என் மலர்
நீங்கள் தேடியது "மார்க்கெட்"
- வண்டியில் எடுத்து செல்லும் போது கீழே விழுகின்றன.
- உரிமையாளர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலையில் நெல்லித்துறை ரோடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் செயல்பட்டு வருகிறது.
இந்த மண்டிகளுக்கு கர்நாடகம், குஜராத், கோலார், நீலகிரி, கர்நாடக மாநிலம் ஹாசன் ஆகிய பகுதியில் இருந்து தினமும் 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் உருளைக்கிழங்கு வருகிறது. இந்தக் கிழங்குகளை தரம் பிரித்து மொத்தமாகவும் சில்லரையாகவும் தமிழ்நாடு, கேரளா ஆகிய இடங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
தரம் பிரிக்கும் போது ஏற்படுகின்ற கழிவுகளை மண்டிகளில் கொட்டி வைத்து அதனை தினமும் ஊட்டி சாலையில் இருந்து சிறுமுகை செல்லும் சாலையில் உள்ள நேஷனல் பள்ளியின் பின்புறம் உள்ள ஒரு தோட்டத்தில் கொட்டி வருகின்றனர். அப்படி எடுத்துச் செல்லு ம்போது கழிவுகள் செல்லும் வழிகளில் எல்லாம் கொட்டுகின்றன. இதனால் கழிவுகளில் ஈ மொய்ப்பதுடன், துர்நாற்றமும் வீசி வருகிறது.
இதனால் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.இதன் காரணமாக நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது.
இதுகுறித்து கிழங்கு மண்டி உரிமையா ளர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே மாவட்ட நிர்வாகமும், மேட்டுப்பாளையம் தாசில்தார், நகராட்சி, மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கோவை டி.கே.மார்க்கெட்டில் தொடர் ெகாள்ளை சம்பவம் அரங்கேறியது
- கொள்ளையர்கள் இரும்பு கம்பியால் தொழிலாளியின் மண்டையை உடைத்து அங்கிருந்து தப்பி சென்றனர்.
கோவை,
தூத்துக்குடியை சேர்ந்தவர் மணி (35). இவர் கோவை டி.கே மார்க்கெட்டில் உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார்.சம்பவத்தன்று இரவு மணி கடையில் தூங்கி கொண்டிருந்தார்.அப்போது மர்மநபர்கள் 3 பேர் கடைக்குள் புகுந்து பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்தனர்.
இதை பார்த்த மணி அவர்களை பிடிக்க முயற்சித்தார். ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் தாங்கள் வைத்திருந்த இரும்பு கம்பியால் மணியின் மண்டையை உடைத்து அங்கிருந்து தப்பி சென்றனர்.
இது தொடர்பாக மணி கொடுத்த புகாரின் பேரில் பெரியகடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர்.
இந்த பகுதியில் தொடர்ந்து திருட்டு மற்றும் ெகாள்ளை சம்பவங்கள் நடப்பதாக வியாபாரிகளிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இதையடுத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், ஆர்.எஸ்.புரம் உதவி கமிஷனர் ரவிகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, உமா, போலீ–ஸ்காரர்கள் கார்த்தி, பூபதி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சாதாரண உடையில் இரவு மற்றும் பகல் நேரங்களில் டி.கே. மார்க்கெட்டில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
சம்பவத்தன்றும் தனிப்படையினர் ரோந்தில் ஈடுபட்டிருந்த போது, ஒரு கடையில் 3 கொள்ளையர்கள் உள்ளே புகுந்து கொள்ளை அடித்து கொண்டு இருந்தனர்.
உடனடியாக போலீசார் விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்த 3 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். போலீசார் விரட்டி சென்று, 3 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் கேரளாவை சேர்ந்த ரபீக் (வயது 50), ஈரோட்டை சேர்ந்த முத்துகுமார் மற்றும் கோகுல் என்பதும், இவர்கள் 3 பேரும் டி.கே. மார்க்கெட்டில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இந்த கும்பலுக்கு ரபீக் தலைவனாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பல தகவல்கள் தெரியவந்தன. ரபீக் கடந்த சில வருட–ங்களுக்கு முன்பு கோவை டி.கே மார்கெட்டில் கூலி வேலை பார்த்துள்ளார்.
