என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "லிப்ட்"
- லிப்ட்டில் இருந்த எச்சரிக்கை ஒலி பொத்தானையும் அழுத்தினேன். அப்போதும் யாரும் உதவ முன்வரவில்லை.
- எனக்கு தாகமோ பசியோ ஏற்பட்டபோது, நான் என் உதடுகளை நக்கினேன்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த 13-ம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக ரவீந்திரன் நாயர் (59) என்பவர் சென்றுள்ளார். அப்போது மருத்துவமனையில் உள்ள லிப்ட் நடுவழியில் நின்றதால் ரவீந்திரன் லிப்ட்டிற்குள் சிக்கியுள்ளார்.
ரவீந்திரன் வீடு திரும்பாததால் அவருடைய குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் 2 நாட்களாக செயல்படாமல் இருந்த லிப்ட் நேற்று சரிசெய்யப்பட்டு இயக்கப்பட்டது. அப்போது தான் ரவீந்திரன் லிப்ட்டுக்குள்ளேயே 2 நாட்களாக சிக்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீட்கப்பட்டார்.
2 நாட்களாக லிபிட்டிற்குள் சிக்கியிருந்த மோசமான அனுபவங்களை உயிர் பிழைத்த ரவீந்திரன் பகிர்ந்துள்ளார்.
"எனது அலைபேசியைப் பயன்படுத்தி லிப்ட்டுக்குள் இருந்த அவசர உதவி எண்களை அழைத்தேன்.ஆனால் யாரும் பதில் அளிக்கவில்லை. பின்னர் அலைபேசி கீழே விழுந்து வேலை செய்வதை நிறுத்தியது. லிப்ட்டில் இருந்த எச்சரிக்கை ஒலி பொத்தானையும் அழுத்தினேன். அப்போதும் யாரும் உதவ முன்வரவில்லை. அதன் பிறகு, இரண்டாவது சனிக்கிழமை அடுத்து ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனை விடுமுறை நாள் என கருதி உதவிக்காக காத்திருந்தேன்.
ஒரு மூலையில் சிறுநீர் கழித்தேன். சில சமயம் சத்தமாக அழுதேன். என்னால் தூங்க முடியவில்லை. எனக்கு தாகமோ பசியோ ஏற்பட்டபோது, நான் என் உதடுகளை நக்கினேன். தொடர்ந்து எச்சரிக்கை மணியை அழுத்திக்கொண்டே இருந்தேன். லிப்ட் அறையில் மின்விசிறி அல்லது வெளிச்சம் இல்லை என்றாலும், காற்று நுழைய இடம் இருந்ததால் என்னால் மூச்சு விட முடிந்தது" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, பணியில் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி மருத்துவமனையின் 2 லிப்ட் ஆபரேட்டர்கள் உட்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து அம்மாநில சுகாதாரத் துறை நேற்று உத்தரவிட்டது.
மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தர விட்டுள்ளார்.
- சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் சிக்கினர்.
- இவர்களில் 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் கோலிஹான் சுரங்கம் உள்ளது. நேற்று இரவு லிப்ட் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் விஜிலென்ஸ் அதிகாரிகள் உள்பட 15 பேர் சிக்கிக் கொண்டனர்.
கொல்கத்தாவில் இருந்து வந்த விஜிலென்ஸ் குழுவை ஏற்றிச்சென்ற லிப்ட் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
விஜிலென்ஸ் அதிகாரிகள் சுரங்கத்தின் அடிப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு திரும்பியபோது லிப்டின் கம்பி அறுந்து விழுந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தகவலறிந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். முதல் மந்திரியும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியானார். மற்ற 14 பேரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
#WATCH | Neem Ka Thana, Rajasthan: Visuals from Kolihan mine where an incident of lift collapse took place.
— ANI (@ANI) May 15, 2024
According to an SDRF jawan, One body has been taken out and 14 people were rescued from the site. pic.twitter.com/vATJUDH1l5
- சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 14 பேர் சிக்கிக் கொண்டனர்.
- அவர்களை மீட்கும் பணிகளில் மீட்புக் குழு ஈடுபட்டு வருகிறது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் கோலிஹான் சுரங்கம் உள்ளது. நேற்று இரவு லிப்ட் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் விஜிலென்ஸ் அதிகாரிகள் உள்பட 14 பேர் சிக்கிக் கொண்டனர்.
