என் மலர்
நீங்கள் தேடியது "நரபலி"
- கைதான லைலா, தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி எர்ணாகுளம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு செய்தார்.
- மனு விசாரணைக்கு வந்த போது லைலாவுக்கு ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் தமிழகத்தை சேர்ந்த பத்மா, ரோஸ்லி என்ற 2 பெண்கள் கடத்தி கொலை செய்யப்பட்டனர். அவர்களை நரபலி கொடுத்ததாக மந்திரவாதி முகமது ஷபி, மற்றும் பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களை 12 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே கைதான லைலா, தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி எர்ணாகுளம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது லைலாவுக்கு ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில் லைலாவுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று அவர்கள் வாதிட்டனர். இதையடுத்து லைலாவின் ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
- இறந்த தந்தையின் உயிரை எப்படியாவது உயிர்த்தெழ நினைத்து குழந்தையை நரபலி கொடுக்க முடிவெடுத்துள்ளார்.
- குற்றம் சாட்டப்பட்ட அந்த பெண் நரபலி திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
தென்கிழக்கு டெல்லியில் உள்ள கிழக்கு கைலாஷ் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது தந்தையின் உயிரை மீட்டெடுக்க 2 மாத குழந்தையை கடத்தி நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தந்தை மீது அதீத பாசம் கொண்ட பெண், இறந்த தந்தையின் உயிரை எப்படியாவது உயிர்த்தெழ நினைத்து குழந்தையை நரபலி கொடுக்க முடிவெடுத்துள்ளார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரியவந்தை அடுத்து, அந்த பெண் தனது திட்டத்தை நடைமுறைபடுத்துவதற்கு முன்பு 24 மணிநேரத்தில் குழந்தையை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட அந்த பெண் நரபலி திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
- பத்மாவதியின் சொந்த ஊரான எர்ரப்பட்டி கிராமத்திற்கு பெரும்பாலை போலீசார், உளவுப்பிரிவு போலீசார், வருவாய்த்துறையினர் சென்று விசாரணை நடத்தினர்.
- புதைக்கப்பட்ட 2 பெண்களின் உடல்களை தோண்டி எடுத்த கோட்டயம் போலீசார் பத்மாவின் உடலை அடையாளம் காட்ட அவரது உறவினர்களை வரவழைத்தனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், நாகவதி அணை அருகேவுள்ள எர்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கன். இவரது மனைவி பத்மா. சில வருடங்களாக கேரள மாநிலம், கொச்சி அருகே உள்ள பொன்னுருன்னி பகுதியில் வசித்து வந்தார். கடவந்திரா என்ற இடத்தில் லாட்டரி விற்று வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 26-ம் தேதி லாட்டரி விற்பனைக்காக சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், கொச்சி போலீசார் விசாரித்தனர். இதேபோல், கொச்சி காலடி பகுதியை சேர்ந்த ரோஸ்லின் (50) என்ற பெண்ணும் சில மாதங்களுக்கு முன் காணாமல் போனார்.
2 பேரின் செல்போன் எண்களை வைத்து நடத்திய விசாரணையில், அவர்கள் கடைசியாக பத்தனம்திட்டா அருகே திருவல்லா என்ற இடத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் இருவரும் நரபலிக்காக கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, கொச்சியை சேர்ந்த முகமது ஷாபி என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து பத்மாவதியின் சொந்த ஊரான எர்ரப்பட்டி கிராமத்திற்கு பெரும்பாலை போலீசார், உளவுப்பிரிவு போலீசார், வருவாய்த்துறையினர் சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் புதைக்கப்பட்ட 2 பெண்களின் உடல்களை தோண்டி எடுத்த கோட்டயம் போலீசார் பத்மாவின் உடலை அடையாளம் காட்ட அவரது உறவினர்களை வரவழைத்தனர்.
அவர்கள் அங்கு சென்று அடையாளம் காட்டினர். இதையடுத்து பல்வேறு சட்டரீதியான நடவடிக்கைகள் முடிந்து இன்று பத்மாவின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். பத்மாவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு நாளை அடக்கம் செய்யப்படும் என்று உறவினர்கள் கூறியுள்ளனர்.
- போலீசார் முகமது ஷபி, பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோரை கைது செய்தனர்.
- நரபலியை பார்த்த சாட்சியங்கள் இல்லாததால் டிஜிட்டல் ஆதாரங்களை போலீசார் தயாரித்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
தர்மபுரி பகுதியை சேர்ந்த பத்மா என்ற பெண் கேரளா மாநிலம் கொச்சி பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தார்.
