என் மலர்
நீங்கள் தேடியது "யானைகள்"
- தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறையினர் 30-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- ஒகேனக்கல் வனப்பகுதி கோடுபட்டி பகுதியில் இரண்டு யானைக் கூட்டங்கள் முகாமிட்டுள்ளது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் காளிகவுண்டன் கொட்டாய் பகுதியில் விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி நேற்று முன் தினம் இரவு 2 பெண் மற்றும் மக்னா யானை என மொத்தம் 3 யானைகள் உயிரிழந்தது.
இந்த யானைகளுடன் வந்த 2 குட்டி யானைகள், தாய் உயிரிழந்தது தெரியாமல் தட்டி தட்டி எழுப்பி பரிதாபமாக அதே பகுதியிலேயே தவிப்புடன் சுற்றி வருகிறது. இந்த இரண்டு குட்டி யானைகளையும் பாதுகாப்பாக மீட்டு முதுமலை சரணாலயத்திலும், யானைகள் கூட்டத்திலும் விடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட வனத் துறையினர் மாவட்ட வன அலுவலர் அப்பல்லோ நாயுடு, மண்டல வன கோட்ட அலுவலர் வின்சென்ட், மருத்துவர் பிரகாஷ், பாலக்கோடு வனச்சரகர் நடராஜ் தலைமையிலான வனத் துறையினர், வேட்டைத் தடுப்பு காவலர்கள் யானை குட்டிகளை பாதுகாப்பாக மீட்பதற்கு கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும் யானைக்கு முலாம்பழம், பலாப்பழம், கோசாப் பழம், குளுக்கோஸ், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுகளை ஆங்காங்கே வைத்து, வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இந்த குட்டி யானைகள் உணவை எடுப்பதற்கு வந்தால், பாதுகாப்பாக யானையை பிடிப்பதற்கு வலையோடு வனத் துறையினர் காத்திருகின்றனர்.
ஆனால் தாயை இழந்த இரண்டு குட்டி யானைகளும் அருகில் உள்ள வாழைத்தோட்டத்திற்குள் நுழைவதும், மீண்டும் தனது தாய் இருந்த இடத்திற்கு வந்து பார்ப்பதும் என சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது.
யானை உயிரிழந்த பகுதிக்கு அருகில் உள்ள கல்லாகரம் பகுதியில் உள்ள உப்பு பள்ளம் ஓடை பகுதியில் இரண்டு குட்டி யானைகளும் முகாமிட்டுள்ளது.
இதனை தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறையினர் 30-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும் இரண்டு குழுக்கள் அருகில் உள்ள பாலக்கோடு வன சரக்கத்திற்குட்பட்ட பெட்ட முகிழாலம், ஒகேனக்கல் வனப்பகுதி கோடுபட்டி பகுதியில் இரண்டு யானைக் கூட்டங்கள் முகாமிட்டுள்ளது.
அதனை கண்காணிக்க இரண்டு வனக்குழு சென்றுள்ளது. மேலும் அந்த யானை கூட்டத்தில் குட்டி யானைகள் ஏதாவது இருக்கின்றதா என்ன கண்காணித்து இந்த யானை குட்டிகளைகொண்டு சேர்க்கும் பணியில் வனத்துறையினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஒரு வயது குட்டி யானை உணவு அருந்தாமல் ஆக்ரோசமாக தாயைத் தேடி அலைந்து வருகிறது. இரண்டு வயது யானை குட்டி அதற்கு துணையாக பின் தொடர்ந்து சுற்றி வருகிறது. இந்த இரண்டு யானை குட்டிகளின் பரிதாப நிலையை பார்த்து அப்பகுதி விவசாயிகள் பிடித்து உடனடியாக யானை கூட்டத்தோடு சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இந்தியாவில் மொத்தம் 29 ஆயிரத்து 964 யானைகள் உள்ளன.
- 2019 முதல் 2022க்கு இடைப்பட்ட காலத்தில் 274 யானைகள் கொல்லப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வனத்துறை மந்திரி அஸ்வினி குமார் சௌபே கூறியதாவது:
இந்தியாவில் மொத்தம் 29 ஆயிரத்து 964 யானைகள் உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் மொத்தம் 2 ஆயிரத்து 761 யானைகள் உள்ளன.