கொல்கத்தாவில் இருந்து வந்த விஜிலென்ஸ் குழுவை ஏற்றிச்சென்ற லிப்ட் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
விஜிலென்ஸ் அதிகாரிகள் சுரங்கத்தின் அடிப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு திரும்பியபோது லிப்டின் கம்பி அறுந்து விழுந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தகவலறிந்து மீட்புக்குழுவினர் அங்கு விரைந்துள்ளனர். 5க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக உள்ளூர் எம்.எல்.ஏ. தரம்பால் குர்ஜார் கூறுகையில், மீட்பு பணிகளில் மீட்புக்குழு ஈடுபட்டுள்ளது. முழு நிர்வாகமும் விழிப்புடன் உள்ளது. உயிர் சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை; அனைவரும் பாதுகாப்பாக வெளியே வருவார்கள் என தெரிவித்தார்.
- அடையாளம் தெரியாத 2 பேர் அவரது வாகனத்தை நிறுத்தி லிப்ட் கேட்டுள்ளனர்.
- மயக்கம் தெளிந்து அந்த வழியே சென்றவர்களிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.
விழுப்புரம்:
திருக்கோவிலூர் அடுத்த அருங்குருக்கை கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் மகன் தமிழ்(வயது23). இவர் நேற்று இரவு சென்னையிலிருந்து தனது சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.அவர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது,அங்கு அடையாளம் தெரியாத 2 பேர் அவரது வாகனத்தை நிறுத்தி லிப்ட் கேட்டுள்ளனர். பின்னர் வரும் வழியில் திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டை அருகே வந்து கொண்டிருந்த போது லிப்ட் கேட்டு வந்த இளைஞர்கள் தாங்கள் சிறுநீர் கழிப்பதாக கூறி வாகனத்தை நிறுத்த சொன்னதாக தெரிகிறது.
அங்கு மறைவில் நின்றிருந்த மற்றும்3 பேர் சேர்ந்து 5 பேர் வாலிபர் தமிழை மடக்கி பிடித்து அவர் வைத்திருந்த செல்போனை கேட்டுள்ளனர். செல்போ னை தர மறுத்ததால் மறைத்து வைத்திருந்த கத்தியால் முதுகில் ஒருவர் குத்த மற்றவர்கள் அவரின் முகத்தில் ஓங்கி அடித்துள்ளனர் . இதில் நிலை குலைந்த தமிழ் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். உடனே அந்த கும்பல் அவரிடம் இருந்து செல்போன் மற்றும் மணி பர்ஸ் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மயங்கி விழுந்த தமிழ் அதிகாலை 4.30 மணியளவில் மயக்கம் தெளிந்து அந்த வழியே சென்றவர்களிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். உடனே 108 ஆம்புலன்ஸ் மூலமாக அவரை திண்டிவனம் அரசு மரு த்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டிய ம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வழிப்பறி சம்பவம் குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணைசெய்து வருகின்றனர்.
- பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கட்டுமான பொருட்களை லிப்டில் எடுத்து சென்றனர்.
- படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தொழிலாளர்களை மீட்டு சிகிச்கைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பிஸ்ராக் கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் புதிதாக கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இன்று காலை இப்பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கட்டுமான பொருட்களை லிப்டில் எடுத்து சென்றனர். அப்போது லிப்ட் திடீரென அறுந்து விழுந்தது.
இதில் லிப்டில் சென்ற 4 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தொழிலாளர்களை மீட்டு சிகிச்கைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த போது லிப்டில் 12 பேர் இருந்தனர். அதிக பாரம் தாங்காமல் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. மதிக்க முடிவு செய்துள்ளனர். பக்தர்கள் வந்து செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட உள்ளது. மாடவீதிக்கு வெளியே காத்திருக்கும் பக்தர்களை வரிசையில் அனுமதித்து கருட சேவையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
- நோயாளிகள் வசதிக்காக 24 மணி நேரமும் ‘லிப்ட்’ இயக்கப்படுகிறது.
- லிப்ட்டில் இருந்த நோயாளிகள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்துார் அரசு ஆஸ்பத்திரி 4 மாடி கொண்ட புது கட்டடத்தில் இயங்கி வருகிறது. இங்கு நோயாளிகள் வசதிக்காக 24 மணி நேரமும் 'லிப்ட்' இயக்கப்ப டுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் 3 நோயாளிகள் ஆஸ்பத்திரியின் லிப்டை பயன்படுத்தி உள்ளனர்.
