என் மலர்
நீங்கள் தேடியது "தீ"
- கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 40 ஆயிரம் வாகனங்களுக்கு மேல் செல்கிறது.
- நீரோடையில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்.
பல்லடம் :
பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் நீரோடை செல்கிறது. இந்த நீரோடையின் மேல் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் அருகில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைகளுக்கு தீ வைத்துள்ளனர். குப்பைகளில் பற்றிய தீ கொழுந்துவிட்டு எரிந்தது.இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தண்ணீரை எடுத்து தீயை அணைத்தனர். கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 40 ஆயிரம் வாகனங்களுக்கு மேல் செல்கிறது.இந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-நீரோடையில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும். குப்பைகளை கொட்டி நீரோடையை அசுத்தப்படுத்தி வருகின்றனர். மேலும் அடிக்கடி குப்பைகளுக்கு தீ வைத்து விடுகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
மேலும் கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. குப்பைகளில் வைக்கப்படும் தீ பரவி வாகனங்களில் பட்டால் பெரிய விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்தப் பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- படகில் சமையல் செய்யும்போது எதிர்பாராமல் திடீரென ஸ்டவ் டியூபில் தீப்பற்றியது.
- தீ மளமளவென பரவி ஜி.பி.எஸ்., எக்கோ சவுண்டு, ஒயர்லெஸ் ஆகியவற்றுள் பரவி எரிந்து நாசமானது.
கன்னியாகுமரி:
குளச்சல் துறைமுகத் தெருவைச் சேர்ந்தவர் டொனோட்டஸ் (வயது 38). இவர் சொந்தமாக விசைப்படகு வைத்து மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற இவரது படகு, நேற்று மாலை கரை திரும்பியது. படகை தொழிலாளர்கள் குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தியிருந்தனர்.
பின்னர் படகின் சமையல் செய்யும் அறையில் தொழிலாளர்கள் கேஸ் ஸ்டவ்வில் சமையல் செய்து கொண்டிருந்தனர்.அப்போது எதிர்பாராமல் திடீரென ஸ்டவ் டியூபில் தீப்பற்றியது. இதனை பார்த்த தொழிலாளர்கள் பீதியில் படகிலிருந்து வெளியேறி வெளியே வந்தனர்.
அதற்குள் தீ மளமளவென ஜி.பி.எஸ்., எக்கோ சவுண்டு, ஒயர்லெஸ் ஆகியவற்றுள் பரவி எரிந்து நாசமானது. இதில் படகின் மேற்கூரையும் எரிந்து நாசமானது.உடனே மீனவர்கள் குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று படகில் பரவிய தீயை அணைத்தனர். அருகில் படகுகளுக்கு டெம்போவில் கொண்டு வரப்பட்ட தண்ணீரையும் மீனவர்கள் பீய்ச்சி அணைத்தனர். படகில் மீன்கள் பதப்படுத்தி வைத்திருந்த அறையில் தீ பரவவில்லை. இதனால் பிடித்து வரப்பட்ட பல லட்சம் மதிப்பிலான மீன்கள் தப்பின. இந்த சம்பவத்தால் நேற்றிரவு குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர்களிடையே திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- ரோட்டோரம் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளுக்கு யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து எரித்து உள்ளனர்.
- கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து எரித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள தேவிகோடு தோரணவிளையை சேர்ந்த வர் செல்லன். இவது மகன் மகேஷ் (வயது 20).
இவர் கடந்த 28-ம் தேதி மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார்.அப்போது டயர் பஞ்சர் ஆகி உள்ளது. எனவே மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்தி விட்டு வேலைக்குச் சென்று உள்ளார்.
நேற்று மோட்டார் சைக்கிளை எடுத்து வர ஊழியருடன் சென்றார். அங்கு அவரது மோட்டார் சைக்கிள் எரிந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ரோட்டோரம் நிறுத்தி யிருந்த மோட்டார் சைக்கி ளுக்கு யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து எரித்து உள்ளனர்.
இது குறித்து கருங்கல் போலீஸ் நிலையத்தில் மகேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து எரித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- கணவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டு வந்ததனால் மனவேதனை
- இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
இரணியல் அருகே உள்ள பேயன்குழி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்சாமி (வயது 38), தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (35). இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்நிலையில் சாந்தி கடந்த 10-ந்தேதி மதியம் வீட்டில் இருந்த மண்எண்ணை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று சாந்தி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சாந்தியின் தாயார் ராமலட்சுமி (52) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அருள்சா மிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.
மேலும் அவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் மனவேதனை அடைந்த சாந்தி மண்எண்ணை ஊற்றி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகி றார்கள்.