கடந்த 2019 முதல் 2022க்கு இடைப்பட்ட காலத்தில் மனிதர்களால் மொத்தம் 274 யானைகள் கொல்லப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
- சின்னாறு சோதனைச்சாவடி வரையுள்ள 20 கி.மீ., ரோடு, தமிழக வனப்பகுதி யின் நடுவே நீள்கிறது.
- யானை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி துரத்தும் நிலை ஏற்படுகிறது.
உடுமலை :
ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்ச ரகத்தில் உடுமலை மற்றும் மூணாறு இடையிலான சாலை அமைந்துள்ளது.அதில் ஏழுமலையான் கோவில் பிரிவில் இருந்து எல்லைப்பகுதியான சின்னாறு சோதனை ச்சா வடி வரையுள்ள 20 கி.மீ., ரோடு, தமிழக வனப்பகுதி யின் நடுவே நீள்கிறது.வனவிலங்குகள் பாது காப்புக்கருதி வாகன ஓட்டு னர்களை அறி வுறுத்தும் வகையில் ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.அதில் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையக்கூடாது, சமைத்தல் கூடாது, மது அருந்துதல் கூடாது, பிளாஸ்டிக் மற்றும் உணவுக்கழிவுகள் வீசக்கூ டாது என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்று ள்ளன.தற்போது வனப்ப குதியில் கடும் வறட்சி நிலவுவதால் தண்ணீ ருக்காக யானைகள் அவ்வ ப்போது ரோட்டை கடந்து அணை நோக்கி செல்கி ன்றன. அச்சமயத்தில் அவ்வழி த்தடத்தில் வாகனங்களில் செல்வோர் யானைகளை போட்டோ எடுக்க முற்படுகி ன்றனர். இதனால் வனத்துறை யினர், வாகன ஓட்டுன ர்களை எச்சரிக்கை செய்தும் வருகின்றனர்.வன விலங்குகளை காண நேரிட்டால் போட்டோ எடுக்க முயற்சிக்கக்கூடாது எனவும் எச்சரிக்கின்றனர்.
இது குறித்து வனத்துறை யினர் கூறியதாவது:- வனவிலங்குகளை மையப்படுத்தி செல்பி புகைப்படம் எடுக்கவும் முற்படுகின்றனர். இதனால் யானை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி துரத்தும் நிலை ஏற்படுகிறது.வன விலங்குகளின் அருகே சுற்றுலா பயணிகள் செல்ல க்கூடாது. மொபைல் போனில் செல்பி எடுப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.ரோந்துப்ப ணியில் இத்தகைய செயலில் எவரேனும் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- யானைகள் விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது விவசாயிகளிடையே அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் நெல்லித்துறை ஊராட்சியில் உள்ளது புளியமர தோப்பு கிராமம்.
இந்த கிராமத்தில் உள்ள மக்கள் பாக்கு, தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து விவசாயம் செய்து வருகிறார்கள்.
இந்த கிராமத்தையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது.
இங்கு காட்டு யானைகள், பன்றி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த வனவிலங்குகள் அவ்வப்போது, வனத்தை விட்டு வெளியேறி, ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள பாக்கு, தென்னை, வாழை பயிர்களை சேதப்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளது.
குறிப்பாக பாக்கு மரங்களை வேருடன் பிடுங்கி எறிந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
புளியமர தோப்பு கிராமத்தை சேர்ந்த கோவர்த்தனன் என்பவர் அந்த பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் பாக்கு பயிரிட்டுள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று 2 காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்தது. ஊருக்குள் சுற்றி திரிந்த யானைகள் பின்னர் கோவர்த்தனனின் தோட்டத்திற்கு புகுந்தது.
அங்கு பயிரிட்டிருந்த 200க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்து சேதப்படுத்தியது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். தோட்டதிற்கு வந்த கோவர்த்தனன் பாக்கு பயிர்கள் சேதம் அடைந்ததை கண்டு கவலை அடைந்தார்.