பத்மா, நீண்ட நாட்களாக உறவினர்களுடன் பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கேரளா சென்று அவரை தேடினர். இதில் பத்மா, அதே பகுதியை சேர்ந்த முகமது ஷபி என்பவரால் கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது.
போலீசார் முகமது ஷபியை பிடித்து விசாரித்தனர். இதில் முகமது ஷபியும், பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த மந்திரவாதி பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோர் சேர்ந்து நரபலி கொடுத்தது தெரியவந்தது. பத்மாவுடன் கொச்சி பகுதியை சேர்ந்த ரோஸ்லி என்ற பெண்ணும் நரபலி கொடுக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் முகமது ஷபி, பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நரபலி கொடுக்கப்பட்ட தர்மபுரி பெண் பத்மா, ரோஸ்லி ஆகியோரின் உடல் பாகங்களை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து கைதான 3 பேரையும் சம்பவம் நடந்த வீட்டிற்கு அழைத்து சென்று போலீசார் ஆதாரங்களை திரட்டினர். மேலும் அவர்கள் வீட்டின் பிரிட்ஜ்ஜில் இருந்த மனித மாமிசத்தையும் கைப்பற்றினர்.
பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். ஜெயிலில் அடைக்கப்பட்ட 3 பேரும் தங்களை ஜாமீனில் விடுவிக்க கோரி கோர்ட்டில் மனு செய்தனர். அதனை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் கைதான 3 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். முதற்கட்டமாக தர்மபுரி பெண் பத்மா நரபலி வழக்கில் 200 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தயாரித்து உள்ளனர். பெரும்பாவூர் கோர்ட்டில் இன்று இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.
அதில் விஞ்ஞானபூர்வ ஆதாரங்களை போலீசார் இணைத்துள்ளனர். நரபலியை பார்த்த சாட்சியங்கள் இல்லாததால் டிஜிட்டல் ஆதாரங்களை போலீசார் தயாரித்துள்ளனர். முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னர் ரோஸ்லி வழக்கில் போலீசார் 2 வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வார்கள் என்று தெரிகிறது.
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு தர்மபுரியை சேர்ந்த பத்மா, எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி என்ற 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டனர்.
- வீட்டில் ஒரு சிறுவனை சித்ரவதை செய்ததாக கூறி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ள எலத்தூணரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தர்மபுரியை சேர்ந்த பத்மா, எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி என்ற 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலி மந்திரவாதி ஷபி, ஆயுர்வேத டாக்டர் பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் வீட்டில் இருந்து நரமாமிசமும் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் பத்தினம் திட்டா மாவட்டம் மலையாளப்புழா என்ற இடத்தில் சித்து வேலைகளில் ஈடுபட்டு வந்த பெண் மந்திரவாதி ஷோபனா என்பவரும் சிக்கினார்.
இவர் வீட்டில் ஒரு சிறுவனை சித்ரவதை செய்ததாக கூறி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு ஜாமீனில் வந்த அவர் மீண்டும் அதுபோன்ற மந்திரவாத செயல்களை செய்து வந்தார்.
இந்த நிலையில் பெண் மந்திரவாதி ஷோபனா வீட்டில் இருந்து நேற்று காலை சிறுவன் ஒருவன் அழும் சத்தம் கேட்டது. இது பற்றி அக்கம் பக்கத்தினர், அந்த பகுதியை சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரிடம் தெரிவித்தனர். அவர்கள் பெண் மந்திரவாதி வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு ஒரு அறையில் சிறுவன் ஒருவன் இருந்தான். அந்த சிறுவனிடம் வாலிபர்கள் விசாரித்த போது தன்னையும், தனது பெற்றோரையும், பெண் மந்திரவாதி அடைத்து வைத்திருப்பதாக கூறினான்.
உடனே வாலிபர் சங்க நிர்வாகிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து பெண் மந்திரவாதி ஷோபனா வீட்டுக்குள் அதிரடியாக சென்றனர். அங்குள்ள அறைகளை சோதனை செய்தனர். இதில் ஒரு அறையில் அந்த சிறுவனும், அவனது பெற்றோரும் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் 3 பேரையும் மீட்ட போலீசார், அவர்கள் எதற்காக அடைத்து வைக்கப்பட்டிருந்தனர் என விசாரித்தனர். இது பற்றி சிறுவனின் தந்தை கூறும்போது, ஒரு மோசடி வழக்கில் என்னை போலீசார் கைது செய்தனர். அந்த வழக்கில் இருந்து வெளியே வர பெண் மந்திரவாதியை சந்தித்து பேச வந்தேன். இதற்காக ஒரு சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என அவர் கூறினார்.