அப்போது லிப்ட் எந்த தளத்திலும் நிற்காமல் மேலும், கீழும் சென்று வந்தது. இதனால் லிப்ட்டில் இருந்த நோயாளிகள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.
இதுகுறித்து அறிந்த மருத்துவ பணியாளர்கள், ஆத்துார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் லிப்ட்டில் சிக்கியிருந்த 3 பேரையும் அரை மணி நேர போராட்டத்துக்கு பின் பத்திரமாக மீட்டனர்.
இதுகுறித்து தலைமை மருத்துவ அலுவலர் ஜெய லட்சுமி கூறுகையில், லிப்ட்டிற்குள் சென்ற நோயாளிகள் லாக் பட்டனை தவறுதலாக அழுத்தியுள்ளனர். இதனால் மேலும், கீழும் சென்றது. அவர்கள் உடனே மீட்கப்பட்டனர். லிப்ட் பழுது எதுவும் இல்லை என்றார்.
- சாலையோரம் “டிப் டாப்” உடை அணிந்து நின்று கொண்டிருந்த திருநங்கை ஒருவர் கை காட்டி “லிப்ட்” கேட்டார்.
- காரை நிறுத்திய விஷால் திருநங்கையை காருக்குள் ஏற்றிக் கொண்டார்.
சென்னை, அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் விஷால் (18).பெங்களூரில் தங்கி விமானம் ஓட்டுவதற்கு பயிற்சி பெற்று வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் விடுமுறையில் சென்னை வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு விஷால் தனது காரில் வீடு நோக்கி சென்று கொண்டு இருந்தார். கே.கே நகர் 80-அடி சாலையில் வந்தபோது சாலையோரம் "டிப் டாப்" உடை அணிந்து நின்று கொண்டிருந்த திருநங்கை ஒருவர் கை காட்டி "லிப்ட்" கேட்டார்.
இதையடுத்து காரை நிறுத்திய விஷால் திருநங்கையை காருக்குள் ஏற்றிக் கொண்டார். கார் புறப்பட்டு சிறிது தூரம் சென்றதும் திடீரென விஷால் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்த திருநங்கை காரில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார்.
- 2021-ல், மருதமலையில் ‘லிப்ட்’ அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.
- 2024 ஜூன் மாதத்துக்குள் பணியை முடிக்க கால நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
வடவள்ளி,
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மலை மீதுள்ள இந்த கோவிலுக்கு, 'பார்க்கிங்' வரை வாகனங்களில் செல்லலாம். அதன்பிறகு படிக்கட்டுகள் வழியாக ஏறிச் சென்று தான் சுவாமி தரிசனம் செய்ய முடியும்.
இங்கு வரும் முதியோர், மாற்றுத்திறனாளிகள் படிக்கட்டில் ஏறுவதற்கு சிரமமாக உள்ளது. இதனால், 'லிப்ட்' அல்லது நகரும் படிக்கட்டுகள் அமைக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து 2021-ல், மருதமலையில் 'லிப்ட்' அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்கு பின், திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம், ரூ.5.20 கோடி மதிப்பில், 'லிப்ட்' அமைக்கும் பணியை, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து லிப்ட் அமைக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டு உள்ளது. 2024 ஜூன் மாதத்துக்குள் பணியை முடிக்க கால நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
இந்து சமய அறநிலையத்துறை துணை கமிஷனர் ஹர்ஷினி கூறுகையில். "மருதமலையில் ராஜகோபுரம் அருகில் 'லிப்ட்' அமைக்கப்படுகிறது. பாறைகள் உள்ளதால், 'கெமிக்கல்' செலுத்தி வெட்டி எடுக்கப்படுகின்றன.
பணிகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுகின்றன," என்றார்.
- பொதுமக்கள் வசதிக்காக பாலத்தில் எஸ்கலேட்டர் வசதி, லிப்ட் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
- பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையத்துக்கு வருபவர்கள் மட்டுமே இந்த பாதையை பயன்படுத்துகிறார்கள்.