தொடர்ந்து இந்த பகுதியில் யானைகள் விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது விவசாயிகளிடையே அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. விளைநிலங்களுக்குள் புகும் யானை கூட்டம் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. வனத்தில் விலங்குகளுக்கு தேவையான உணவு, குடிநீர் இல்லாத காரணத்தாலேயே அவை ஊருக்குள் வருகின்றன. எனவே வனத்திலேயே வனவிலங்குகளுக்கு தேவையான குடிநீர் மற்றும் உணவு கிடைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 1 கோடியே 75 லட்சம் மதிப்பில் 5 கி.மீ., தூரத்திற்கு கம்பி வேலி அமைக்கப் பட்டுள்ளது.
- மலைவாழ் மக்கள் உற்பத்தி செய்யும் கைவினை பொருட்களையும், மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தேன்கனிக்கோட்டை,
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா தேசிய பூங்கா மற்றும் காவிரி வன உயிரின சரணாலயத்தில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் சுமார் 150 யானைகள் இடம் பெயர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியில் தஞ்சமடைவது வாடிக்கை யாக உள்ளது.
தளி, ஜவளகிரி காப்புக்காடுகளில் கூட்டம் கூட்டமாக நுழைந்து தேன்கனிகோட்டை, நொகனூர், ஊடேதுர்க்கம், சானமாவு, செட்டிப்பள்ளி மற்றும் மகா ராஜகடை காப்புக்காடுகள் வழியாக ஆந்திரா மாநிலம் கவுண்டன்யா சரணாலயம் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சரணாலயம் வரை சென்று, மீண்டும் ஏப்ரல், மே மாதங்களில் திரும்பி வருவதை வழக்கமாக கொண்டுள்ளது.
அவ்வாறு வரும் யானைகள், ஓசூர் வனக் கோட்டத்தில் காப்புக்காடுகளை ஒட்டியுள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை துவம்சம் செய்து வருகின்றன. மேலும், மனிதர்கள் மற்றும் கால்நடை உயிரிழப்புகள் மட்டுமின்றி பொருட்சேதமும் அதிகரித்து வருகிறது.
பாதிக்கப்படும் விவசா யிகள், பொதுமக்களுக்கு இழப்பீடு தொகை வழங்கும் பொருட்டு, பயிர் சேதங்கள் விவசாய நிலங்களை வனப்பணியாளர்கள் உடனுக்குடன் தணிக்கை செய்து, அதற்கான இழப்பீடுத் தொகை வழங்கப் பட்டு வருகிறது.
இந்நிலையில் தேன்கனிக்கோட்டை வனச்சரகம், குள்ளட்டி காப்பு காடு எல்லையில் மேலூர் முதல் ஓம்மாண்டனப்பள்ளி வரை மாவட்ட கனிம அறக்கட்டளை நிதி மூலம் 1 கோடியே 75 லட்சம் மதிப்பில் 5 கி.மீ., தூரத்திற்கு கம்பி வேலி அமைக்கப் பட்டுள்ளதையும், மேலூர் வனப்பகுதியில் தொங்கும் வகையிலான மின்வேலி அமைக்க ப்பட்டுள்ளதையும், மேலூர் மத்திய நாற்றங்கால் பண்ணையில் 23 வகையான செடிகள் உற்பத்தி செய்யும் பணிகளையும், அய்யூர்பசுமை சுற்றுலா மாளிகை வளாகத்தில் மலைவாழ் மக்கள் உற்பத்தி செய்யும் கைவினை பொருட்களையும், மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். வனப்பகுதியை யொட்டி கம்பிவேலி அமைக்கப்பட்டதால் விவசாயிகள், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அைடந்துள்ளனர்.
- யானைகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தையொட்டிய கிராமங்களுக்கு புகுந்து விடுகிறது.
- கிராமத்தில் சுற்றிய காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.
கவுண்டம்பாளையம்,
கோவை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய வனப்பகுதிகளில் அதிகளவில் காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன.
இந்த யானைகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தையொட்டிய கிராமங்களுக்கு புகுந்து விடுகிறது. அவ்வாறு வரும் யானைகள், விளைநிலங்களை சேதப்படுத்துவதுடன், வீட்டில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தி வருகிறது. யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இருந்த போதிலும் யானைகள் ஊருக்குள் வந்த வண்ணம் தான் உள்ளன.
