என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 223204"

    கோவையில், வருகிற 28-ந்தேதி மண்டல அளவிலான அஞ்சல் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதற்காகன சேலம் மாவட்டத்தினர் பங்கேற்க அழைக்கப்படுகின்றனர்.

    சேலம்:

    சேலம் மேற்கு கோட்டம் அஞ்சல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மண்டல அளவிலான அஞ்சல் வாடிக்கையாளர்கள் குறைதீர் கூட்டம் வருகிற 28-ந்தேதி கோவையில் உள்ள மேற்கு மண்டல அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. அஞ்சல் வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை உதவி இயக்குநர், அஞ்சல் துறை தலைவர், மேற்கு மண்டலம், தமிழ்நாடு, கோயம்புத்தூர்- 641002 என்ற முகவரிக்கு அனுப்பலாம். தங்கள் புகார்கள் 17-ந்தேதிக்குள் இந்த முகவரியை சென்றடைய வேண்டும்.

    அஞ்சல் துறையின் மணி ஆர்டர், பதிவு தபால், விரைவு தபால், காப்பிட்டு செய்யப்பட்ட தபால் போன்ற சேவை தொடர்பான புகார் இருப்பின் அது தொடர்பான பதிவு எண், பதிவு செய்யப்பட்ட தேதி மற்றும் அலுவலகம் போன்ற முழு விவரங்கள் இருக்க வேண்டும்.

    அஞ்சல் துறையின் சேமிப்பு வங்கி அல்லது அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு போன்ற சேவை தொடர்பான புகார் இருப்பின் அது தொடர்பான முழு கணக்கு எண், அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசி எண்கள், வைப்பாளர், காப்பீட்டாளரின் பெயர் மற்றும் முகவரி, தபால் அலுவலகத்தின் பெயர் போன்ற குறிப்புகள் இருக்க வேண்டும்.

    முழு விவரங்கள் அடங்கிய புகாரை அனுப்பும் அஞ்சல உறையின் மீது டக் அதாலத் கேஸ் என்று குறிப்பிடவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மதுரை கலெக்டர் அலுவலகத்தில், 21-ந் தேதி எரிவாயு நுகர்ேவார் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • சமையல் எரிவாயு உருளைகளை பயன்படுத்தும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    மதுரை

    மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணிக்கு எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

    இதில் எண்ணை நிறுவன மேலாளர்கள், எரிவாயு நுகர்வோர்கள், முகவர்கள், அனைத்து குடிமை பொருள் வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள். மதுரை மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு உருளைகளை பயன்படுத்தும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    பட்டியல் இனத்தவரின் உரிமைக்காக போராடி யவர் அம்பேத்கர். இவர் தன்னுடைய தனித்திற மையால் உயர்ந்தவர்.

    நீடாமங்கலம்,ஜூன்.16-

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மாற்றுக் கட்சியினர் சுமார் ஆயிரம் உறுப்பினர்கள் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை முன்னி லையில் தங்களை இணை த்துக் கொண்டனர். கப்பலு டையான் சதா. சதீஷ் அவருடைய ஆதரவாளர்கள் கலந்து கொண்டு பா.ஜ.கவில் இணைந்தனர். கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

    பட்டியல் இனத்தவரின் உரிமைக்காக போராடி யவர் அம்பேத்கர். இவர் தன்னுடைய தனித்திற மையால் உயர்ந்தவர். அரசியலமைப்பு சட்டத்தை இயற்றினார் . பட்டியலின மக்களுக்கு பா.ஜ.க என்ன செய்துள்ளது என்பதை பிற கட்சிகள் நேரில் வந்தால் விவாதிக்கலாம் என கூறிேனன். இதுவரை யாரும் வரவில்லை.

    அரசியலமைப்பு சட்டம் இயற்ற இந்திய அரசியல் சாசன தலைவராக அம்பேத்கரை பரிந்துரைத்தது ஜனா சங்கத்தின் தலைவர் சாம் பிரசாத் முகர்ஜி தான்.

    சட்டமேதை அம்பேத்கர் அவர்களுக்கு 1989-ம் ஆண்டு பாரதரத்னா விருது வழங்கப்பட்டது. அந்த விருது வழங்குவதற்கு ஜனசங்கமே காரணமாக அமைந்தது.