- சேலம் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் நட்சத்திர ஓட்டல்களில் தீ தடுப்பு மற்றும் தீ விபத்து ஏற்படும்போது செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
- ஓட்டல்களில் உள்ள செக்யூரிட்டி, மேலாளர் மற்றும் ஊழியர்களுக்கு செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் வேலு உத்தரவின் பேரில், நட்சத்திர ஓட்டல்களில் தீ தடுப்பு மற்றும் தீ விபத்து ஏற்படும்போது செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி, சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா அருகே உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில், சூரமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் தீ விபத்து ஏற்படும் போது, அதை தடுக்க செய்ய வேண்டிய நடவடிக்கைகள், தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து, ஓட்டல்களில் உள்ள செக்யூரிட்டி, மேலாளர் மற்றும் ஊழியர்களுக்கு செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
- போலீசார் விசாரணையில் மின் கசிவால் வீடு தீப்பிடித்து இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
- பொதுமக்கள் அவசரம் அவசரமாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்
கன்னியாகுமாரி:
ராஜாக்கமங்கலம் துறை சகாய மாதா தெருவை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 44). இவர் தன்னுடைய வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று காலை இவர் குடும்பத்துடன் தனது உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுவிட்டார். நண்பகல் 1 மணியளவில் அவரது வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதை பார்த்த பொதுமக்கள் அவசரம் அவசரமாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதில் வீட்டிலிருந்த சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின.
பின்னர் சசிகுமார் வந்த பிறகு எரிந்த வீட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் ராஜாக்கமங்கலம் போலீசுக்கு தகவல் கொடுத்தார் தகவலின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். போலீசார் விசாரணையில் மின் கசிவால் வீடு தீப்பிடித்து இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
- நாமக்கல் கலெக்டர் அலுவலகம் பின்புறம் மாவட்ட தோட்டக்கலை தொழில் நுட்ப ஆதார மைய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இருந்து இன்று காலை கரும்புகை வெளியேறியது .இதனை பார்த்த காவலாளி நல்லி பாளையம் போலீசாருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார்.
- தீ கொளுந்து விட்டு எரிந்ததால் அருகில் செல்ல முடியவில்லை. இதனால் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் ½ மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் பின்புறம் மாவட்ட தோட்டக்கலை தொழில் நுட்ப ஆதார மைய அலுவலகம் உள்ளது.
தீ விபத்து
இந்த அலுவலகத்தில் இருந்து இன்று காலை கரும்புகை வெளியேறியது .இதனை பார்த்த காவலாளி நல்லி பாளையம் போலீசாருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயைணப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் தீ கொளுந்து விட்டு எரிந்ததால் அருகில் செல்ல முடியவில்லை. இதனால் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் ½ மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் அங்கிருந்த மேஜை மற்றும் நாற்காலிகள் எரிந்து நாசமானது.
கலெக்டர் விசாரணை
இதற்கிடையே அங்கு வந்த கலெக்டர் ஸ்ரேயா சிங் தீ விபத்துக்கான காரணம் குறித்து கேட்டறிந்தார். மேலும் தீ விபத்து நடந்த இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தள்ளது . மேலும் வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும் போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் இன்று காலை கலெக்டர் அலுவலக பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 2 மோட்டார் சைக்கிள் எரிந்து நாசம்
- தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்
நாகர்கோவில்:
நாகர்கோவில் இருளப்பபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன்.
இவர் ஏ.ஆர். கேம்ப் ரோட்டில் லாரி ஒர்க் ஷாப் வைத்துள்ளார். நேற்று காலை வழக்கம் போல் மாரியப்பன் ஒர்க் ஷாப்பை திறந்து பணியில் ஈடுபட்டார். வேலை முடிந்து இரவு 7.45 மணிக்கு ஒர்க் ஷாப்பை பூட்டி விட்டு மாரியப்பன் வீட்டிற்கு சென்றார். இரவு 9.30 மணி அளவில் அவரது ஒர்க் ஷாப்பில் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் மாரியப்பனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மாரியப்பன் சம்பவ இடத்திற்கு வந்தார்.
நாகர்கோவில் தீய ணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது லாரி ஒர்க் ஷாப்பில் நிறுத்தப்பட்டு இருந்த 2 மோட்டார் சைக்கிள்க ளும் அங்கு நின்ற லாரியும் தீயில் எரிந்தது.தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இதுகுறித்து நேசமணி நகர் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சார் சம்பவ இடத் திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருப்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
லாரி ஒர்க் ஷாப்பில் நிறுத்தப்பட்டு இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அனைத்து வார்டு பகுதிகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை எடுத்து வர 23 வாகனங்கள் இயங்கி வருகின்றன.
- ஆறுமுகநேரி ரெயில் நிலையம் செல்லும் வழியில் ஒதுக்குப்புறமான இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறுமுகநேரி பேரூராட்சி 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பெரிய பேரூராட்சி ஆகும்.