ஆனால் அதில் அவருக்கு போதுமான வருமானம் கிடைக்காததால், கஞ்சா விற்க தொடங்கி உள்ளார். கஞ்சா வழக்கில் ரபீக் கைது செய்ய ப்பட்டு சிறையில் அடைக்க ப்பட்டார். அப்போது அவருக்கு, ஈரோட்டை சேர்ந்த முத்துகுமார் மற்றும் கோகுல் என்பவர்களின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவர்கள் மோட்டார் சைக்கிள் திருடுவது மற்றும் பூட்டு உடைப்பதில் வல்லவர்களாக இருந்துள்ளனர்.
ரபீக் அவர்களுடன் நண்பராகி உள்ளார். அப்போது, அவர்களிடம், நீங்கள் மோட்டார் சைக்கிள் திருடுவதில் அதிகளவு சிரமம் உள்ளது. நாம் 3பேரும் சேர்ந்து கடைகளில் கொள்ளையடிக்கலாம் என கூறியுள்ளார்.
அதற்கு அவர்கள் எங்கு போய் அடிப்பது என்று கேட்டதற்கு, ரபீக் நான் டி.கே. மார்க்கெட்டில் வேலை பார்த்துள்ளேன். அங்கு ஏராளமான கடைகள் உள்ளன. அங்ககு பணமும் அதிகளவில் இருக்கும். நாம் அங்கு சென்று கொள்ளையடித்து ஜாலியாக வாழலாம் என கூறியுள்ளார்.
அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்தனர். உடனே ரபீக் நான் முதலில் வெளியில் சென்று நீங்கள் தங்குவதற்கு இடம் மற்றும் கொள்ளையடிக்கும் திட்டத்தை தயார் படுத்தி வைக்கிறேன். நீங்கள் வந்த பின்னர் 3 பேரும் சேர்ந்து கொள்ளையடிக்கலாம் என கூறியுள்ளார்.
அதன்படியே வெளியில் வந்த ரபீக் நேராக கேரளாவில் தனது மகன் வேலை பார்க்கும் ரப்பர் தோட்டத்தில் வீடு பார்த்தார்.
இவர் விடுதலையான சில தினங்களில் கோகுலும், முத்துக்குமாரும் விடுதலையானார்கள். வெளியில் வந்த அவர்கள் 2 பேரும், ஈரோட்டில் மோட்டார் சைக்கிளை திருடி விட்டு நேராக அட்டப்பாடி வந்தனர்.
அவர்களை ரபீக் தனது வீட்டில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்துள்ளார். பின்னர் 3 பேரும் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளனர். அப்போது புத்தாண்டை இங்கு கொண்டாடி விட்டு, அதற்கு மறுநாள் சென்று கொள்ளையடிக்கலாம் என 3 பேரும் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி கேரளாவில் புத்தாண்டை கொண்டாடிவிட்டு மறுநாள் கோவை வந்து டி.கே.மார்க்கெட்டில் பொருட்கள் மற்றும் பணத்தை எடுத்து சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இதேபோல் டி.கே.மார்க்கெட்டில் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்த குனியமுத்தூரை சேர்ந்த அரவிந்த் (32), விமல்ராஜ் (25) என்பவர்களையும் போலீசார் கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கையால் வியாபாரிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
- தினசரி மார்க்கெட் பயன்பாட்டுக்கு வரும்போது, வெயில், மழை காலங்களில் சிரமமின்றி வியாபாரம் செய்ய முடியும்.
- பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் வசதிக்காக தினசரி மார்க்கெட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் நகராட்சியில் வாரந்தோறும் ஞாயிறு அன்று வார சந்தை செயல்பட்டு வருகிறது. தற்போது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் வசதிக்காக கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டம் 2021 -22, திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 81 லட்சம் மதிப்பீட்டில் தினசரி மார்க்கெட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த தினசரி மார்க்கெட்டில் 147 கடைகள் மற்றும் பாதுகாவலர் அறை, குடிநீர் வசதி, ஏடிஎம் அறை, உணவகம், கழிப்பறை, பாதுகாப்பு அறை, வாகன நிறுத்தம், சாலை வசதி ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த தினசரி மார்க்கெட் பயன்பாட்டுக்கு வரும்போது, வெயில், மழை காலங்களில் சிரமமின்றி வியாபாரம் செய்ய முடியும். இந்த பணியானது மே மாதம் இறுதிக்குள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
- மேற்கூரை அமைத்து தர விவசாயிகள் வலியுறுத்தல்
- மார்க்கெட் வளாகத்தில் உள்ள 75 கடைகளை பார்வையிட்டார்.
கன்னியாகுமரி:
தோவாளை பூ மார்க்கெட் வளாகத்தில் உள்ள 75 கடைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்கு மேற்கொள்ளப்படும் வியாபாரத்தையும் பார்வையிட்டார்.
தோவாளை பூ மார்க்கெட் வளாகத்தில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொள்ளும்போது தோவாளை மார்க்கெட் வளாகத்தில் மேற்கூரை அமைத்து தர விவசாயிகள் மற்றும் வணிகர்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். வேளாண் விற்பனைக்குழு மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
பின்னர் செண்பகரா மன்புதூரில் அமைந்துள்ள தென்னை மதிப்புக் கூட்டு மையத்திலுள்ள மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கும் எந்திரம், கரித்தூள் தயாரிக்கும் எந்திரம், தேங்காய் பவுடர் தயாரிக்கும் எந்திரம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
தென்னை மதிப்புக்கூட்டு மையத்திலுள்ள எந்தி ரங்களை இந்த மாத இறு திக்குள் முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.தொடர்ந்து, செண்பகரா மன்புதூர் நேரடி கொள் முதல் நிலையத்தை பார்வை யிட்டார். கொள்முதல் நிலையத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பிட வசதி செய்து தர விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துடன் பேசி முடிவெ டுப்பதாக தெரிவித்தார்.
பின்னர் செண்பகரா மன்புதூரில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் அமைக்கப்பட்டுள்ள சோலார் பம்ப்செட் மற்றும் சொட்டுநீர் பாசனத்தை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, வேளாண்மைத் துறையின் மூலம் திருப்பதிசாரம் கிராமத்தில் மண் ஆய்வுக்கூட வேளாண்மை அலுவ லர்களால் நடத்தப்பட்ட மண் ஆய்வு முகாமில் கலந்துகொண்டு மண் ஆய்வுக்கு மண் எடுக்கும் முறையை பார்வையிட்ட தோடு, மண் ஆய்வுக்கூடம், நடமாடும் மண் ஆய்வுக் கூடம், உரப்பரிசோ தனை நிலையம் ஆகியவற்றின் செயல்பாடுகளை விரிவாக ஆய்வு மேற்கொண்டார்கள்.
ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநர் ஹனிஜாய் சுஜாதா, தோட்டக்கலை துணை இயக்குநர் ஷீலா ஜாண், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் சில்வெஸ்டர் சொர்ணலதா, தோவாளை ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மதுரை வெங்காய மார்க்கெட்டுக்கு நாள்தோறும் 50 டன்னுக்கு குறையாமல் வெங்காய மூட்டைகள் வருகின்றன.
- எங்களுக்கு பல்லாயிரக் கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது என வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
மதுரை:
வெங்காயம் இல்லாத உணவை வீடுகளில் பார்க்க முடியாது. சமையலின் அத்தியாவசிய பொருட்களான வெங்காயம் தமிழகத்தில் போதிய அளவு விளைச்சல் இல்லாததால் வெளி மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
மதுரையில் கீழவெளி வீதியில் வெங்காயம் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து இந்த மார்க்கெட்டுக்கு வரும் வெங்காயம் பல்வேறு பகுதிகளுக்கு மூட்டை மூட்டையாக விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
வெங்காயம் குளிர்கால பருவ பயிராகும். தற்போது இந்தியா முழுவதும் கோடை காலம் என்பதால் வெங்காய பயிர் விளைச்சல் குறைந்துள்ளது. இருப்பினும் அண்டை மாநிலங்களில் இருந்து மதுரை வெங்காய மார்க்கெட்டுக்கு நாள்தோறும் 50 டன்னுக்கு குறையாமல் வெங்காய மூட்டைகள் வருகின்றன.
