என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புத்தகங்கள்"
- மத்திய சிறை சார்பில் அஸ்தம்பட்டி சிறை முனியப்பன் கோவில் வளாகத்தில் புதிதாக நூலகம் அமைக்கப்பட்டது.
- போலீஸ் போட்டி தேர்வுகள் மற்றும் பொது அறிவு புத்தகங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
சேலம்:
தமிழகம் முழுவதும் சிறைத்துறை சார்பில் நூலகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. உத்தரவின் பேரில் சேலம் மத்திய சிறை சார்பில் அஸ்தம்பட்டி சிறை முனியப்பன் கோவில் வளாகத்தில் புதிதாக நூலகம் அமைக்கப்பட்டது.
இந்த நூலகத்தை இன்று சிறைத்துறை சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் திறந்து வைத்தார்.
இங்கு சிறைத்துறை காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் போலீஸ் போட்டி தேர்வுகள் மற்றும் பொது அறிவு புத்தகங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக சிறைத்துறை காவலர்கள் அடுத்து போலீஸ் தேர்வுகள் எழுதுவதற்கான புத்தகங்களும் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. இந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களை சிறைத்துறை காவலர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு வினோத் கேட்டுக்கொண்டுள்ளார்.
- சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- பதிவேடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 கிராம ஊராட்சிகளிலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்களில் புதிய மற்றும் நடப்பு புத்தகங்கள் மாவட்ட நிதியிலிருந்து கொள்முதல் செய்து வழங்கப்பட்டது.
இந்த புத்தகங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சியிலுள்ள நூலகங்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஓ.புதூர் கிராமத்தில் நடந்தது. இது சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜீத் கலந்து கொண்டு புத்தகங்கள் வழங்குவதை தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்களில் பராம ரிக்கப்படும் பதிவேடுகள், புத்தகங்கள் இருப்பு பதிவேடு ஆகியவை கலெக்டர் ஆய்வு செய்தார்.
அப்போது பள்ளி தலைமையாசிரியர்கள், மாணவர்களின் கற்றல் அறிவினை மேம்ப டுத்திட வாரம் ஒரு முறை நூலகங்களுக்கு அழைத்து வருவதுடன் தினசரி காலையில் ஒவ்வொரு வாரமும் மாணவர்கள் படித்த புத்தகங்கள் அடிப்ப டையில் சிறு போட்டிகள் நடத்தி ஊக்குவிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
இதில் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- 6-ம் ஆண்டு தஞ்சாவூர் புத்தக திருவிழா அரண்மனை வளாகத்தில் தொடங்குகிறது.
- படைப்பாளர்கள் மட்டும் இந்த அரங்கில் தங்களது புத்தகங்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்யலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் 6ஆம் ஆண்டு தஞ்சாவூர் புத்தக திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) அரண்மனை வளாகத்தில் தொடங்குகிறது.
வருகிற 24 ஆம் தேதி வரை நடைபெறும்.
காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக திருவிழா நடைபெற உள்ளது.
இந்த நிலையில் புத்தக திருவிழாவில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த புத்தக படைப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தனியாக ஒரு அரங்கம் ஏற்படுத்த கலெக்டர் தீபக்ஜேக்கப் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் தஞ்சை மாவட்டத்தில் வசிக்கும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த படைப்பாளர்கள் மட்டும் இந்த அரங்கில் தங்களது புத்தகங்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்யலாம்.
இந்த அரங்கம் தஞ்சை மாநகராட்சி சார்பில் நிர்வகிக்கப்படும்.
இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள கலெக்டர் அறிவுறுத்தினார்.
