பல்லடம் :
கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேற்கு பகுதி ஊராட்சிகளில் திட்ட பணிகள் ஆய்வு மற்றும் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டார். அப்போது சித்தம்பலம்,பருவாய், கரடிவாவி,மல்லேகவுண்டம்பாளையம், புளியம்பட்டி,கே கிருஷ்ணாபுரம்,வடுகபாளையம்புதூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் தற்போதைய மக்கள் தொகைக்கேற்ப குடிநீர் வழங்காததால் குடிநீர் பற்றாக்குறை உள்ளதாகவும் இந்த ஊராட்சிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால், மக்கள் தொகை அடிப்படையில் அத்திக்கடவு குடிநீர் அதிகப்படுத்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து நடராஜன் எம்.பி. 5-ந் தேதி அன்று குடிநீர் விநியோகம் குறித்து ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறியிருந்தார். அதன்படி கோவையிலுள்ள நடராஜன் எம்.பி. அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் சித்தம்பலம், புளியம்பட்டி, கோடாங்கிபாளையம் மல்லேகவுண்டம்பாளையம், கரடிவாவி பருவாய் உள்ளிட்ட ஊராட்சி தலைவர்களோடு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்த ஊராட்சிகளில் தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குடிநீர் விநியோகத்தை அதிகப்படுத்தி தருவதாக உறுதி அளித்தனர். கூட்டத்தில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி,பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்லடம் ஒன்றிய செயலாளர் பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- இரண்டாவது குடிநீர் திட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினரால் குழாய் மராமத்து மற்றும் சீரமைப்புப்பணிகள் இன்று நடைபெற்று வருகிறது.
- வெள்ளிக்கிழமை முதல் தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை ,மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி சார்பில் குடிநீர் விநியோகி க்கப்பட்டு வருகிறது. அதன்படி, குடிநீர் விநியோகம் செய்யப்படும் இரண்டாவது குடிநீர் திட்டல் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினரால் குழாய் மராமத்து மற்றும் சீரமைப்புப்பணிகள் இன்று நடைபெற்று வருகிறது. அதனால் 2 வது குடிநீர் திட்டத்தில்குடிநீர் விநியோகம் தடைபடும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.
எனவே, திருப்பூர் மாநகராட்சியில் மண்டலம் 1-க்கு உட்பட்ட வார்டு 1, 13, 14 மண்டலம் 3-க்கு உட்பட்ட வார்டு 44, 45, 50, 51 மற்றும் மண்டலம் 4-க்கு உட்பட்ட வார்டு 52, 55 ஆகிய பகுதிகளில் நாளை மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. வெள்ளிக்கிழமை முதல் மேற்கண்ட பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
- கடந்த சில நாட்களாக குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படுவதில்லை.
- குடிநீர் வினியோகத்தை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொத்தமங்கலம் ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக ராஜகொத்தமங்கலம், சிதம்பரகொத்தமங்கலம், பெரிய கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படுவது இல்லை என கூறியும், குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்தக்கோரியும் கிராம மக்கள் திடீரென காலிக்குடங்களுடன் பள்ளங்கோவில் கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது குடிநீர் வினியோகத்தை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதன்பேரில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக திருத்துறைப்பூண்டி -மன்னார்குடி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- பல்லடம் அருகே உள்ள கரடிவாவி ஊராட்சியில் சுமார் 4000 மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
- பள்ளி நேரங்களில் மாணவ, மாணவியருக்கு போதுமான பஸ் வசதி இல்லை. எனவே பஸ் வசதி செய்து தர வேண்டும்.
பல்லடம்:
பல்லடம் அருகே கரடிவாவியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட கலெக்டர் வினீத் கலந்துகொண்டு ரூ.41.79 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் வினீத்திடம் கரடிவாவி ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சிதா பகவதி கிருஷ்ணன் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- பல்லடம் அருகே உள்ள கரடிவாவி ஊராட்சியில் சுமார் 4000 மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு மக்களின் பயன்பாட்டிற்காக சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும். கடந்த 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி1.35 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதனை 4 லட்சம் லிட்டராக அதிகப்படுத்தி வழங்க வேண்டும். மேலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு கரடிவாவி ஸ்ரீநகர் பகுதியில் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கவேண்டும். அதே போல குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்ய வேண்டும். பள்ளி நேரங்களில் மாணவ, மாணவியருக்கு போதுமான பஸ் வசதி இல்லை. எனவே பஸ் வசதி செய்து தர வேண்டும். மருத்துவமனையை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 2-வது குடிநீர் திட்டத்தில் மின்பராமரிப்பு பணிகள் இன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடக்கிறது.