அவ்வாறு வரும் வெங்காயம் இங்கு நிலவும் அதிக வெப்ப சூழ்நிலை காரணமாக அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் மகாராஷ்டிராவில் இருந்து மதுரைக்கு லாரிகளில் வந்த சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம் அழுகிவிட்டன. இதன் காரணமாக அதனை வைத்துக் கொள்ள முடியாமல் வியாபாரிகள் மூட்டை மூட்டையாக குப்பையில் கொட்டினர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தமிழகத்தில் போதிய விளைச்சல் இல்லாததால் வெளி மாநிலங்களில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்கிறோம். ஆனால் இங்கு நிலவும் வெப்பம் காரணமாக வெங்காயம் தாக்குபிடிக்க முடியாமல் அழுகி விடுகிறது. இதனால் எங்களுக்கு பல்லாயிரக் கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது என கவலையுடன் தெரிவித்தனர்.
- நீலகிரி, கோவை மாவட்டங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மொத்த விற்பனைக்காக விவசாயிகளால் கொண்டு வரப்படுகிறது.
- மருத்துவ குணம் மிக்க இஞ்சியின் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்- அன்னூர் சாலையில் மொத்த காய்கறி மண்டி செயல்பட்டு வருகிறது.
இங்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மொத்த விற்பனைக்காக விவசாயிகளால் கொண்டு வரப்படுகிறது.
பின்னர் ஏல முறையில் காய்கறிகளை விலைக்கு வாங்கி வியாபாரிகள் விற்பனைக்காக எடுத்து செல்கின்றனர்.
இந்த மொத்த காய்கறி மண்டிக்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து தக்காளி, கேரட், பீன்ஸ், பீட்ரூட், நூல்கோல், டர்னீப், முள்ளங்கி, முட்டைகோஸ், சேனைகிழங்கு, பூண்டு உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு எடுத்து வரப்படுகிறது.
இதில் மருத்துவ குணம் கொண்ட இஞ்சி கர்நாடக மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிக்கு கொண்டு வரப்படுகிறது.
பின்னர் இஞ்சி தரம் பிரிக்கப்பட்டு, தரத்திற்கு ஏற்பட விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் 60 கிலோ கொண்ட ஒரு மூட்டை இஞ்சி அதிகபட்சமாக ரூ.9,700க்கும், குறைந்த பட்சமாக ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.
கடந்த வாரத்தை காட்டிலும் இஞ்சி வரத்து குறைவாக இருப்பதால் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
கடந்த வாரத்தில் 60 கிலோ கொண்ட ஒரு மூட்டை இஞ்சி அதிகபட்சமாக ரூ.8,750க்கு விற்பனையானது. தற்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் இஞ்சியின் வரத்து குறைந்துள்ளது. இதனால் தற்போது 60 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை இஞ்சி அதிகபட்சமாக ரூ.9,700க்கு விற்பனையானது. அதேபோல தரம் குறைந்த இஞ்சி குறைந்தபட்ச அளவாக ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையானது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மருத்துவ குணம் மிக்க இஞ்சியின் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- 2 ஊழியர்கள் வழக்கம் போல் டோக்கன் வழங்கும் வேலை மட்டும் செய்து வந்துள்ளனர்.