அந்த பூஜைக்கான பணத்தை நான் கொடுக்க வில்லை. எனவே என்னையும், எனது மனைவி மற்றும் மகனை அவர் ஒரு அறையில் அடைத்து வைத்துவிட்டார். கடந்த 4 நாட்களாக இங்குதான் நாங்கள் அடைக்கப்பட்டிருந்தோம், என்றார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிறுவனை நரபலி கொடுக்க பெண் மந்திரவாதி திட்டமிட்டாரா? என்றும் விசாரணை நடக்கிறது.
இதற்கிடையே போலீசார் வருவதை அறிந்து பெண் மந்திரவாதி ஷோபனா அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- அது ஆண் உடலா? பெண் உடலா? என்பதை கண்டுபிடிப்பதிலும் போலீசாருக்கு குழப்பமாக உள்ளது.
- தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி தேவனாபுரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.
இந்த தோட்டத்தை நாமக்கல்லை சேர்ந்த ஒருவர் குத்தகைக்கு எடுத்து வாழை விவசாயம் செய்து வருகிறார். நேற்று தோட்டத்தில் வேலை பார்க்கும் ஒருவர் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது தோட்டத்தின் ஒரு பகுதியில், எலும்பு கூடுகள் துண்டு துண்டாக கிடந்தன. இதை பார்த்ததும் அதிர்ச்சியான அந்த நபர், சம்பவம் குறித்து காரமடை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி.பாலாஜி, காரமடை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர்.
அப்போது தோட்டத்தில் சிதைந்த நிலையில் மனித சடலம் கிடந்தது. கை, கால், தலை மற்றும் உடல் பகுதிகள் அனைத்தும் துண்டு, துண்டாக அழுகிய நிலையில் கிடந்தது.
இதையடுத்து போலீசார் மனித உடலை மீட்டு விசாரித்தனர். மேலும் கோவையில் இருந்து மோப்பநாய் வீராவும் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் வீரா தோட்டத்தில் இருந்து சிறிது தூரம் விரட்டி சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இது தொடர்பாக தடயவியல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்களும் விரைந்து வந்து, சம்பவ இடத்தில் கிடைத்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர்.
இந்த சம்பவம் தொட ர்பாக காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தோட்டத்தில் மீட்கப்பட்ட உடல், மிகவும் சிதைந்த நிலையில் காணப்படுவதால், அது ஆண் உடலா? பெண் உடலா? என்பதை கண்டுபிடிப்பதிலும் போலீசாருக்கு குழப்பமாக உள்ளது.
தொடர்ந்து போலீசார் தோட்டம் முழுவதும் அலசி ஆராய்ந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது உடல் கிடந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் ஒரு கல் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தன.
அந்த கல்லை சுற்றிலும் விளக்குகளும் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் அந்த கல் முழுவதும் ரத்தக்கறையாகவும் இருந்தது. இதனால் மர்மநபர், யாரையாவது அழைத்து வந்து நரபலி கொடுத்து கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. அந்த கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
மேலும் அந்த கல்லில் இருந்த ரத்தம் மனித ரத்தமா? அல்லது கோழியின் ரத்தமா? என்பதை உறுதிபடுத்துவதற்காக, அதில் இருந்த ரத்த மாதிரிகளையும் சேகரித்து ஆய்வுக்காக கோவையில் உள்ள பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் முடிவுகள் வந்த பின்னரே நரபலி கொடுக்கப்பட்டதா என்பது தெரியவரும்.
மனித உடல் கிடந்த இடத்தில் காலணி ஒன்றும் கிடந்தது. அதனையும் போலீசார் மீட்டுள்ளனர். அதனை வைத்து விசாரணையாது நடக்கிறது. இதுதவிர அண்மையில் யாராவது காணாமல் போய் உள்ளனரா? என்பதை அறிந்து கொள்வதற்காக கோவை மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ள காணாமல் போனவர்களின் தகவல்களை சேகரித்தும் விசாரித்து வருகின்றனர். கோவை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான நீலகிரி, திருப்பூர் பகுதி போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தும் விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக தனிப்ப டையும் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தோட்டத்தில் மனித உடல் மீட்கப்பட்டதும், அங்கு நரபலி கொடுக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்படுவதும் காரமடை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கழுதை பாலை விற்பனை செய்தும் வருவாய் ஈட்டி வருகிறார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை.
ஓசூர்:
ஓசூர் அருகே கர்ப்பமான பெண் கழுதையின் தலையை மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கழுதை நரபலி கொடுக்கப்பட்டதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கொத்த கொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (43). இவர் சலவை தொழில் செய்து வருகிறார்.
கிராமத்தில் உள்ள ஏரிக்கரை ஓரத்தில் ஒரு கொட்டகை அமைத்து அங்கு 20-க்கும் மேற்பட்ட கழுதைகளை வளர்த்து வருகிறார்.