- திங்கட்கிழமை முதல் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும்
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் 2-வது குடிநீர் திட்டத்தில் மின்பராமரிப்பு பணிகள் இன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடக்கிறது. எனவே திருப்பூர் மாநகராட்சியில் 1-வது மண்டலத்தில் 1, 13, 14 ஆகிய வார்டுகள், 3-வது மண்டலத்தில் 44, 45, 50, 51 ஆகிய வார்டுகள், 4-வது மண்டலத்தில் 52, 55 ஆகிய வார்டுகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) குடிநீர் வினியோகம் தடைபடும்.
திங்கட்கிழமை முதல் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.
- மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து வரக்கூடிய தண்ணீர் குழாயில் திடீரென உடைப்பு
- பேரூராட்சி ஊழியர்கள் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கிழக்கு ரத வீயியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து வரக்கூடிய தண்ணீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் உடைப்பு ஏற்பட்ட குழாயிலிருந்து செயற்கை நீரூற்று போல தண்ணீர் வெளியேறி பொதுமக்களுக்கு செல்ல வேண்டிய பல லட்சம் லிட்டர் குடிநீர் அருவி போல சாலையில் சென்று வீணாகியது. கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதியில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் அதன் காரணமாக உடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.இது குறித்து பொதுமக்கள் அவிநாசி பேரூராட்சிக்கு தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்து பேரூராட்சி ஊழியர்கள் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே தில்லையேந்தல் ஊராட்சியில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
- தெருக்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் திருடர்கள் அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே தில்லை யேந்தல் ஊராட்சியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
ஊராட்சியில் உள்ள அனைத்து தெருக்களிலும் தண்ணீர் தொட்டி அமைத்து குழாய்கள் மூலம் தண்ணீர் வருவதற்கு பல லட்சம் செலவில் தமிழக அரசு ஏற்பாடுகள் செய்யப்பட்டும் மக்கள் பயன் பெற முடியவில்லை. இங்கு மாதத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் மட்டும் காவிரி தண்ணீர் வருகிறது. மற்ற நாட்களில் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது.
இதனால் இந்தப்பகுதியில் உள்ள பெண்கள் முதல் சிறுவர், சிறுமிகள் 2 கிலோ மீட்டர் தொலைவில் இ.சி.ஆர். சாலையில் உள்ள கீழக்கரை துணை மின்நிலையம் அருகில் உள்ள குழாய்களில் இரவும், பகலுமாக தள்ளு வண்டிகளில் குடங்களை வைத்து இழுத்துச்சென்று குடிநீர் எடுத்து வரும் அவல நிலை இருந்து வருகிறது.
லாரியில் விற்கப்படும் குடம் தண்ணீர் ரூ.10க்கு விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். உடனடியாக குடிநீர் வசதி செய்து தர வலியுறுத்தி தில்லையேந்தல் ஊராட்சி பெண்கள் ஏராளமானோர் திரண்டு வந்து கலெக்டர் நேர்முக உதவியாளர் ஷேக் மன்சூ ரிடம் மனு அளித்தனர்.
இது தொடர்பாக ஊராட்சி தலைவர் கிருஷ்ண மூர்த்தி கூறியதாவது:-
தில்லையேந்தல் ஊராட்சிக்கு காவிரி குடிநீர் முறையாக வருவது கிடையாது. மாதத்திற்கு 2 அல்லது 3 முறை தண்ணீர் திறந்து விடுவதால் மக்கள் குடிநீருக்காக பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மாவட்ட கலெக்டர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தில்லை யேந்தல் ஊராட்சியில் அனைத்து பகுதியில் உள்ள குடிதண்ணீர் குழாய்களில் தடையில்லாமல் குடிநீர் கிடைக்கவும், ஊரணிகள் தூர்வாரவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு பாலையாறு அருகே ஒரு கூட்டு குடிநீர் பைப்லைன் அமைக்க வேண்டும்.