- சுமார் 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு காலை உணவு பொதுமக்களுக்கு பரிமாறப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு அகில் மேடை வீதியில் உள்ள சின்ன மார்க்கெட் வளாகத்தில் அம்மா உணவகம் கடந்த 11 வருடமாக செயல்பட்டு வருகிறது. இங்கு 10 சுய உதவி குழுவை சேர்ந்த பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த ஊழியர்கள் டோக்கன் வழங்குதல், சமையல் செய்வது, உணவு பரிமாறுதல் என தங்களுக்குள் வேலைகள் அனைத்தையும் பகிர்ந்து வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் இந்த அம்மா உணவகத்தில் மேலும் 2 பெண் ஊழியர்கள் கூடுதலாக பணியில் அமர்த்தபட்டனர். அவர்கள் வேலைக்கு சேர்ந்த நாள் முதல் டோக்கன் மட்டுமே வழங்கி வந்துள்ளனர். மற்ற வேலைகளை செய்யவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மற்ற ஊழியர்கள் அவர்களிடம் நீங்களும் இங்கு மற்றவர்கள் போல அனைத்து வேலைகளை செய்ய வேண்டும். டோக்கன் போடும் வேலை மட்டும் செய்யக்கூடாது என்று கூறியுள்ளனர்.
ஆனால் அந்த 2 ஊழியர்கள் வழக்கம் போல் டோக்கன் வழங்கும் வேலை மட்டும் செய்து வந்துள்ளனர். இதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை மற்ற 10 ஊழியர்கள் உணவை பரிமாறாமல் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காலை உணவு சாப்பிட வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இது குறித்து தகவல் கிடைத்ததும் சுகாதார ஆய்வாளர் மணிவேல் மற்றும் அதிகாரிகள் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் இந்த 2 ஊழியர்களும் மற்றவர்கள் போல் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும் என்று கூறினர்.
அதற்கு அதிகாரிகள் முதலில் பொதுமக்களுக்கு உணவை பரிமாறுங்கள். பின்னர் பிரச்சினைகளை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்றனர்.
இதனை ஏற்று அம்மா உணவக ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். சுமார் 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு காலை உணவு பொதுமக்களுக்கு பரிமாறப்பட்டது.
- சிறிய வெங்காயம் ரூ.160 ஆக அதிகரிப்பு
- 2 வாரங்களாக இஞ்சி விலை ஒரு கிலோ ரூ.300-க்கு கிடுகிடுவன உயர்ந்து.
நாகர்கோவில் :
நாகர்கோவில் மார்க் கெட்டுகளுக்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நெல்லை மாவட்டத்தில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
மேலும் திண்டுக்கல், மேட்டுப்பாளையம், ஒசூர், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. கடந்த சில நாட்களாக தக்காளியின் வரத்து குறைந்ததையடுத்து விலை தாறு மாறாக உயர்ந்தது. இது வரை இல்லாத அளவில் தக்காளி விலை ரூ.100-ஐ கடந்து விற்பனை யானது.
கடந்த வாரம் கிலோ ரூ.130-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தக்காளி யின் விலை நேற்று ரூ.100 ஆக குறைந்தது. இந்த நிலையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது.இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.130-க்கு விற்கப் பட்டு வருகிறது. 28 கிலோ எடை கொண்ட தக்காளி பாக்ஸ் ரூ.4000-க்கு விற்ப னையா னது. சிறிய வெங் காயத்தின் விளை யும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல் கிறது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்ட வெங்கா யம் 3 மடங்கு விலை உயர்ந்து இன்று ரூ.150-க்கு விற்கப்பட்டது. இதேபோல் பூடு விலையும் உயர்ந்துள்ளது. கிலோ ரூ.160-க்கு விற்பனை ஆனது. வெண்டைக்காய் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.80-க்கு விற்கப்பட்டது. மிளகாய், பீன்ஸ் விலையும் கிலோ ரூ.100-ஐ கடந்து விற்பனையாகி வருகிறது. இஞ்சி விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ இஞ்சி ரூ.80-க்கு விற்கப்பட்டு வந்தது. கடந்த 2 வாரங்களாக இஞ்சி விலை கிடுகிடுவன உயர்ந்தது. தற்பொழுது ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனையானது.
