என் மலர்
நீங்கள் தேடியது "சிகிச்சை"
- சிகிச்சையின்போது 2 முறை உயிருக்கு ஆபத்தான கட்டத்தை சந்தித்தார்.
- தீவிர சிகிச்சை மூலம் போப் பிரான்சிஸ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
போப் ஆண்டவர் பிரான்சிஸ், உடல்நல பாதிப்பால் கடந்த பிப்ரவரி 14-ந்தேதி, இத்தாலியில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு நடந்த பரிசோதனையில் 2 நுரையீரலிலும் நிமோனியா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையின்போது 2 முறை உயிருக்கு ஆபத்தான கட்டத்தை சந்தித்தார். தீவிர சிகிச்சை மூலம் போப் பிரான்சிஸ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் அபாய கட்டத்தை தாண்டி இருந்தார்.
கடந்த 6-ந்தேதி போப் பிரான்சிஸ் ஒரு ஆடியோ செய்தியை வெளியிட்டார். அதன்பின் 16-ந்தேதி அவரது புகைப்படத்தை வாடிகன் வெளியிட்டது.
இந்த நிலையில் போப் பிரான்சிஸ் இன்று மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
5 வார கால சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து போப் பிரான்சிஸ் டிஸ்சார்ஜ் ஆனார்.
38 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து திரும்பிய போப் பிரான்சிஸ், வாடிகனில் உள்ள தனது இல்லத்திற்குத் திரும்புவதற்கு முன்பு ஜெமெல்லி மருத்துவமனையில் இருந்தவாறு போப் மக்களை சந்தித்து பேசினார்.
- ஆலையில் டாரஸ் லாரியில் உள்ள தார்ப்பாய் கயிறுகளை அவிழ்க்கும் போது 40 கிலோ எடையுள்ள எட்டு நெல் மூடைகள் பிரம்ம நாயகத்தின் மீது சரிந்து விழுந்தது.
- உடனடியாக அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பலியானார்.
ஆரல்வாய்மொழி, அக்.27-
நாகர்கோவிலை அடுத்த சுசீந்தரம் யோகீஸ்வரர் தெருவை சேர்ந்தவர் பிரம்ம நாயகம் (வயது 54). இவர் நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தைச் சேர்ந்த பாபு என்பவர் க்கு சொந்தமான டாரஸ் லாரியை ஓட்டி வருகிறார்.கடந்த மாதம் 22-ந் தேதி நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து அரசுக்கு சொந்தமான நெல் மூட்டைகளை ஏற்றி ஆரல்வாய்மொழி அருகே உள்ள செண்பகராமன்புதூர் நவீன அரிசி ஆலைக்கு கொண்டு சென்றார்.
ஆலையில் டாரஸ் லாரியில் உள்ள தார்ப்பாய் கயிறுகளை அவிழ்க்கும் போது 40 கிலோ எடையுள்ள எட்டு நெல் மூடைகள் பிரம்ம நாயகத்தின் மீது சரிந்து விழுந்தது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். இவருக்கு சத்யகலா என்ற மனைவியும் ஹரிகனேஷ் என்ற மகனும் உமாமகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.
இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். நெல் மூடை கீழே விழுந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- குடற்புழு நீக்கம் செய்தல், சினை பரிசோதனை உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
- 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே உள்ள உம்பளப்பாடி ஊராட்சி இளங்கார்குடி கிராமத்தில் தமிழக அரசின் கால்நடை சுகாதார விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு ஊராட்சித் தலைவர் யசோதா சரவணன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், பாபநாசம் ஒன்றியக் குழு தலைவர் சுமதி கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக அனைவரையும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சச்சிதானந்தம் வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினராக ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு முகாமை தொடக்கி வைத்து, கால் நடைகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் அடங்கிய பொட்டலங்களை கால்நடை உரிமையாளர்களிடம் வழங்கினார்.
மேலும், சிறப்பாக விவசாயம் செய்த விவசாயிகளுக்கும் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பேசினார்.
முகாமில், கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல் முறை சிகிச்சை, குடற்புழு நீக்கம் செய்தல், சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
முகாமில் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மாவட்ட கால்நடை உதவி இயக்குநர் கண்ணன், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் பழனிவேல், கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கமித்ரா அபிவதி, சரவணன், ராஜா, கால்நடை ஆய்வாளர்கள் தமிழ்வாணன், தனலட்சுமி, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மதியழகன், சாந்தி மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் தஞ்சை பாதுஷா, தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, மாவட்ட செயலாளர் முஹம்மது மைதீன், மாவட்ட பொருளாளர் பக்ருதீன், கால்நடை வளர்ப்போர் உள்ளிட்ட பலா கலந்து கொண்டனர்.
- திடீரென ரிஸ்வான் கான் சென்ற கார் பள்ளி வேன் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
- 4 பேரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பேராவூரணி:
புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் செய்யது முகமது (வயது 35).