ஊராட்சி பகுதிகளை சுத்தம் செய்ய கூடுதலாக துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும். உடனுக்குடன் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய டிராக்டர் வசதி செய்து ஏற்படுத்தி தர வேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளில் கிராமங்கள் அதிகமான பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் போதிய தெரு விளக்கு வசதிகள் செய்யவில்லை. தெருக்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் திருடர்கள் அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள 33 வார்டு களை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி, குடிநீர் கட்டணம், காலிமனை வரி, தொழில் வரி நிலுவையில் உள்ளது.
- இதையடுத்து நகராட்சியில் வரியினங்களை செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்தும், வாடகை பாக்கி செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள 33 வார்டு களை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி, குடிநீர் கட்டணம், காலிமனை வரி, தொழில் வரி நிலுவையில் உள்ளது. நகராட்சி கடைகளை ஏலம் எடுத்தவர்கள் கடை மற்றும் குத்தகை தொகையை செலுத்தகோரி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வரியினங்கள், கடை வாடகை ஆகியவற்றை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
இதையடுத்து நகராட்சியில் வரியினங்களை செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்தும், வாடகை பாக்கி செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
- 4 மண்டல அலுவலகங்களும் விரைவில் திறக்கப்படும்
- மாநகராட்சி கூட்டத்தில் மேயர் மகேஷ் பேச்சு
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம் மேயர் மகேஷ் தலைமையில் இன்று நடந்தது. ஆணையாளர் ஆனந்தமோகன், பொறி யாளர் பாலசுப்பிரமணி யன்,மண்டல தலைவர் கள் செல்வகுமார், ஜவகர், முத்துராமன், அகஸ் டினா கோகிலவாணி, கவுன்சிலர்கள் மீனா தேவ் அக் ஷயா கண்ணன், அனிலா சுகுமாரன், டி ஆர். செல்வம், நவீன் குமார் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து கவுன்சிலர்கள் பேசியதாவது:-
நாகர்கோவில் மாநகரப் பகுதியில் தூய்மை பணி யாளர்கள் தட்டுப்பாடு உள்ளது. அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். அண்ணா விளையாட்டு அரங்கத்தை சீரமைக்க மாநகராட்சி நிதியை ஒதுக்க கூடாது. குடிநீர் வசதி மட்டும் மாநகராட்சியில் இருந்து செய்து கொடுக்க வேண்டும்.
நாகர்கோவில் மாநக ராட்சியில் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு வரி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சிறிய தெருக்களுக்கும் அதிக வரி வசூல் செய்யப்படுகிறது. நாகர்கோவில் மாநகர பகுதி யில் சாலைகளை ஆக்கிர மித்து சந்தை உள்ளது. இதில் உள்ள கடைகளில் தனியார் வாடகை வசூல் செய்து வருகிறார்கள். ஆனால் அதில் உள்ள குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகிறார்கள்.
வறுமை கோடு பட்டி யலில் பல்வேறு குளறு படிகள் உள்ளது. அதை சரி செய்ய வேண்டும். வறுமை க்கோடு பட்டியலில் உள்ள குளறுபடி காரணமாக பென்ஷன் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படு கிறார்கள். அதை உடனடி யாக சரி செய்ய வேண்டும்.
புத்தன்அணை குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடித்து மாநகர பொது மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளூர், தெங்கம்புதூர் பகுதியில் குடிநீர் கட்ட ணத்தை குறைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.
இதற்கு பதில் அளித்து மேயர் மகேஷ் பேசிய தாவது:-
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம், கலெக்டரின் பொது நிதியிலிருந்து தான் சீரமைக்கப்பட்டு வருகிறது. அக்னிபாத் திட்டத்திற்கு ஆள்சேர்ப்பு நடந்த போது சீரமைக்க ப்பட்டது. மாநகராட்சி நிதியிலிருந்து அண்ணா விளையாட்டு அரங்கம் சீரமைக்கப்படவில்லை.
நாகர்கோவில் மாந கராட்சி மண்டல அலுவ லகங்கள் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.மாநகராட்சி புதிய அலு வலக கட்டிட பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் புதிய கட்டிடத்தை திறந்து வைக்க வருகை தர உள்ளார்.