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் நஞ்சுண்டாபுரம் கிராமம் உள்ளது. நேற்று நள்ளிரவு இந்த கிரா மத்திற்குள் குட்டிகளுடன் 6-க்கும் மேற்பட்ட யானைகள் புகுந்தன.இந்த யானைகள், கிராமத்தில் உள்ள சாலைகளில் ெவகுநேரமாக சுற்றி திரிந்தன. இதற்கிடையே ஊருக்குள் யானைகள் புகுந்து விட்டதை அறிந்த பொது மக்கள் அச்சம் அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து, கிராமத்தில் சுற்றிய காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இதே போல அதிகாலை நேரத்தில் பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள அரங்கசாமி என்பவரின் தோட்டத்திற்குள் ஒற்றை யானை புகுந்துள்ளது.
வெயில் காரணமாக வனப்பகுதிக்குள் வறட்சி நிலவுவதன் காரணமாக, தண்ணீர் மற்றும் உணவு தேடி காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் நுழைவது அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
- இந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
- 3 யானைகளும் ஊருக்குள் உலா வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம்-வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் சாலையில் சமயபுரம் பகுதி உள்ளது.
இந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
சமயபுரம் பகுதி அடர் வனப்பகுதியை ஒட்டி அமைந்திருப்பதால் காட்டு யானை, மான், காட்டு மாடு உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை நாசம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.
கடந்த பல நாட்களாகவே பாகுபலி என்று மக்களால் செல்லமாக அழைக்கப்படும் ஒற்றைக்காட்டு யானை நடமாட்டம் இந்த பகுதியில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலையும் வழக்கம் போல பாகுபலி யானை சமயபுரம் ஊருக்குள் புகுந்தது. ஆனால் இதுவரை ஒற்றையாக வந்த பாகுபலி யானை தற்போது குட்டியுடன் கூடிய மேலும் 3 காட்டு யானைகளுடன் வந்தது.
அதிகாலை வேளையில் சமயபுரம் பகுதிக்குள் உள்ள சாலைகளில் காட்டு யானைகள் சர்வசாதாரணமாக சுற்றி திரிந்தன.
இதை பார்த்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
கடந்த பல நாட்களாகவே பாகுபலி யானையின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வரும் நிலையில் தற்போது குட்டியுடன் கூடிய மேலும் 3 யானைகளும் ஊருக்குள் உலா வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து வனத்துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மேலும், பாகுபலி யானை இதுவரை பொதுமக்களை தாக்கியது இல்லை என்றாலும் தற்போது பாகுபலியுடன் வேறு சில யானைகளும் வருவதால் மனித - வன உயிரின மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது.
அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்னர் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், வனத்துறையினர் இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களைத் திரட்டி அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
- வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட நீலகிரி கிழக்கு சரிவு சரகம் தெங்குமரஹடா கல்லாம்பாளையம் வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெண் காட்டு யானை இறந்து கிடந்தது.
இதைத்தொடர்ந்து புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் துணை இயக்குனர் அருண்குமார், வனச்சரகர் மணி வெங்கடேஷ் மற்றும் வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
பின்னர் முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு காட்டு யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இறந்த யானைக்கு 50 வயது இருக்கும். வயது முதிர்வு காரணமாக இறந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் மசினகுடி சரகத்துக்கு உட்பட்ட அவரல்லா பிரிவு மாவனல்லா பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை இறந்து கிடந்தது. இதைத்தொடர்ந்து வனச்சரகர் பாலாஜி தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் வன கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் காட்டு யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
பின்னர் வயது முதிர்வு காரணமாக காட்டு யானை இறந்தது என தெரிய வந்தது. பின்னர் முக்கிய உடற்பாகங்கள் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து பிற வன உயிரினங்களுக்கு இரையாகும் வகையில் யானையின் உடல் அப்பகுதியில் விடப்பட்டது. இதுகுறித்து மசினகுடி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானை தொடர்ந்து உயிரிழந்து வருவது வன ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழக-கேரள எல்லை பகுதியையொட்டி எஸ்டேட் பகுதியில் கடந்த 3 நாட்களாக காட்டு யானைகள் கூட்டம் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.
- எஸ்டேட் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான காப்பகத்தின் பதிவு, ஜன்னலை உடைத்து அட்டகாசம் செய்தது.
