search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொற்று"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாதிப்புக்காக நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோா் மருத்துவமனைகளை நாடுவதாகக் கூறப்படுகிறது.
    • அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொண்டால் சிறுநீரகங்களை பாதுகாக்கலாம்.

    தமிழகத்தில் கோடை வெயில் உச்சத்தை எட்டி உள்ள நிலையில், பகல் நேரத்தில் வெளியில் செல்வதைத் தவிா்க்குமாறு சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டு உள்ளன.

    இதனிடையே, சின்னம்மை, உயா் ரத்த அழுத்தம், நீா்ச்சத்து இழப்பு, சரும பாதிப்புகள் பரவலாக மக்களிடையே காணப்படுகின்றன. இந்நிலையில், நீா்க்கடுப்பு எனப்படும் சிறுநீா்ப் பாதை தொற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

    அத்தகைய பாதிப்புக்காக நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோா் மருத்துவமனைகளை நாடுவதாகக் கூறப்படுகிறது.


    இது குறித்து பொது நல மருத்துவ நிபுணா் டாக்டா் அ.ப.பரூக் அப்துல்லா கூறியதாவது:-

    உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து, அதில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன. ஒவ்வொரு சிறுநீரகத்திலும் தலா பத்து லட்சம் நெப்ரான்கள் (ரத்த நுண் சுத்திகரிப்பான்கள்) உள்ளன. அங்கிருந்து உருவாகும் கழிவுகள் யூரிடா் எனப்படும் குழாய் கள் மூலம் சிறுநீா்ப்பையில் சேகரிக்கப்படுகின்றன.

    பின்னர் அவை யூரித்ரா எனப்படும் குழாய் வழியே சிறு நீராக வெளியேறுகிறது. இந்த கட்டமைப்பைத்தான் சிறுநீா்ப்பாதை என அழைக்கிறோம். இதில் ஏதேனும் கிருமித் தொற்று ஏற்படும் போது சிறுநீா் கழிப்பதில் எரிச்சல், வலி, சிரமங்கள் காணப்படும். இதை அலட்சி யப்படுத்தினால், கிருமிகள் சிறுநீரகங்களைத் தாக்கி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

    கோடை காலத்தில் உடலில் போதிய நீா்ச்சத்து இல்லாவிடில் சிறுநீா்ப் பாதையில் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

    சமீபகாலமாக அத்தகைய பிரச்சினைகளுடன் பலா் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருகின்றனா். அதிலும், பெண்களில் பலா் புறச்சூழ்நிலை காரணமாக சிறுநீரை உரிய நேரத்தில் வெளியேற்ற இயலாமல் இருப்பதால் அவா்களில் பெரும்பாலானோருக்கு கிருமித் தொற்று ஏற்படுகிறது.

    இதைத் தவிா்க்க நாளொன்றுக்கு குறைந்தது மூன்று முதல் நான்கு லிட்டா் வரை தண்ணீா், இளநீா், மோா், எலுமிச்சை சாறை அருந்தலாம். தனி நபா் சுகாதாரம் பேணுவது அவசியம். அதேபோன்று, சிறுநீா் கழிக்கும் இடத்தையும், கைகளையும் சானிடைசா் கொண்டு சுத்தம் செய்தால் கிருமித் தொற்று வராமல் தடுக்கலாம்.

    அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொண்டால் சிறுநீரகங்களை பாதுகாக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தவர்கள், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 296 ஆக உள்ளது.
    • வைரஸ் தொற்றுநோய்களை நிர்வகிக்க மருத்துவமனைகள் போதுமான அளவில் உள்ளன.

    கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் இறந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக இணையதளத்தில் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன..

    இன்று காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பால் 334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 128 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,000 ஆக உயர்ந்து உள்ளது.

    நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்ட கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தவர்கள், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 296 ஆக உள்ளது.

    இதுகுறித்து சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறுகையில், "கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள போதிலும், பயப்பட வேண்டியது இல்லை. வைரஸ் தொற்றுநோய்களை நிர்வகிக்க மருத்துவமனைகள் போதுமான அளவில் உள்ளன" என்றார்.

    • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
    • தொற்று பரவாமல் இருக்க அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே வேளூர் கிராம ஊராட்சி மேலத்தெருவில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த வீராச்சாமி (வயது 53), தெய்வானை (46), பூமிநாதன் (39)ஆகியோருக்கு திடீர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

    இதுகுறித்து, தகவலறிந்த ஆலத்தம்பாடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

    மேலும், தொற்று பரவாமல் இருக்க அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு, நலக்கல்வியும் பயிற்றுவிக்கப்பட்டது.

    சேலத்தில் 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

    சேலம்:

    சேலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது.

    தினமும் 2 முதல் 3 பேர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் 5 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று புதியதாக 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

    மாநகராட்சி பகுதிகளில் 3 பேர், பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் 2 பேர், வீரபாண்டி வட்டாரத்தில் ஒருவர் என 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பாதிப்பு அதிகரித்து வருவதால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    ×