18 வார்டுகளிலும் இங்கு அன்றாடம் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் ஆறுமுகநேரி பேரூராட்சி அலுவலகத்தின் எதிரே ஒரு ஏக்கர் பரப்பளவில் நீண்ட காலமாக கொட்டப்பட்டு வந்தது.இதனால் அப்பகுதி சுகாதாரக் கேடு நிறைந்ததாக காணப்பட்டது.
இதனால் இந்த குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என்றும், வேறு இடத்தில் புதிதாக குப்பை கிடங்கை அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து கலாவதி கல்யாணசுந்தரம் தலைவராகவும், தி.மு.க. பிரமுகரான கல்யாண சுந்தரம் துணை தலைவ ராகவும் பொறுப்பு ஏற்றனர். இவர்களின் தீவிர முயற்சியால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி. ஆகியோர் நவீன எந்திரங்களின் மூலம் குப்பையை அகற்றும் பணிக்காக ரூ.1.44 கோடி செலவிலான திட்டத்தை செயலுக்கு கொண்டு வந்தனர்.
இதன்படி அங்கு குப்பைகளை பிரித்தெடுத்து உரமாக மாற்றப்பட்டு வருகிறது.இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
அனைத்து வார்டு பகுதிகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை எடுத்து வர லாரிகள், டிராக்டர்கள், மினி வேன்கள், பேட்டரி வாகனங்கள் என மொத்தம் 23 வாகனங்கள் இயங்கி வருகின்றன.மேலும் நிரந்தர பணியிலும், ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் 60 பேர் செயல்பட்டு வருகின்றனர்.ஒருங்கிணைந்த இந்த தூய்மை பணியில் தினம்தோறும் மலை அளவிற்கு சேகரிக்கப்படும் குப்பைகளை எங்கே கொட்டுவது என்பதுதான் புதிய பிரச்சினையாக உள்ளது.
ராணிமகாராஜபுரம் அருகே காட்டுப்பகுதியில் சில நாட்கள் குப்பைகள் கொட்டப்பட்டன.ஆனால் இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து குப்பை எடுத்துச் செல்லும் வாகனங்களை மறித்தனர்.
இதன் பின்னர் அடைக்கலாபுரம் அருகே ஒதுக்குப்புறத்தில் குப்பைகள் போடப்பட்டன.இதற்கும் எதிர்ப்பு எழுந்ததால் ஆறுமுகநேரி 4-வது வார்டு குளக்கரை அருகே குப்பைகளை போடும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இப்படியாக 10 நாட்களில் குப்பை கொட்டும் இடங்களை மக்கள் பந்தாடியதால் என்ன செய்வது என்று தெரியாமல் பேரூராட்சி நிர்வாகம் திக்குமுக்காடியது.
இதனிடையே 4-வது இடமாக ஆறுமுகநேரி ரெயில் நிலையம் செல்லும் வழியில் ஒதுக்குப்புறமான இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன.இந்த நிலையில் நேற்று மதியம் அந்த குப்பை கிடங்கில் திடீரென தீ பற்றி எரிந்தது.
இதனால் செல்வ ராஜபுரம் பெரியான்விளை, கீழசண்முகபுரம் ஆகிய குடியிருப்பு பகுதிகள் புகைமண்டலமாக மாறியது.இது சிறுவர்கள், பெரியோர்கள் என அனைத்து தரப்பினரை யும் அவதிப்பட வைத்தது.
இதனால் செல்வராஜபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆறுமுகநேரி ரெயில்வே கேட் அருகில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதன் காரணமாக திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து முடங்கியது.
இது பற்றி தகவல் அறிந்ததும் ஆறுமுகநேரி சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதனிடையே திருச்செந்தூரில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு குப்பை கிடங்கில் பரவிய தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.
ஏற்கனவே ஆறுமுகநேரி பேரூராட்சியின் சார்பில் நவீன முறையிலான குப்பை கிடங்கு அமைப்பதற்காக புதிய இடத்தை தேர்வு செய்ய தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி விரைவில் குப்பை கொட்டும் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- துளசிமணியின் சேலையில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது.
- பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள கருமாண்டி செல்லிபாளையம், எல்லப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் என்பவரது மனைவி சாந்தி (48). இவர் தனது தாயார் துளசி மணி மற்றும் இளைய மகள் சரண்யா பிரபா ஆகியோருடன் அதே பகுதியில் குடியிருந்து விவசாயம் செய்து வருகிறார்.
கடந்த 5 நாட்களுக்கு முன்பு துளசி மணி வீட்டுக்கு முன்பு இருந்த காலி இடத்தில் பழைய துணிகளை போட்டு தீ வைத்து எரித்துக் கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென அவரது அலறல் சத்தம் கேட்டு சாந்தியும் அவரது மகளும் வெளியே வந்து பார்த்தனர்.