இவர் கிருஷ்ணாஜி பட்டினத்தில் நர்சரி, பிரைமரி பள்ளி நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கார்த்திகா (26), சத்யா (25) இரண்டு ஆசிரியைகள் மற்றும் 7 பள்ளி குழந்தைகளை பள்ளி வேனில் அழைத்துக் கொண்டு மல்லிப்பட்டினம் மனோராவிற்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக பள்ளி வேனில் வந்துள்ளார்.
அப்போது மல்லிப்பட்டினத்தில் இருந்து மணமேல்குடி செல்வதற்காக ரிஸ்வான் கான் என்பவர் நான்கு பேருடன் காரை ஓட்டிக்கொண்டு சென்றுள்ளார்.
அப்போது மனோரா அருகில் சென்ற போது திடீரென ரிஸ்வான் கான் சென்ற கார் பள்ளி வேன் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் பள்ளி தாளாளர் சையது முகமது சம்பவ இடத்திலேயே இறந்தார்.
வேனில் இருந்த பள்ளி ஆசிரியைகள் கார்த்திகா மற்றும் சத்யா இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.
பள்ளி குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
காரில் இருந்த ரிஸ்வான் கான் உள்ளிட்ட நால்வருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஆசிரியைகள் சத்யா, கார்த்திகா இருவரும் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காரில் சென்ற 4 பேரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுபற்றி சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சாமி தரிசனம் முடித்து திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி காரில் சென்றுள்ளனர்.
- கட்டுப்பாட்டை இழந்து கார் சாலை ஓரத்தில் உள்ள குளத்தில் கவிழ்ந்தது.
திருவாரூர்:
சென்னை கிழக்கு தாம்பரம் வால்மீகி தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 71). இவரது மனைவி பானுமதி (67). கணேசன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர்களது மகன் சாமிநாதன் (37), அவரது மனைவி லெட்சுமி (35). சாமிநாதன் சென்னையில் சொந்த தொழில் செய்து வருகிறார்.
சாமிநாதன் குழந்தை லட்சுமி நாராயணன் (வயது 1) ஆகியோர் சென்னையில் இருந்து திருவாரூரில் உள்ள குலதெய்வ கோவிலிலுக்கு காரில் வந்துள்ளனர்.
தரிசனம் முடித்து திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி காரில் சென்றுள்ளனர். காரை சாமிநாதன் ஒட்டி வந்துள்ளார். அப்போது விசலூர் என்கிற இடத்தில் கார் சென்ற போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள குளத்தில் கவிழ்ந்தது.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் திருவாரூர் தீயணைப்பு துறையினருக்கும், நன்னிலம் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் குளத்தில் அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து காரில் இருந்தவர்களை காப்பாற்ற முயற்சித்த போதும் கணேசன், பானுமதி, சாமிநாதன், ஒரு வயது குழந்தையான லட்சுமிநாராயணன் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.
லட்சுமி மட்டும் உயிருடன் இருந்த நிலையில் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நன்னிலம் காவல் –துறையினர் உயிரிழந்த நால்வரின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து காவல்–துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- வெண்ணாற்றங்கரை மாணவர் விடுதி அருகே உள்ள ஆற்றின் ஓரத்தில் தண்ணீரில் இறங்கியவாறு நின்றார்.
- தீயணைப்பு துறை வீரர்களை வரவழைத்து ரேவதியை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை பள்ளி அக்ரஹாரம் ஹரிநகரை சேர்ந்தவர் ரேவதி. இவர் மாரியம்மன் கோவில் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் வீட்டுக்கு நடந்து வரும் போது இவரது கழுத்தில் கிடந்த செயினை மர்மநபர்கள் அறுத்துக் கொண்டு ஓடியதாக கூறப்படுகிறது. இது குறித்து ரேவதி தனது குடும்பத்தினரும் கூறியுள்ளார் .
ஆனால் யாரும் இதனை கண்டு கொள்ளாததால் ஆத்திரமடைந்த ரேவதி திடீரென வெண்ணாற்றங்கரை மாணவர் விடுதி அருகே உள்ள ஆற்றில் ஓரத்தில் தண்ணீரில் இறங்கியவாறு நின்றார். வெகு நேரமாக தண்ணீரில் நின்று கொண்டிருந்தார்.
அவரது குடும்பத்தினர் கூப்பிட்டு பார்த்துட்டு பயனில்லை. இந்த நிலையில் இன்று தஞ்சை பள்ளி அக்ரஹரத்தில் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகியோரிடம் இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக மேயர், ஆணையர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு துறை வீரர்களை வரவழைத்து ரேவதியை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மல்லிப்பட்டினத்தில் இருந்து மணமேல்குடி சென்ற காரும், வேனும் மோதிக்கொண்டன.
- காயமடைந்தவர்கள் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
பேராவூரணி:
புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிபட்டினத்தில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து 6 மாணவ, மாணவிகளுடன் பள்ளி தாளாளர் செய்யது முகமது (வயது 35), ஆசிரியைகள் கார்த்திகா, சத்யா ஆகியோர் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மனோராவை சுற்றிப்பார்க்க வந்தனர்.