இந்த கழுதைகள் மூலம் கிடைக்கும் கழுதை பாலை அவர் விற்பனை செய்தும் வருவாய் ஈட்டி வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல ஆனந்த் ஏரிக்கரை ஓரத்தில் உள்ள தனது கொட்டகைக்கு சென்றுள்ளார். அங்கு கொட்டகையின் கேட் உடைக்கப்பட்டு இருந்து உள்ளது. அங்கிருந்த அனைத்து கழுதைகள் மீதும் ரத்தம் தெளித்து இருந்துள்ளது.
உடனே அவர் கொட்டாகைக்கு உள்ளே சென்று பார்த்தபோது ஒரு பெண் கழுதையின் கழுத்தை வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளது. அதன் தலையை மர்ம நபர்கள் எடுத்து சென்றுள்ளனர். இதனால் ஆனந்த் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் ஓசூர் மத்திகிரி போலீஸ் நிலையத்தில் நள்ளிரவு நேரத்தில் கொட்டகைக்கு வந்த மர்ம நபர்கள் பெண் கழுதையின் கால்கள் உள்ளிட்ட இடங்களில் கத்தியால் தாக்கிய மர்ம நபர்கள் பின்னர் கழுதையின் கழுத்தை கத்தியால் அறுத்து தலையை எடுத்து சென்றுள்ளனர்.
நேற்று அமாவாசை என்பதால் மாந்திரீகம் செய்து பலி கொடுப்பதற்காக கழுதையின் தலையை மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்று உள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தனக்கு தெரிந்த மந்திரவாதியிடம் சென்று தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அங்கங்கே கடன் வாங்கி நிம்மதி இல்லாமல் இருப்பதாக கூறினார்.
- வீட்டிற்கு வந்த வேணுகோபால் மகளை நரபலி கொடுப்பது சம்பந்தமாக மனைவியிடம் ஆலோசனை நடத்தினார். அவரும் இதற்கு சம்மதம் தெரிவித்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். இவருக்கு மனைவி மற்றும் இரட்டை பிறவியில் பிறந்த 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் ஒரு பெண் குழந்தையின் பெயர் புணர்விகா (வயது 3). வேணுகோபால் பொக்லைன் எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். கொரோனா காலத்தில் வேணுகோபாலுக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டது.
இதனால் வேணுகோபால் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கினார். கடனை கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டு வற்புறுத்தினர். மேலும் தொடர்ந்து தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவித்து வந்தார்.
இந்த நிலையில் தனக்கு தெரிந்த மந்திரவாதியிடம் சென்று தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அங்கங்கே கடன் வாங்கி நிம்மதி இல்லாமல் இருப்பதாக கூறினார். அதற்கு மந்திரவாதி குழந்தைகள் யாரையாவது நரபலி கொடுத்தால் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடன் தொல்லை நீங்கிவிடும் என தெரிவித்தார். இதனை உண்மை என நம்பிய வேணுகோபால் தனது 2 மகள்களில் ஒருவரை நரபலி கொடுப்பது என முடிவு செய்தார்.
வீட்டிற்கு வந்த வேணுகோபால் மகளை நரபலி கொடுப்பது சம்பந்தமாக மனைவியிடம் ஆலோசனை நடத்தினார். அவரும் இதற்கு சம்மதம் தெரிவித்தார்.
இதையடுத்து நேற்று மாலை மகளை நரபலி கொடுப்பதற்கான பூஜை ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. இரவு 11 மணி அளவில் புணர்விகாவிற்கு அவரது தாய் மஞ்சள் நீர் ஊற்றி வாயில் குங்குமத்தை திணித்து பூஜை அறைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் சிறுமியின் கை கால்களை கட்டி நரபலி கொடுக்க முயன்றனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த புணர்விகா கத்தி கூச்சலிட்டார். அவரது சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு ஓடிவந்தனர். அவர்கள் அங்கு கண்ட காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பெற்றோர்களிடம் இருந்து சிறுமியை மீட்டனர். வேணுகோபாலை அங்குள்ள கட்டிலில் கட்டி அறையில் போட்டு பூட்டினர்.
இதுகுறித்து அத்மகூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப் இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஆத்மகூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் ரேணுகோபாலை கைது செய்து விசாரணை நடத்தியதில், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், தனது மகளை நரபலி கொடுத்தால் அனைத்து பிரச்சினைகளும் தீரும் என தனக்கு தெரிந்த மந்திரவாதி கூறியதால் மகளை நரபலி கொடுக்க முயன்றதாக தெரிவித்தார்.
மேலும் சிறுமியின் தாயாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.