நாகர்கோவில் மார்க்கெட்டில் விற்பனையான காய்கறிகளின் விலை நிலவரம் வருமாறு:-
நாட்டு கத்த ரிக்காய் ரூ.80, வரி கத்தரிக்காய் ரூ.65, வெண்டைக்காய் ரூ.80, தக்காளி ரூ.130, பூடு ரூ.160, உருளைக்கிழங்கு ரூ.30, பல்லாரி ரூ.25, சேனைக்கிழங்கு ரூ.70, கேரட் ரூ.80, பீன்ஸ் ரூ.110, மிளகாய் ரூ.130, புடலங்காய் ரூ.50, பாகற்காய் ரூ.30, இளவங்காய் ரூ.35, வெள்ளரிக்காய் ரூ.30, பூசணிக்காய் ரூ.30-க்கு விற்பனையானது.
தக்காளி விலை மீண்டும் உயர்ந் துள்ளதையடுத்து இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தக்காளி யின் பயன்பாட்டை நாளுக்கு நாள் குறைத்து வருகிறார்கள். பீன்ஸ், கேரட் விலை உயர்ந்ததை யடுத்து குறைவான அளவில் பொது மக்கள் காய்கறி களை வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகை யில் காய்கறிகளின் வரத்து குறைவாகவே உள்ளது. தக்காளி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆனால் தற்பொழுது திருமண சீசன் மற்றும் மக்கள் தேவை அதிகரித்து உள்ளதால் விலை உயர்ந்து காணப்படுகிறது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் காய்கறி விலை இதே நிலை நீடிக்கும் அதன்பிறகு குறைய வாய்ப்புள்ளது என்றார்.
- வியாபாரியான மகாராஜன் ஆத்திரம் அடைந்து ராஜாவை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
- தக்காளி வாங்க பேரம் பேசும்போது பிரச்சினை ஏற்பட்டு அடிதடியில் முடிந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முத்துராமலிங்க தேவர் தினசரி மார்க்கெட் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதால், அங்கு செயல்பட்டு வந்த கடைகள் அனைத்தும் நெல்லை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி புதிய பஸ் நிலையம் அருகே தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் ஒரு பகுதி வியாபாரிகள் திட்டங்குளம் பகுதியில் தனியாக இடம் வாங்கி 33 கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். அங்கு மகாராஜன் என்ற வியாபாரி கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று அங்கு தக்காளி வாங்குவதற்காக குவாலிஸ் ராஜா என்ற நபர் வந்துள்ளார். தக்காளி ஒரு கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அவரோ ரூ.10-க்கு ஒரு கிலோ தருமாறு கேட்டுள்ளார்.
இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில், வியாபாரியான மகாராஜன் ஆத்திரம் அடைந்து ராஜாவை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. உடனே அங்கிருந்து சென்ற ராஜா, தனது நண்பர்கள் சிலரை அழைத்து வந்து மகாராஜனை பதிலுக்கு தாக்கி உள்ளார்.
இதுதொடர்பாக இருதரப்பை சேர்ந்த 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில், தக்காளி வாங்க பேரம் பேசும்போது பிரச்சினை ஏற்பட்டு அடிதடியில் முடிந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
- மார்க்கெட்டுகளில் விவசாயிகளுக்கு ஏலமுறையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
- தியாகி குமரன் மார்க்கெட்டில் தினந்தோறும் சராசரியாக 110 சரக்கு லாரிகள் காய்கறிகளுடன் வருவது வழக்கம்.
கோவை:
தமிழகத்தில் தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இதனால் காய்கறிகளின் விலையேற்றத்தை சமாளிக்க முடியாமல் இல்லத்தரசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இன்னொருபுறம் ஓட்டல்களில் தக்காளி சட்னி, வெங்காய பொரியல் ஆகியவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இது சாப்பாட்டு பிரியர்களை ஏமாற்றம் அடைய செய்து உள்ளது.
கோவையில் உக்கடம், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒட்டுமொத்த காய்கறி சந்தைகள் இயங்கி வருகின்றன. இங்கு உள்ளூர் விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
இதுதவிர வெளி மாவட்டங்களில் இருந்தும் சரக்கு லாரிகள் மூலம் காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. கோவை மார்க்கெட்டுகளில் விவசாயிகளுக்கு ஏலமுறையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் அங்கு விளையும் காய்கறிகளை அறுவடை செய்வதில் விவசாயிகளுக்கு சிரமநிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்கள் மார்க்கெட்டுக்கு விளைபொருட்களை கொண்டு வரவில்லை. இன்னொருபுறம் வெளி மாவடடங்களில் இருந்தும் சரக்கு காய்கறி லாரிகளின் வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.
கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் தினந்தோறும் சராசரியாக 110 சரக்கு லாரிகள் காய்கறிகளுடன் வருவது வழக்கம். ஆனால் இங்கு தற்போது 40 லாரிகள் மட்டுமே வந்து செல்கின்றன.
கோவை காய்கறி மார்க்கெட்களில் உள்ளூர் காய்கறி வரத்து குறைவு, வெளியூர் சரக்கு லாரிகளின் வருகை குறைவு ஆகியவை காரணமாக சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலை கிடுகிடுவென அதிகரிக்க தொடங்கியது.
கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை தக்காளி விலை கிலோ ரூ. 40 ஆக இருந்தது. ஆனால் தற்போது 120 ரூபாயாக உள்ளது. அதேபோல சின்ன வெங்காயத்தின் விலை முன்பு ரூ.40 என்ற அளவில் இருந்தது. ஆனால் இன்றைக்கு ரூ.120 ஆக உள்ளது.
கோவை மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழையின் தாக்கம் பெரியஅளவில் இல்லை. எனவே விவசாயிகள் மீண்டும் சாகுபடி பணிகளை தொடங்கி விட்டனர். அதேபோல வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து சரக்கு லாரிகளில் காய்கறி வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
எனவே கோவை காய்கறி மார்க்கெட்டுகளில் விலை சிறிதுசிறிதாக குறைய தொடங்கி உள்ளது. தியாகி குமரன் காய்கறி மார்க்கெட்டில் நேற்று ஒருகிலோ சின்ன வெங்காயம் ரூ.170 ஆக இருந்தது. அதன் விலையில் தற்போது 50 ரூபாய் குறைந்து, ஒருகிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் தக்காளி விலை மட்டும் குறைாமல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. காய்கறி மார்க்கெட்டுகளில் நேற்று வரை ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.110, ஆப்பிள் தக்காளி ரூ.140 என்ற அளவில் இருந்தது. ஆனால் இன்றைக்கு நாட்டு தக்காளியின் விலை ரூ.10 அதிகரித்து தற்போது ரூ.120க்கு விற்கப்பட்டு வருகிறது. ஆப்பிள் தக்காளியின் விலையில் மாற்றம் இல்லை.
கோவை காய்கறி மார்க்கெட்டுகளில் சின்ன வெங்காயத்தின் விலை ஓரளவு குறைந்தபோதிலும், தக்காளியின் விலை அதிகரிப்பு பொதுமக்களை கவலைப்பட வைத்து உள்ளது.
- குப்பைகளை அகற்ற வேண்டும் என்று நகராட்சி கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
கன்னியாகுமரி :
குழித்துறை நகராட்சிக்குட்பட்ட குப்பைகள் மார்த்தாண்டம் மார்க்கெட்டில் நீண்ட நாட்களாக குவிக்கப்பட்டு வந்தன.
இதனால் மலைபோல் குவிந்து காணப்பட்ட குப்பைகளிலிருந்து துர்நாற்றம் வீசியது. இந்த குப்பைகளை அகற்ற வேண்டும் என்று நகராட்சி கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதனை தொடர்ந்து குழித்துறை நகராட்சி சேர்மன் பொன்.ஆசைத்தம்பி, ஆணையாளர் ராமதிலகம் முயற்சியால் தற்போது குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது.
இந்த குப்பைகள் வெளி மாவட்டங்களுக்கு வாக னங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக ரூ.4 லட்சம் வழங்கப் பட்டுள்ளது. குழித்துறை நகராட்சி சார்பில் தற்போது மக்கும் குப்பை. மக்காத குப்பை என பிரித்து எடுக்கப்படு கிறது. இதனால் மார்க்கெட் பகுதியில் உள்ள நீண்ட நாள் பிரச்சினை முடிவுக்கு வந்தது.