கடந்த 29-ந் தேதி ஒரு வேனில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக அவர்கள் வந்தனர். வேனை பள்ளி தாளாளர் செய்யது முகமது ஓட்டினார். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் மல்லிப்பட்டினத்தில் இருந்து மணமேல்குடி சென்ற காரும், வேனும் மோதிக்கொண்டன.
இதில் செய்யது முகமது, ஆசிரியைகள் கார்த்திகா, சத்யா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு செய்யது முகமது உயிரிழந்தார். ஆசிரியைகள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு கார்த்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள விளங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மகள்.இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆசிரியரின் இறப்பு கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சத்யாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சங்கரகுமார் ஏற்கனவே பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார்
- சம்பவத்தன்று பத்மலட்சுமி எறும்பு பொடியை தின்று வாயில் நுரை தள்ளியபடி கிடந்தார்.
கன்னியாகுமரி :
ஆசாரிபள்ளம் அருகே மேல பெருவிளை பகுதி யைச் சேர்ந்தவர் சங்கர குமார் மனைவி பத்ம லட்சுமி (வயது 59).
இவரது கணவர் சங்கரகுமார் ஏற்கனவே பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார். இவர் வீட்டில் அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு நடப்பது வழக்கம்.
சம்பவத்தன்று பத்மலட்சுமி எறும்பு பொடியை தின்று வாயில் நுரை தள்ளியபடி கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி பத்ம லட்சுமி பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் குறித்து அவரது மகள் தங்க சுபா கொடுத்த புகாரின் பேரில் ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வி.சாலை அகரம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது எதிர்பாராத விதமாக லாரி மீது பைக் மோதியது.
- உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திருக்கு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி அருகே கூட்டேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சகாதேவன் (வயது 52). வீடூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருந்தார். இவரது மகன் சஞ்சய் (18) இவர்கள் இருவரும் பைக்கில் கூட்டேரிப்பட்டு பகுதியில் இருந்து விழுப்புரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். சஞ்சய் இரு மோட்டார் சைக்கிளை ஓட்டினார். அப்போது வி.சாலை அகரம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது எதிர்பாராத விதமாக லாரி மீது பைக் மோதியது. இதில் விபத்தில் பைக்கில் இருந்து சஞ்சய் மற்றும் சகாதேவன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் சகாதேவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். மேலும் சஞ்சய்க்கு வலது கை எலும்பு முறிவு ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த விக்கிரவாண்டி போலீசார் சகாதேவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திருக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் படுகாயமடைந்த சஞ்சய் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மகன் கண்முன்னே தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கண்புரை, குழந்தைகளின் கண் நோய், கிட்ட பார்வை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது.
- கண் அறுவை சிகிச்சைக்காக 142 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மதுக்கூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா மதுக்கூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதுக்கூர் அரிமா சங்கம், மதுரை கண் அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தியது.
அரிமா சங்கத் தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.
இதில் கண்புரை, சக்கரை நோய், , குழந்தைகளின் கண் நோய், கிட்டப் பார்வை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது.
முகாமில் 398 பேர் சிகிச்சை பெற்றனர். இதில் கண் அறுவை சிகிச்சைக்காக மதுரை கண் அரவிந்த் மருத்துவமனைக்கு 142 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்களுக்கு உணவு, தங்குமிடம், போக்குவரத்து, கண் குறை அறுவை சிகிச்சை என எல்லாமே இலவசமாக வழங்கப்படுகிறது. முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
இதில் அரிமா சங்கத் தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- மூன்று பேரும் ராஜ்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர்.
- சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளா ங்கண்ணி செபஸ்தியார் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 30).
அதே பகுதியை சேர்ந்தவர் ரெனால்ட். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ராஜ்குமார் ரெனால்ட்டுக்கு ரூ.40,000 பணம் கொடுத்துள்ளார்.
கொடுக்க பணத்தை ராஜ்குமார் திரும்ப கேட்டார்.
இதில் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று ராஜ்குமார் வீட்டிற்கு வந்த ரெனால்ட் அவரது சகோதரர் ராகுல், நண்பர் திராவிட தமிழன் ஆகிய மூன்று பேரும் ராஜ்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர்.
அப்போது அதை தடுப்பதற்காக ராஜ்குமாரின் தம்பி கருணாகரன் வந்துள்ளார்.
அவரையும் மூன்று பேர் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றுள்ளனர்.
இதில் காயமடைந்த ராஜ்குமார் மற்றும் கருணாகரன் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ராஜ்குமார் வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
- பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்பட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
- சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அம்மாபேட்டை:
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டையில் வருமுன் காப்போம் மருத்துவமுகாம் நடைபெற்றது.
அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன் தலைமை தாங்கி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
அனைவரையும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் வரவேற்றார்.
ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், அமானுல்லா, மருத்துவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்மாபேட்டை வட்டார மருத்துவ அலுவலர் அஜந்தன் உரையாற்றினார்.
முகாமில் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இ.சி.ஜி., எக்ஸ்ரே உள்பட பல்வேறு பரிசோதனைகள் செய்து சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
முகாமில் அம்மாபேட்டை ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள்.
மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் சுகாதார ஆய்வாளர் பெரியண்ணன் நன்றி கூறினார்.