வால்பாறை:
கோடைகாலம் தொடங்கியதால் வால்பாறை வனப்பகுதியில் முகாமிட்டு இருந்த காட்டு யானைகள் கூட்டம் கேரள வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்து வருகிறது.
இதனால் தமிழக-கேரள எல்லை பகுதியையொட்டி எஸ்டேட் பகுதியில் கடந்த 3 நாட்களாக காட்டு யானைகள் கூட்டம் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.
தமிழக-கேரள எல்லையையொட்டிய வால்பாறை அருகே பன்னிமேடு எஸ்டேட் 2-வது பிரிவு தேயிலை தோட்டத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் முகாமிட்டு இருந்த 4 காட்டு யானைகள் நுழைந்தது.
அவை எஸ்டேட் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான காப்பகத்தின் பதிவு, ஜன்னலை உடைத்து அட்டகாசம் செய்தது.
மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்கள், முட்டைகள், சத்துமாவுகள் மற்றும் திண்பண்டங்களை தின்று சேதப்படுத்தியதோடு துதிக்கையால் வனப்பகுதிக்குள் தூக்கி சென்றது.
பன்னிமேடு எஸ்டேட் தோட்ட அலுவலகத்தையும் உடைத்து அங்கிருந்த பொருட்களையும் வெளியே எடுத்து வீசியது.
மேலும் அலுவலகத்திற்கு முன்பு இருந்த மாரியம்மன் கோவில் கதவு, ஜன்னலை உடைத்து அலங்கார பொருட்களை வெளியே வீசி எறிந்தது.
நீண்ட நேரமாக அங்கேயே யானைகள் சுற்றி திரிந்ததால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த மானாம்பள்ளி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு யானை கூட்டத்தை குடியிருப்பு பகுதியில் இருந்து வனத்திற்குள் விரட்டியடித்தனர். அதன்பின்னரே பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
தொடர்ந்து அந்த பகுதியில் வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் தொழிலாளர்கள் கவனமாக இருக்கவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
- விவசாயி பெருமாள் யானைகள் தாக்கியதில் பலியாகி உள்ளார்.
- கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் 4 பேரை தாக்கி கொன்றுள்ளன.
கிருஷ்ணகிரி,
கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே காட்டுகொல்லை கிராமத்திற்குள் வந்த இந்த யானைகள் ராம்குமார் (27) என்பவரை தாக்கி கொன்றன.
அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் ( ஏப்ரல்) 21-ந் தேதி தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே வட்டகானம்பட்டடி ஏரிகொட்டாள்ய் இருளர் காலனியை சேர்ந்த காளியப்பன் (வயது 70) என்பவரை இந்த யானைகள் தாக்கி கொன்றன.
தொடர்ந்து கடந்த மாதம் (ஏப்ரல்) 27-ந் தேதி தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே முக்குளம் பெரிய மொரசுப்பட்டி யை சேர்ந்த வேடி (55) என்ற விவசாயியை இந்த யானைகள் தாக்கி கொன்றன. இதன் தொடர்ச்சியாக நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் சாமந்தமலையை சேர்ந்த விவசாயி பெருமாள் யானைகள் தாக்கியதில் பலியாகி உள்ளார். கடந்த 2 மாதத்தில் மட்டும் இந்த 2 யானைகளும் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் 4 பேரை தாக்கி கொன்றுள்ளன.
- ஏலக்காய், காபி, பாக்கு உள்ளிட்ட பயிர்களை கடந்த சில வாரங்களாக தினமும் சேதப்படுத்தி வருகிறது.
- சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல தோன்ற மரங்களை சேதப்படுத்தி உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஸ்ரீமதுரை பகுதியில் காட்டு யானை விவசாய நிலத்துக்குள் புகுந்து ஏலக்காய், பாக்கு மரங்களை சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஸ்ரீமதுரை ஊராட்சி பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். முதுமலை வனப்பகுதியில் இருந்து தினமும் இரவு 2 காட்டு யானைகள் வெளியேறி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
ஊராட்சிக்குட்பட்ட ஓடக்கொல்லி பகுதியில் ஏலக்காய், காபி, பாக்கு உள்ளிட்ட பயிர்களை கடந்த சில வாரங்களாக தினமும் சேதப்படுத்தி வருகிறது.