- 7 சாலைகள் தார் போட்டு முழுமையாக சீரமைப்பதற்காக ரூ.78 லட்சம் ஒதுக்கப்பட்டது.
- மார்த்தாண்டம் மார்க்கெட் ரூ.14 கோடியே 50 லட்சத்தில் கட்டப்படுகிறது
கன்னியாகுமரி :
குழித்துறை நகராட்சி பகுதியில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் புதிய குடிநீர் திட்டத்திற்கான பைப் பதிக்கும் பணி நடந்ததை தொடர்ந்து அனைத்து ரோடுகளும் பழுத டைந்து காணப்படு கிறது. நகராட்சி சார்பில் ஒவ்வொரு சாலையும் சீரமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் குழித்துறை கோர்ட் முதல் பெருந்தெரு வரை, கழுவன்திட்டை சந்திப்பு முதல் இடத்தெரு வரை, பெருந்தெரு முதல் மீன் மார்க்கெட் வரை, பன்னியாணி முதல் வடக்கு தெரு வரை, வார்டு நம்பர் 13 க்கு உட்பட்ட பன்னியாணி சாலை, சிறியக்காட்டுவிளை சானல் சாலை, இடவிளாகம் மிட்ஸ் அலுவலக சாலை ஆகிய 7 சாலைகள் தார் போட்டு முழுமையாக சீரமைப்பதற்காக ரூ.78 லட்சம் ஒதுக்கப்பட்டது.
இதைப்போல் 6-வது நிதிக்குழு மானியத் திட்டத்தில் 16-ம் வார்டுக்குட்பட்ட சிறிய காட்டுவிளை சாலை, 6-ம் வார்டுக்கு உட்பட்ட மகாதேவர் கோயில் மேட்டு கிராமம் சாலை, 17-ம் வார்டுக்கு உட்பட்ட பன்னியாணி கிளை சாலை, 14-ம் வார்டுக்குட்பட்ட கொல்லங்குளம் வடக்கு தெரு சாலை, 20 ம் வார்டுக்கு உட்பட்ட நந்தன் காடு சாலை, 2ம் வார்டுக்கு உட்பட்ட வள்ளி கோடு அம்பலத்துவிளை சாலை, 6ம் வார்டுக்கு உட்பட்ட அம்மன் கோயில் சாலை, 11 ஆம் வார்டுக்கு உட்பட்ட கண்ணக்கோடு சாலை ஆகிய 8 ரோடுகள் சிமெண்ட் போட்டு சீரமைப்பதற்கு ரூ.68 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இந்தத் திட்டப் பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மார்த்தாண்டம் மார்க்கெட் ரூ.14 கோடியே 50 லட்சத்தில் கட்டப்படுகிறது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மார்த்தாண்டம் பகுதியின் முக்கியமான மைய பகுதி யில்அமைய உள்ளதால் மக்களுக்கு நல்ல முறையில் பயன்படும் விதத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக அழகான நிலையில் வசதியாக அமைக்கப்பட உள்ளது. அனுபவம் வாய்ந்த கட்டடக்கலை பொறியாளர்கள் மூலம் வரைபடம் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. இதில் வணிக வளாகம், வாகன நிறுத்தம், கடைகள் போன்றவை இடம்பெறு கிறது. இதற்கான பணி 2 மாதத்தில் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் குழித்துறை நகராட்சி சேர்மன் பொன். ஆசைத்தம்பி, ஆணையாளர் ராமதிலகம், நகராட்சி வழக்கறிஞர் ஷாஜி குமார், கவுன்சிலர்கள் மெர்லின் தீபா, அருள்ராஜ், விஜு, ஆட்லின்கெனில், கிள்ளியூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் டி.பி.ராஜன், குழித்துறை நகர திமுக செயலாளர் வினு குமார், குழித்துறை நகர திமுக.இளைஞரணி அமைப்பாளர் ஆசாத் அலி, திமுக நிர்வாகிகள் ஷாஜி லால், ஜீவகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்