    மத்திய பிரதேச மாநி லத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராகவும், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள்.ஆனால் பட்டியலின மக்களுக்கு முன்னுரிமை வழங்கப் படுவதாக தமிழக அரசியல் கட்சிகள் பொய் பேசி வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

    • மதுரை ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. பட்டாசு விற்பனையும் களைகட்டியது.
    • 15 நாட்களில் ரூ.150 கோடி வசூலானது.

    மதுரை

    தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜவுளி மற்றும் பட்டாசுகள் விற்பனை களைகட்டி வருகிறது. மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக புது துணிமணி, பட்டாசுகள் வாங்குவதற்காக மாநகருக்குள் குவிந்துள்ளனர்.

    ஜவுளி கடைகள் அதிகமாக இருக்கும் விளக்குத்தூண், கீழவாசல், மேல ஆவணி மூல வீதி, கோரிப்பாளையம், தெற்கு வாசல் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதியது. மதுரை மாவட்டத்தில் போலீசார் அனுமதியுடன் 300-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. அங்கு புதிய புதிய ரகங்களில் பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.

    அவற்றை வாங்கி செல்வதற்காக பொதுமக்கள் கூட்டம் முண்டியடித்து வருகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி பெரிதாக சோபிக்கவில்லை. மாவட்டம் முழுவதும் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உள்ளன.

    பொதுமக்கள் நிம்மதியாக ஜவுளிக்கடைகளுக்கு சென்று ஆடைகளை வாங்கி திரும்புகின்றனர். பட்டாசு கடைகளில் புதிய, புதிய ரக பட்டாசுகளை வாங்கி வந்து தெருக்களில் சந்தோஷமாக வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட பெரிய- நடுத்தர- சிறிய ஜவுளி கடைகள் உள்ளன. இங்கு தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு 2 வாரங்களாக கூட்டம் அலைமோதியது.

    இது குறித்து மதுரை மாவட்ட ஜவுளி கடை விற்பனையாளர்கள் கூறுகையில், தீபாவளி பண்டிகை என்பது கொேரானாவுக்கு முந்திய காலகட்டத்தில் சிறப்பாக அமைந்திருந்தது. அப்போது வருமானம் பெரிய அளவில் இருந்தது.

    இதனால் எண்ணற்ற தொழிலாளிகளை வேலைக்கு நியமித்து, அவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கி வந்தோம். கொரோனாவுக்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மக்களிடம் இப்போது பெரிய அளவில் பணப்பழக்கம் இல்லை.

    இருந்த போதிலும் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் ஜவுளி கடைகளுக்கு வருகின்றனர். அவர்கள் உயர்ந்த மதிப்பு உடைய ஆடைகளை எடுப்பதில்லை. குறைந்த விலைக்கு கிடைக்கும் உடைகளை மட்டுமே அதிகம் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளி மாநிலங்களில் இருந்து புதிய ரக ஜவுளிகளை இறக்குமதி செய்து, கடந்த 15 நாட்களாக விற்பனை செய்து வருகிறோம். மதுரை மாவட்டத்தில் பெரும்பாலும் பெரிய ஜவுளி கடைகளில் ரூ.1 கோடி, நடுத்தர ஜவுளி கடைகளில் ரூ.40 லட்சம், சிறிய ஜவுளிக்கடைகளில் ரூ.3 லட்சம் என்ற அளவில் விற்பனை இருக்கும். கடந்த 15 நாட்களில் எங்கள் கடைகளில் 2,3 மடங்கு என்ற அளவில் விற்பனை நடந்து வருகிறது.

    இது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் ஜவுளி கடையில் ஊழியர்கள் சம்பளம், மின்சார செலவு மற்றும் பிற செலவுகள் அதிகரித்து உள்ளன. கடந்த 2 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் எங்களுக்கு ஓரளவு லாபம் கிடைத்து உள்ளது என்று தெரிவித்தனர்.