சென்னை:
தியாகராய நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தியாகராய நகர் பஸ் நிலையம் வரை ரூ.28.5 கோடி செலவில் பிரமாண்ட ஆகாய நடை மேம்பாலம் கட்டப்பட்டது. இதை கடந்த மாதம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பொதுமக்கள் வசதிக்காக பாலத்தில் எஸ்கலேட்டர் வசதி, லிப்ட் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தினமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த பாலத்தில் உள்ள எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட்கள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதையொட்டி நகரும் படிக்கட்டுகள் வருகிற 13-ந் தேதி அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும் 14-ந்தேதி அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மூடப்பட்டிருக்கும்.
14-ந்தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மார்க்கெட் சாலை ரெயில் நிலைய லிப்டும் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருக்கும்.
பணி நடைபெறும் நேரத்தில் எஸ்கலேட்டர்கள் மூடப்பட்டிருப்பின் லிப்ட் மற்றும் படிக்கட்டுகளையும், லிப்ட் மூடப்பட்டிருப்பின் எஸ்கலேட்டர்களையும் பயன்படுத்தி கொள்ள மாநகராட்சி சார்பில் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேம்பாலம் திறக்கப்பட்டு இரண்டு, மூன்று முறை எஸ்கலேட்டரில் பழுது ஏற்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது. பின்பு கோளாறு சரி செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
திறக்கப்பட்ட சில வாரங்கள் ஆர்வமிகுதியால் அதிகளவு பொதுமக்கள் பாலத்தை பயன்படுத்தினார்கள்.
தி.நகரை பொறுத்தவரை ரங்கநாதன் தெருவுக்குதான் பொருட்கள் வாங்க அதிக அளவில் மக்கள் வருகிறார்கள். அவர்கள் ரெயில் நிலையத்துக்கோ அல்லது பஸ் நிலையத்துக்கோ செல்ல ஆகாய நடை மேம்பாலம் தேவைப்படுவதில்லை.
மேலும் மாம்பலம் ரெயில் நிலையத்தில் இறங்கி பஸ் நிலைய பகுதிக்கு செல்பவர்களும் குறைவு. ஏனெனில் அங்கு பெரிய அளவில் வணிக நிறுவனங்கள் இல்லை.
பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையத்துக்கு வருபவர்கள் மட்டுமே இந்த பாதையை பயன்படுத்துகிறார்கள்.
அதே போல் தெற்கு உஸ்மான் ரோட்டில் உள்ள கடைகளுக்கு செல்பவர்களும், பொருட்கள் வாங்கி விட்டு திரும்புபவர்களும் பஸ் நிலையத்துக்கோ அல்லது ரெயில் நிலையத்துக்கோ செல்வதாக இருந்தாலும் ஆகாய நடை மேம்பாலத்தை விரும்புவதில்லை.
இதனால்தான் கூட்டம் குறைகிறது. பயணிகள் நெரிசலில் சிக்கி திண்டாடுவதை தவிர்க்கவே இந்த நடை மேம்பாலம் கட்டப்பட்டது. எனவே பொதுமக்கள் ஆகாய நடை மேம்பாலத்தை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார்.
சேலம்:
சேலம் சூரமங்கலம் சுந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் விக்னேஷ் (வயது 22). இவர் நேற்று இரவு 10 மணியளவில் சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் டால்மியா போர்டு அருகே மொபட்டில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த பகுதியில் ரோட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு நின்றுகொண்டிருந்த 2 பேர் விக்னேசை நிறுத்தி தங்களது வண்டியில் பெட்ரோல் தீர்ந்துவிட்டதாகவும், அதனால் விக்னேஷ் வண்டியில் அமர்ந்து கொண்டு வண்டியை இழுத்துச் செல்வதாக கூறியுள்ளனர்.இதற்கு சம்மதம் தெரிவித்த விக்னேஷ் தனது வண்டியை லிப்ட் கேட்டவர்களிடம் கொடுத்து ஓட்டச் சொல்லிக் விட்டு பெட்ரோல் தீர்ந்த வண்டியில் அமர்ந்துகொண்டார்.
அவர்கள் மொபட்டை ஓட்டிக் கொண்டு காலால் மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு சென்றனர்.பெட்ரோல் பங்க் அருகே வந்ததும் மொபட்டை ஓட்டி வந்த நபர்கள் திடீரென மின்னல் வேகத்தில் தப்பி மறந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் இதுகுறித்து உடனடியாக சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
நூதன முறையில் மொபட்டை திருடிச் சென்ற நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். அந்த நபர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளும் வேறு எங்கேயும் திருடி வந்து இருக்கலாம் என்று கருதி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்