நேற்று முன்தினம் இரவு ஜார்ஜ் உள்ளிட்ட சில விவசாயிகளின் பயிர்களை 2 காட்டு யானைகள் நாசம் செய்தது. இதில் சுமார் 20-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களை உடைத்து தின்றது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- முதுமலை வனத்திலிருந்து வெளியேறி தினமும் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து வருகிறது. இது தொடர்பாக வனத்துறையினருக்கு பல முறை தகவல் தெரிவித்தும் நேரில் வருகின்றனர். ஆனால் காட்டு யானைகளை விரட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதில்லை. காட்டு யானைகள் வருகை குறித்து தகவல் கொடுத்தும் எந்த பலனும் இல்லை.
இதனால் தொடர்ந்து பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல தோன்ற மரங்களை சேதப்படுத்தி உள்ளது. இதனால் விவசாய பயிர்களை பாதுகாக்க முடியாத நிலை உள்ளது. எனவே விவசாயத்தில் உள்ள பல்வேறு சிரமங்களை கருத்தில் கொண்டு வனத்துறையினர் காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- யானைகள் நேற்று இரவு திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள தண்ணீர் பந்தல் கிராமத்துக்குள் புகுந்தன.
- கரும்பு தோட்டத்திற்குள் இருந்து யானைகளை ஆந்திர வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜோலார்பேட்டை:
கிருஷ்ணகிரி வனபகுதியில் சுற்றி திரிந்த காட்டு யானைகள் ஒருவரை மிதித்து கொன்றது. அந்த யானைகள் ஆந்திர வனப்பகுதிக்கு சென்றன.
ஆந்திர மாநிலம் பருத்தி கொல்லி கிராமம் தமிழக எல்லையில் திருப்பத்தூர் மாவட்டத்தை ஒட்டியுள்ளது. இந்த பகுதியில் யானைகள் மேலும் 5 பேரை மிதித்து கொன்றன.
மேலும் இருவர் படுகாயம் அடைந்து குப்பம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் யானைகள் நேற்று இரவு திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள தண்ணீர் பந்தல் கிராமத்துக்குள் புகுந்தன. வீடுகளை சுற்றி சுற்றி வந்து அட்டகாசம் செய்தன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் தலைமையில் நாட்டறம்பள்ளி, திம்மாம்பேட்டை போலீசார் மற்றும் தமிழக வனத்துறையினர் தலைமையில் அப்பகுதிக்கு சென்றனர்.
அப்பகுதி பொதுமக்கள் வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வனத்துறையினர் டிரோன் கேமரா மூலம் காட்டுப்பகுதிக்கு சென்றனர். டிரோன் கேமராவை பறக்கவிட்டு யானைகளை கண்காணித்தனர்.
பொதுமக்கள் கூச்சலிட்டபடி வீடுகளில் மொட்டை மாடிகளில் நின்று யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது யானைகள் தண்ணீர் பந்தல் கிராமத்தை ஒட்டி செல்லும் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்தன.
அந்த நேரத்தில் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வாகனங்களை நிறுத்தினர்.
பைக்கில் வந்த வாலிபர் வாகனத்தை திடீரென நிறுத்த முடியவில்லை. அவர் யானைகளை மிக அருகில் சென்றார்.
அவரை யானைகள் தாக்க முயன்றன. அவர் யானைகளிடமிருந்து நூலிலையில் தப்பி சென்றார்.
நெடுஞ்சாலையைக் கடந்த காட்டு யானைகள் ஆத்தூர் கிராமத்திற்கு சென்றன. அங்குள்ள மகேஸ்வரன் என்ற நபரின் கரும்பு தோட்டத்தில் பதுங்கி நின்றன.
காட்டு யானைகள் கடும் கோபத்துடன் ஆவேசமாக உள்ளன. பொதுமக்கள் அந்த இடங்களுக்கு செல்லாதவாறு வனத்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் பொதுமக்களை எச்சரித்து வருகின்றனர்.
கரும்பு தோட்டத்திற்குள் இருந்து யானைகளை ஆந்திர வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.