    மதுரை மாவட்டத்தில் 15 நாட்களில் மட்டும் ரூ.150 கோடி என்ற அளவில் ஜவுளிக்கடைகளில் விற்பனை நடந்துள்ளது தெரியவந்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பட்டாசு விற்பனை களைகட்டி வருகிறது. இது குறித்து பட்டாசு விற்பனை யாளர்கள் கூறுகையில், சிவகாசியில் இருந்து ஒட்டுமொத்தமாக பட்டாசுகளை கொள்முதல் செய்து சில்லரைக்கு விற்பனை செய்து வருகிறோம்.

    இப்போது புதிய புதிய ரகங்களில் பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், சிவகாசி பட்டாசுகளின் விலை அதிகரித்து உள்ளது. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில், சிவகாசியில் இருந்து புதிய புதிய ரகங்களில் பட்டாசுகளை வாங்கி வந்து விற்பனை செய்கிறோம்.

    அவற்றின் விலை சிறிது அதிகமாக உள்ளது. இதனை பொதுமக்கள் பார்த்து ரசிக்கிறார்களே தவிர, பெரிய அளவில் வாங்குவதற்கு ஆர்வம் செலுத்துவதில்லை. மதுரை மாவட்டத்தில் பட்டாசு கடைகளை போட அரசு மற்றும் போலீசார் அதிக அளவில் கெடுபிடி செய்தனர்.

    இதன் காரணமாக மாவட்ட அளவில் 300-க்கும் உள்ளிட்ட கடைகள் மட்டுமே விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. மதுரை மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக 2-3 கோடி ரூபாய்கள் வரை விற்பனை நடந்து உள்ளது. இதில் முதலீடு கழித்து பார்த்தால், எங்களுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். இதனை வைத்து கொண்டு ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்க முடியும்" என்றனர்.

    • பஸ்-ரெயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
    • நாளை தீபாவளி பண்டிகை

    அரியலூர்

    தீபாவளி பண்டிகை நாளை(திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. வெளியூர்களில் வசிப்பவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். மேலும் நேற்று முன்தினம் முதல் தொடர் முறை வந்ததால் ஏராளமானவர்கள் பஸ்கள், ரெயில்கள் மூலம் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர். இதனால் அரியலூரில் பஸ்கள் மற்றும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது."

    • தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் வாயிற் கூட்டம் நடந்தது.
    • போனஸ் குறித்தும் சிறப்புரையாற்றினார்

    கரூர்

    புகழூர் காகித ஆலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் வாயிற் கூட்டம் காகித ஆலை 4-வது கேட் அருகே நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் அண்ணாவேலு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் கலந்து கொண்டு தொழிலாளர்களிடையே காகித ஆலையின் செயல்பாடு குறித்தும், காகித ஆலை சார்பில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட போனஸ் குறித்தும் சிறப்புரையாற்றினார். இதில் காகித ஆலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்."

    • கடைவீதிகளில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தருகின்றனர்.
    • மழை இல்லாததால் வியாபாரிகள் உற்சாகம்

    புதுக்கோட்டை

    தீபாவளி பண்டியை புதுக்கோட்டை மக்கள் நாளை சிறப்பாக கொண்டாட தயார் ஆகி வருகின்றனர். இரண்டு ஆண்டுகள் கொரேனா தொற்று காரணமாக தீபாவளி கொண்டாட்டங்கள் மந்தகதியில் இருந்தன. தற்போது கொரோனா தொற்று குறைந்த நிலையில் மக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாட முன்வந்துள்ளனர்.

    துணிகடைகள் மற்றும் இனிப்பு கடைகள் மட்டுமின்றி நகைகடைகளிலும் இந்த ஆண்டு மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. குறிப்பாக கீழராஜவீதி, நகை கடை வீதி, வடக்கு ராஜவீதி, மேலராஜவீதி, பழைய பேரூந்து நிலையம், புதிய பேரூந்து நிலையம், அண்ணாசிலை போன்ற பகுதிகளில் மக்களின் படையெடுப்பால் எங்கும் பார்த்தாலும் மக்களின் தலைகள்தான் தெரிகிறது. இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக சாரல் மற்றும் பலத்த மழை காரணமாக வியாபாரம் மந்தமாக இருந்தது. இந்நிலையில் நேற்று முழுவதும் மழை பெய்யாத காரணத்தினால் மக்கள் தீவிரமாக பொருட்கள் வாங்கிவருகின்றனர். இதனால் வியாபாரிகளும் நம் போட்ட முதலீட்டை நல்ல லாபத்துடன் எடுத்துவிடலாம் என்று உற்சாகத்துடன் வியாபாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