துளசிமணியின் சேலையில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அருகில் கிடந்த சாக்குப் பையை எடுத்து தீயை அணைத்த னர். இருப்பினும் துளசி மணியின் தலையைத் தவிர உடல் முழுவதும் தீக்கா யங்கள் ஏற்பட்டிருந்தது.
உடனடியாக அவர்கள் ஒரு ஆட்டோவை வரவழைத்து அங்கிருந்த வர்கள் உதவியுடன் பெருந்துறை யில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி துளசி மணி பரிதாபமாக இறந்து போனார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- மோகனூர் செல்லும் சாலையில் அணியாபுரத்துக்கும், கால்நடை மருத்துவ கல்லூரிக்கும் இடையே சுமார் 10 கிலோமீட்டர் நீளத்திலும், 2 கிலோ மீட்டர் அகலத்திலும் சருவ மலை உள்ளது.
- இந்நிலையில் சருவ மலையில் நேற்று மாலை அணியாபுரம் கொங்குளத்தூர், மாரியம்மன் கோவில் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் அணியாபுரத்துக்கும், கால்நடை மருத்துவ கல்லூரிக்கும் இடையே சுமார் 10 கிலோமீட்டர் நீளத்திலும், 2 கிலோ மீட்டர் அகலத்திலும் சருவ மலை உள்ளது.
மேய்ச்சல் நிலம்
இந்த மலையை சுற்றி அணியாபுரம், தோளூர் எம்.ராசாம்பாளையம், மணியாரம்புதூர், கணவாய்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்கள் உள்ளன. இந்த சருவ மலையில் ஏராளமான பல்வேறு வகையான மரங்கள், செடி, கொடிகள் உள்ளன. இந்த மலையை சுற்றி வசிக்கும் கிராம மக்கள், தங்களது கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாக இந்த சருவ மலையை பயன்படுத்தி வருகின்றனர். கால்நடைகளை தினசரி ஓட்டிச் சென்று மேய்த்து வருகின்றனர்.
தீப்பிடித்தது
இந்நிலையில் சருவ மலையில் நேற்று மாலை அணியாபுரம் கொங்குளத்தூர், மாரியம்மன் கோவில் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. காற்று வேகமாக வீசியதால் இந்த தீ மளமளவென எரிந்து சுமார் 7 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பரவியது. இதனால் சருவ மலையில் உள்ள ஏராளமான மரங்கள் எரிந்து சாம்பலாயின.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவக்குமார் தலைமையிலான வீரர்கள் சருவ மலையில் தீ எரிந்து கொண்டிருக்கும் பகுதிக்கு விரைந்தனர். இந்த மலையில் எந்த பகுதியிலும் சாலை வசதி இல்லாததால், தீயணைப்பு வீரர்களால் தீ எரிந்து கொண்டிருந்த பகுதிக்கு செல்ல முடியவில்லை.
பலவகை மரங்கள் எரிந்து நாசம்
இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் மலைப்பகுதியில் ஏறி, அங்குள்ள செடி, கொடிகளை கொண்டு தீயை அணைத்துக் கொண்டிருந்தனர். இந்த தீயால் நேற்று இரவு அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினரும் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் சேர்ந்து வனத்துறையினரும், இரவு முழுவதும் போராடி சுமார் 1.30 மணியளவில், தீயை முழுவதுமாக அனைத்து கட்டுப்படுத்தினர்.
இருப்பினும் தீயில் சருவ மலையில் இருந்த பல்வேறு வகையான மரங்கள் எரிந்து நாசமாயின. இதுபோன்று சருவமலையில் அடிக்கடி தீ ஏற்படுவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
- கடந்த சில நாட்களாக வறட்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
- தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
கோத்தகிரி
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வறட்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் செடி, கொடிகள் மற்றும் புல்வெளிகள் காய்ந்து காணப்படுகிறது. இந்த நிலையில் கோத்தகிரி அருகே ஜக்கனாரை கிராமத்தில் இருந்து அந்தமொக்கை கிராமத்திற்கு செல்லும் சாலையோரம் மலைப்பகுதியில் வளர்ந்திருந்த காய்ந்த புல்வெளிகள் மற்றும் செடிகொடிகள் திடீரென பற்றி எரிய தொடங்கின. இதனைக்கண்ட அந்த பகுதி மக்கள் உடனடியாக கோத்தகிரி தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சிறப்பு தீயணைப்பு நிலைய அலுவலர் மாதன் தலைமையில், விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல ஏக்கர் பரப்பில் இருந்த புல்வெளிகள் எரிந்து புகைமண்டலமாக காட்சியளித்தது. இதன் காரணமாக அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.