என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கத்தி"
- பழிவாங்குவதற்காக கத்தியுடன் மறைந்திருந்தது தெரிந்தது.
- இரண்டரை அடி நீளமுள்ள பெரிய பட்டாக்கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
ராயபுரம்:
பாரிமுனை ராஜாஜி சாலை, கடற்கரை ரெயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் சிலர் கத்தியுடன் சுற்றுவதாக வடக்கு கடற்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அங்கு கத்தியுடன் சுற்றிய 3 பேரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் மாநில கல்லூரியை சேர்ந்த மாணவர்களான தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த சாமுவேல் (3-ம் ஆண்டு), கும்மிடிப்பூண்டி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த லோகேஷ் (2-ம் ஆண்டு), மீஞ்சூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஸ்ரீகாந்த் (3-ம் ஆண்டு) என்பது தெரியவந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்கும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பகையாக மாறியது. இதனால் அவர்களை பழிவாங்குவதற்காக கத்தியுடன் மறைந்திருந்தது தெரிந்தது.
அவர்களிடம் இருந்து இரண்டரை அடி நீளமுள்ள பெரிய பட்டாக்கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கைதான மாணவர்கள் லோகேஷ், சாமுவேல், ஸ்ரீகாந்த் ஆகிய 3 பேர் மீது ஆயுத தடைச் சட்டம் உள்பட 3 பிரிவு களின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது பற்றி போலீசார் மாணவர்களின் பெற்றோருக்கும், கல்லூரி நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
- போதை தலைக்கேறிய நிலையில் ஸ்ரீரேகாவை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்தார்.
- நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள பழனியப்பா கவுண்டன்புதூரை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 26). கூலித் தொழிலாளி.
இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி பாலக்காடு ரோட்ைட சேர்ந்த ஸ்ரீரேகா (24) என்ற இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து ஸ்ரீரேகா கணவரை பிரிந்து மகனுடன் பொள்ளாச்சியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று விக்னேஷ் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த இவர் அவரது மனைவியின் வீட்டிற்கு சென்றார். அங்கு சென்ற அவர் ஸ்ரீரேகாவை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்து விட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தினார். இதில் மனைவியின் இடுப்பு, தோள்பட்டை ஆகிய பகுதிகளில் குத்தினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஸ்ரீரேகாவின் தாயார் தீபா ராணி தடுக்க முயன்றார். அவரையும் விக்னேஷ் கத்தியால் குத்தினார். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
கத்திக்குத்தில் தாய், மகள் ஆகியோர் காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காண்டிராக்டரிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்யப்பட்டது.
- அவரை கைது செய்த போலீசார் எதற்காக ஆயுதங்களை வைத்திருந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை மதிச்சியம் பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பானுகோபன்(வயது36). கட்டிட காண்டிரக்டரான இவர், சம்பவத்தன்று இரவு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500-ஐ பறித்துச் சென்றான். இதுகுறித்த புகாரின் பேரில் மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், வழிப்பறியில் ஈடுபட்டது ஆழ்வார்புரம் வைகை வடகரையை சேர்ந்த மாரிமுத்து மகன் விஜய்(27) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை தெற்குவாசல் போலீசார் சம்பவத்தன்று மகால் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மகால் 4-வது தெருவில் காளவாசலை சேர்ந்த பாண்டி மகன் நாகேந்திரன்(19) என்பவர் வாளுடன் சுற்றித்திரிந்தார். அவரை கைது செய்த போலீசார் எதற்காக ஆயுதங்களை வைத்திருந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கத்தியை காட்டி வழிப்பறி செய்த வாலிபரை கைது செய்தனர்.
- எதற்காக கத்தியுடன் சுற்றித்திரிந்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை செல்லூர்அருள்தாஸ்புரத்தை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 55).இவர் செல்லூர் 50 அடி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்லபாண்டியிடம் இருந்து ரூ. 1300- ஐ பறித்து சென்றார்.
இந்த சம்பவம் குறித்து செல்லப்பாண்டி செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட செல்லூர் குலமங்கலம் மெயின் ரோடு அன்னை சத்யா நகரை சேர்ந்த ஜெயம் மகன் கழுவ நாதன் என்ற ரஞ்சித் குமாரை (27) கைது செய்தனர்.
சுப்பிரமணியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் ரகுநாத் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது முத்துப்பட்டி பகுதியில் கத்தியுடன் பதுங்கியிருந்த சதீஷ்குமார்(32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் எதற்காக கத்தியுடன் சுற்றித்திரிந்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சவுடாம்பிகை அம்மன் கோவில் விழாவில் கத்திபோடும் நிகழ்ச்சி நடந்தது.
- கத்திபோடும் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.குன்னத்தூர் பகுதியில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சவுடாம்பிகை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் வைகாசி மாதம் மல்லிகை கரகம் எடுத்து செல்லும்போது கத்தி போடும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்து விட்டதால் இந்த ஆண்டு திருவிழாவில் வழக்கம்போல் நிகழ்ச்சிகள் நடைெபற்றது.
விழாவை முன்னிட்டு டி.குன்னத்தூர் பகுதி மக்கள் மட்டுமின்றி வெளியூரில் வசிக்கும் மக்கள் காப்பு கட்டி ஒரு வாரம் விரதம் இருந்தனர். முக்கிய நிகழ்ச்சியான கத்தி போடும் திருவிழா நேற்று நடைபெற்றது.
மல்லிகை கரகம் எடுத்து வரும்போது பக்தர்கள் தங்கள் உடல் முழுவதும் சந்தனம் பூசி கொண்டு கத்தியை கைகளால் பல மாக தட்டியும் தங்களது உடலில் கத்தியை வைத்து தன்னைத் தானே கீறிக் கொண்டு நேர்த்திகடன் செலுத்தினர். துஷ்ட சக்திகள் அண்டவிடாமல் தடுக்கும் வகையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது உடலில் கத்தி கொண்டு தன்னை தானே வெட்டி கொண்டு மல்லிகை கரகத்திற்காக ரத்த காணிக்கை கொடுப்பது ஐதீகம். அந்த வகையில் நேற்று நடந்த கத்திபோடும் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்