- திருச்சுழி நூலகத்திற்கு புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
- மாணவ,மாணவிகள், வாசகர்கள் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி கிளை நூலகத்தில் அரசு பணிகளுக்கான பல்வேறு போட்டி தேர்வுகளுக்காக, மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் படித்து வருகின்றனர். போட்டித்தேர்வுக்காக படிக்கும் மாணவர்களுக்கு உதவிடும் பொருட்டு கிளை நூலகத்தின் நூலகர் மற்றும் வாசகர் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக திருச்சுழி கிளை நூலகத்திற்கு அருப்புக்கோட்டை ஜெயன்ட்ஸ் குழுவினர் மாணவர்களின் எதிர்கால நலன்கருதி நூல்களை அன்பளிப்பாக வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிக்கு அருப்புக்கோட்டை ஜெயண்ட்ஸ் குழுவின் தலைவர் வெள்ளையரெட்டி தலைமை தாங்கினார். திருச்சுழி கிளை நூலகத்தின் வாசகர் ஒருங்கிணைப்பாளர் சுந்தர் அழகேசன் முன்னிலை வகித்தார். நூலகரான பாஸ்கரனிடம் அருப்பக்கோட்டை ஜெயண்ட்ஸ் குழுவினர் ரூபாய் 4,000 மதிப்புள்ள போட்டித்தேர்வுக்கான பாடப்புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கினர். ஜெயண்ட்ஸ் குழுவின் இணைய அலுவலர் திருவண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் நிர்வாக இயக்குநர் சோமசுந்தரம் சிறப்புரையாற்றினார். ஜெயண்ட்ஸ் குழுவின் நிதிகளுக்கான இயக்குனர் காத்தமுத்து, பாக்கியராஜ், நூலக பணியாளர் மஞ்சுளா, போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவ,மாணவிகள், வாசகர்கள் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- 1½ லட்சம் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா புத்தகங்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
- திருகோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாடபுத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது.
சிவகங்கை
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளே மாணவ-மாணவிகளுக்கு அரசின் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் அருகே உள்ள திருகோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாடபுத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் மாணவ-மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ-மாணவிகள் தரமான கல்வி பெற பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு சீருடை, காலணி, புத்த கப்பை, பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், வண்ணப் பென்சில், வண்ணக்கிரையான்கள், சதுரங்கப்பலகை, கணித உபகரணப்பெட்டி, மிதிவண்டி மற்றும் மடிக்கணினி போன்ற பல்வேறு வகையான நலத்திட்டங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் 1,117 அரசுப்பள்ளிகள் மற்றும் 234 அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 1,351 பள்ளிகள் உள்ளன. 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 1லட்சத்து 49 ஆயிரத்து 681 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநான், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சண்முகவடிவேல், மாவட்ட கல்வி அலுவலர் மாரிமுத்து, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ரவி, திருக்கோஷ்டியூர் ஊராட்சி மன்றத்தலைவர் சுப்பிரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினர் ராமேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 12ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
- பல்லடம் வட்டாரத்தில் 11 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பல்லடம் :
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 12ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.இந்நிலையில் அரசு பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
இதன்படி பல்லடம் வட்டாரத்தில் உள்ள 85 பள்ளிகளில், 11 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.இவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், அறிவியல், உள்ளிட்ட 5 புத்தகங்கள், மற்றும் நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பை உள்ளிட்டவைகள் வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில் பல்லடம் வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.அரசு பள்ளி மாணவர்கள், ஜூன் 12-ந் தேதி பள்ளிக்கு செல்லும்போது முதல் நாளிலேயே அவர்களுக்கான பாடப்புத்தகங்கள், புத்தக பைகள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
சீர்காழி:
கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திங்கள்கி ழமை பள்ளி திறக்கப்பட்டது. பள்ளி திறந்த முதல் நாளே மாணவர்களுக்கு அரசு வழங்கும் விலையில்லா புத்ககம் உள்ளிட்டஉபகர ணங்களை வழங்க வேண்டும் என உத்தரவிட ப்பட்டுள்ளது.
அதன்படி சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலை ப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி தலைமையில் மாண வர்களுக்கு விலையில்லா புத்தகம் மற்றும் சீருடைகள் வழங்ப்பட்டது. அப்போது உடற்கல்வி இயக்குனர் முரளிதரன், தேசிய மாணவர் படை அலுவலர் சிவக்குமார் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்