    மக்கள் கூட்டம் அலை மோதுவதால் காவல் துறையினர் கீழராஜவீதியில் பிரத்தியோமாக கண்காணிப்பு நிலையம் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக பொருட்கள் வாங்க வேண்டும். அறிமுகம் தெரியாத நபர்களிடம் பேச்சு கொடுக்க வேண்டாம் என்று அவ்வப்போது எச்சரிக்கை செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு துறையினர் சார்பாகவும், தனியார் தொண்டு நிறுவனம் சார்பாகவும் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்களை நகர் முழுவதும் கொடுத்து வருகின்றனர். ஆக மொத்தத்தில் இந்த வருடம் தீபாவளி வியாபாரிகளுக்கும், மக்களுக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதில் எந்த ஐயமில்லை.

    • முதுகுளத்தூரில் பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது.
    • கழிவுநீர் பல இடங்களில் தேங்கி கிடக்கிறது

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சி கவுன்சில் கூட்டம் சேர்மன் ஏ.ஷாஜஹான் தலைமையில், நிர்வாக அதிகாரி மாலதி முன்னிலையில் நடந்தது. ராஜேஷ் வரவேற்றார்.

    மோகன்தாஸ் (7-வது வார்டு தி.மு.க.) பேசுகையில், சங்கராண்டி ஊரணி பகுதியில் மழைநீர் தேங்கி சகதியாக உள்ளதால் டூவீலர் கூட செல்லமுடியவில்லை. உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றார்.

    செயல் அலுவலர்: அந்த சாலையில் மக்கடம் அடிக்கப்படும்.

    மோகன்தாஸ்: முதுகுளத்தூர் நகர் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் சர்வேசெய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    சேகர் (10-வது வார்டு): தினசரி சந்தையை ஒழுங்குபடுத்த வேண்டும். கழிவறையில் விலைப் பட்டியல் வைக்க வேண்டும்.

    பால்சாமி (9-வது வார்டு): கழிவுநீர் பல இடங்களில் தேங்கி கிடக்கிறது. சேர்மன்: கழிவுநீர் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

    • தீபாவளி விற்பனை களை கட்டியது
    • போலீசார் பஸ் நிலையங்களிலும் ரோந்து பணியை மேற்கொண்டனர்.

    நாகர்கோவில்:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது.

    நாகர்கோவில் நகரில் உள்ள அனைத்து கடைவீதிகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. செம்மாங்குடி ரோடு பகுதியில் உள்ள கடைகளில் புத்தாடைகள் எடுக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்திருந்தனர்.இதனால் அந்தச் சாலையில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டது.இதே போல் வடசேரி, கலெக்டர் அலுவலகம், மீனாட்சிபுரம் சாலைகளில் உள்ள கடைவீதிகளிலும் பொதுமக்கள் புத்தாடைகள் எடுக்க குவிந்திருந்தனர்.

    கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியதையடுத்து போலீசார் மப்டி உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.வடசேரி பஸ் நிலையம் மற்றும் அண்ணா பஸ் நிலையங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.இதையடுத்து போலீசார் பஸ் நிலையங்களிலும் ரோந்து பணியை மேற்கொண்டனர். கேமரா பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.போலீசார் ரோந்து சுற்றி வருவதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மார்த்தாண்டம், அஞ்சுகிராமம், குளச்சல், தக்கலை பகுதிகளில் உள்ள கடைவீதிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. பட்டாசு கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. பட்டாசு கடைகளில் பட்டாசுகள் வாங்குவதற்கு இளைஞர்கள் ஏராளமானோர் வந்திருந்த னர். அவர்கள் பல்வேறு விதமான பட்டாசுகளை ஆர்வமாக வாங்கி சென்றனர் .நாகர்கோவில் நகரில் உள்ள பேக்கரிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

    நாகர்கோவில் நகரில் உள்ள கடைவீதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதையடுத்து கடுமையான போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட் டது. செட்டிகுளம் வேப்பமூடு, வடசேரி பகுதிகளில் வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடி யில் சிக்கித் தவித்தது. நாகர்கோவில் ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    போலீசார் பிளாட்பா ரங்களில் ரோந்து சுற்றி வந்தனர். குழித்துறை, இரணியல், நாங்குநேரி ரெயில் நிலையங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.நாகர்கோவில் டவுன் ெரயில் நிலையத்திலும் போலீசார் பிளாட்பாரங்களில் ரோந்து சுற்றி வந்தனர்.