புதிய கட்டிடத்தில் மாநகராட்சி அலுவலகம் செயல்படும்போது ஆளூர், தெங்கம்புதூர் தற்பொழுது செயல்படும் மாநகராட்சி அலுவலகத்தில்மண்டல அலுவலகங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.வரி விதிப்பில் குளறு படிகள் இருந்தால் அதை சரி செய்ய உடனடி நட வடிக்கை எடுக்கப்படும்.
புத்தன்அணை குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.காண்ட்ராக்டரிடம் போதிய நிதி இல்லாததால் இந்த பணிகள் மெதுவாக நடை பெற்று வருகிறது. தினமும் 300 பணியாளர்கள் பணி யில் ஈடுபட்டால் 2 மாத காலத்திற்குள் அந்த பணியை முடிக்க முடியும்.அந்த குடிநீர் திட்ட பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
நாகர்கோவில் மாநகரப் பகுதியில் ராமன் புதூர், கணேசபுரம் பகுதியில் தனியார் சந்தைகள் செயல் பட்டு வருகிறது. அந்த சந்தைகளை ஆய்வு செய்து அதில் பிரச்சினைகள் இருந்தால் மாநகராட்சி மூலம் நோட்டீசு அனுப்பப்பட்டு அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க ப்படும்.
மாநகர பகுதியில் சாலை சீரமைப்பிற்கு ரூ. 30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிதி 52 வார்டு கவுன்சிலர்களுக்கும் பாரபட்சமின்றி சமமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ரூ.10 கோடி நிதி மண் ரோடு சீரமைக்க ஒதுக்கி உள்ளோம்.
52 வார்டுகளில் 13 வார்டு களில் மண் ரோடுகள் இல்லை. மீதமுள்ள அந்த வார்டுகளுக்கு ரூ.10 கோடி நிதி பிரித்தளிக்கப்பட்டு பணிகள் விரைவில் மேற் கொள்ளப்படும்.
தமிழகத்திலேயே நாகர் கோவில் மாநகராட்சிக்கு தான் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பணிகள் ஒரு வார காலத்திற்குள் தொடங்க ப்படும்.
நாகர்கோவில் மாநகரப் பகுதியில் குடிநீர் கட்ட ணத்தை குறைக்க வாய்ப்பு இல்லை. அம்ருத் திட்டம் முடிவடைந்தவுடன் நாகர் கோவில் மாநகரப் பகுதி யிலும் குடிநீர் கட்டணம் உயர்த்தப்படும். அப்போது அனைத்து பகுதிகளுக்கும் ஒரே கட்டணம் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் .
இவ்வாறு அவர் கூறினார்.
- குடும்பங்களுக்கு ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் வழங்கப்பட்டன.
- விவசாயிகள் குழு உறுப்பினர் மகா குமார் மக்கள் பயன்பாட்டுக்கு குடிநீர் பைப்பை திறந்து துவக்கிவைத்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா கள்ளிமேடு கிழக்கு பகுதியில் 63 குடும்பத்தினர் வசதித்து வருகின்றனர்.
இந்த குடும்பங்களுக்கு ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் வழங்கும் பணி ரூ. 2 லட்சத்து 30 ஆயிரம் செலவில் 350 மீட்டர் பைப் லைன் போடப்பட்டு முதல் கட்டமாக 18 குடும்பங்களுக்கு குடிதண்ணீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார்.
மாநில விவசாயிகள் குழு உறுப்பினர் மகா குமார் மக்கள் பயன்பாட்டுக்கு குடிநீர் பைப்பை திறந்து துவக்கிவைத்தார்.
முன்னதாக குடிநீர் குழாய்க்கு மாலை அணிவித்து சந்தனம் - குங்கும் பொட்டுவைத்து தேங்காய் உடைக்கபட்டு தீபாரதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற துணை தலைவர் உத்திராபதி, உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க இயக்குனர், மச்சழகன், ஊர் பிரமுகர்கள் நமசி. நாகராஜ் திவாஸ்கர் ஊராட்சி செயலாளர் பிரியங்கா, ஊராட்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் காந்தி கஸ்தூரிபாய், ஊராட்சிமன்ற உறுப்பினர் ரேவதி தியாகராசன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.