search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அட்மா திட்ட விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
    X

    அட்மா திட்ட விவசாயிகள் கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    அட்மா திட்ட விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

    • வேளாண்மை விரிவாக்க மையக் கூட்டரங்கில் வட்டார தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நடந்தது.
    • இத்திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு சென்றடையும் தொழில் நுட்பங்கள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கூட்டரங்கில் வட்டார தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நடந்தது. நாமக்கல் வட்டார வேளாண்மை அலுவலர் ரசிகபிரியா முன்னிலை வகித்தார். விவசாயிகள் ஆலோசனைக் குழுத் தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். இதில் அட்மா திட்டத்தின் செயல்பாடுகள், திட்டநோக்கம், திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு சென்றடையும் தொழில் நுட்பங்கள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதில், நாமக்கல் வட்டார வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர் தங்கவேல், கால்நடை உதவி மருத்துவர் வெள்ளைசாமி, தோட்டக்கலை அலுவலர் பூர்ணிமா, பட்டு உதவி ஆய்வாளர் சாந்தி, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் கங்காதரன் ஆகியோர் பங்கேற்று துறை சார்ந்த மானியத்திட்டங்கள், தொழில்நுட்பம் சார்ந்த சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர். மேலும் அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் அட்மா திட்ட பணியின் முன்னேற்றம் குறித்தும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.

    Next Story
    ×