    • தாரமங்கலம் நகராட்சி மன்ற கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • அதனை தொடர்ந்து நகராட்சி மயானத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய நகராட்சிக்கு ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சி மன்ற கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார்.

    துணைத்தலைவர் தனம், ஆணையாளர் முஸ்தப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகராட்சியின் 20-வது வார்டு கிழக்கு பாவடி தெரு பகுதியில் குப்பை அறைக்கும் கிடங்கு அமைக்க நகராட்சி நிர்வாகம் டெண்டர் விட்டப்பட்டு அதற்கான பூமி பூஜை போடப்பட்ட போது அதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதன் விளைவாக நகராட்சி நிர்வாகம் இந்த திட்டத்தை வேறு இடத்திற்கு அதாவது மீண்டும் சின்னா–கவுண்டம்பட்டி பகுதியில் அமைப்பதாக உறுதி செய்து தீர்மானிக்கபட்டது.

    அதனை தொடர்ந்து நகராட்சி மயானத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய நகராட்சிக்கு ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பேசிய 7-வது வார்டு உறுப்பினர் தேன்மொழி, 3-வது வார்டு உறுப்பினர் குமரேசன் ஆகியோர் நகராட்சி பகுதியில் சாக்கடை மற்றும் மழை நீர் அதிக அளவில் தேங்குவதால் கொசு, கிருமிகளால் வைரஸ் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளோம்.

    எனவே இந்த நிலைமை பொதுமக்களுக்கும் வந்து விட கூடாது என்பதால் சுகாதார பணிகளை தீவிர படுத்தவேண்டும் என்றனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் 4 பேரை தவிர மற்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர், மன்றத்தில் மொத்தம் 51 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • கிராம வறுமை குறைப்பு திட்ட கூட்டம் நடைபெற்றது.
    • செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம வறுமை குறைப்பு திட்ட கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) தமிழரசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வாழ்வாதார இயக்க செந்துறை வட்டார ஒருங்கிணைப்பாளர் வேம்பு, கிராம வறுமை ஒழிப்பு திட்டம் குறித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார பணியாளர்கள் ஒவ்வொரு ஊராட்சியிலும் கணக்கெடுப்பு நடத்த வருவார்கள். அவர்கள் கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், வடிகால் வாய்க்கால், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு புள்ளி விவரங்களை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளரிடம் கேட்பார்கள். அவர்களுக்கு ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்றார். இந்த கூட்டத்தில் செந்துறை ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்."

    • வேளாண்மை விரிவாக்க மையக் கூட்டரங்கில் வட்டார தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நடந்தது.
    • இத்திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு சென்றடையும் தொழில் நுட்பங்கள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கூட்டரங்கில் வட்டார தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நடந்தது. நாமக்கல் வட்டார வேளாண்மை அலுவலர் ரசிகபிரியா முன்னிலை வகித்தார். விவசாயிகள் ஆலோசனைக் குழுத் தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். இதில் அட்மா திட்டத்தின் செயல்பாடுகள், திட்டநோக்கம், திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு சென்றடையும் தொழில் நுட்பங்கள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதில், நாமக்கல் வட்டார வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர் தங்கவேல், கால்நடை உதவி மருத்துவர் வெள்ளைசாமி, தோட்டக்கலை அலுவலர் பூர்ணிமா, பட்டு உதவி ஆய்வாளர் சாந்தி, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் கங்காதரன் ஆகியோர் பங்கேற்று துறை சார்ந்த மானியத்திட்டங்கள், தொழில்நுட்பம் சார்ந்த சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர். மேலும் அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் அட்மா திட்ட பணியின் முன்னேற்றம் குறித்தும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.

    ×